Friday, December 5, 2008

பிசுபிசுப்பு


மழைக்கு முன்பான காற்றில்
படபடத்த நோட்டுப்புத்தகத்தின்
ஏழாம் தாள் நிரம்பவே சலனித்து
கவனமீர்த்தது.
உரையாடவும் தொடங்கிற்று.
எவ்வளவு காற்று! மழையும் பெய்யுமிப்போ
என்னைக் கிழித்து மடி
ராக்கெட் செய்து பறக்கவிடு
கத்திக்கப்பல் செய்து மிதக்கவிடு
எப்படியாவது என்னை
விடுவித்துவிடு என்றது
மரங்களைப் பற்றியெல்லாம்
கவலைப்படுமென்னிடம்
முற்பிறப்பில் மரமாயிருந்தாலும்
இலையாய்ப் பறக்கத்தான்
ஆசையுற்றேன் - விடுவி என்றது
அரைமனதுடன் கிழித்த தாளை
எண்ணையில் தோய்த்து
விளக்கடியில் தூக்கிலிட்ட
என் மனைவி சொன்னது
'ஈசல் தொல்லை தாங்கவில்லை'
பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.


(உயிரோசை 01.12.08 மின்னிதழில் பிரசுரமானது)

39 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

சே துக்கப்படுத்தீட்டீங்க.....எங்க மனசை...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா இருக்கு!

சந்தனமுல்லை said...

//பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.//

:(

ச.முத்துவேல் said...

அடித்து நொறுக்கும் அனுஐன்யாவுக்கு.
வாழ்த்துக்கள். நல்லாயிருக்கு கவிதை.

Anonymous said...

நல்லா இருக்கு அனுஜன்யா.

பரிசல்காரன் said...

//பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.//

இந்த வார்த்தகள் என்னமோ என்னை ரொம்பவே ஈர்த்தது...

புதியவன் said...

ஆழமான சோகம் சொல்லும் வரிகள்,
வார்த்தைகளில் வலி தெரிகிறது...

Bee'morgan said...

தூக்கிலிட்ட - என்னவொரு சொற்பிரயோகம்.. குறியீடாய் மனதை கனக்க வைக்கிறது..
பின்னிட்டீங்கண்ணா..

anujanya said...

@ கிருத்திகா

அடுத்த கவிதை புன்னகை செய்யும் படி எழுத முயல்கிறேன். :))
நன்றி கிருத்திகா.

@ ஜ்யோவ்ராம்

பெருந்தலையின் வருகை. நன்றி நன்றி தலீவா.

@ சந்தனமுல்லை

கிருத்திகாவுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். :)). நன்றி.

@ முத்துவேல்

என்ன முத்துவேல், காமெடி எதுவும் பண்ணலியே என்னவெச்சு! நன்றி.

@ வேலன்

நன்றி அண்ணாச்சி.

@ பரிசல்

கே.கே., உங்களை ஈர்த்ததில் நிறையவே மகிழ்ச்சி.

@ புதியவன்

நன்றி. இப்போதான் உங்க வலைப்பூ பார்த்தேன். முத்தமா, சாரி மொத்தமா பின்னுறீங்க. வாழ்த்துக்கள்.

@ Bee'morgan

பாலா, மிக நுட்பமான பார்வை உனக்கு. P.M. கதைக்குப் பின் என்ன எழுதுவதாக உத்தேசம்?

அனுஜன்யா

Anonymous said...

தன்னைத் தாளாய் / தாளைத் தானாய்

அருமை! அருமை!

முரளிகண்ணன் said...

என்னவோ பண்ணுது கவிதை. சரியா அதை வார்த்தையில சொல்ல முடியலை

அமுதா said...

அருமை

Anonymous said...

உங்களிடம் சொன்னதுபோலவே:

மீ த 13th :)

கவிதை "பிரமாதம்," மற்றும் "அட்டகாசம்." :)

"மரமாயிருந்தாலும்
இலையாய்ப் பறக்கத்தான்
ஆசையுற்றேன்"
- அழகான ஆசை.

வாழ்த்துக்கள். ரொம்ப நல்லா இருந்தது.

காந்தி

இனியாள் said...

Arumaiyana kavithai, vazhthukkal ungal padaiugalukku.

anujanya said...

@ வெயிலான்

எவ்வளவு அழகாக கவிதைக்கும் சுருக்கம் தருகிறீர்கள். நீங்கள் நிறைய எழுதலாம் வெயிலான்.

@ முரளி

உங்க பின்னூட்டம் எனக்கு குணா படத்து கண்மணி அன்போட பாடலின் 'அத எழுத நினைக்கையில் வார்த்த முட்டுது' வரிகள் ஞாபகம் வந்தது. ஒரு பதிவு அதப்பத்தியும் போடுங்க தல.

@ அமுதா

நன்றி அமுதா.

@ காந்தி

கொடுத்த வாக்கை நிறைவேற்றியதில் நீ அரிச்சந்திரன் தான். ஆனா, பெயருக்கு ஏற்றாற்போல் 'உண்மை' சொல்ல வேண்டும். :))

நன்றி காந்தி.

@ Iniyal

நன்றி இந்துமதி.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

//முற்பிறப்பில் மரமாயிருந்தாலும்
இலையாய்ப் பறக்கத்தான்
ஆசையுற்றேன்//

அருமையான வரிகள்.

//பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில்//

முடிவில் அதன் ஆசை பிசுபிசுத்துப் போனது சொல்லொண்ணா சோகமே!

Karthikeyan G said...

நல்ல இருக்கு!!

anujanya said...

@ ராமலக்ஷ்மி

நன்றி. வரி வரியாக அலசுகிறீர்கள். நல்ல ஊக்கம் எனக்கு.

@ கார்த்திகேயன்

நன்றி. உங்கள் முதல் வருகையா? இன்னும் சில கவிதைப் பதிவுகள் போடலாமே நீங்கள்.

அனுஜன்யா

வெண்பூ said...

கலக்கல் கவிதை அனுஜன்யா.. அந்த கடைசி வரியில் ஒரு கதையவே சொல்லிட்டீங்க.. சூப்பர்..

Karthikeyan G said...

கண்டிப்பாக சார்..இன்றே

Anonymous said...

என்னங்க இப்படி கேட்டுடீங்க ;) நான் சொல்வெதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேற எதுவும் இல்லை :)

யோசிப்பும், வார்த்தைகளும் எனக்கு பிடிச்சிருந்தது.

காந்தி

thamizhparavai said...

கவிதை பிரமாதம் நண்பரே.படமும் அருமை. தூக்கிலிடப்பட்ட தாளிருந்த இடத்தில் மலரஞ்சலி செய்வது போல்..

anujanya said...

@ வெண்பூ

நன்றி வெண்பூ. இப்பவெல்லாம் நீ கவிதைக்கு அர்த்தம் கேட்காமல் இருப்பது உன் இமேஜ பாதிக்கும்னு புரிஞ்சுக்கோ :)

@ கார்த்திகேயன்

நன்றி.

@ காந்தி

அட சும்மா கேட்டேம்பா.

@ தமிழ்ப்பறவை

உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பா. படம், உயிர்மை நிறுவனத்தார் போட்டது. பாராட்டு அவர்களையே சேர வேண்டும்.

அனுஜன்யா

Unknown said...

அழகான கவிதை, கொஞ்சம் சோகம்.. நல்லா இருக்கு அண்ணா.. :))

anujanya said...

@ ஸ்ரீ

நன்றி. நம்மில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஏமாற்றங்கள் அவ்வபோது இருக்கத்தானே செய்யும். அவையும் நல்லதுதான். :)

அனுஜன்யா

Bee'morgan said...

நன்றி அண்ணா.. :-)
அடுத்த பதிவு போட்டாச்சு. வந்து பாருங்க..

anujanya said...

பாலா,

பார்த்தேன். படித்தேன். பின்னூட்டமும் எழுதி விட்டேன்.

அனுஜன்யா

உயிரோடை said...

அனுஜ‌ன்யா,

மிக‌ அருமையான‌ ப‌டிம‌ம். நாம‌ கூட‌
எதை எதையோ சாதிக்க‌ நினைக்கிறோம் ஆனா வாழ்க்கை கைதியா மென்பொருள் இட்ட‌
இய‌ந்திர‌ம் போல‌ வேற‌ எதுக்கு ப‌ய‌ன்ப‌ட‌றோம். ந‌ல்லா இருக்கு க‌விதை.

அந்த‌ தாள் ப‌ட‌ப‌ட‌த்த‌து அவ‌னை போல‌வே.

இலை போல‌ ப‌ற‌க்க‌ நினைத்த‌து. கிழியும், ந‌னையும் க‌வலை இல்லை அத‌ற்கு. ஆனால் பூச்சி பிடிக்க‌ தான்
ப‌ய‌ன‌யிற்று.

த‌ன் இய‌லாமையை நினைத்து அவ‌ன் பிம்ப‌ம் அந்த‌ காகித‌த்தில் தெரிந்த‌து. அருமை. ம்ம் மிக‌ அருமையா வ‌ந்திருக்குங்க‌ க‌விதை.

வாழ்த்துக‌ள்

anujanya said...

@ மின்னல்

விரிவான அலசல்! வாசகப் பிரதி சிறப்பாக இருக்கும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம். நன்றி மின்னல்.

அனுஜன்யா

Unknown said...

அண்ணா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. என்னதான் நீங்க பிஸியா இருந்தாலும் இப்படி பண்ணிருக்கக்கூடாது... நானும் சரி இன்னைக்கு போகட்டும், சரி நாளைக்கு போகட்டும்ன்னு நாளை எண்ணிகிட்டு இருக்கேன்.. நாள் தான் போகுதேத் தவிர ஆளைக்காணோம்.. என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் அதுவும் எனக்கு மட்டும் தான் இப்படி.. வேற எல்லாம் ஒழுங்காதான் இருக்கு.. அதான் இனிமேலும் பொறுத்தது போதும்னு உங்ககிட்டயே டைரக்ட்டா கேட்க வந்துட்டேன்.. என் வலைப்பூ பக்கம் வர முடியுமா?? முடியாதா?? நானும் நீங்க கவிதை எழுதினாதான் பயந்துகிட்டு வர மாட்டேங்கிறீங்கன்னு கஷ்டப்பட்டு ஒரு கதை மாதிரி ஏதோ ஒன்ன எழுதி வெச்சிக்கிட்டு வருவீங்க வருவீங்கன்னு வழிமேல விழி வெச்சு காத்துட்டு இருந்ததெல்லாம் வேஸ்ட்டா போச்சு.. நீங்க வரவே இல்ல.. ஏன்?? அதுக்கான காரணம் சொல்லுங்க.. :(( இத பப்ளிஷ் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம்... இப்படி ஒரு தங்கை இருக்கேன்னு இது உங்களுக்கு ஞாபகப்படுத்தினாலே எனக்கு அது சந்தோஷம்.. :)

அன்புடன் அருணா said...

//பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.//

அழகிய மனம் தொடும் வரிகள்.
அன்புடன் அருணா

anujanya said...

@ ஸ்ரீ

பதில் உனக்கு அங்க :))))))

@ அருணா

வாங்க அருணா, ரொம்ப நாளைக்கு பிறகு வருகை. நன்றி உங்கள் பாராட்டுக்கு.

அனுஜன்யா

MSK / Saravana said...

வாழ்த்துக்கள் அண்ணா. பெரிய ஆளா ஆயிட்டே வரீங்க.. :)

MSK / Saravana said...

//பூச்சிகள் ஒட்டி, பிசுபிசுத்திருந்த
தாளில் என்முகமும் தெரிந்தது.//

கொன்னுட்டீங்க.. :)

anujanya said...

@ சரா

நன்றி சரா. உன்னைய விடவா?

அனுஜன்யா

MSK / Saravana said...

//உன்னைய விடவா? //

எது?? கொல்றதை பத்திதானே சொல்றீங்க..

anujanya said...

@ சரா

:))))))

ரௌத்ரன் said...

அசால்ட்டு பண்ணியிருக்கீங்க போங்க...

anujanya said...

@ ரௌத்ரன்

மிக்க நன்றி ரௌத்ரன். உங்கள மாதிரி கவிஞன் சொல்வதில் மகிழ்வு கூடுகிறது.

அனுஜன்யா