**********************************
பொறியில் சிக்கிய எலி
புறக்கணிக்கப்பட்ட வடை
**********************************
பின்னிரவுகளில் தேர்வுக்காக
விழித்திருந்ததில் கற்றது
நாய்களின் இரவு மொழி
**********************************
சோப்பு விற்பவன் சொன்னான்
'எல்லாக் கறையும் நீங்கும்'
கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்
கரை வேட்டிகள் அதிகம் புரளுமே
**********************************
விற்கப்பட்ட இருபதில்
சொள்ளமாடனுக்கு மூணு,
பக்ரீதுக்கு மூணு என்று
ஆறு ஆடுகள் மட்டும்
புண்ணியம் செய்திருந்தன
**********************************
40 comments:
வித்தியாசமான தளங்களில் இருந்தன கவிதைகள் ..
:)
இவைகள் கவிதை வகையறாவில் சேராது!
ஹைகூக்கள் என்று சொல்லலாம்.
கவிதைகேன்று ஒரு மரபு இருக்கிறது.
புதுக்கவிதை என்ற பெயரில் மரபை உடைப்பது வேண்டுமானால் நவீனத்துவமாக இருக்கலாம். அதற்காக துணுக்குகள் கூட கவிதை என்று சொல்லலாமா!
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
உண்மையில் ரசித்தேன்
வால்பையன்
நன்றி MSK. உங்கள் பக்கமும் சென்று வந்தேன்.
அனுஜன்யா
முதல் புயல் வருகைக்கு நன்றி வால்பையன். முற்றிலும் ஒத்துப் போகிறேன் உங்கள் கருத்துடன். ஹைக்கூ என்பது இரண்டு அல்லது மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டுமென்று பொது அபிப்பிராயம் உள்ளது. நிச்சயம் இவைகள் கவிதைகள் இல்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இப்படி வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பிடித்த மரபுக் கவிதைகள் டெஸ்ட் மேட்ச். பின் நவீன கவிதைகள் ஒன் டே மேட்ச். ஹைக்கூ 20-20. நான் எழுதியது 20-20 மாட்சில் ஆடும் cheer-leaders. எப்படியோ ஆடுகளத்துள் நுழைந்தால் சரி. நிசமாலுமே நீங்க வால்பையன் தான்.
அனுஜன்யா
எனக்கு மிகவும் பிடித்திருந்தது!
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com
இந்த முறையும் லேட்...
//சோப்பு விற்பவன் சொன்னான்
'எல்லாக் கறையும் நீங்கும்'
கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்
கரை வேட்டிகள் அதிகம் புரளுமே//
செருப்படி..
கடைசி புரியவில்லை..
Thanks அனுஜன்யா.வாழ்த்துக்கள்.
//நான் எழுதியது 120-20 மாட்சில் ஆடும் cheer-leaders.//
என் வாலோட உங்க வாலு தான் பெருசா தெரியுது
வால்பையன்
@ புனிதா,
மிக்க நன்றி.
@ விவேக்
நன்றி. 4 ப்ளாக் எழுதுறீங்க !
@ விக்னேஷ்
விக்கி, இருபது ஆடுகள் விற்கப்படுகின்றன. பல கைகள் மாறி, மூன்று சொள்ளமாடன் (நெல்லை பக்கத்தில் உள்ள கிராம தெய்வம்) சாமிக்கும் மூன்று ஆடுகள் பக்ரித் சமயத்தில் செய்யப்படும் பலிக்கும் ஆக மொத்தம் ஆறு ஆடுகள் புண்ணிய காரியத்தில் (கடவுள் நிமித்தம் பலி) மரித்தன. மற்றவை சும்மா பிரியாணி நிமித்தம் (ஆ-சாமி நிமித்தம்) உயிர் விட்டன. அப்போ இந்த ஆறு ஆடுகள் தானே புண்ணியம் செய்து இருந்தன ! என்ன கொடும சார் இது!
@தமிழ் நெஞ்சம்
திறந்து பார்த்தல் கண்ணில் பூச்சி பறக்கிறது. பிறகு வருகிறேன் உங்கள் பக்கம்.
@வால் பையன்
ஆஹா, இரண்டாம் வருகை. இதுலயாவது குருவ மிஞ்சிய சிஷ்யனாக ஆசை. அப்போ டோண்டு சாரை குருவின் குரு என்று சொல்லிக் கொள்ளலாம்.
அனுஜன்யா
முகுந்த்,
வெல்கம். 'செருப்படி' என்றதும் பயந்து விட்டேன். நான் பயந்த மாதிரி இல்லை தானே. கேஷவ் புதிதாக என்ன செய்கிறான்?
அனுஜன்யா
ஹா ஹா...
நான் நீங்க எழுதியத சொன்னேன்.
இப்போ தான் செருப்படிக்கும் அவர்களுக்கும் இருக்கும் சம்பந்தம் ஞாபகம் வந்தது...
கேஷவ் குசேலன் படம் பார்த்து விட்டு கேட்டான்
ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்னே ???
ஹாஹா
நல்ல கேள்வி தான். கொஞ்சம் மடித்து எழுதினால் ஒரு ஹைக்கூ கிடைக்குமே.
குசேலன் பார்த்த பின்பு
எம்மகன் கேட்டது
'ரஜினி படம்னு ஏன் பொய்சொன்ன?'
எது எப்பிடி இருக்கு.
அனுஜன்யா
//எது எப்பிடி இருக்கு. //
sooooper
//விற்கப்பட்ட இருபதில்
சொள்ளமாடனுக்கு மூணு,
பக்ரீதுக்கு மூணு என்று
ஆறு ஆடுகள் மட்டும்
புண்ணியம் செய்திருந்தன//
வாவ்... கலக்கல்.. :))
As usual kalakkitteenga...!! :-))
"பொறியில் சிக்கிய எலி
புறக்கணிக்கப்பட்ட வடை"
ithil enna solla muyandrirukeergal??
நன்றி சென்ஷீ. நிறைய நாள் கழித்து வருகை.
ஸ்ரீ, நன்றி. தமிழ் font வேலை செய்யவில்லையா?
கிருஷ்ணமுர்த்தி, முதல் வருகைக்கு நன்றி. பெரிதாக ஒன்றுமில்லை. வடைக்காக ஆசைப்பட்டுதான், பின்விளைவுகளைப் பற்றி அறியாது, உள்ளே வந்தது எலி. சிக்கிக்கொண்ட பய உணர்வு பிரதானமாக வெளிவர, வெளியேறுவதிலும், உயிர் பிழைப்பதிலும் அல்லலுறும் மனம், வடையை நாடுவதில்லை. Even in our lives, we get entrapped in what we originally thought was quite attractive. ஆமாம், மர்மமான மனிதரா நீங்கள்?
அனுஜன்யா
நறுக், சுருக் வரிகள். நல்லா இருக்கு,
இன்னும் அதிகமா எழுதுங்க.
ஓலைச்சுவடினு ஒரு வலைப்பூ, http://olaichuvadi.blogspot.com/
அவங்க ஒரு படம் குடுத்து, அதை கருப்பொருளா வைச்சு கவிதை எழுத சொல்லுவாங்க. அதுல கலந்துக்கங்க.
ஜோசப், முதல் வருகை! நன்றி. மற்றவர்கள் அளவு எளிதில் எழுத வரவில்லை. ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கு. 'ஓலைச்சுவடி' பார்க்கிறேன்.
அனுஜன்யா
எக்ஸலண்ட் !!!!!!!!!
நன்றி ரவி. ரொம்ப நாட்களுக்குப்பின் வருகை. மிக்க மகிழ்ச்சி.
அனுஜன்யா
//தமிழ் font வேலை செய்யவில்லையா?//
சாரி அண்ணா அது அவசரத்தில் படித்து இட்ட பின்னூட்டம் அதான் தமிழ்ல பின்னூட்ட முடியல. ஆனா நீங்க இப்பல்லாம் ஏன் என் ப்ளாக்குக்கு வருவதில்லை?? :-((
அனுஜன்யா,
நீங்க கேட்ட செய்முறை அங்க குடுத்திருக்கேன்... படிச்சு பாருங்க...
முகுந்தன்
நான்காவது பிடித்திருக்கிறது.
அதாவது, கடைசி :)
முகுந்த், பார்த்தேன். விட மாட்டீங்க போல! நன்றி.
ஸ்ரீ, really sorry. நிச்சயம் வருகிறேன்.
//**********************************
//பின்னிரவுகளில் தேர்வுக்காக
விழித்திருந்ததில் கற்றது
நாய்களின் இரவு மொழி//
ரசித்தேன்.
//சோப்பு விற்பவன் சொன்னான்
'எல்லாக் கறையும் நீங்கும்'
கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்
கரை வேட்டிகள் அதிகம் புரளுமே//
இது நெத்தியடி. ஜோசப் பால்ராஜ் சொன்ன ஓலைச் சுவடியை சமீபத்தில்தான் அறிந்து கவிதையிட்டேன் ரொம்ப லேட்டாக. எனக்கடுத்து உங்கள் கவிதையை பார்த்தேன். உங்கள் ஹைகூ ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரி கடயம் ஆனந்த் ஒரு படம் கொடுத்து மூன்று வரியில் கவிதை கேட்டிருக்கிறார். போய் பாருங்கள். url.. இதோ வந்து தருகிறேன்.
சுந்தர்,
கடைசி, அதுவே கடைசியாக இருப்பதால். புரிகிறது. ஆயினும் நன்றி.
அனுஜன்யா
http://manam-anandrey.blogspot.com/2008/08/blog-post_03.html
சென்று எழுதுங்கள் அனுஜன்யா.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி. கடயம் ஆனந்த் பதிவிலும் கிறுக்கி ஆகிவிட்டது. நன்றி.
அனுஜன்யா
பார்த்தேன். அதில் குறிப்பாக இன்றைக்கு இந்தியா வென்ற தங்கப் பதக்கம் தங்களுக்குத் தோற்றுவித்த தங்க வரிகளை மிகவும் ரசித்தேன்.
:)))
//நான் எழுதியது 20-20 மாட்சில் ஆடும் cheer-leaders. எப்படியோ ஆடுகளத்துள் நுழைந்தால் சரி.//
superu...
சோப்பு விற்பவன் சொன்னான்
'எல்லாக் கறையும் நீங்கும்'
கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்
கரை வேட்டிகள் அதிகம் புரளுமே
//ரசித்தேன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அனுஜன்யா, ராமலட்சுமி அக்கா
நன்றி ராமலக்ஷ்மி, ஜி மற்றும் ஆனந்த்
அனுஜன்யா
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
அன்புடன் அருணா
1,2,3,என அவ்வையார் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். நன்று.
எலியும் வடையும் நன்றாக இருந்தது. அய்யோ, எலிக் கவிதைன்னு சொல்ல வந்து கொஞ்சம் உளறிட்டேன்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Post a Comment