Tuesday, September 9, 2008

ஆராய்ச்சி மணி


பட்டுபுடவை தந்த மெழுகை
கதர் வாங்கி விளக்கேற்ற
தத்தம் கழுத்தில் தொங்கிய
பல வண்ண சுருக்குக் கயிறுகளுடன்
மேல்தட்டு அதிராமல் கைதட்டியது;
கோடீஸ்வரர்கள் இன்னும்
சில கோடிகள் ஈட்ட
அரசின் புதிய திட்டம்
இனிதே துவங்க
மூன்றுமுறை மணியடித்த ஓசை!
முதல் மணி அடித்தபோது
யாரோ ஒரு உழவன்
சுருக்கை சரிபார்த்தான்
இரண்டாம் மணி அடிக்கையில்
நகரின் துப்புரவுத் தொழிலாளி
நாறும் பாதாளத்தில் பிரவேசித்தான்
மூன்றாம் மணி ஒலிக்கையில்
கல்லுடைப்பவளின்
மூன்று வயது பிஞ்சு
மூடப்படாத ஆழ்கிணறில் வீழ்ந்தது
உயர் தேநீர் பருகுகையில்
நுனிநாக்கில் மொழிவிளையாட
அடிவயிற்று பிரளயங்களுடன்
எதிர்கொண்டது ஆராய்ச்சி மணிக்கும்
வழியில்லாத பாவியினம்

'கீற்று' இல் பிரசுரமான கவிதை. (நன்றி - keetru.com)

42 comments:

ராமலக்ஷ்மி said...

அற்புதம் அனுஜன்யா. ஒவ்வொரு வரிகளும் உரைக்கிறது மேல்தட்டின் மெத்தனத்தையும் கீழ்தட்டின் நிதர்சன வாழ்வையும். நீங்கள் சொல்லியிருப்பது போல ஆராய்ச்சி மணியே அர்த்தமற்றுத்தான் போகிறது அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வயிற்றில் எந்நேரமும் மணியடித்துக் கொண்டிருக்கும் மாந்தருக்கு.

narsim said...

கலக்கல் !!

(ஆமா நீங்க ஏன் நம்ம பக்கம் வர்ரத நிறுத்திட்டீங்க..கோவமா??)

நர்சிம்

அனுஜன்யா said...

நன்றி ராமலக்ஷ்மி. கவிதை உங்கள் அலைவரிசையில் உள்ளது என்று தெரியும். அதனால் நிச்சயம் நீங்கள் ஊக்கப்படுத்துவீர்கள் என்று நினைத்தேன். நன்றி.

அனுஜன்யா

அனுஜன்யா said...

நர்சிம்,

நன்றி. உங்கள் பக்கத்துக்கு அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறேன். நேற்றுகூட விறுவிறு துப்பறியும் கதை படித்தேன். ஸ்டைல் கலக்கல். பின்னோட்டம் இட்டிருக்க வேண்டும்.

அனுஜன்யா

வால்பையன் said...

ஒலித்த மணிகள் அத்தனையும்
அதிகார மையத்திற்கு சாவு மணியாக கடவுக

VIKNESHWARAN said...

அனுஜன்யா அசத்திட்டிங்க.... மனம் கனக்கிறது... மேலும் எழுதுங்கள்....

சென்ஷி said...

ம‌ன‌தை தொடும் வ‌ரிக‌ளுட‌ன் அருமையான‌ க‌விதை அனுஜ‌ன்யா..

முத‌ல் பின்னூட்ட‌ம் அருமை. வ‌ரைவை ச‌ரியாக‌ காட்டுகிற‌து

Anonymous said...

அனுஜன்யா,

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதை படித்த நிறைவு வருகிறது.

நா.முத்துக்குமாரின், தையல் எந்திரம் கவிதை படித்திருக்கிறீர்களா? வண்ணத்துப் பூச்சி விற்பவன் கவிதைத் தொகுப்பில் உள்ளது.

காதலைத்தவிர்த்து, தினவாழ்வின் பொருட்களை, நிகழ்வுகளை பாடும் கவிதைகள்தான் பாதிக்கின்றன.

Bee'morgan said...

அருமை அண்ணா.. ஒவ்வொரு படைப்பிலும் தங்களின் மெருகு கூடிக்கொண்டே செல்கிறது.. இப்போதுதான் 'கீற்றை'க் கண்டேன். வருங்காலத்தில் வரப்போகும் அனைத்து படைப்புகளுக்கும் இப்போதே என் வாழ்த்துகள்.. :)

அனுஜன்யா said...

நன்றி வால்பையன். உங்களிடமிருந்து முதன்முறையாக சீரியசான விமர்சனம். Really value it.

அனுஜன்யா

அனுஜன்யா said...

ஹாய் விக்கி,

ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பக்கம். நன்றி விக்கி. (நானும் அங்கு வந்து நாளாச்சு. வருகிறேன்)

அனுஜன்யா

அனுஜன்யா said...

சென்ஷீ,

லேட்டா வந்தாலும்..... நன்றி. ஆம், ராமலக்ஷ்மியின் பின்னூட்டங்களை ஒரு தனிப் பதிவாகவே போடலாம்.

அனுஜன்யா

அனுஜன்யா said...

பாலா,

நன்றி. உன்ன மாதிரி இல்லனாலும் கொஞ்சம் முன்னேற்றமாவது தெரிஞ்சால் சரி. 'கடவுளுக்கான வாய்ப்பாடு' எழுதியாச்சா? அந்த formulae பார்த்த உடனே கண்ணுல பூச்சி பறக்கிறது. அப்புறம் வர்றேன்.

அனுஜன்யா

முகுந்தன் said...

கலக்கல் அனுஜன்யா..

அனுஜன்யா said...

ஹாய் முகுந்த்,

Thanks. கொஞ்ச நாளா ஆளே காணோம். நானும் அங்க வந்து கொஞ்ச நாள் ஆச்சு. How is my pal Keshav?

அனுஜன்யா

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான வரிகள் அனுஜன்யா.
கதர்களின் உரைகள் மட்டும் கீழ்த்தட்டோடு உறவாடும். :(

அனுஜன்யா said...

முதல் வருகை ரிஷான். ஆம்,
'கதர்களின் உரைகள் மட்டும்
கீழ்த்தட்டோடு உறவாடும்'

'அந்த உறைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கும் வாட்கள்'

நீங்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி. உயிரோசை பிரசுரத்துக்கும் வாழ்த்துக்கள் மீண்டும்.

அனுஜன்யா

Sri said...

நன்று அண்ணா..!!

அனுஜன்யா said...

நன்றி தங்காய்! இப்பவாவது மனசு சரி ஆச்சா!

அனுஜன்யா

Sri said...

உண்மை சொல்லவா?? பொய் சொல்லவா?? ;))

அனுஜன்யா said...

ஸ்ரீ, உண்மையே சொல்லு எப்போதும் போல. யாராவது வம்பு செய்திருந்தால் தெரியப்படுத்து. ஆட்டோ அனுப்பி விடலாம்.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா said...

அண்ணே!நீங்கள்லாம் இருக்க வலையுலகத்தில நம்மளும் இருக்கோமேன்னு கொஞ்சம் பயமா கூட இருக்கு. கலக்கல் அண்ணே.
(நாங்கள்லாம் கவிதைன்னு சொல்லி வசனத்த ரெண்டு ரெண்டு வரியாப் பிரிச்சு போட்டு ஏமாத்துற ஆளு)
:))

புதுகை.அப்துல்லா said...

நா.முத்துக்குமாரின், தையல் எந்திரம் கவிதை படித்திருக்கிறீர்களா? வண்ணத்துப் பூச்சி விற்பவன் கவிதைத் தொகுப்பில் உள்ளது.
//

வேலன் அண்ணே! அது வண்ணத்துப்பூச்சி விற்பவன் அல்ல...பட்டாம்பூச்சி விற்பவன். அதில் எனக்குப் பிடித்த கவிதை "தூர்". :)

Sri said...

//ஸ்ரீ, உண்மையே சொல்லு எப்போதும் போல. யாராவது வம்பு செய்திருந்தால் தெரியப்படுத்து. ஆட்டோ அனுப்பி விடலாம்.//

என்கிட்டே போய் யார் அண்ணா வம்பு செய்யபோறா?? அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா..!! :)) வேலை கொஞ்சம் அதிகம். அதனால, ஸ்ட்ரெஸ் அதிகமாகிடிச்சு.. அவ்ளோதான்.. ஆட்டோ அனுப்பறீங்களா?? எதுக்கு பத்திரமா கூட்டிக்கிட்டுவரவா?? ;))))

அனுஜன்யா said...

அப்துல்லா,

என்ன வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே. நானும் அதே வரிகளை பிரித்து மடக்கிபோடும் ஆசாமி தான். வால்பையன் சொல்வார் கேளுங்கள்.

அனுஜன்யா

அனுஜன்யா said...

அப்துல்லாவின் பின்னூட்டம் வந்தபின் தான் கவனித்தேன், வேலன் எழுதியதற்கு respond செய்யாததை.

வேலன், அந்தக் கவிதைத் தொகுதி படிக்கவில்லை இன்னும். நீங்கள் ரசித்தால் நிச்சயம் விஷயம் இருக்கும். படிக்கிறேன். நன்றி உங்கள் ஊக்கத்திற்கு.

அனுஜன்யா

smile said...

இந்த கவிதையே ஆராய்ச்சி மணியாக தோன்றுகிறது
நல்லா இருக்கு

அனுஜன்யா said...

ஸ்ரீ, அவ்வளவுதானே? கவிதைக்கு பதிலா கவுஜ ரெண்டு எழுது. எல்லா stress இம் போயிடும். உதவி வேணும்னா நம்ம ஆயில்ஸ் கிட்ட கேளு.

'ஆட்டோ அனுப்புவது' என்பது அரசியலில் சகஜம். பிடிக்காத/ஒத்துழைக்காத பேர்வழிகளை 'ஆட்டோ அனுப்பி' கூட்டி வந்து 'அன்பாக கவனித்து' வழிக்குக் கொண்டுவருவார்கள்.

அனுஜன்யா

அனுஜன்யா said...

ஸ்மைல் !

நீங்கள் யாரென்று தெரியவில்லை. யாராக இருப்பினும், நன்றி. நீங்கள் பதிவு எழுதுவது இல்லையா?

அனுஜன்யா

smile said...

படிக்கறதோட சரி
அப்ப அப்ப இது மாதிரி பின்னூட்டங்கள் மட்டும்
போட்டுக்கிட்டு இருக்கேன்

அனுஜன்யா said...

ஸ்மைல்,

பெயரே புன்சிரிக்க வைக்கிறது. அப்படியே எழுதத் துவங்குங்கள். பதிவு எழுதும் எல்லாரும் 'எழுத்தாளர்' அல்லது 'கவிஞர்' ஆகவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு மாதிரி Self-expression செய்த மாதிரி இருக்கும். நினைப்பதை எழுத்தில் கொண்டு வரும் சந்தோஷமும், கொண்டுவர முடியாத சங்கடங்களும் தெரிய வரும்.

அனுஜன்யா

Saravana Kumar MSK said...

இந்த தேசத்தில் எதுவும் நடக்கும்..


கவிதை நன்று..

அனுஜன்யா said...

நன்றி சரவணன்

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

அப்பா..நறுக்குத் தெறிச்சாப் போல் இருக்கு! அந்த ஆரம்ப வரிகள் கலக்கல்!! உண்மையில் ராமலஷ்மியின் வார்த்தைகள்தான் என்னிடமிருந்தும்!!

அனுஜன்யா said...

நன்றி சகோதரி.

அனுஜன்யா

முகுந்தன் said...

அனுஜன்யா,
ஆமாம் அங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு. கேஷவ் ரொம்ப நல்லா இருக்கான்.
http://chennaithamizhan.blogspot.com/2008/09/blog-post.html படித்து பாருங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா வந்திருக்குங்க இந்தக் கவிதை...

அனுஜன்யா said...

முகுந்த்,

நேற்று அங்கு வந்து பார்த்தேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

அனுஜன்யா said...

நன்றி சுந்தர், உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் நட்பிற்கும்.

அனுஜன்யா

முகுந்தன் said...

திண்ணை பற்றி தொடர உங்களை அழைத்திருக்கிறேன்...

கவிதையா எழுதறீங்க அங்க ? :-)

Aruna said...

ஏதோ தொண்டையில் அடைத்துக் கொள்ளும் உணர்வு படித்தவுடன் ஏற்பட்டது...
அன்புடன் அருணா

அனுஜன்யா said...

நன்றி அருணா. எல்லோருக்கும் அவ்வப்போது மனதில் கனத்துக்கொண்டிருக்கும் விஷயத்தை எழுதினேன்.

அனுஜன்யா