Thursday, November 20, 2008

துயிலும் பெண்

எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா. அவரது இணையதளமும் எனக்குப் பிடித்த இணையங்களுள் ஒன்று.

அண்மையில் எஸ்ரா சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதை பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.

"சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன். இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்."

கதை எனக்கு வசீகரமாகவும், பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது. இதனை மொழியாக்கம் செய்து பார்த்தால் என்ன என்று முயன்றேன். (சொந்தக் கற்பனை வறட்சி நிலவரம் என் கவிதைகள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்).

கதை படிக்க ஆசைப்படுவோர் இங்கு செல்லவும்: துயிலும் பெண்

பெரும் ஊக்கமளித்து இணையத்தில் என் பெயரையும் குறிப்பிட்ட, நான் மிக மதிக்கும் எஸ்ராவுக்கு நன்றிகள் பல.

இது பெரும் நாவலாக அல்லாது, இரண்டு பக்க சிறுகதை மட்டுமே என்பதாலும், மொழியாக்கத்தின் மொழியாக்கம் (அரேபிய-ஆங்கில-தமிழ்) என்பதாலும் "வருமொழி, நிலைமொழி, மொழியாக்கத்தில் வன்முறை" என்றெல்லாம் பெரிய விடயங்கள் பற்றி வெளிச்சம் காட்டிய வளர்மதியின் நினைவுகளைக் கிடப்பில் போட்டுவிட்டேன். பிழைகளை அன்னார் மன்னிப்பாராக.

26 comments:

வெயிலான் said...

மூன்று நான்கு முறை படித்தும், சில புரிந்தும் புரியாமலே சுழன்று கொண்டிருக்கிறது அல்லது வெவ்வேறு புரிதலாகிறது.

மொழிபெயர்த்தமைக்கு நன்றி!

கிருத்திகா said...

அதிர்ச்சி தரும் வாசிப்பு அனுபவம்..

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் சாரே!!

Bee'morgan said...

வாழ்த்துகள் அண்ணா.. எஸ்ராவின் இணையதளத்திலேயே படித்தேன்.. ஆங்கில மூலமும் படித்தேன்.. ;) ரொம்ப நல்லா மொழிபெயர்த்துருக்கீங்க..

K.Ravishankar said...

அனுஜன்யா,

ரொம்ப நல்லா இருக்கு.
நல்லா மொழி பெயர்த்து உள்ளீர்கள்.
அந்த ஹால்டா டைப்ரைட்டர் எழுத்து
ப்ர்ப்ஸ்ஸாக செய்ததா?

லேகா said...

வாசிப்பு குறித்த தொடர் பதிவிற்கு உங்களை அழைத்துள்ளேன்.
தங்களின் வாசிப்பு அனுபவ பகிர்தலை எதிர் நோக்கி....

லேகா
http://yalisai.blogspot.com/

அனுஜன்யா said...

@ வெயிலான்

உங்கள் முதல் வருகை? லேட் fees வசூலிக்க வேண்டும் உங்களிடம் :)
ஆம், சிறிது பூடகமான கதைதான். அரபு தேசப் பெண்களின் நிலை பற்றி புரிதல் இந்தக் கதைக்கு இன்னும் வேறு பரிமாணங்கள் தரக்கூடும். நன்றி நண்பா.

@ கிருத்திகா

ஒரு வழியாக உங்களை வரவழைத்து விட்டேன், எஸ்ராவின் துணையுடன். ஆம், அதிர்ச்சி மற்றும் யோசிக்க நிறைய கிடைக்கும்.

@ பரிசல்காரன்

நன்றி கே.கே. இன்னிக்கு முதல் batch லியே நம்மள கவனிச்சுட்டீங்க!

@ Bee'morgan

நன்றி பாலா. நீதான் ஏற்கனெவே சொல்லிவிட்டாயே.

@ K.Ravishankar

நன்றி ரவி. நான் Technologically challenged ஆசாமி. Fonts அப்போதைக்கு எது தோணுதோ, அதப் போட வேண்டியது. Halda! Remington! Godrej ! இவைகளை ஏதேனும் நவீன மியுசியத்துல பார்க்க முடியுமா!

அனுஜன்யா

அனுஜன்யா said...

@ லேகா

உங்கள் பதிவு பார்க்கிறேன். (ஏதாவது காப்பி அடிக்க முடியுமான்னு :)) )

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

அச்சச்சோ அண்ணா நான் இன்னும் அந்த கதை படிக்கல..:(( பட் படிக்கிறேன் கண்டிப்பா.. :)))

ஸ்ரீமதி said...

படிச்சிட்டேன்... ஆனா புரியல...

ஸ்ரீமதி said...

தெரிஞ்சிக்க இஷ்டம் இல்ல அண்ணா :((

அனுஜன்யா said...

@ ஸ்ரீ

ஏய், பைத்தியம், பயப்படாதே. இந்தக் கதை குறியீடுகளுடன் எழுதப்பட்டது. கற்பழிப்பு என்பதை உடல் ரீதியில் இல்லது உளவியல் ரீதியிலும் பார்க்கலாம்.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

உங்களின் இலக்கிய செயல்பாடுகில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த நிழ்வு.மேலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளை உற்சாகத்தோடு செய்ய வேண்டுகிறேன்.பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

Saravana Kumar MSK said...

//இந்தக் கதை குறியீடுகளுடன் எழுதப்பட்டது. கற்பழிப்பு என்பதை உடல் ரீதியில் இல்லது உளவியல் ரீதியிலும் பார்க்கலாம்.//

இதை படித்த பின் தோன்றிய கேள்வி.. இந்த கதை என்னவெல்லாம் சொல்கிறது.. அதாவது உங்களின் POV- யில்..

மேலும் கதையில் "கற்பழிப்பு" என்ற வார்த்தையை நீக்கியிருக்கலாமோ. ஆணாதிக்க வார்த்தை..
"வன்புணர்வு" என்று ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.. அதையே பயன்படுத்தி இருக்கலாமே..

Saravana Kumar MSK said...

ஏன்னா.. எனக்கும் இந்த சிறுகதை புரிந்ததை போலவும், புரியாததை போலவும் இருக்கு.. :)

அனுஜன்யா said...

@ முத்துவேல்

நன்றி முத்துவேல்.

@ சரா

ஒரே வார்த்தை திரும்பத் திரும்ப வருகையில் சற்று ஆயாசம் ஏற்படும் என்று கூடிய வரை வேறு வார்த்தைப் பிரயோகங்கள் முயன்றேன். 'சேதம்/கற்பு/ வன்/எடுத்துக் கொள்ளுதல்' என்று. உதட்டளவில் politically correct வார்த்தைகளை எழுதி, உண்மையில் ஆணாதிக்கம் செய்வதில் உடன்பாடு இல்லை. ஆயினும், நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். யார் மனமேனும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

சாதரணமாகவே கவிதை / கதைக்கு பொழிப்புரை தரக்கூடாது; அந்தந்த வாசகருக்கு, அனுபவம், வாசிப்பரிவு இவைகளுக்கேற்ப புரிதல் என்பார்கள். இது வெறும் மொழி பெயர்ப்பு. ஆள விடு சாமி.

அனுஜன்யா

Anonymous said...

சந்தோஷம் அனுஜன்யா.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் அனுஜன்யா!

ச.முத்துவேல் said...
//உங்களின் இலக்கிய செயல்பாடுகில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த நிழ்வு.மேலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளை உற்சாகத்தோடு செய்ய வேண்டுகிறேன்.//

வழி மொழிகிறேன்.

[எஸ்.ராமக்கிருஷ்ணன் எனது ஃபேவரேட் எழுத்தாளரும் கூட. எனது ப்ரொஃபைலிலும் குறிப்பிட்டிருபேன்.]

மின்னல் said...

வாழ்த்துக‌ள் அனுஜ‌ன்யா

அனுஜன்யா said...

@ வேலன்

நன்றி. நேரில் பேசலாம்.

@ ராமலக்ஷ்மி

நன்றி. அதாவது மொழிபெயர்ப்போடு நிறுத்து என்கிறீர்கள் :)
சகோதரி என்றாகிவிட்டபின் எஸ்ரா பிடிக்காமல் இருக்க முடியுமா :)

@ மின்னல்

நன்றி கவிதாயினி.

அனுஜன்யா

Krishnan said...

தமிழில் என்னுடைய கமெண்ட் , நன்றிகள் பல அனுஜன்யா அவர்களே.

அனுஜன்யா said...

நன்றி கிருஷ்ணன். ஒரு பதிவும் தமிழில் எழுதுங்களேன் :)

அனுஜன்யா

Iniyal said...

Oru nalla mozhi peyarpu.

அனுஜன்யா said...

@ Iniyal

நன்றி.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் அனுஜன்யா! இன்னும் கதை படிக்க வில்லை..போய் படிக்கிறேன் !!

அனுஜன்யா said...

நன்றி சகோதரி.

அனுஜன்யா