நிழலின் நிஜங்கள்
அந்தத் திருமணப் புகைப்படத்தில்
கண்ணை மூடிவிட்டதாகவும்
ஓரந்தள்ளி விடப்பட்டதாகவும்
கொம்பு முளைத்திருப்பது பற்றியும்
சலித்துக் கொண்டனர் நண்பர்கள்
குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்
அவனைவிட உயர்ந்திருப்பேன்
என்று எண்ணியபடி
அவள் கண்களில்
ஈரத்தைத் தேடினேன்
(உயிரோசை 22.09.08 மின்னிதழில் பிரசுரமானது)
அந்தத் திருமணப் புகைப்படத்தில்
கண்ணை மூடிவிட்டதாகவும்
ஓரந்தள்ளி விடப்பட்டதாகவும்
கொம்பு முளைத்திருப்பது பற்றியும்
சலித்துக் கொண்டனர் நண்பர்கள்
குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்
அவனைவிட உயர்ந்திருப்பேன்
என்று எண்ணியபடி
அவள் கண்களில்
ஈரத்தைத் தேடினேன்
(உயிரோசை 22.09.08 மின்னிதழில் பிரசுரமானது)
39 comments:
அருமையான கவிதை அனுஜன்யா (ஹைய்யா.. இந்த முறை விளக்கம் இல்லாமயே கவிதை புரிஞ்சிடுச்சி)
படம் மிக மிக மிக பொருத்தம்..
Me the first??
இப்போதான் "இப்போதான் எங்கே ஆளயே காணோம்ன்னு" ஒரு பின்னூட்டம் போடலாமுன்னு வந்தா, புது பதிவு.. ஓகே.. great.
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
//குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்
அவனைவிட உயர்ந்திருப்பேன்
என்று எண்ணியபடி
அவள் கண்களில்
ஈரத்தைத் தேடினேன் //
பின்னீட்டீங்க்னா..
மனசு கலங்கிற்று.. ஈரம் காணவே முடியாது..
அசத்தல் கவிதை அனு.
//குதிகாலை இன்னும் சற்று
உயர்த்தி இருந்தால்//
பல்வேறு ஞாபகங்களைக் கிளறியது. சொல்லியதைவிட சொல்லப் படாமல் உணர்த்துவது உங்கள் கவிதையின் சிறப்பு.
நல்ல வாசிபனுபவம்.
உயரம் குறைவாக இருந்ததால் புறக்கணிக்கப் பட்டாரா
அனு,
முகுந்த் நாகராஜின் இந்தக் கவிதை படித்தீர்களா?
தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.
அண்ணா போட்டோ பார்த்து பயந்துட்டேன்..!! :(
கவிதை சூப்பர் அண்ணா..!! :))))
@ வெண்பூ
தப்பிச்ச. இல்லாட்டி, பொழிப்புரை எழுதி உன்கிட்ட பத்து பின்னூட்டம் வாங்கியிருப்பேன். ரொம்ப ஸ்மார்ட் பெல்லோ.
@ சரவணகுமார்
'காணோம்' அறிவிப்பு 'தமிழ்மணத்தில்' வரும் முன் பதிவ போட்டாச்சு. நன்றி சரவணா. ஈரம் இருந்தால் காதல் இருக்கும். இல்லாட்டி கவிதை பிறக்கும்.
@ வேலன்
உங்களிடம் காதல் பற்றிய கவிதைக்குப் பாராட்டு என்பது சட்டைக் காலரைத் தூக்கிக் கொள்ள வேண்டிய விடயம்.
முகுந்த் கவிதையும் அதே இதழில் தான் பிரசுரம் ஆனது. அபாரம். அவர் கவிதைகள் பூடகம் மிகுந்தவை. ஏனோ அதிகம் எழுதுவதில்லை.
@ ஸ்ரீமதி
போட்டோ நல்லாத்தானே இருக்கு. (குறை சொல்லாதே. உயிர்மை பத்திரிக்கை போட்டது). பொண்ணுங்க அழுதா பயங்கரமா இருக்குதோ என்னவோ.
பாராட்டுக்கு நன்றி. உனக்காகத்தான் அவசரமாகப் பதிவு செய்தேன். வெளியூரில் இருக்கிறேன்.
அனுஜன்யா
அழகாக முகத்தில் ரத்த கண்ணீரா? படம் பார்த்து கவிதையா? நல்லாயிருக்கு.
நவீன விருட்சத்தில் உங்களின் 2 கவிதைகளை இன்றுதான் படித்தேன்.அபாரம்.
வடகரை வேலன்போலவே நானும் முகுந்த்நாகராஜனின் கவிதையை நிறையப் பேரிடம் சொல்லிவருகிறேன்.வடகரை வேலன் நல்ல மனதோடு நிறைய பரிந்துரை செய்கிறார்.
நம்மப் பக்கம் ஆளையேக்காணோமே.
அண்ணே நானனெல்லாம் எப்பண்ணே இந்த மாதிரி எழுதுறது? :(
அன்ணே இன்னைக்கே நானும் எதாவது கிறுக்க முயற்சி பண்ணுறேன். ரொம்ப நாளாச்சு....
படத்தையும், சில வரிகளையும் வைத்து யாரிடமிருந்து கவிதை வெளிப்படுகிறதென்று சற்று குழம்பித்தான் போனேன்... பின்னூட்டத்தில் விளக்கம் இருக்குமான்னு பாத்தேன்... இல்ல... பின்னூட்டத்துல கிடைத்த ஒரு துப்ப வச்சி அப்புறம் திரும்ப திரும்ப வாசித்தப் பிறகு அருமைய விளங்கிச்சு... அட்டகாசமான கவிதை... வாய்ப்பே இல்ல :))
//இப்போதான் "இப்போதான் எங்கே ஆளயே காணோம்ன்னு" ஒரு பின்னூட்டம் போடலாமுன்னு வந்தா, புது பதிவு.. //
Repeatye... நானும் அதுக்குத்தான் வந்தேன் (பழி தீத்துக்கலாம்னுதான் ;))
@ வால்பையன்
உங்கள் பின்னூட்டத்தை சிறிது தாமதமாக கவனித்தேன்.
//உயரம் குறைவாக இருந்ததால் புறக்கணிக்கப் பட்டாரா//
சரியான புரிதல். 'உயரம்' என்பதில் பலவிதங்கள் உண்டல்லவா. ஜாதி, படிப்பு, தோற்றம், வசதி என்று.
@ கடையம் ஆனந்த்
வாங்க ஆனந்த். இல்லைங்க, நான் கவிதை மட்டும்தான் எழுதனேன். உயிர்மை பத்திரிகை பிரசுரித்த படம் இது. (நன்றி சொல்ல வேண்டும் அவர்களுக்கு). நன்றி.
@ முத்துவேல்
வாங்க கவிஞரே! வேலனுக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது. இந்த வாரக் கதம்பத்தில் உங்கள் கவிதை தான். நானும் தலைகீழ் நின்று கெஞ்சி கேட்டாயிற்று. முதல்ல கவிதை எழுது. பிறகு நான் போடுகிறேன் என்கிறார். ஹ்ம்.
கொஞ்சம் வேலை அதிகம். வருகிறேன் அங்கு.
@ அப்துல்லா
//நானும் எதாவது கிறுக்க முயற்சி பண்ணுறேன். //
நான் என்ன செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டாய். நல்ல இருப்பா.
@ ஜி
பயங்கர பி.ந.கவிதை/கதை எழுதினால், இதுபோன்ற தட்டையான கவிதைகள் இலேசில் புரிபடாது.
நினச்சேன். சரவணனுக்கு ரிபீட்ட்டெய் சொல்லுறியா! எல்லாம் ஒரு ரேஞ்சா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா - பி.ந.புலிகளெல்லாம்.
ஆமாம், இன்னமும் ப்ளாக் access பண்ண முடியலே. என்னதான் நடக்குது உன் வலைப்பூவில்.
அனுஜன்யா
வழக்கம்போல சூப்பர் :)
@ சென்ஷீ
நன்றி தல. ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து. கொவிக்காதீய. 'ரயிலு வண்டி' மாதிரீன்னா, வந்தோம், 'சூப்பர்' போட்டோம்னு போயிடலாம். 'கண்ணாடி கொத்தும் பறவை' படமும், எழுத்தும் அவசரமாக முடியும் காரியம் இல்லை என்று தோன்றியதால், கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டேன்.
அனுஜன்யா
கவிதை அருமை. அதனினும் தலைப்பு வெகு அருமை. நிஜங்களின் நிழல்கள் யாவும் இப்படி நிராசையின் வலிகளாகவேதான் இருக்குமோ?
@ ராமலக்ஷ்மி
ஆம். ஆயினும் தகுந்த சமயத்தில் உங்கள் 'காயத்ரி' போல் ஒருத்தி குறுக்கிட்டால், தற்கொலைக்குப் பதில் கொலை நிகழும் இந்த மாதிரி ஒரு கவிதை வடிவில் :)))
அனுஜன்யா
அபாரமான கவிதை சார்!
//அவள் கண்களில்
ஈரத்தைத் தேடினேன் //
:-(
என்ன சொல்வதெனத் தெரியவில்லை!
நன்றி கே.கே.
அனுஜன்யா
//ஆயினும் தகுந்த சமயத்தில் உங்கள் 'காயத்ரி' போல் ஒருத்தி குறுக்கிட்டால், தற்கொலைக்குப் பதில் கொலை நிகழும் இந்த மாதிரி ஒரு கவிதை வடிவில் :)))//
ஓ! அப்படியா சேதி:)))
அனுஜன்யா.. ஆழமான கவிதை..
நர்சிம்
நன்றி நர்சிம்.
அனுஜன்யா
wow!simply superb....
@ coolzkarthi
நன்றி.
அழகிய எண்ண ஓட்டம் ...சரளமான வார்த்தை கோர்வை ....வாழ்த்துக்கள் ...தொடர்ந்து எழுதுங்கள் ....நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன்...பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
கார்த்தி
ஒரு தொடர் விளையாட்டுல மாட்டி விட்டுட்டேன் உங்கள :)))
மறைமுக குறியீடாய் சொல்லி இருப்பது இனிமை!!
தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசிக்க தூண்டுகிறது..
வார்த்தைங்க ரொம்ப அருமையா handle பண்றீங்க. ரொம்ப அருமையா இருக்கு வார்த்தைகள் பிரயோகம். ஆனா இந்த கவிதை எனக்கு கடைசில புரியலைங்க!
//ஈரம் இருந்தால் காதல் இருக்கும். இல்லாட்டி கவிதை பிறக்கும்.//
super!
+gandhi
@ யாரோ
நீங்கள் யாரோ அல்ல. கார்த்தி. நன்றி முதல் வருகைக்கும் பாராட்டுக்கும். 'வலைக்குள்மழை' பக்கம் வருகிறேன்.
@ ஜி
என்ன விட்டுவிடுப்பா. சினிமா பற்றி அவ்வளவு தெரியாது.
@ லேகா
என்ன ஆச்சரியம்! almost உங்களிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு பின்னூட்டம் வாங்கியாயிற்று. ஆயினும் பெருமிதமாகத்தான் இருக்கிறது. நன்றி லேகா.
@ tkbg
காந்தி, நன்றி. புரியலியா? காதலியின் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படத்தை பார்க்கும் போது தோன்றிய எண்ணங்களைச் சொல்ல முயன்றேன். இந்த மாதிரி என் கவிதைய 'புரியல' ன்னு சொன்னா என்ன அபராதம்னு தெரியுமா? வெண்பூவிடம் கேட்கவும்.
அனுஜன்யா
ம்ம்..வழக்கம் போல் அருமை!
கலங்கி விட்டது மனம், ஒரு கணம்!!
உங்க கவிதையோட பலமே படிக்கறவங்களோட நினைவுகளை கிண்டி விடுவதுதான்!! :-)
@ சந்தனமுல்லை
நன்றி சகோதரி. எனக்குப் பிடித்த கவிஞர்களில் வா.மணிகண்டனும் ஒருவர். அவர் அடிக்கடி சொல்வது கவிதையில் வாசகிக்கு (நான் பெண்ணிய ஆதரவாளன்!) சிந்திக்க, கற்பனை செய்துகொள்ள போதிய இடைவெளி வேண்டுமென்று; மரங்களுக்கு நடுவில் உள்ள புல்வெளி போல்.
அனுஜன்யா
//இந்த மாதிரி என் கவிதைய 'புரியல' ன்னு சொன்னா என்ன அபராதம்னு தெரியுமா? வெண்பூவிடம் கேட்கவும்.//
ஐ! இப்போ புரிஞ்சுடிச்சியே! இதுக்குபோய் அபராதம்னு பயமுறுத்திட்டீங்க!:)
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க..
:))
Post a Comment