Wednesday, February 17, 2010

எல்லைகள்

தொட்டிக்குள் தங்க மீன்கள்

அலைந்து கொண்டிருக்கின்றன
இங்குமங்கும் மற்றும்
மேலும் கீழும்
நீரின் ஆழங்களையும்
கண்ணாடி எல்லைகளையும்
அவ்வப்போது சோதனை செய்தபடி
சிறை பிடித்த பெருமிதத்தில்
நான் பார்த்துக்கொண்டிருப்பதை
அவைகள் கவனிக்கத்
துவங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை
அவைகளின் வால்கள்
இன்னும் அதிகமாக
இன்னும் நளினமாக
சுழல்கின்றன இப்போது
தங்களின் ஒரு பக்கக் கண்களில்
என் முகத்தைக் கவர்ந்து
செல்கின்றன
கடலிலும், ஆற்றிலும்
குளத்திலும் இந்தத் தொட்டியிலும்
அலைகளை உருவாக்கும் மீன்கள்
என்னைக் கேட்கின்றன
எல்லைகள் யாருக்கென்று
கண்ணாடியைத் தாண்டத் தெரியாத
நீரில் குதித்து அறியாத
சிற்றலைகளை அங்கிகரிக்கும்
பேரலைகளுக்கு அஞ்சும்
என்னிடம் பதிலில்லை
பதில் இருந்தாலும்.


உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது

34 comments:

Ashok D said...

எனது 5 வயதில் மைலாப்பூரில் ஒரு ஷூகடையில் முதன் முறையாக ஃபிஷ் டாங்க் பார்த்தேன். அது ஞாபக செதில்களில் வந்து போனது.. இக்கவிதை எல்லோருக்குமானது, மனது :)

கமலேஷ் said...

கவிதை மிக அருமையாக இருக்கிறது...பிரசுரத்திற்கு
வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

இரா. வசந்த குமார். said...

aahaa.... super bosss.....

பரிசல்காரன் said...

//தங்களின் ஒரு பக்கக் கண்களில்
என் முகத்தைக் கவர்ந்து
செல்கின்றன //

இந்த வரிகளை வெகுநேரம் வாசித்துக் கொண்டிருந்தேன். அடுத்த வரியைத் தொட தாமதமானது.. மிகவும் கவர்ந்த வரிகள்..

creativemani said...

Lovely Sir.... :)

Anonymous said...

அருமை

na.jothi said...

//கடலிலும், ஆற்றிலும்
குளத்திலும் இந்தத் தொட்டியிலும்
அலைகளை உருவாக்கும் மீன்கள்
என்னைக் கேட்கின்றன
எல்லைகள் யாருக்கென்று//

நீண்ட இடைவெளிக்கு அப்புறம் கவிதை
ரொம்ப பிடிச்சிருக்குண்ணா

கார்க்கிபவா said...

//எல்லைகள் யாருக்கென்று
கண்ணாடியைத் தாண்டத் தெரியாத
நீரில் குதித்து அறியாத
சிற்றலைகளை அங்கிகரிக்கும்
பேரலைகளுக்கு அஞ்சும்
என்னிடம் பதிலில்லை
பதில் இருந்தாலும்

உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது..//

பதில் இருந்தாலும் உயிரோசையில்தான் பிரசுரிப்பிங்களா?

Prabhu said...

புரியுதே? :)

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணே அந்த மீனு நம்ம மனசு இதோட ஓசையெல்லாம் உயிரோசைதானே சரியா?

ரொம்ப ரொம்ப நல்லாருக்குண்ணா..!

கபீஷ் said...

அருமை!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு அனு!

ஹேமா said...

தங்களுக்குக் கிடைத்த எல்லைக்குள் முடிந்தளவு சந்தோஷமாய் வாழக் கற்றுக்கொண்ட மீன்கள் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை மிக அருமை

அகநாழிகை said...

கவிதை அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமை. வார்த்தைகள் யாவும் வெகு நளினம். ரசித்தேன்.

தராசு said...

அய்யோ, புரியுதே, நான் என்ன பண்ணுவேன், எங்க போய் சொல்லுவேன், இதை எப்படிச் சொல்லுவேன்.

Vidhoosh said...

அருமை

உயிரோடை said...

//எல்லைக‌ள் யாருக்கென்று?//

கேள்விக‌ளை ஒரு க‌தையை உள்ள‌ட‌க்கிய‌ கேள்வி

உங்க‌ க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ அனுஜ‌ன்யா

சுரேகா.. said...

அந்த மீனாக மாற வைத்த கவிதை!
அருமை அண்ணா!

அற்புதக்கவிதைகளுக்கு அனுஜன்யான்னு
அடிக்கடி
அப்துல்லா எழுதுவாரு!

உங்கள் கவிதைத் தரத்துக்கு..
நான் இன்னும் நிறைய படிக்கவேண்டும் அண்ணா!

உங்கள் ஊக்கத்துக்கு உளமார்ந்த நன்றிகள்!

மணிஜி said...

நல்ல கவிதை அனு !

நர்சிம் said...

//குளத்திலும் இந்தத் தொட்டியிலும்
அலைகளை உருவாக்கும் மீன்கள்
என்னைக் கேட்கின்றன
எல்லைகள் யாருக்கென்று
கண்ணாடியைத் தாண்டத் தெரியாத
நீரில் குதித்து அறியாத
சிற்றலைகளை அங்கிகரிக்கும்
//

மிகப்பிடித்திருந்தது.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :-)

ராகவன் said...

அன்பு அனுஜன்யா,

அருமையான கவிதை...உயிரோசையிலேயே படித்தேன்...
”சிறை பிடித்த பெருமிதத்தில்
நான் பார்த்துக்கொண்டிருப்பதை
அவைகள் கவனிக்கத்
துவங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை” அழகாய் இருந்தது இந்த வரிகள்...

அன்புடன்
ராகவன்

Anonymous said...

பாராமுகம்

மீரட் ரயில் நிலையத்தில்
உட்கார்ந்திருந்தேன்
மழை தூவானத்தை அனுப்பி
துப்பரவுப் பனி செய்து கொண்டிருந்தது
கடல் பார்க்காத அந்தக்
கலாசுக்காரன் எதிரில்
எதற்கோ பேரத்தில் இருந்தான்
டீசல் எஞ்சின்கள் எங்களுக்கு
எப்ப விடுதலை என்ற பெருமுச்சு
விட்டுக் கொண்டு இருந்தன
சில தம்மால் முடிந்தவரை
குரலெடுத்து கூவியது போலிருந்தது
அவை என்னையா அழைத்தது
தெரியவில்லை எனக்கு
பேர்வெல் பார்டியில் கொடுத்த
பூச்செண்டை தண்டவாளத்தில் வீசினேன்
"GT" எக்ஸ்பிரஸ் என்னை கடந்து போனது

அத்திரி said...

//தராசு said...
அய்யோ, புரியுதே, நான் என்ன பண்ணுவேன், எங்க போய் சொல்லுவேன், இதை எப்படிச் சொல்லுவேன்.
//

repeattuuuuuuu

தமிழ் said...

அருமை

Thamira said...

அருமையான கவிதை.

anujanya said...

@ அசோக்

அப்போ மயிலை எப்படி இருந்தது? நன்றி அசோக்.

@ இராமசாமி

பாஸ், உங்கள் தளத்தை ஜஸ்ட் எட்டிப் பார்த்தேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும் போல இருக்கு. டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு.

நன்றி உங்கள் முதல் வருகைக்கு ராம்.

@ கமலேஷ்

நன்றி கமலேஷ். உங்கள் தளத்துக்கும் வரணும். நேரப் பிரச்சனை :((

@ வசந்த்

ஆஹா, நம்ம தலையே சொல்லியாச்சு. நன்றி வசந்த்.

@ பரிசல்

ரொம்ப நன்றி கே.கே. இப்ப ஆல் இஸ் வெல் தானே?

@ அன்புடன் மணி

தேங்க்ஸ் மணி

@ வேலன்

நன்றி வேலன்

@ ஜோதி

அப்படிங்கற? சரி சரி :) நன்றி ஜோதி.

@ கார்க்கி

உனக்கு இருக்கு பாரு குசும்பு...

@ பப்பு

ஹலோ...இருக்கட்டும் இருக்கட்டும்.

@ பிரியமுடன் வசந்த்

அதே அதேதான். சரியா வலையில் விழுந்துட்ட வசந்த். நன்றி.

@ கபீஷ்

நன்றி ...

@ ராஜாராம்

நன்றி ராஜா - யாவற்றுக்கும்.

@ ஹேமா

உங்கள் முதல் வருகை ஹேமா? நன்றி.

@ ராதாகிருஷ்ணன்

நன்றி TVR

@ அகநாழிகை

ரொம்ப நன்றி வாசு

@ ராமலக்ஷ்மி

ரொம்ப நன்றி சகோ. எப்படி இருக்கீங்க?

@ தராசு

யோவ், உன்னை எல்லாம்.... கார்க்கி கிட்ட போட்டுக் கொடுக்கணும் :)

@ விதூஷ்

நன்றி வித்யா

@ உயிரோடை

அப்பாடா, 'என்' கவிதைன்னு ஒப்புக் கொண்டீர்களே! ச்சும்மா. நன்றி லாவண்யா.

@ சுரேகா

வாங்க நட்சத்திரம். அப்துல்லா கிட்ட அப்பூடி ஒரு செட் அப் பண்ணி வெச்சுருக்கேன் :)

நன்றி சுரேகா.

@ தண்டோரா

நன்றி மணிஜி

@ நர்சிம்

நன்றி பாஸ்.

@ உழவன்

நன்றி தல

@ ராகவன்

வாங்க பாசு. உங்க தளத்துக்கு வந்து கவிதை எல்லாம் படிக்கணும்னு... டைம் டைம். நன்றி ராகவன்

@ அனானிமஸ்

ஆஹா, நல்லா இருக்கே. யாரு நீங்க? ப்ளாக் இருக்கா?

@ அத்திரி

அடப்பாவி...

@ திகழ்

ரொம்ப நாள் கழிச்சு வரீங்க. நன்றி திகழ்.

@ ஆதி

ஆஹா, ஆதியா? நம்ப முடியவில்லை இல்லை இல்லை.

@ சாம்ராஜ் பிரியன்

நன்றி பாஸ். எப்படி இருக்கீங்க?

@ தமிழிஷ் தளத்தில் வாக்களித்த பதினெட்டு பேருக்கும் தனிப்பட்ட நன்றிகள்.

அனுஜன்யா

anujanya said...

@ எல்லோருக்கும்

ஆபிசில் ஏகப்பட்ட கெடுபிடி. அதை விட ரொம்ப கொடுமையான விஷயம் - வேலை செய்யச் சொல்கிறார்கள். அதனால்... கொஞ்ச நாட்கள் நம்ம கடை விடுமுறை என்றே தோன்றுகிறது. எல்லோரும் இந்த விடுமுறையை என்ஜாய் மாடி.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம்ம்ம்ம் எல்லைகளுக்குள் வாழும் எவருக்குமே இதற்கான பதில்கள் தெரிவதில்லை தானே...

anujanya said...

@ கிருத்திகா

நன்றி. மீன்களுக்குள் பெண்களையும் பார்க்கலாம் :)

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

//மீன்களுக்குள் பெண்களையும் பார்க்கலாம் :)//

இப்போது கவிதை இன்னும் அருமை:)!

இன்றைய கவிதை said...

கவிதை மிக அருமை ரொம்பவும் ரசித்தேன்

ஜேகே