Friday, July 22, 2011

மகத்தான

சின்ன மகள்

மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்
அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன

[நவீன விருட்சம் இதழில் பிரசுரம் ஆகியது]

10 comments:

iniyavan said...

சார், நல்லா இருக்கீங்களா? என்றும் அன்புடன், உலக்ஸ்

பரிசல்காரன் said...

வெல்கம்!!!!

மகிழ்ச்சி....

ராமலக்ஷ்மி said...

பச்சை அம்பு குறித்த விளக்கத்தை நவீன விருட்சத்தில் பார்த்து கொண்டேன். பத்தொன்பது மாதங்கள் கழித்துப் பதிகிறீர்கள் என்பதையும்:)!

நல்ல கவிதை. இது குறித்து முன்னர் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வருகிறது.

தொடருங்கள்.

Ashok D said...

கவிதையிலும் லேட்டஸ்டா இருக்கறது கண்டு ஆச்சரியமே :)

ரொம்ப ரசிச்சேன்.. என்பதைவிட பார்த்தேன்.. ஏன் பார்க்கிறோமே...

ILA (a) இளா said...

வெல்கம்!!!!

மகிழ்ச்சி....

கார்க்கிபவா said...

என் கவிதை பற்றிய தங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்..







“உம்ம்ம்மாஆஆஆஆ”

-தோழியின் இதழில் பிரசுரமாகியது

Anonymous said...

வந்ததை இதுநாள் வரை கவனிக்கவில்லை.ஸ்வாகதம்

anujanya said...

@ உலகநாதன்

நல்லா இருக்கேன் உலக்ஸ். நீங்க எப்படி இருக்கீங்க?

@ பரிசல்

நன்றி கே.கே.

@ ராமலக்ஷ்மி

கற்பனை வளம் அவ்வளவுதான் சகோ :)
நன்றி.

@ அசோக்

நன்றி அசோக்.

@ இளா

வெல்கம் சொன்னீங்க. ஆனாலும் நான் சோம்பேறி தான் பாசு :)
நன்றி இளா.

@ கார்க்கி

தோடா..... இந்தக் கொடுமைக்கு முடிவே கிடையாதா!!!

@ பனி

நன்றி. நானே இப்ப தான் கவனித்தேன் :).


அனுஜன்யா

Suresh Subramanian said...

நல்ல கவிதை... please read my tamil kavithaigal blog in www.rishvan.com

manjoorraja said...

அனு, கவிதை நன்றாக எளிமையாக இருக்கிறது. பாராட்டுகள்.