Wednesday, October 22, 2008

இயற்கை வைத்தியம்


பிரதான சாலையில்
உறைந்திருந்த போக்குவரத்தில்
வல ஓர இடம் பிடித்து
ஊர்ந்து வந்தேன் இக்காலை;
பெய்திருந்த சிறுமழையில்
நடுச்சாலை எங்கும்
புதுப் பச்சையில்
மிளிர்ந்த செடிகள்;
முத்துக்கள் உமிழ்ந்து
காற்றுடன் பேசிய புற்கள்;
தலை சாய்த்து
நலம் விசாரித்த
சிகப்பு ரோஜாக்கள்;
இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது

30 comments:

Anonymous said...

//பெயர் தெரியாத
பீட்ரூட் நிற குரோட்டன்ஸ்//

குரோட்டன்ஸை எத்தனை முறை அதுவும் இந்தக் கலரில் பார்த்திருக்கிறேன். அதற்கும் பீட்ரூட்டுக்கும் கனெக்சன் குடுத்துக் கலக்கீட்டிங்க.

Unknown said...

அனுஜன்யா,

சுமார் கவிதை .இன்னும் சற்று வித்தியாசமாக
யோசிக்கலாம் ..இயற்கை பற்றிய கவிதைகள்
நிறைய வந்து விட்டது.

//தலை சாய்த்து
நலம் விசாரித்த
சிகப்பு ரோஜாக்கள்//

இந்த மாதிரி வரிகள் நெறைய படித்தாகி விட்டது .

வால்பையன் said...

மனதுக்கு வண்ண வைத்தியம்

ராமலக்ஷ்மி said...

நொந்தது
உடலானாலும்
மனமானாலும்
இதம் தருவதில்
இயற்கை வைத்தியத்துக்கு
ஈடு ஏது
இணை ஏது?

அருமை அனுஜன்யா.

வாழ்த்துக்கள்.

TKB காந்தி said...

//இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது//

Final touch நல்லா இருக்கு அனுஜன்யா!

Anonymous said...

// இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது//

:) நல்லாருக்கு..

MSK / Saravana said...

\\K.Ravishankar said...
//தலை சாய்த்து
நலம் விசாரித்த
சிகப்பு ரோஜாக்கள்//

இந்த மாதிரி வரிகள் நெறைய படித்தாகி விட்டது .\\

ஆமாங்க்ணா.. :))

MSK / Saravana said...

//இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது//

ஆனா இந்த வரிகள் நல்ல இருக்கு.. :))

நாணல் said...

//இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது//

:)) நல்லா இருக்கு அனுஜன்யா

anujanya said...

@ வேலன்

நன்றி.

@ K.Ravishankar

காதல், இயற்கை, குழந்தை இதெல்லாம் எழுதக்கூடாது என்றால் கவிஞர்கள் கடைசிக் கவிதையாக தூக்கு மேடை பற்றி எழுதிவிட்டுச் சாகலாம். Jokes apart, point taken. கவிதை (!) பெரும்பாலும் திட்டமிட்டு வருவதில்லை. திட்டமிடலே கவிதையைக் கெடுத்துவிடும். ஆயினும், உங்கள் கருத்து எனக்கு முக்கியமானது. நன்றி.

@ வால்பையன்

நன்றி. அங்க என்னை பந்தாடுறீங்களே!

@ ராமலக்ஷ்மி

நன்றி உங்கள் தொடர் ஊக்கத்திற்கு.

@ TKB Gandhi

நன்றி காந்தி. கவிஞர் சொன்னா சரியா இருக்கும்.

@ த.அகிலன்

உங்கள் வலைப்பூ வரவேண்டும் என்று வெகுநாட்களாக எண்ணம். நன்றி அகிலன்.

@ MSK

நன்றி சரா. சினிமா பதிவு எழுதவில்லை. மன்னித்துவிடு. உன் பக்கமும் வர வேண்டும்.

அனுஜன்யா

வெண்பூ said...

அருமை அனுஜன்யா.. கவிதைக்கு தலைப்பு மிகப் பொருத்தம்.. ஆனா எங்களுக்கெல்லாம்

//
இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற சுடிதார்
குளிப்பாட்டிக் கரைத்தது
//

அப்படின்றதுதான் பொருத்தமா இருக்கும்.. :))))

Unknown said...

வாவ் சூப்பர் அண்ணா....!! :))

//இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது//

என்ன பண்றது இப்படி எல்லாம் தான் மனச தேத்திக்க வேண்டிருக்கு..!! :((

anujanya said...

@ நாணல்

நன்றி நாணல். பேசாமல் கடைசி நாலு வரிகள் மட்டும் எழுதியிருக்கலாம் போல!

@ வெண்பூ

நீ அடங்கமாட்டியா! நாங்களும் யூத்து தான் யூத்து தான் யூத்து தான் (வடிவேலு ஸ்டைல்). ஆனா சுடுசொற்கள் வந்ததே அங்கிருந்துதான் அப்பு.

@ ஸ்ரீ

சரியான புரிதலுக்கு மிக்க நன்றி மேலான பின் நவீனக் கவிதாயினி அவர்களே!

அனுஜன்யா

வெண்பூ said...

அனுஜன்யா.. நீங்க கவனிச்சிங்களான்னு தெரியல.. இந்த கவிதையும் எனக்கு விளக்கம் சொல்லாமயே நல்லா புரிஞ்சிடுச்சி.. ஹி..ஹி..

anujanya said...

@ வெண்பூ

அதாவது, இதெல்லாம் கவிதையா! கவுஜ அப்பிடீங்கற! அதுக்கும் உன் சம்பந்தி கோவிச்சுக்கலாம். எதுக்கும் 'ராப்' கிட்டயே கேட்ருவோம்.

அனுஜன்யா

Unknown said...

உங்களுடைய பழைய ஹைகுகள் படித்தேன் . இங்கு மறுமொழி போடுகிறேன் .பொறுத்துகொள்ளவும்

சுஜாதா சொன்னது:

லாங் சாட், மிட் சாட், க்ளோஸ் அப் க்ளோஸ் அப் அல்லது ஸூம்மில் உறைதல் அல்லது ஆச்சிரிய படுத்தல் வேண்டும் .

“உடன் கட்டை ஏறத் “"உடற் பயிற்சி " வித்தியாசமான கவிதை .. "சலனமின்றி " இதுவும் வி.கவிதை "கூட ஓட முடியாத " என்பதற்கு "மௌனமாய் பார்த்துக்கொண்டிற்கும்" போடலாம்."கூட ஓட முடியாத " என்பது கோனார் நோட்ஸ் போட்டு விட்ட மாதிரி தெரிகிறது . jarring note.

அந்த போட்டோ அருமை .

ஹைகூவில் ரொம்ப காவிய/கவிதை தமிழ் வேண்டாம் . "கவித்துவம் " தேவை இல்லை என்று நினைக்கிறேன் . சரியா ? சொல்லுங்கள்

வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்

கிழே உள்ள ஹைகூ பாருங்கள் . நான் எழுதியது அல்ல:
எங்கோ படித்தது.

விழுந்த மலர்
திரும்ப கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!

திருடன் ஜன்னலில்
விட்டு சென்று விட்டான்
நிலவொளி

மழைக்கு பயந்து
அறைக்குள் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

நான் எழுதியது

கவ்விய இரையை உண்ண
விரித்த கால்களுடன் காக்கை
மின்சாரம் கசியும் கம்பியை நெருங்க
அபாயம் 2000 வோல்ட்ஸ்

நன்றி

கார்க்கிபவா said...

//
பிரதான சாலையில்
உறைந்திருந்த போக்குவரத்தில்
வல ஓர இடம் பிடித்து//

வலது ஓரம் ஆண்களுக்குத்தானே? ஆவ்வ்வ்வ்.. எங்கள் உரிமையை பறிக்காதீங்க.. ஹிஹிஹி.. ச்சும்மா..

கவிதை நல்லாருக்கு

ச.முத்துவேல் said...

//புதுப் பச்சையில்
மிளிர்ந்த செடிகள்;
முத்துக்கள் உமிழ்ந்து
காற்றுடன் பேசிய புற்கள்//

வரிகள் நல்லாருக்கு.மழைப்பருவம்
கவிதைக்கு உகந்தது எனலாமா?

Unknown said...

//@ ஸ்ரீ

சரியான புரிதலுக்கு மிக்க நன்றி மேலான பின் நவீனக் கவிதாயினி அவர்களே!

அனுஜன்யா//

அண்ணா நான் இத வன்மையா கண்டிக்கிறேன்.. அதோடு, நான் எப்பவும் உங்க குட்டி தங்கை தான் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்..!! ;))))

narsim said...

ஆஜர் தலைவா..

வார்த்தைகள் அற்புதம்...

நர்சிம்

உயிரோடை said...

புதுப் பச்சையில்
மிளிர்ந்த செடிகள்;
முத்துக்கள் உமிழ்ந்து
காற்றுடன் பேசிய புற்கள்;
தலை சாய்த்து
நலம் விசாரித்த
சிகப்பு ரோஜாக்கள்;

--- arumaiyana rasainga ungaluku

miga arumaiyana kavithai. kavithaiku etra thalaipu

உயிரோடை said...

புதுப் பச்சையில்
மிளிர்ந்த செடிகள்;
முத்துக்கள் உமிழ்ந்து
காற்றுடன் பேசிய புற்கள்;
தலை சாய்த்து
நலம் விசாரித்த
சிகப்பு ரோஜாக்கள்;

arumaiya rasanainga ungaluku.

nalla thallaipu atharkettra kavithai

பரிசல்காரன் said...

:-)

பாராட்டுக்கள்!

anujanya said...

@ K.Ravishankar

ரவி!

முத்துவேல், முத்துக்குமார் முதல் வால்பையன் வரை ஒரு பொதுக்கூட்டமே எனக்கு ஹைக்கூ பற்றி பாடம் சொல்லிக்கொடுத்தும் நான் இதுவரை திருந்தவில்லை. நீங்கள் இவ்வளவு மெனக்கெடுவது பாவமாக இருக்கு. முயல்கிறேன். நீங்கள் கொடுத்த ஹைகூக்களும் எழுதிய நாலு வரி துளிப்பாவும் நல்லா இருக்கு.

@ கார்க்கி

வலது ஓரம் என்ன! வலது பாதியே ஆண்களுக்குத்தான் (அர்த்தநாரி). கதைசொல்லி பரிசல் பதிவில் வந்த ரைட் சைடு ஆசாமி!

@ முத்துவேல்

வாங்க சார். மழை நிச்சயம் கவிஞனுக்கு ஒரு கிளர்ச்சிதான். நன்றி

@ ஸ்ரீ

உன் பெருமையைக் கூட்டி சொன்னா, எம்பெரும தானா வளரும் :)))

@ நர்சிம்

நன்றி இளவரசே! உங்க வலைப்பூ பெரிய பல்கலைக்கழகம் எனக்கு. ஹி ஹி! அங்க எனக்கு நிறைய அரியர்ஸ் இருக்குன்னு சொல்ல வந்தேன். வருகிறேன்.

@ மின்னல்

இது! இது! மிக்க நன்றி.

@ பரிசல்காரன்

Chief guest வராரு வழிய விடுங்கப்பா. நன்றி கே.கே.

அனுஜன்யா

ஜியா said...

நானும் ரவியுடன் ஒத்துப் போகிறேன்... உங்களின் தளம் ஏறிவிட்டது... அதனால எதிர்ப்பார்ப்பு அதிகம் :))

anujanya said...

@ ஜி

நன்றி ஜி. வாசிப்பும் அவதானிப்பும் பெருக வேண்டியதன் அவசியத்தை மென்வார்த்தைகளில் சொல்கிறாய் என்பது புரிகிறது. முயல்கிறேன்.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க இந்தக் காட்சிக் கவிதை!

சில வரிகளை இன்னும் கொஞ்சம் கூர்மையாக்க முயலலாம்.

anujanya said...

@ சுந்தர்

நன்றி சுந்தர். 'கிரியா' வும், கிரியா ஊக்கி நீங்களும் இருக்கும்போது இனிமேல் improvement இருக்கும் என்று நம்புகிறேன்.

அனுஜன்யா

Divya said...

\இந்த முறை சுடுசொற்களை
பெயர் தெரியாத
பீட்ருட் நிற குரோட்டன்ஸ்
குளிப்பாட்டிக் கரைத்தது\

அருமை!

முதன் முறையாக உங்கள் வலைதளம் வருகிறேன்.......வித்தியாசமான கவிதைகள் உங்கள் தளத்தில் கண்டு வியந்தேன்:)

வாழ்த்துக்கள்!

anujanya said...

@ divya

நன்றி திவ்யா உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.

அனுஜன்யா