அழைப்பு மணி
அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது
32 comments:
அது எப்படி தல சிறுகதை/கவிதை ஆகும்?
//அவனும் கலா போலவே
மணி அழுத்துவான்//
பாவம் அவள்.
அழைப்பு மணி வேறு லோகத்திலிருந்து
வந்து விட்டிருந்ததை வேறு எவரும் இத்தனை அற்புதமாய் சொல்லியிருக்க முடியுமா தெரியவில்லை.
வாழ்த்துக்கள் அனுஜன்யா.
த்ரில்லர் கவிதை நல்லா இருக்கு :-)
ஆனா முடிவுல இன்னமும் ஏதோ எதிர்பார்த்திட்டிருந்த மாதிரி இருந்தது.
//அவனும் கலா போலவே
மணி அழுத்துவான்//
அவனும்...?
எனக்கு பல புரிதல்களை கொடுக்கிறது இந்தக் கவிதை.
எக்ஸலண்ட்...!
அனுஜன்யா,
நல்லா இருக்கு.”அவன்”(காலன்) மணி அடிப்பது கலா போல் என்பது
ஒரு simplified யதார்த்தம் என்று சொல்லாம்.
வாழ்த்துக்கள்!
அனுஜன்யா,
//அவனும் கலா போலவே
மணி அழுத்துவான்//
பல்வேறு சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய வரிகள்.
சிறப்பான கவிதை.
நல்லா வந்திருக்குங்க.
@ கார்க்கி
அது ச்சும்மா லேபில் கார்க்கி. அதுக்காக 'கவிதையா'? என்று கேட்பது சிநேகிதத் துரோகம். :)
@ ராமலக்ஷ்மி
"வேறு லோகத்திலிருந்து அழைப்பு" - கூர்மையான பார்வை. நன்றி சகோதரி.
@ ஸ்ரீதர்
முதல் வருகை ஸ்ரீதர்? (rather முதல் பின்னூட்டம் :) ) ஆக மொத்தத்தில் எதிர்பாராத முடிவு! :)))
@ பரிசல்
கே.கே.; தொலைபேசிப் பாராட்டுக்கு நன்றி. உங்கள் பார்வை, புரிதல் நிச்சயமாக இன்னும் நுட்பமான ஒன்று. hats off. (என்னம்மா முதுகு சொரிஞ்சுக்கராங்கப்பா! )
@ ரவிசங்கர்
நன்றி ரவி. உங்களிடம் பாராட்டு என்பது டானிக் தான்.
@ அமுதா
நன்றி அமுதா.
@ வேலன்
நீங்களும் கே.கே.வும் ஒரே மாதிரி எண்ண ஓட்டங்கள் உடையவர்கள் போலும்! நன்றி வேலன்.
அனுஜன்யா
அழைப்பு மணி ஓசை
பணிப்பெண் வந்தாயிற்று
பால் வந்து விட்டது
கியாஸ் சிலிண்டர்
கண்டுபிடித்து விடுவாள்.
அடுத்தத் தெரு கலா.
பேப்பர் போடப்படுகிறது
அலுவலகத்திலிருந்து கணவன்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
மற்றவர்க்கெல்லாம்
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
சிலருக்கு
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
இதை போலவே தாறுமாறாக இருக்கிறது
மன்னிகவும் உங்கள் கவிதையை உங்களைக் கேட்க்காமலேயே கலைத்து போட்டதற்க்கு
:)
நல்லா வந்திருக்கு அனுஜன்யா.
முக்கியமா
“மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்”
“கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்”
இந்த வரிகள் நிகழ்வுகளின் பட்டியல் என்ற தளத்திலிருந்து கவிதையின் தளத்திற்கு உயர்த்திவிடுகின்றன.
ஆமா என்ன ஆச்சு உங்களுக்கு ;)
(சும்மா ... கோவிச்சுக்காதீங்க)
அன்புடன்
வளர் ...
காலனுக்கும் கலாவுக்கும்
தொழில் ஒன்றோ என்னவோ ...
ஓ இப்படி தான் கவிதை எழுதணுமா? நல்ல இருக்கு. அழகியல் இல்லாம கவிதை எழுத முடியும் என்ற வரிசையில் நீங்களும் சேர்ந்துட்டீங்க. காட்சி கண்ணில் விரிவது அருமை. எனக்கென்னவோ ஒரே ஒரு களம் தான் புலப்படுது. என்ன செய்வது சின்ன அறிவு.
//அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது//
உணர்வுப் பூர்வமான வரிகள்...
கவிதை நல்லாயிருக்கு...
@ ஜ்யோவ்
நன்றி தலைவா. எனக்கே தெரியாமல் உங்களைக் காப்பி அடிக்கிறேனோ என்று தோன்றுகிறது.
@ வால்பையன்
குரு, உண்மையிலேயே கலக்கல் அ-கவிதை. நல்லா வந்திருக்கு. சுந்தர் என்ன சொல்லுரார்னு பார்ப்போம். இதுக்கு எதுக்கு மன்னிப்பு! நீங்க அடிச்சு ஆடுங்க :)
@ வளர்
என்ன ஆச்சரியம்! நீங்க வந்தாலே வெலவெலன்னு ஆகிடுது வளர். நன்றி.
//ஆமா என்ன ஆச்சு உங்களுக்கு ;)//
ஒண்ணும் ஆகல. கொஞ்சம் வாசிப்பு அதிகமான பின்பு பேசலாம்னு :))
@ ரவீ
அப்படியும் நினைக்கலாமோ :))
@ மின்னல்
நன்றி. அழகாவே இல்லைன்னு சொல்லிட்டீங்க :). பரிசல் கிட்ட கேளுங்க. பலப்பல அர்த்தங்கள் சொல்லுவாரு.
@ புதியவன்
நன்றி புதியவன்.
அனுஜன்யா
எனக்கு என் மொபைலின் குறுஞ்செய்தியின் tone ஞாபகத்திற்கு வருகிறது..
@ PoornimaSaran
நன்றி
@ சரவணன்
நன்றி சரா. ஆனால் அதில் இவ்வளவு அபாயம் இல்லை!
அனுஜன்யா
//ஆனால் அதில் இவ்வளவு அபாயம் இல்லை! //
மிக மிக அபாயகரமானது.. message ஒன்று வந்தாலே மிக பெரும் ஆபத்தை குறிப்பதாய் இருந்தது..அதனால் தான் இங்கு குறிப்பிட்டேன்..
உயிரோசையில் உங்கள் கவிதை வந்து இருக்கிறது.. வாழ்த்துக்கள்.. :)
"மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;"
thy dont life their present by imganin about others present life....
nice post....
மிக்க நன்றி தல.. எனக்கே உங்கள் பின்னூட்டம் பார்த்துதான் தெரியும். உங்கள் தொடர் ஆதரவும் ஊக்கமும் எனக்கு தெம்பைத் தருகிறது. :)
ரொம்ப நல்லா வந்திருக்கு.. வளர் சொன்னது போல் அந்த இரண்டுவரிகள் நிகழ்வு என்பதில் இருந்து கவிதைக்கு உயர்த்திவிட்டது மிக அழகு... வாழ்த்துக்கள்.
@ சரா
குறுஞ் செய்தியில் அபாயம்! உன் வயது அப்படி. அடிச்சு ஆடு.
@ MayVee
நீங்கள் சொல்லியது அவ்வளவாகப் புரியவில்லை. பாராட்டுக்கு (?) நன்றி.
@ கார்க்கி
இங்க இரண்டு முறை பின்னூட்டம் போட்டும், இன்னமும் கவிதையைப் பாராட்டாத உன் கயமைத்தனம் வன்மையாகக் கண்டிக்கப் படுகிறது :)))
வாழ்த்துக்கள் கார்க்கி.
@ கிருத்திகா
நன்றி. கவிதாயினி பாராட்டு என்றால் சும்மாவா !
அனுஜன்யா
Nice kavithai anna :))
@ ஸ்ரீமதி
நன்றி ஸ்ரீ.
அனுஜன்யா
அனுஜன்யா,
லேட் கமெண்ட்க்கு மன்னிக்கவும், உங்க கவிதைங்கள (எனக்கு மட்டும்) புரிஞ்சிகறது கஷ்டமா இருக்கு, பொறுமையா உங்க கவிதைய படிக்கலாம்னு ட்ரை பண்ணி இப்போதான் படிக்கமுடிஞ்சது - 'அனுஜன்யா டச்' பளீர்ன்னு தெரியுது.
உங்க காக்கா கவிதை உயிரோசைல பாத்தேன், அழகா இருந்தது, வாழ்த்துக்கள். அதுலையும் 'அனுஜன்யா டச்' இருந்தது :) இந்த வாரம் நெறைய பேர் தெரிஞ்சவங்க எழுதிஇருந்ததால சுவாரஸ்யமா இருந்தது உயிரோசை.
காந்தி
@ காந்தி
லேட் எல்லாம் இல்லை. வந்தா போதுங்கற நிலைமைதான் நமக்கு :)
'டச்' சா? அடுத்த கவிதைப் பின்னூட்டத்தில் ஒருவர் இது கவிதை என்றே ஒப்புக்கொள்ளவில்லை.
பாராட்டுக்கு நன்றி காந்தி.
அனுஜன்யா
வேகமாக ஆரம்பித்து விவேகமாக முடியும் இந்த கவிதை.. அற்புதம்.
நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள்
@ வண்ணத்துப்பூச்சியார்
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
அனுஜன்யா
ராமலஷ்மி மேடம் சொன்னதையே வழிமொழிகிறேன்.
@ அமிர்தவர்ஷணி அம்மா
நன்றி சகோதரி.
அனுஜன்யா
Post a Comment