Friday, October 8, 2010

கடற்கரையில் ஓர் காலை - மீள் பதிவு!


பழுப்பு நிறத்தில்
கறுப்புத் தீற்றல்களுடன்
வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;
பூமியைச் சுற்றும் நிலாபோல
அவள் நகர்ந்தாலும்
சுற்றியபடியே தொடர்ந்தது;
அதிகாலையின் ஆரஞ்சும்
அலைகள் தெறித்த நீரும்
இந்த குட்டி சொர்க்கமும்
இரம்மியமாயின அவளுக்கு;
வாரியணைத்து எடுத்துச் செல்ல
அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

எழுத, படிக்க ஒன்றும் தோன்றாமல், பிடிக்காமல், வெறுமையின் உச்சகட்டமாக என் பழைய கவிதைகளையே படிக்கும் உன்மத்த நிலை ஏற்பட்டது. இதற்கு முந்தைய இடுகையை விட இது எவ்வளவோ தேவலாம் என்றும் தோன்றுகிறது :(.



முதன் முறை இடுகையாகப் போட்ட போது பின்னூட்டம் இட்டவர்கள் பட்டியலை இப்போது பார்க்கிறேன். வேலன்-மாதவ்-நர்சிம்-சந்தனமுல்லை-கார்க்கி என்று நல்ல நட்புகள். ஹ்ம்ம். காலம் எல்லாவற்றையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது! போலவே மீண்டும் மாற்றிப் போடுமா?  - இந்த மீள் பதிவைப் போல்!


எனக்கே சிரிப்பு வந்தாலும் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்..நீ ரொம்ப்ப்ப நல்லவன்டா...

மற்றபடி இப்போதைக்கு எழுதுவேன் என்று தோன்றவில்லை. காரணம் - எழுதும் ஆர்வம் வடிந்து விட்டதும், வாசிப்பு முற்றிலும் நின்று விட்டதும் தான். ஆதலினால் ...என்ஜாய் மாடி.
 

43 comments:

Anonymous said...

//ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது//

எக்ஸலண்ட் அனுஜன்யா.

அவர்களது வாழ்வை அவர்களைத் தவிர அனவருமே திர்மாணிக்கிறோம், அவர்களுக்கான தனிப்பட்ட உணர்வுகள் பற்றிய பிரக்ஞை சிறிதளவுமின்றி.

தன்னிஷ்டப்படி வாலாட்டக் கூட வாய்த்திருக்கிறந்த நாய்க்கு;அதுவுமற்று அவள்.

மேவி... said...

"ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது"

hmmm nice post. makes a silent move in my thinking process..

anyways, my greeting for u and my prayer for u to have 2009 in ur own way

MSK / Saravana said...

அருமை..
எக்ஸலண்ட்..


அனுஜன்யா டச் இருக்கு கவிதையில.. (நன்றி காந்தி..)

மாதவராஜ் said...

மெல்லிய உணர்வு இழையோடுகின்ற வரிகள்.
படித்து முடித்ததும் சிறு சோகம் பற்றிக் கொள்கிறது.
யாருக்கும் புரியாமல் போய்விடக் கூடாது என்று வேலன்
மெனக்கெட்டிருக்கிறார்.

அப்புறம்....
அனுஜன்யா!
உங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

ஆமாம்...
பேசும் அவள் வாலாட்டவில்லை
பேசாத அது வாலாட்டியது

ராமலக்ஷ்மி said...

//அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக//

எத்தனை விருப்பங்கள் தலையசைவில் மடிந்து போகின்றன:(!

//ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது//

அருமையாய் முடித்திருக்கிறீர்கள். அவளுக்கும் அதற்கும் அந்த ஒன்றைத் தவிர வேறு வித்தியாசமில்லை.

வாழ்த்துக்கள் அனுஜன்யா!

புதியவன் said...

கவிதை அருமை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Unknown said...

ஹை கவிதை நல்லாருக்கு அண்ணா.. :)))) நான் உயிர்மைலையே படிச்சிட்டேனே.. :))))))

narsim said...

கலக்கல்.. ஒரு வாசகனாய் பார்க்கும்பொழுது மிக அருமையாக இருக்கிறது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல‌

நட்புடன் ஜமால் said...

\\"கடற்கரையில் ஓர் காலை"\\

அழகான கவிதை

உயிரோடை said...

வார‌ம் வார‌ உயிரோசை. வாழ்த்து சொல்லியே வாய‌சாயிடும் போல‌ இருக்கு.
க‌விதை ந‌ன்று. ஆனா ஒரு அப்பாவி க‌ண‌வ‌னா வேணாம்ன்னு சொன்ன‌ விச‌ய‌ம் எதாவ‌து இருக்கும் அனுஜ‌ன்யா.

வல்லிசிம்ஹன் said...

எத்தனையோ வாழ்க்கைகள் அந்தக் கடற்கரைப் பெண்ணின் அசைவைப் போலத்தான்:(

வெகு நுணுக்கமான கவிதை.

anujanya said...

@ வேலன்

நன்றி வேலன். வழமை போல் புரிதல்.

@ MayVee

நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

@ சரவணன்

நன்றி சரா. கிளம்பிட்டாங்கையா!

@ மாதவராஜ்

நன்றி மாதவ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோதரி. நிஜவாழ்வில் இது போல எத்தனையோ பெண்களுக்கு தினமும் நடக்கும்.

@ புதியவன்

நன்றி. உங்கள் தளத்துக்கு நேரம் கிடைக்கும்போது வரவேண்டும். ஏராளமான புகைப்படங்களுடன் கதை/கவிதைகள். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ. நீ தான் இதை விட சிறந்த சிறுகதையே எழுதிவிட்டாயே நாய்க்குட்டியை வைத்து.

@ நர்சிம்

வாங்க தல. இங்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்துக்கள் படு சைவமாகத்தான் இருக்கு. :)) நன்றி.

@ ஜமால்

நன்றி ஜமால். எப்படி உங்களால் இவ்வளவு பேரை ஊக்கப்படுத்த முடிகிறது?

@ மின்னல்

நன்றி மின்னல். 'அப்பாவி கணவன்' - உங்கள் கணவரை மட்டும் வைத்து மற்ற எல்லா ஆண்களுக்கும் நற்சான்றிதழ் தராதீர்கள். நான், நர்சிம், பரிசல் என்று ஒரு ஆணாதிக்கக் கூட்டமே இருக்கிறது :)

@ வல்லிசிம்ஹன்

வல்லிம்மா! என்ன ஆச்சரியம்! நீங்கள் என் வலைப்பூவுக்கு வந்து எனக்கு மிகப் பெருமை சேர்த்துவிட்டீர்கள். உங்கள் பின்னூட்டம் உங்கள் பரந்த அனுபவத்தில் எத்தனையோ கண்டிருப்பீர்கள் என்பதைச் சொல்லுகிறது. வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

அனுஜன்யா

na.jothi said...

மிகவும் அருமை

"அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்"

அவளின் எண்ணம் இப்படியும் இருந்திருக்குமோ
"இதுவும் நன்று
என் நிலை அதற்கும்
வரவேண்டாம்"

சந்தனமுல்லை said...

நல்ல கவிதை..ஒரு மெல்லிய சோகம்..பப்புவிற்கு இஷ்டம், ஒரு பப்பி வளர்க்க!!

அமுதா said...

அருமை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

anujanya said...

@ smile

நன்றி புன்னகை. வித்தியாசமான பார்வை உங்களுக்கு.

@ சந்தனமுல்லை

//பப்புவிற்கு இஷ்டம்,
ஒரு பப்பி வளர்க்க!!//

இந்த ஹைக்கூ நல்லா இருக்கு. நன்றி சகோதரி.

@ அமுதா

நன்றி சகோதரி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

உயிர்மையிலே படிச்சேன் தல.. நல்ல கவிதைகளை தேடி நாங்கள் அலையத் தேவையில்லை. நீங்க, சுந்தர்ஜி போன்றவர்கள் இருப்பதால்

வால்பையன் said...

//வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;//

வந்தது அவளை என்பதற்கு பதிலாக வந்தான் அவளை என்றால் அது என்னை குறிக்குமா?

நாய் என்பதும் உயிரினம் தானே!
பிறகு ஏன் அஃறிணை.

எனக்கு மரபு தெரியாது!
இது சந்தேகமே!

வால்பையன் said...

//ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்//

ஓ நீங்கள் பெண்ணியவாதியோ
அதனால் தான் ஆண் நாயை அதுவென்றும், பெண் நாயை அவளென்றும் எழுதியுள்ளீர்கள்.

இது தெரியாம நான் வேற ஒரு மொக்கை பின்னூட்டம் போட்டுடேனே!

மேவி... said...

hey i hav tried another post in tamil in my blog. read it...

உயிரோடை said...

//@ மின்னல்

நன்றி மின்னல். 'அப்பாவி கணவன்' - உங்கள் கணவரை மட்டும் வைத்து மற்ற எல்லா ஆண்களுக்கும் நற்சான்றிதழ் தராதீர்கள். நான், நர்சிம், பரிசல் என்று ஒரு ஆணாதிக்கக் கூட்டமே இருக்கிறது :) //

இதை உங்கள் வாயாலேயே சொல்ல வைக்க தான் அந்த பின்னூட்டமே. ஒரு மூன்று பேர் மட்டும் அல்ல மொத்த ஆண்வர்கமே அப்படி தான்.

anujanya said...

@ கார்க்கி

நன்றி சகா. சுந்தர்ஜி கோவிச்சுக்கப் போறார். அவர் எங்கியோ இருக்கார். இருந்தாலும் தேங்க்ஸ்பா.

@ வால்பையன்

நீங்கள் வந்து நம்ம கவிதையை (!) அக்கு வேறு ஆணி வேராக அலசினால்தான் ஒரு முழுமை அடையும். குழந்தையைக் கூட சமயத்தில் அது என்போமே. அதுபோலத்தான் நாய்குட்டியையும்!

@ MayVee

நன்று. அங்கு சென்று பார்த்தாகி விட்டது. நல்ல முயற்சி.

@ மின்னல்

//இதை உங்கள் வாயாலேயே சொல்ல வைக்க தான் அந்த பின்னூட்டமே. ஒரு மூன்று பேர் மட்டும் அல்ல மொத்த ஆண்வர்கமே அப்படி தான்.//

இப்படி ஒரு சதி லீலாவதியா நீங்கள்! பரவாயில்லை. மொத்த ஆண் வர்க்கமே இப்படி என்றால், எங்கள் மூவருக்கும் குற்ற உணர்ச்சி ஏதுமிருக்காது. :)

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

எந்த ஒரு ஆசையும் இங்கணம் தான் மனதை வசப்படுத்த வருமோ

"அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக"

நாம் மறுதலிக்க இப்படி நமை விட்டு நகர்ந்த ஈர்ப்புகளை தொகுத்தெடுக்க ஆரம்பித்தால்......

பல கோணங்களில் பார்க்கவைத்த கவிதை...

ச.முத்துவேல் said...

பெண்ணியத்திற்கு ஆதரவான நல்ல கவிதை.

anujanya said...

நன்றி கிருத்திகா மற்றும் முத்துவேல். இருவருமே கவிஞர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

அனுஜன்யா

முபாரக் said...

ரொம்ப நல்லாருக்குங்க நண்பரே!

எல்லாக்கவிதைகளும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது

முபாரக் said...

please send your email to hmubaa@gmail.com

anujanya said...

@ முபாரக்

தங்கள் முதல் வருகை. நான் மிக மதிக்கும் கவிஞர். நன்றி முபாரக்.

அனுஜன்யா

முபாரக் said...

//தங்கள் முதல் வருகை. நான் மிக மதிக்கும் கவிஞர். நன்றி முபாரக். //

நண்பரே ரொம்ப நன்றி!

தங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும். hmubaa@gmail.com

சினேகபூர்வம், முபாரக்

Revathyrkrishnan said...

நல்லாருக்கு அனுஜன்யா... கரு புரிய மீண்டும் மீண்டும் படித்தேன்

anujanya said...

@ ரீனா

உங்கள் முதல் வருகை. நீங்கள் 'மாலை' எழுதியதால் இந்த 'காலை' எப்படி இருக்குன்னு பார்க்க வந்தீங்களா? நன்றி.

அனுஜன்யா

Revathyrkrishnan said...

:))) அதே அதே

ப்ரியமுடன் வசந்த் said...

வலையுலகிற்கு திரும்பி வந்த அஞ்சா நெஞ்சன் ஆரண்யகாண்ட நாயகன் கவிதைச்சூறாவளி அண்ணன் அனுஜன்யா அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எப்பாடா.. ஒரு வழியா திரும்ப எழுத வந்தீங்களா... சந்தோஷம் அனுஜன்யா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மறுபடியும் நீங்கள் நிச்சயம் தொடர்ந்து எழுதுவீர்கள். எழுதணும் என்பது என் விருப்பம்.

நர்சிம் said...

அண்ண்ண்ண்ணாஆஆஆஆஆஆஆஆ

வாழ்த்துகள்..

மீண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாழ்த்துகள்.

நர்சிம் said...

//மற்றபடி இப்போதைக்கு எழுதுவேன் என்று தோன்றவில்லை. காரணம் - எழுதும் ஆர்வம் வடிந்து விட்டதும், வாசிப்பு முற்றிலும் நின்று விட்டதும் தான். ஆதலினால்//

போய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா.. நானே எழுதுறேன்.

கார்க்கிபவா said...

நீ(ங்க) வா தல..

மாதவராஜ் said...

காத்திருக்கிறேன், அனுஜன்யா.....

மணிகண்டன் said...

கவிதையை படிச்சி காட்டினேன். பயத்துல பையன் ஒழுங்கா சாப்பிட்டான் :)-

ஞாஞளஙலாழன் said...

உங்கள் ப்ளாக்கில் எப்போது மீண்டும் இடுகை வரும் என்று நான் மட்டுமல்ல..நிறைய பேர் ஆர்வமுடன் எதிர்பார்த்தோம். நீங்கள் எந்த இடுகையும் போடாத போதே தினமும் கிடைத்த ஹிட்ச்கள் இதற்குச் சான்று. இப்பொழுது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்! இது வேண்டுகோள் இல்லை, வாசகர்களின் அன்பு கட்டளை!!!

கோநா said...

சிறு நிகழ்வில் உள்ள கவிதையை தேடி கொடுத்திருக்கிறீர்கள் அனுஜன்யா, அருமை.