(ஆ!) சுவாசம்
ஆருயிர் நண்பனை
ஆசுபத்திரியில் கண்டேன்
படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்த மாதம் கெடு
எக்ஸ்-ரேயில் தெரிந்தது
நுரையீரல் துகள்கள்;
பதைபதைத்த மனம்;
வெளியே வந்தபின்னும்
படபடத்த உடல்;
பெட்டிக் கடையில்
ஒரு சிகரட்டுக்குப்பின்
எல்லாம் அடங்கியது.
என் நுரையீரலின்
'நு' வெளியே மிதந்தது (ஜ்யோவின் "ஒரே மருத்துவரும் அதே பழக்கமும்" கவிதை இப்போது படித்தவுடன், முன்பே எழுதி வைத்த ஒரு கவிதையை தூசி தட்டி பதிவு செய்து விட்டேன்)
36 comments:
கவலைப்படாதீங்க, உங்களுக்கு ஒண்ணு ஆகாது :)
அச்சச்சோ அண்ணா டேக் கேர்..
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவலைப்படாதீங்க, உங்களுக்கு ஒண்ணு ஆகாது :)//
Repeatuuuuuuuu :)))))
எப்போதோ எழுதியதுன்னு சொல்லிட்டீங்க. இப்போதைய அனுபவமா இருக்க வேண்டாம்னு வேண்டிக் கொள்கிறேன்.
ஆனால் ஒரு கவிதையாக தனிப்பட்ட முறையில் பார்க்கையில்..
"(ஆ!) சுவாசம்"
அருமையான தலைப்பே அழுத்தமாகச் சொல்லி விடுகிறது கவிதையின் சாராம்சத்தை.
@ ஜ்யோவ்
தெரியும் தலைவா. சும்மா ஒரு எ-கவிதை. :))
@ ஸ்ரீ
சும்மா, பயப்படாதே :))
@ ராமலக்ஷ்மி
தெரியும் நீங்க படபடப்பா ஆகிடுவீங்கன்னு! அதெல்லாம் ஒண்ணும் கிடையாது சகோதரி. கவலைப்படாதீங்க :))
அனுஜன்யா
ராமலட்சுமி அம்மாவிற்கு ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...
உங்களுக்கு ஒரு சபாஷ்!
//படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்தமாதம் கெடு//
சரியாச்சொன்னீங்க அனு. சிகரெட் மாதிரி இருக்கிற சிலபேரு குடிக்கிறாதப் பார்க்கும்போது, பார்த்திபன் மாதிரி நான் சொல்வதுண்டு.
அட
ஒரு
சிகரெடே
சிகரெட்
குடிக்கிறதே.
Jokes apart, நமக்குப் பிடித்தவர்களுக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருக்குன்னு தெரிய வரும்போது சட்டுன்னு, ஏதோ ஒன்றை இழந்தாற்போல் இருக்கிறது. அது அவர்களுக்கேன் புரிவதில்லை?.
அனுஜன்யா!
பதற்றம் வருகிறது.
பையிலிருக்கும் சிகரெட் சிரிக்கிறது.
@ கே.கே.
நன்றி.
@ வேலன்
ஆமாம், கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனாலும், அவர்கள் நாம் ஏன் அவர்கள் விருப்பங்களை மதிப்பதில்லை என்றும் நினைப்பார்கள். எனக்கு நட்பும், உறவும் மிக மிக அவசியம் என்பதால் பெரும்பாலும் நான் உபதேசிப்பதில்லை. அவர்கள் அனைவரும் படித்த, சுய முடிவு எடுக்கும் நபர்கள்தாம். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் உரிமையில் நாம் தலையிடுவது சரியில்லை. ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு புகைப் பழக்கம் இருந்தால், என்னால் அதனை விட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை. இதனைப் பற்றி சுந்தர், வளர் எல்லாம் பல்வேறு கோணங்களில், தளங்களில் வாதம் செய்தும் இருக்கிறார்கள் (ஸ்ரீதர் நாராயணன் பதிவில் என்று நினைக்கிறேன்). அந்த வாதங்களுக்கு என்னிடம் நேர்மையான பதில்கள் இல்லை என்பதே உண்மை.
@ மாதவராஜ்
வாங்க தல. உங்கள் முதல் வருகை. புகை என்றால் தான் வருவீர்களா? மேலே சொன்னதை எல்லாம் கண்டுக்காம பேசாம அந்த சிகரெட்ட தூக்கிப் போடுங்க :))
அனுஜன்யா
படிக்கும் போதே ஒரு தம் அடிக்கனும்னு தோனுது
இதுக்குலாம் அசந்தா முடியுமா... விடாம பிடிக்கனும்... இல்லைனா டென்ஷனாகிடும்....
கவிதை அருமைங்க...
/மாதவராஜ் said...
அனுஜன்யா!
பதற்றம் வருகிறது.
பையிலிருக்கும் சிகரெட் சிரிக்கிறது/
நல்ல கவிதை வரிகள்...
செம நச்.. :)
ஆனால் கவிதை படிக்கும் போதே இறுதி வரிகளை கணிக்க முடிந்தது..
//படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்த மாதம் கெடு//
ரொம்ப வீரியம்..
//வெளியே வந்தபின்னும்
படபடத்த உடல்;
பெட்டிக் கடையில்
ஒரு சிகரட்டுக்குப்பின்
எல்லாம் அடங்கியது.//
//தூசி தட்டி பதிவு செய்து விட்டேன்//
இப்போ அந்தப் பழக்கம் இல்லியே...?
@ வால்பையன்
வாங்க குரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க. பரிசல் கிட்ட சொல்லிவிடுவேன். தம் எல்லாம் வேணாம். :)
@ விக்கி
உனக்கும் மேலே சொன்னதுதான். :)) நன்றி விக்கி.
@ சுந்தர்
ஆமாம்! அவரோட வரிகள் கவிதையாத் தான் இருக்கு.
@ சரா
நன்றி சரா.
@ புதியவன்
எப்போவுமே இல்ல. ஆனால் பழக்கம் இருப்பவர்களுடன் நெருங்கிய பழக்கம் உண்டு :))
அனுஜன்யா
மற்ற படி சூப்பர் கவிதை
//படுக்கையிலிருந்த
எலும்புக்கூடுக்கு
அடுத்தமாதம் கெடு//
அருமைங்க அனு.
//அட
ஒரு
சிகரெடே
சிகரெட்
குடிக்கிறதே.//
வேலன் நல்ல டைமிங்கான கவிதைங்க.
// மாதவராஜ் said...
அனுஜன்யா!
பதற்றம் வருகிறது.
பையிலிருக்கும் சிகரெட் சிரிக்கிறது.//
நல்ல ஹைக்கூ மாதவராஜ்.
// என்னால் அதனை விட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை.//
இது நம்ம F/O நயன்தாரா என்ன சொல்லுவாருன்ன
அரை பாக்கெட் Wills வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு பத்துநாள் ஆனா கூட ஒரு வெஞ்சுருட்டைகூட தொடமா இருப்பார்.
நானும் முறச்சி பண்ணி தோத்ததுதான் மிச்சம்.
"எல்லாம் அடங்கியது.
என் நுரையீரலின்
'நு' வெளியே மிதந்தது"
wah wah wah
beautiful lines which added more value to ur blog. also i mailed this link to my friend who s a chain smoker.
"எலும்புக்கூடுக்கு
அடுத்த மாதம் கெடு"
was reminded of my grandpa who smokes....
also tell me how to post a comment in tamil?
"(ஆ!)சுவாசம்" நல்ல டைட்டிலுங்க அனுஜன்யா :)
@ spidey
வித்தியாசமான பெயர். நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.
@ கார்த்திக்
ஆமாம் கார்த்திக், வேலன் சொன்ன கவிதையும் நன்று. மாதவராஜ் சொல்லியது அழகிய கவிதை.
@ MayVee
நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும். தமிழில் எழுதுவதைப் பற்றி, உங்கள் தளத்தில் சொல்லி இருக்கிறேன். :))
@ காந்தி
நன்றி காந்தி. (கவிதை சுமார் என்பதை அழகாகச் சொல்லும் கவிஞன் நீ :)) )
அனுஜன்யா
எல்லாரும் கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க, சரி கொஞ்சம் வித்தியாசமா சொல்லலாமேனுதான். இந்த மாதிரி, ரொம்ப சிம்பிளா பெரிய மீனிங் இருக்கற கவிதைங்க ரொம்ப அழகுங்க.
@ காந்தி
இதுக்குப் பேர் தான் கேட்டு பாராட்டு வாங்கும் கயமைத்தனம் :). எனக்கு நீ, பாலா, சரா, வெண்பூ,கார்க்கி,விக்கி போன்ற இளைஞர்களைக் கலாய்ப்பதில் அலாதி திருப்தி.
அனுஜன்யா
you too?
me too.
@ முத்துவேல்
எதுக்கு முத்துவேல் 'You too? me too' ? பழக்கத்திற்கா அல்லது பழக்கம் இல்லாததற்கா? :)))))
அனுஜன்யா
பழக்கத்திற்குத்தான். ஒருவேளை நீங்கள் கிடையாதோ?( இதைப் பெருமையாக சொல்லிக்கொள்ளும் காலக் கட்டம் இன்று இருக்கிறது. ஆனால், நான் வெளீப்படைக்காகவும்,வருத்தத்தோடும்தான் என் பழக்கத்தை பதிவு செய்கிறேன்)
//எனக்கு நீ, பாலா, சரா, வெண்பூ,கார்க்கி,விக்கி போன்ற இளைஞர்களைக் கலாய்ப்பதி//
வெண்பூ இளைஞரா? அவர் தொப்பைய பார்த்தீங்களா தல?
கவிதை நல்லா இருக்கு:))
// ஸ்ரீமதி said...
அச்சச்சோ அண்ணா டேக் கேர்..
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...
@ முத்துவேல்
தப்பாச்சே. விட முயற்சி பண்ணுங்க. இல்லாட்டி, பரவாயில்ல. குற்ற உணர்ச்சியுடன் மட்டும் புகைக்காதீர்கள் ! :)
@ கார்க்கி
சமீப காலம் வரைக்கும் (டோண்டு சார் சமீபம்) இளைஞனாகத் தான் வெண்பூ இருந்ததாக ஞாபகம். தொப்பை எல்லாம் உடல் வாகு. எல்லாரும் பரிசல்/கார்க்கி போல் six pack ஆசாமிகளாக இருக்க முடியுமா? :) -
அப்பப்போ வந்து போங்க சாமி.
@ பூர்ணிமாசரண்
முதல் வருகை. இன்னொரு தங்கை. நன்றி.
அனுஜன்யா
நச்சுன்னு இருக்கு வரிகள்!
//ஒரு சிகரட்டுக்குப்பின்
எல்லாம் அடங்கியது.
என் நுரையீரலின்
'நு' வெளியே மிதந்தது
//
அதானே பார்த்தேன்!!
@ சந்தனமுல்லை
நன்றி. 'தொங்கும் மணிகள்' வாங்கியாகிவிட்டதா? வலைப்பூவில் இசை எல்லாம் பிரமாதமாக இருக்கு. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
சத்தியமான வரிகள். முயற்சிக்கிறேன்.
நன்றி.
நல்ல இருக்கு!!
@ கார்த்திகேயன்
நன்றி கார்த்தி.
அனுஜன்யா
great words அனு super aah இருக்கு... சரி வாங்க நாம ஒரு தம் போட்டுட்டு வருவோம்....
பிரபு ஜெ
Post a Comment