நாமொழி-1
இருபுறமும் இரைச்சலுடன்
விரையும் வாகனங்கள்
இன்று ஏனோ அறவே இல்லை;
எந்தத் தலைவர் மறைவோ ?
சாலை மறியல் போராட்டமோ ?
என்ன ஜாதி மதக் கலவரமோ ?
கிட்டிய அரிய வாய்ப்பில்
பேசிக்கொண்டே இருந்தன
நாள்முழுதும் ஆயிரம் நாவுகளில்
எதிரெதிரே இருந்த
இருபத்தியிரண்டும் அறுபத்திநாலும்
நாமொழி-2
நெடுஞ்சாலையில்
விரைந்த நான்;
சரசரவென்று முந்தி
சாலை தாண்டிய நாகம்;
சற்று தூரம் விரைந்து
வெறித்து நோக்கியது;
படமெடுக்க மறந்த
உறைந்த கணங்கள்;
துருத்திய அதன் நாவிலிருந்து
தற்காலிகமாகப் பெற்ற
பார்செல் நாவிலறிந்தது
எம் பாதை குறுக்கிடுவது
இது முதலுமன்று
கடையுமன்று
13 comments:
/இருபுறமும் இரைச்சலுடன்
விரையும் வாகனங்கள்
இன்று ஏனோ அறவே இல்லை;
எந்தத் தலைவர் மறைவோ ?
சாலை மறியல் போராட்டமோ ?
என்ன ஜாதி மதக் கலவரமோ ?/
அருமை
முதல் கவிதை புரிஞ்சது... ரெண்டாவது நல்லா இருக்குது... ஆனா கொஞ்சம் புரிய கடினமா இருக்குது...
//துருத்திய அதன் நாவிலிருந்து
தற்காலிகமாகப் பெற்ற
பார்செல் நாவிலறிந்தது
எம் பாதை குறுக்கிடுவது
இது முதலுமன்று
கடையுமன்று
//
நல்லா எழுதியிருக்கீங்க. ஆனா ஏன் அதிகமா எழுதறதில்லை. :(
உள்ளேன் அய்யா :-)
//எந்தத் தலைவர் மறைவோ ?
சாலை மறியல் போராட்டமோ ?
என்ன ஜாதி மதக் கலவரமோ ?//
வரிகள் அருமை.
இந்த கொடுமை நம் நாட்டில் மட்டுமே நடக்கும்.
நன்றி திகழ்மிளிர். கொஞ்ச நாளா பதிவே போடல?
ஜி, parsel tongue (Harry Potter) கேள்விப்பட்டு இருப்பீங்களே, அதாங்க, பாம்பின் மொழி. இப்போ புரியும் பாருங்க.
நன்றி சென்ஷி. 'சட்டியில் இருந்தா அகப்பையில் வரும்'. இதுக்கே ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கு.
முகுந்த், இந்த செமெஸ்டர் நல்ல மார்க் போடறேன்.
அனுஜன்யா
நாமொழி - 2 அருமை!
சென்ஷியின் கேள்வியை நானும் கேட்கிறேன்..
அதற்கான உங்கள் பதிலை நானே
மறுக்கிறேன்!
நல்லா இருக்குங்க.... வாழ்த்துக்கள்... தொடந்தி இந்த மாதிரி எழுதுங்க
நானிட்ட ஓரிரு பதிவுகளின் பின்னூட்டத்தை பார்த்து நண்பரொருவர் சொல்கிறார்..
எல்லாப் பதிவிலும் உன் பின்னூட்டமென்று..
கே.கே.
நன்றி. உங்களுக்கு கற்பனை நிலத்தடி நீர். தோண்டத் தோண்டச் சுரக்கும். எனக்கு கச்சா எண்ணெய் போல. வெறுமனே குறையும். வெளியும் மாசுபடும்.
அனுஜன்யா
விக்கி,
நன்றி. சென்ஷி, பரிசல் வரிசையில் நீங்களும் பெரும்பாலான பதிவுகளை ஊக்குவிப்பது வியப்பான ஒன்றுதான். வரவேற்கப்பட வேண்டியது.
அனுஜன்யா
First one super anna..!! :-)
Second one konjam puriyala..!! :-(
ஸ்ரீ, நன்றி. 'புரியாத கவிதை' பற்றிகூட ஒரு கவிதை எழுதியிருக்கேன்.
அனுஜன்யா
இரண்டு நாமொழிகளும்
இதயத்தை தொடுகின்றன
இதுவல்லவோ கவிதை
இனிப்பு தொடரட்டுமே
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்
Post a Comment