Friday, October 24, 2008

தினசரி 2 காட்சிகள்


வழமை நேர்த்தியில்
ஜெட் ஏர்வேஸ் பெண்கள்
சிரிப்பில் மென்சோகம்
வேலை இழக்கும் அச்சமோ!

அவர்களுக்குப் பின்
நிதமும் சதி தீட்டும்
பணக்காரக் குடும்பம்

வித்யாவுக்கும் கரீனாவுக்கும்
இடையில் நின்ற
அதிர்ஷ்டசாலி குடும்பஸ்தன்

அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும் ராஜ்

பங்குகளை விட வங்கிகளே தேவலாம்
பத்துக்குமேல் கிடைக்கிறதே

இந்தப் பக்கம் ஒரு வாரமாக
நின்றுகொண்டிருக்கும் பெண்ணின்
DLJ இன்னமும் நழுவவில்லை

மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி

33 comments:

வெண்பூ said...

அருமையான கவிதை அனுஜன்யா.. பணம் படைத்தவனின் கவலைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.. கடைசி வரி கலக்கல்...

DLJ என்றால் புரியவில்லை..

anujanya said...

நன்றி வெண்பூ. DLJ - Dangerously Low Jeans :))))

அனுஜன்யா

Anonymous said...

//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி//

பங்களாக்களில்தான் ஏசியின் உதவியால் புழுதிகள் மேலெழும்புவதில்லையே.

ராமலக்ஷ்மி said...

பத்திரிகைக்கு அனுப்புங்கள். வெகு அருமை.

ச.முத்துவேல் said...

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி//
இந்த வரிகளில் நான் கவிதையின் உள்ளடக்கத்தை உணர்கிறேன். எதிர்ப்பார்வையோடும்,எள்ளலோடும் சொல்லப்பட்டதாக. நான் புரிந்துகொண்டது சரியா?
(வெண்பூ மூலம் dljஐயம் தீர்ந்தது. நன்றிவெண்பூ.)
அருமையாக முடித்துள்ளீர்கள்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அருமையான கவிதை.

“மாடிவீட்டு ஜன்னல் கூட கட்டுதம்மா பட்டுச்சேல’’

ஏனோ இவரிகள் நினைவுக்கு வருகின்றன!

ஜியா said...

அட்டகாசம்... மிக அழகு

MSK / Saravana said...

பின்றீங்க போங்க.. கலக்கலா இருக்கு..

MSK / Saravana said...

//DLJ - Dangerously Low Jeans //

ஓஹோ.. அப்படியா..

இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க.. ;)

anujanya said...

@ வேலன்

உண்மைதான் வேலன். நன்றி.

@ ராமலக்ஷ்மி

அனுப்பிப் பார்க்கிறேன். நன்றி.

@ முத்துவேல்

உங்கள் பார்வை நுட்பமானதுதான். நன்றி முத்துவேல்.

@ சுடர்மணி

உங்கள் முதல் வருகை. நீங்கள் சொல்லும் வரிகள் அழகு. நன்றி.

@ ஜி

நன்றி ஜி. ஏதாவது எழுதியிருக்கிறாயா சமிபத்தில்?

@ சரா

நன்றி சரா. DLJ - நாங்களும் யூத் அப்பிடின்னு எவ்வளவு தடவ சொல்றது!

அனுஜன்யா

Unknown said...

Where is my comment anna?? :((

anujanya said...

@ ஸ்ரீ

போட்டால் தானே வரும். அல்லது வேறு எங்காவது மறதியில் கமெண்ட் போட்டுவிட்டாயா? seriously, I didnt get any.

அனுஜன்யா

Unknown said...

அச்சச்சோ..:(( சரி ஓகே அண்ணா..!! :)) சூப்பரா இருக்கு கவிதை...:)) எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுதுன்னு தெரியல...:)) இதெல்லாம் பார்க்கும்போது நான் உருப்படியா ஒண்ணுமே பண்ணலன்னு நல்லாவே தெரியுது..:)))))))

anujanya said...

@ ஸ்ரீ

நன்றி ஸ்ரீ. இப்போதெல்லாம் நீ எங்கியோ வானத்து உயரம் தொடும் அளவு எழுதற. பின்.நவீனம் எல்லாம் எழுத வந்துவிட்டது. உன்கிட்ட நான் கத்துக்க வேண்டியது பி.நவீனம் மட்டுமில்ல. அடக்கமும்.

அனுஜன்யா

Unknown said...

அண்ணா உங்களுக்கு தான் சமூக அக்கறையுள்ள கவிதை எல்லாம் வருது...:)) என்னை பொறுத்தவரைக்கும் அதுதான் ரொம்ப முக்கியம்..:)) அதான் எனக்கு இல்ல..:(( அப்பறம் அடக்கம் எல்லாம் உங்கள மாதிரி அண்ணாக்கள்கிட்ட இருந்து வந்தது தான்..:))

வால்பையன் said...

இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!

அவர்களுக்குப் பின்
நிதமும் திவால் ஆகும்
அமெரிக்க வங்கிகள்

டாடாவிலும் டோயோட்டாவிலும்
நிதமும் சுற்றிய
அதிர்ஷ்டசாலி நண்பன்.

அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்

சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே

இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை

மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி


கடைசி இரண்டு பாராக்கள் எல்லாத்துக்கும் பொருந்துவது போல் இருந்தது.
அதனால் அவை அப்படியே!

anujanya said...

@ ஸ்ரீ

:))))

@ வால்பையன்

நல்லாவே இருக்கு குரு. கலக்கல்.

அனுஜன்யா

வால்பையன் said...

//நல்லாவே இருக்கு குரு.//

குரு சிஷ்யன பாத்து குருனு சொல்றாரு பாருங்க

MSK / Saravana said...

வால் பையன் கவிதை இன்னும் கலக்கல்.. Timing-கா இருக்கு..
:))

MSK / Saravana said...

//நன்றி சரா. DLJ - நாங்களும் யூத் அப்பிடின்னு எவ்வளவு தடவ சொல்றது! //

சரிங்க்ணா.. நம்பிவிடுகிறேன்.. :)

சந்தனமுல்லை said...

நச்-சுன்னு இருக்குங்க கவிதை!

//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி //

இது அருமை!

அன்புடன் அருணா said...

//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி//

பல பேருக்கு....

என்னா ...அடிக்கடித் தொடர் பதிவுக்குக் கூப்பிடறேன்னு என் வலைப்பூ பக்கம் வரவேயில்லையா?ஆனாலும் மீண்டும் கூப்பிட்டு இருக்கேன்....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//வால்பையன் said...
இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை //

அச்சச்சோ...வால் ஒரு அழகான கவிதைப் பதிவைப் பின்னூட்டமாகப் போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே!
அன்புடன் அருணா

சென்ஷி said...

கலக்கல் கவிதை அனுஜன்யா...

பதிவுகளை படித்துவிட்டாலும் நேரமின்மையால் பின்னூட்டமிடும் வசதி குறைகின்றது :(

புதுகை.அப்துல்லா said...

குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி

//

அண்ணா நானும் தான் எழுதுருறேன்... வேற என்னத்த சொல்ரது???

புதுகை.அப்துல்லா said...

அப்புறம் ஒரு நாளஞ்சு நாளா நம்ப மெயின் கடைக்கு லீவு விட்டுட்டு வலைச்சரத்துல ஸ்டால் போட்டுருக்கேன். முடிஞ்சா வாங்க
http://blogintamil.blogspot.com/

பரிசல்காரன் said...

அருமையா இருக்குங்க.

anujanya said...

@ சந்தனமுல்லை

நன்றி சகோதரி. எல்லோருக்கும் அந்த வரிகள் பிடிக்கின்றன.

@ அருணா

அப்படியெல்லாம் இல்லை அருணா. நேரம்தான் ஒரு பிரச்சனை. வால்பையன் கவிதை தனியாக அவர் வலைப்பூவிலேயே போடலாம். அழகாக உள்ளது.

@ சென்ஷி

நன்றி தல.

//பதிவுகளை படித்துவிட்டாலும் நேரமின்மையால் பின்னூட்டமிடும் வசதி குறைகின்றது :( // சேம் ப்ளட்.

@ அப்துல்லா

நாமெல்லாம் ஒரே குட்டைதான் அப்துல்லா. வருகிறேன் புது ஸ்டாலுக்கு.

@ பரிசல்காரன்

நன்றி கே.கே. நீங்கள் எவ்வளவு பிசி என்று தெரியும். அதற்கிடையே தொடர்ந்து ஊக்கமளிப்பது நெகிழ்ச்சி.

அனுஜன்யா

நாணல் said...

அருமையான கவிதை... :)
//குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி//

:) நல்லா இருக்கு

anujanya said...

@ நாணல்

நன்றி நாணல். இன்று தான் பார்த்தேன்.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

அருமை அனுஜன்யா

anujanya said...

நன்றி முரளி. இப்பதான் பார்த்தீங்களா? ஒரு வேளை தலைப்பை search பண்ணி வந்தீங்களா :)

அனுஜன்யா

வால்பையன் said...

இந்த குவியலில் பாருங்க காரணம் தெரியும்