Wednesday, February 4, 2009

ஏதாவது செய்யணும் பாசு

ஏதாவது செய்யணும் பாஸ். இந்தக் கட்டுரையின் தலைப்பை முதலில் நர்சிம் பதிவில் பார்த்தபோது 'இளைஞரின் ஆர்வக் கோளாறு' என்று 'அனுபவ பெருசு' போல (என்னதான் நான் யூத் என்றாலும்!) எண்ணிக் கொண்டேன். பதிவு படிச்சு முடிச்சதும் அவர் மேல் மரியாதை வந்தது ம் சாரி .. மிகுந்தது.

பிறகு பரிசல், லக்கி, கோவி என்று பிரபலங்கள் போட்டதும் "சரிதான், இவர்கள் பிரபலத்தின் இரகசியம் இதுதான் போலும். எல்லாவற்றிலும் சொல்வதற்கு, பங்கிடுவதற்கு இவர்களுக்கு விஷயம் இருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் எப்பவும் 'வரும் ஆனா வராது' என்ற 'என்னாத்த கன்னையா' நெலம" என்று யோசித்து, சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் படிக்கச் சென்று விட்டேன்.

அதெல்லாம் மறந்திருந்து, சகஜ நிலை அடைந்து வருகையில் சத்யம், முத்துக்குமார், நாகேஷ் என்று நிறைய உலுக்கும் நிகழ்வுகள். இதெல்லாம் 'சூறாவளி, சுனாமி' சமாசாரம். ஏதாவது சொல்லப் போயி எக்குத்தப்பா ஆகிடப் போகுது. பேசாம பின்னூட்டங்களே கதின்னு நரசிம்ம ராவ் (நம்ம நர்சிம் இல்லீங்கோவ்) வேகத்துல முடிவு எடுத்து, என் கடமையை மிகுந்த ஆற்றலுடன் செயல் படுத்தி வருகிறேன். அங்கேயும் சில நாட்களாக இலேசான உராய்வுகள்; சிராய்ப்புகள்; ஒத்தரு நம்மள 'முட்டாளாயா நீ?' என்கிறார். இன்னொருத்தர் 'உனக்கேன் இந்த அக்கறை - நீ என்ன கலாசார காவலனா?' என்கிறார். அதுக்குள்ளே சில நண்பர்கள் 'கோவிச்சுக்காதீங்க' என்ற போதுதான் 'சரி இதுக்குக் கொவிச்சக்கணும் போல இருக்கு' என்று புரிந்துகொண்டு பாவ்லாவும் காட்டி விட்டேன். ரௌத்ரம் அவ்வப்போதாவது பழகாவிட்டால் ஒரு ஈ காக்கா கூட மதிக்காது என்று புரியவைக்கப் பட்டது.

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன் இல்ல? என்னோட இந்த non-linear எழுத்தின் இரகசியம் சாரு ஆன்லைன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

ஆதள கீர்த்தனாம்பரத்தில.. மீண்டும் 'எதாச்சும் செய்யணும் பாசு'. இன்னிக்கு மீண்டும் நர்சிம் பதிவு. இது என்னடா 'விடாது கருப்பா' தொடருதேன்னு கார்க்கி காக்டெயில் அடிப்போம்னு போனா அங்கேயும் இதே பேயி 'ஜிங்கு ஜிங்குனு' ஆடுது. அங்க ஜோசப் வேற வழக்கம் போல அசத்தல் பின்னூட்டம். அவரே இந்த 'ஏதாவது' மேளாவில் ஐக்கியமாகி, ஒரு சூப்பர் பதிவு (சஞ்சய் கூட ஜாயின் பண்ணி என்று ஞாபகம்) போட்டிருந்தார். 'டேய் என்னாங்கடா - அடங்க மாட்டீங்களா' என்று வெறுத்துப் போய், "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே" என்று பாடிக்கொண்டே திரு.அனுஜன்யா (இவரு ரொம்ப நாளா பெண் பதிவர் என்று நினைத்திருந்தேன்!) அவர்களின் கவிதைச் சோலைக்குள் சென்று புகுந்துகொண்டு, நெருப்புக் கோழியாகப் புதைந்து விட்டேன்.

ஒழுங்கா வரிகளை மடக்கி எழுதி, 'கவிதை' செய்துகொண்டு நார்மலா இருந்த மனுஷன்.. என்ன கொடும சார் இது.. அவரும் 'ஏதாவது செய்யணும் பாசு' என்கிறார். என்னத்த சொல்ல. மேல அவரு என்ன சொல்றாருன்னு நீங்களே படிங்க.

பல்பு எண் ஒன்று:

எஸ்ரா அவர்களின் இணைய தளத்தில் படித்தது. நகரத்துக்கு வருபவர்களுக்கு குளிக்கும், குளித்து உடை மாற்றிக் கொள்ளும் பிரச்சனை மிகப் பெரியது. நிறைய சிறு, பெருநகரங்களுக்கு நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு நாள் வேலை நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும். பெரும்பாலான புண்ணியத் தலங்களும் அவ்வகையே. விடிகாலையில் அந்த ஊருக்கு வந்து சேருவோம். குளித்து, உடை மாற்றிக் கொண்டதும், நேராக ஒரு அலுவலகமோ, கருத்தரங்கோ, மலைமேல் சாமியோ பார்த்து விட்டு, ஹோட்டல் ஒன்றில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்ட் சென்று, நம்ம ஊருக்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதுதான் வேலை.

இதுல லாட்ஜ் ஒன்றைப் பிடித்து, ரூம் இருக்கான்னு பாக்கணும். அப்பப் பார்த்து 'சார், ஒரே ஒரு ரூம்பு தான் இருக்குது; நான்-ஏசி இல்ல. ஏசி தான் சார். எண்ணூறு ரூவா வாடகை. ரெண்டு நாள் அட்வான்ஸ் கொடுக்கணும். செக் அவுட் போது அட்ஜஸ்ட் செய்துக்கலாம்' னு ஒரு குண்டு போடுவார்.

"சார், ஜஸ்ட் குளிச்சுட்டு, டிரஸ் மாத்தணும் சார். இப்போ வெளியே போனா, அப்பிடியே ஊரப் பாக்கப் போயிடுவேன். இதுக்கு எதுக்கு சார் ஒரு நாள் ரூம்பு வாடகை. கொஞ்சம் நூறு-நூத்தம்பதுல... " என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவர் நம் மேல் சுவாரஸ்யம் குறைந்து, நம் எதிரிலேயே தந்தி பத்திரிகைக்குள் முழுகிவிடுவார்.

எவ்வளவு பேரால் இந்தத் தண்ட செலவு செய்ய முடியும். எவ்வளவு ஊர்களில் நம்மைக் கண்டு மிரளாத நண்பர்கள் தங்கள் வீட்டு குளியல் அறைகளைத் திறந்து விடுவார்கள். (ஏனென்றால், குளித்த பின் மெதுவாக 'ஜஸ்ட் நாலு இட்லி, கெட்டி சட்னி இருந்தால் போதும்' என்று விருந்தாளியாகும் கலை நம் அனைவருக்கும் இலகுவான சங்கதி அல்லவா!)

இதற்கு ஒவ்வொரு சிறு நகரத்திலும் மற்றும் புண்ணியத் தலங்களிலும் குளிக்கவும், உடை மாற்றவும் வசதி பொருந்திய 'குளியல் நிலையங்கள்' கட்டப்பட வேண்டும். தற்போது பெருநகரங்களில் இருக்கும் 'கட்டணக் கழிப்பறை' போல் அல்லாது, இன்னும் சற்று சுத்தத்துடன், ஒரு ஹோட்டலுக்கு உரிய இலட்சணங்களுடன் (ஒரு சுற்றுச் சுவர், கேட், ஒரு கட்டடம் இத்யாதி) மத்திய தர மக்கள் வரத் தயங்காத அளவில் அவை இருப்பது அவசியம்.
கட்டணம் ஐம்பது (ஒரு நபர்) முதல் நூற்றைம்பது (ஒரு நான்கு-ஐந்து பேர் கொண்ட குடும்பம்) வரை வசூலிக்கல்லாம். நகராட்சி அல்லது ஊராட்சி என்றில்லாமல் தனியார் கூட இவ்வாறு வசதிகள் செய்ய முயலலாம்.

நீங்க இன்ன சொல்றீங்க! (கார்க்கி, நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உனக்குக் குளிப்பதற்கு காசு கொடுத்தாலே ... இதுல நீ எங்க கட்டணம் செலுத்தி ..)

இதுக்கு ஒழுங்காகப் பின்னூட்டங்கள் வந்தால், அடுத்த பல்பு எரியும். ஆட்டோ வந்தால்.. பழையபடி கவுஜதான். அப்புறம் என்னைக் குறை சொல்லவேண்டாம்.

52 comments:

கார்க்கிபவா said...

உங்க பல்பு ஃப்யூஸ் போகனும்னு வேண்டிக்கிறேன் தல

கார்க்கிபவா said...

இதே மாதிரி தனியா, பிரச்ச்னையில்லாம ஒரு மணி நேரத்துக்கு தங்குவதற்கு அறைகள் கட்டிவிட்டாலும் நல்லாயிருக்குமே.. ரெண்டு(அதுக்கு.. மேலயா. அது பேராசைங்க) பேருக்கு 200 ரூபாய் கூட ஓக்கேதான்..

நாங்களும் ஏதாச்சும் செய்யனும் பாஸு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

interesting!

அனுஜன்யா.. தொடர்ந்து பத்தி எழுத்தையும் கவனியுங்க...

புதியவன் said...

//ஆட்டோ வந்தால்.. பழையபடி கவுஜதான்.//

ஆட்டோ வந்திருக்கு...எனக்கு உங்க க(வி)தை தான் பிடித்திருக்கு...

முரளிகண்ணன் said...

எனக்கு இதுவும் வேணும் அதுவும் வேணும்.

\\ சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் படிக்கச் சென்று விட்டேன்.
\\

\\என்னோட இந்த non-linear எழுத்தின் இரகசியம் சாரு ஆன்லைன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
\\

சிரித்துக் கொண்டே டைப்புகிறேன்

மாசற்ற கொடி said...

The build-up to the actual point "ஏதாச்சும் செய்யனும் பாஸு - பல்பு எண் ஒன்று " is nice !

Massattra Kodi

குடந்தை அன்புமணி said...

நல்ல யோசனைதான். உங்கயோசனைக்கு தங்கும்விடுதிக்காரர்கள் சண்டைக்கு வராம இருந்தா சரிதான்.

குடந்தை அன்புமணி said...

//கார்க்கி said...
இதே மாதிரி தனியா, பிரச்ச்னையில்லாம ஒரு மணி நேரத்துக்கு தங்குவதற்கு அறைகள் கட்டிவிட்டாலும் நல்லாயிருக்குமே.. ரெண்டு(அதுக்கு.. மேலயா. அது பேராசைங்க) பேருக்கு 200 ரூபாய் கூட ஓக்கேதான்..//
எதுக்கு கார்க்கி...?

Anonymous said...

அனு,

நல்ல ப்ளோவா எழுதுறீங்க. ஆனா ஏன் கொஞ்சமா எழுதுறீங்க?

சுந்தர் சொன்னதைக் கவணிக்கவும்.

மத்தபடி நீங்க சொன்னதை முற்றிலும் வழிமொழிகிறேன். நான் அடிக்கடி வெளியூர் செல்வதால் எனக்கு இந்த சிரமம் உண்டு. 1 மணி நேரத்தில் குளித்துக் கிளம்ப 300 400 ரூபாயெல்லாம் கொடுத்திருக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதுக்குள்ளே சில நண்பர்கள் 'கோவிச்சுக்காதீங்க' என்ற போதுதான் 'சரி இதுக்குக் கொவிச்சக்கணும் போல இருக்கு' என்று புரிந்துகொண்டு பாவ்லாவும் காட்டி விட்டேன். ரௌத்ரம் அவ்வப்போதாவது பழகாவிட்டால் ஒரு ஈ காக்கா கூட மதிக்காது என்று புரியவைக்கப் பட்டது.

:)-

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன் இல்ல? என்னோட இந்த non-linear எழுத்தின் இரகசியம் சாரு ஆன்லைன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
:)-

திரு.அனுஜன்யா (இவரு ரொம்ப நாளா பெண் பதிவர் என்று நினைத்திருந்தேன்!)
:)-

உங்களுடைய பல்பு நன்றாக ஒளிர்கிறது.

ராமலக்ஷ்மி said...

பல்பு பளிச்!

அதுசரி, ஆட்டோவும் வரட்டும், பல்பும் எரியட்டுமே. அதுக்கும் இதுக்கும் எதுக்குப் போடணும் முடிச்சுங்கறேன்?

கார்க்கிபவா said...

அதான் 11 பின்னூட்டம் ஆயிடுச்சு இல்ல. பதில் சொல்லுங்களேன் தல.. அடுத்த பல்போட, ச்சே கேள்வியோட வெய்ட் செய்றேன்

na.jothi said...

நல்ல யோசனை மார்கெடிங் உள்ளவர்களுக்கு
ரொம்ப பயன் படும்
பிசினஸ் மேக்னெட் மக்களே அனுஜன்யா அண்ணன்
ஒரு திட்டம் சொல்லியிருக்கார் ராயல்டி பத்தி இப்பவே
பேசிக்கிங்க

anujanya said...

@ கார்க்கி

//உங்க பல்பு ஃப்யூஸ் போகனும்னு வேண்டிக்கிறேன் தல//

என்ன நல்ல எண்ணம்! நல்லா இருப்பா.

//இதே மாதிரி தனியா, பிரச்ச்னையில்லாம ஒரு மணி நேரத்துக்கு தங்குவதற்கு அறைகள் கட்டிவிட்டாலும் நல்லாயிருக்குமே.. ரெண்டு(அதுக்கு.. மேலயா. அது பேராசைங்க) பேருக்கு 200 ரூபாய் கூட ஓக்கேதான்..//

இது ஏதோ 'அதீத' ஆசையாகப் படுகிறது. சர்வம் ஜ்யோவ் மயம்.

@ ஜ்யோவ்

நன்றி குருவே. பேசாம உஜாலாவுக்கு மாறிட வேண்டியதுதான் :)

@ புதியவன்

நினெச்சேன். ஒரு ஆசாமி பிரபலம் ஆகக் கூடாது என்று ஒரு கூட்டமே இயங்குகிறது. சரி, உங்க தலைவிதி!

@ முரளிகண்ணன்

நன்றி முரளி. You read btw the lines. :)

@ Massattra Kodi

நன்றி. ஆமா, இது என்ன வித்தியாசமான பெயர்?

@ அன்புமணி

நன்றி அன்புமணி. நீங்க சொல்றதும் சரிதான் :). கார்க்கிய நீங்க கேட்ட கேள்வியும் சரிதான்.

@ வேலன்

நன்றி வேலன். முயற்சி செய்கிறேன்.

நிச்சயம் உங்களுக்கு இந்த யோசனை பயன்படும் என்றே எழுதும்போது நினைத்தேன்.

@ அமித்து அம்மா

நன்றி அமித்து அம்மா. நல்ல ரசனை உங்களுக்கு. (என்ன ஒரு சுய தம்பட்டம் அனுஜன்யா?)

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோதரி. சமீபத்தில் பெருந்தலைவர் காமராஜ் பற்றி ஏதாவது படித்தீர்களா? :)))

@ கார்க்கி

கவனிச்ச இல்ல. நம்ம பல்பு சூப்பரா பளிச்சுன்னு, நன்றாக ஒளிர்கிரதுன்னு எல்லாம் பின்னூட்டம் வந்துருக்கு. அடுத்த பல்புக்கு கொஞ்சம் டங்க்ஸ்டன் வாங்கிட்டு வரேன். :)

அனுஜன்யா

குசும்பன் said...

//சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் படிக்கச் சென்று விட்டேன்.//

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ரிக்கார்ட் டான்ஸ் ஆடினுச்சாம்... போன இடம் அப்படி:)))

குசும்பன் said...

//பின்னூட்டங்களே கதின்னு நரசிம்ம ராவ் (நம்ம நர்சிம் இல்லீங்கோவ்) வேகத்துல முடிவு எடுத்து, என் கடமையை மிகுந்த ஆற்றலுடன் செயல் படுத்தி வருகிறேன். //

ஆங்!!! அதுனாலதான் தினம் என் பதிவுல 10 பின்னூட்டம் போடுறீங்களாக்கும்!!!

அளவிள்ளா கோவத்தோடு
குசும்பன்

குசும்பன் said...

//எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன் இல்ல? //

எங்கேயோ போய்ட்ட மாதவா (ஜனகராஜ் ஸ்டைலில் படிக்கவும்)

குசும்பன் said...

மொத்தமா ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று சொல்றவங்களுக்கு எல்லாம் நாம ஏதாச்சும் செய்யனும் பாஸ்!!

குசும்பன் said...

//எவ்வளவு பேரால் இந்தத் தண்ட செலவு செய்ய முடியும். எவ்வளவு ஊர்களில் நம்மைக் கண்டு மிரளாத நண்பர்கள் தங்கள் வீட்டு குளியல் அறைகளைத் திறந்து விடுவார்கள்.//

என்ன பிரச்சினை உங்களுக்கு ஒரு ரூம் வேண்டும் அதானே, கவலைய விடுங்கபாஸ் ஒரு பிளைட் புடிச்சு துபாய் வந்தீங்கன்னா எங்க வீட்டுல குளிச்சுட்டு, சாப்பிட்டுவிட்டு பின் ஒரு பிளைட் புடிச்சு போகவேண்டிய இடம் போய்டுங்க!!!

உங்களுக்காக இதையாச்சு நான் செய்யனும் பாஸ்!!!

குசும்பன் said...

//ஆட்டோ வந்தால்.. பழையபடி கவுஜதான். அப்புறம் என்னைக் குறை சொல்லவேண்டாம்//

வேண்டாம் அழுதுடுவேன் வலிக்குது!!!

(அப்புறம் உங்களுக்காக புத்தகண்காட்சியில் 80 வயதிலும் நம்ம வலையுலக வாஸ்த்யாயனர் ஓடி ஓடி புத்தகம் வாங்கிட்டு இருந்தார் அந்த அழகை சொல்ல வாத்தைகள் இல்லை! மனுசன் உங்க மேல ரொம்ப பாசமா இருக்கார்:))

மேவி... said...

நீங்க எங்க ஊருக்கு போய் பாருங்க..... நீங்க சொன்ன வசதி எல்லாம் இருக்கு.......
ஆனா அது எல்லாம் பிரைவேட் ஆளுங்க கைல இருக்கு.

narsim said...

மிக ரசித்தேன் தல.. அருமையான பகடி.. அதைவிட அருமையான யோசனை.. லிங்க்கை இணைத்து விட்டேன்.. நன்றி

anujanya said...

@ Smile

நன்றி ஸ்மைல். உங்க பதிவும் என்ன சொல்லுதுன்னு பாக்க வரேன். :)

@ குசும்பன்

அப்பா, இவ்வளவு நாள் ஆச்சா குசும்பா இங்க வர!

//போன இடம் அப்படி:)))// அப்பிடி இல்ல குசும்பா. மண்ட காஞ்சு அங்க போயி, படிச்சா, திரும்பி வரும்போது நிலைமை நார்மல் ஆகிடும். (Two negatives....)

//ஆங்!!! அதுனாலதான் தினம் என் பதிவுல 10 பின்னூட்டம் போடுறீங்களாக்கும்!!!

அளவிள்ளா கோவத்தோடு
குசும்பன்//

இது குசும்பன் ட்ரேட் மார்க் குசும்பு. ஒரே கல்லுல என்னையும், பரிசளையும் தாக்குறியே!

//என்ன பிரச்சினை உங்களுக்கு ஒரு ரூம் வேண்டும் அதானே, கவலைய விடுங்கபாஸ் ஒரு பிளைட் புடிச்சு துபாய் வந்தீங்கன்னா எங்க வீட்டுல குளிச்சுட்டு, சாப்பிட்டுவிட்டு பின் ஒரு பிளைட் புடிச்சு போகவேண்டிய இடம் போய்டுங்க!!!

உங்களுக்காக இதையாச்சு நான் செய்யனும் பாஸ்!!!//

ஆணியே புடுங்க வேணாம்னு எல்லாரும் உன்னைக் கண்டால் ஓடுவதன் காரணம் இப்போ புரியுது சாமி.

//(அப்புறம் உங்களுக்காக புத்தகண்காட்சியில் 80 வயதிலும் நம்ம வலையுலக வாஸ்த்யாயனர் ஓடி ஓடி புத்தகம் வாங்கிட்டு இருந்தார் அந்த அழகை சொல்ல வாத்தைகள் இல்லை! மனுசன் உங்க மேல ரொம்ப பாசமா இருக்கார்:))//

இன்னும் அவருக்குப் பணமே அனுப்பலைங்க. செம்ம கடுப்பா இருப்பாருன்னு நினைக்கிறேன். Jokes apart, a wonderful human being and a great friend.

குசும்பன், மிக்க நன்றி - வந்து விழாவைச் சிறப்பித்ததற்கு.

@ MayVee

வாங்க. எது உங்க ஊரு? சிங்கையா?

@ நர்சிம்

அதானே பார்த்தேன், இந்த ஆளு திரிய கொளுத்திட்டு எஸ் ஆயிட்டாரோன்னு யோசிச்சேன். தப்புசீங்க. நன்றி தல.

அனுஜன்யா

மேவி... said...

சிங்கை இல்லைங்க...... அதுக்கு கொஞ்சம் பக்கத்தில
திருச்சிராபள்ளி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு வாரம் ஷேவ் செய்யாத முகத்தோடு கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் (அப்பத்தான் கோணங்கி லுக் வர்ரதா நானே நினைச்சுக்கறது!). நிறைய நரை மயிர்கள் இருந்ததால் வயதாகத் தெரிகிறதே என்ற அக்கறையில்,

குசும்பன் : ஏன் தாடி வளர்க்கறீங்க?
நகுலன் வார்த்தையில் நான் : அதைவிட முக்கியமான கேள்வி, தாடி ஏன் வளர்கிறது?

அவர் அங்க பதில் சொல்லாம இங்க வந்து இந்த மாதிரி எழுதியிருக்காரு.

ஏதாவது செஞ்சுதான் ஆகணும்னா குசும்பனை நாலு மொத்து மொத்தலாம் பாஸ் :) :)

வால்பையன் said...

போர்ப்படை தளபதி கார்க்கியை கிண்டல் செய்தை கண்டிக்கிறேன்.

குளித்தால் எங்கள் அழகுக்கு களங்கம் வந்துவிடலாம் என்று தான் குளிக்காமல் இருக்கிறோம்.

அவரை குளிக்க சொல்வதில் இருந்தே உங்களின் பொறாமை குணம் வெளியே தெரிகிறது

வால்பையன் said...

//திரு.அனுஜன்யா (இவரு ரொம்ப நாளா பெண் பதிவர் என்று நினைத்திருந்தேன்!) //

உங்களுக்கு வந்த மின்அஞ்சல் லவ் லெட்டர்களை எனது மெயிலுக்கு அனுப்பமுடியுமா?

வால்பையன் said...

//குசும்பன் said...

மொத்தமா ஏதாச்சும் செய்யனும் பாஸ் என்று சொல்றவங்களுக்கு எல்லாம் நாம ஏதாச்சும் செய்யனும் பாஸ்!!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மாதவராஜ் said...

//சுய பச்சாதாபத்துடன் சுந்தர் கவிதைகளையும், கழிவிரக்கத்துடன் அய்யனார் கவிதைகளையும் //

ஏன் அப்படி?

//அவர் நம் மேல் சுவாரஸ்யம் குறைந்து, நம் எதிரிலேயே தந்தி பத்திரிகைக்குள் முழுகிவிடுவார்.//
ரொம்ப ரசித்தேன்.

இருக்குற பவர் கட்டிலும், உங்க பல்பு கண்ணை கூச வைக்கிறது!

anujanya said...

@ MayVee

கொஞ்சம் பக்கத்துல திருச்சியா? சீரங்கம் இல்ல அது? நான் கேட்டது சிங்கை - சிங்கப்பூர். ஓஹோ, நீங்கள் விமானப் பயணியா? சரிதான்.

@ ஜ்யோவ்

//குசும்பன் : ஏன் தாடி வளர்க்கறீங்க?
நகுலன் வார்த்தையில் நான் : அதைவிட முக்கியமான கேள்வி, தாடி ஏன் வளர்கிறது?//

முதலில் உங்கள்மேல் பரிதாபப் பட்டேன். இப்படி நகுலன் பாணி பதில் சொன்னால் உங்களுக்கு இதுவும் வேணும்.. இதுக்கு மேலேயும் வேணும். :)

@ வால்பையன்

வாங்க குரு. கொஞ்ச நாளா காணோம். கார்க்கி இந்த மாதிரி குளிக்க சோம்பல் படுவது, உங்கள் பரிச்சயம் கிடைத்த பின்புதான் என்று தகவல்.

//உங்களுக்கு வந்த மின்அஞ்சல் லவ் லெட்டர்களை எனது மெயிலுக்கு அனுப்பமுடியுமா?//

ம்ம், ஆட்டோ மட்டுமே வந்தது. அனுப்பி வைக்கட்டுமா?

@ மாதவராஜ்

அவர்கள் இருவரின் வெவ்வேறு மொழி விளையாட்டைச் சொல்ல விரும்பினேன் :)
நன்றி மாதவ்.

அனுஜன்யா

Thamira said...

நல்ல ஐடியாதான். திருநெல்வேலியில் முன்பு இரயில் நிலையம் அருகே இதுபோன்ற ஒரு விடுதி இருந்தது. இப்போது எப்படி பராமரிக்கப்படுகிற‌து என தெரியவில்லை. (இருப்பினும் கார்க்கியை இப்படி வாரியிருக்க வாணாம்)

'கோவிச்சுக்காதீங்க' என்ற போதுதான் 'சரி இதுக்குக் கொவிச்சக்கணும் போல இருக்கு' என்று புரிந்துகொண்டு பாவ்லாவும் காட்டி விட்டேன்// ரசித்தேன்.

காஞ்சனை said...

உங்க பல்பு கொஞ்சம் நல்லா எரியுது பாஸ் ;-))

கார்க்கிபவா said...

// வால்பையன் said...
போர்ப்படை தளபதி கார்க்கியை கிண்டல் செய்தை கண்டிக்கிறேன்.

குளித்தால் எங்கள் அழகுக்கு களங்கம் வந்துவிடலாம் என்று தான் குளிக்காமல் இருக்கிறோம்//

மற்றவர்கள் குளிப்பது அழகாக.. நாங்கள் குளிக்காமல் இருப்பதே எங்க அழகையெல்லாம் அழியாமல் பார்த்துக்க..

இதப் படிங்க புரியும்..

http://www.karkibava.com/2008/10/blog-post_08.html

வெண்பூ said...

ம்ம்ம்ம்... நல்ல ஐடியாதான்.. இதுக்கு பயந்துகிட்டே நான் வெளியூர் டூர் போறது குறைச்சிட்டு இருக்கேன். நல்லா ப்ளான் பண்ணாம எங்கியுமே கிளம்புவதில்லை.

anujanya said...

ஹாய் வெண்பூ,

எங்க போயிட்ட இவ்வளவு நாள்? நீ இல்லாம, பாவம் கஷ்டப்படுவது நம்ம கார்க்கிதான் :). எனக்குக் கலாய்க்க வேற ஆளு வேணும் இல்ல.

ஆணிகள் அதிகமா? அவ்வப்போதாவது வந்து போ :). ம்ம், நீ பதிவு போட்டும் ரொம்ப நாட்கள் ஆச்சு. .........

அனுஜன்யா

ராம்.CM said...

நல்லா இருந்தது....

anujanya said...

@ தாமிரா

வாங்க தாமிரா. ரொம்ப நாட்களுக்குப் பின் உங்கள் வருகை. உங்களுக்கு(ம்ம்) கார்க்கி பெவரெட் என்று தெரியும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா :)

முடிஞ்சபோது தலையைக் காட்டுங்க தல. ரொம்ப சந்தோசம் நீங்க வந்ததில்.


@ சகாராதென்றல்

நன்றி சகாரா. ரசித்தால் சரி :)


@ கார்க்கி

அதெல்லாம் சரி. ஆக மொத்தத்தில் நீ குளிப்பதைத் தவிர்ப்பது என்னமோ உண்மைதானே :)


@ ராம்

நன்றி ராம். உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன் :)


அனுஜன்யா

TKB காந்தி said...

கவிதைய கொறச்சுடாதீங்க அவ்ளோதான் சொல்லுவேன்.

உங்களுக்கு ஆட்டோ அனுப்புனாத்தான் எங்களுக்கு கவிதை கொடுப்பேன்னு சொன்னா, கண்டிப்பா ஆட்டோ அனுப்பிடவேண்டியதுதான் ;)

Unknown said...

//TKB காந்தி said...
கவிதைய கொறச்சுடாதீங்க அவ்ளோதான் சொல்லுவேன்.

உங்களுக்கு ஆட்டோ அனுப்புனாத்தான் எங்களுக்கு கவிதை கொடுப்பேன்னு சொன்னா, கண்டிப்பா ஆட்டோ அனுப்பிடவேண்டியதுதான் ;)//

Repeatuuuuuu... :))

anujanya said...

@ காந்தி மற்றும் ஸ்ரீ

:)). சரி உங்க தலைவிதி - அடுத்தது கவுஜ போட்டுடலாம். ஆனா, ஆளுக்கு இரண்டு பின்னூட்டமாவது வரணும் :))

அனுஜன்யா

TKB காந்தி said...

கண்டிப்பா பல கமெண்ட் போடுறோம் (Sorry ஸ்ரீ உங்கள கேட்காமையே சொல்லிட்டேன்). எனக்கு கொஞ்சம் புரியறமாதிரியும் இருந்தா எங்க ஊர் முக்கு ரோட்ல உங்களுக்கு சிலை வெக்கறேன்.

anujanya said...

ஆஹா, உங்க ஊர் முக்கு ரோட்ல என் சிலையைக் கற்பனை பண்ணி மகிழ்வுறுகையில், காக்கை, புறாக் கூட்டங்களின் எச்சங்கள் விழத் துவங்கி விட்டன. எப்பவும் போல 'புரியாக் கவிதைகள்' எழுதி விடுகிறேன் :)

அனுஜன்யா

MSK / Saravana said...

நல்ல விஷயம் அண்ணா.. நிச்சயம் எல்லா இடத்திலும் இப்படியொரு வசதி தேவை..

MSK / Saravana said...

//TKB காந்தி said...

கவிதைய கொறச்சுடாதீங்க அவ்ளோதான் சொல்லுவேன்.

உங்களுக்கு ஆட்டோ அனுப்புனாத்தான் எங்களுக்கு கவிதை கொடுப்பேன்னு சொன்னா, கண்டிப்பா ஆட்டோ அனுப்பிடவேண்டியதுதான் ;)//

ரிப்பீட்டு.. :)

MSK / Saravana said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.. நடை நல்லா இருக்கு.. தொடர்ந்து இதுமாதிரியும் எழுதவும்.. :)

எனக்கும் மனசு சரி இல்லைன்னா அய்யனார் கவிதைகள், புனைவுகள் படிக்க ஆரம்பித்து விடுவேன்.. :)

anujanya said...

@ சரவணன்

அய்ஸ் கவிதையை விடு. உன் கவிதைகளே வேறு தளத்தில் இருக்கு. (வவ்வால் கவிதை ஒரு உதாரணம்). உனக்கு என் கவிதைகளும் பிடித்திருப்பது நிறைவைத் தருகிறது. நன்றி சரா.

அனுஜன்யா

Karthikeyan G said...

//கட்டணம் ஐம்பது (ஒரு நபர்) முதல் நூற்றைம்பது (ஒரு நான்கு-ஐந்து பேர் கொண்ட குடும்பம்) வரை வசூலிக்கல்லாம்.//

எங்க வருமானம் கம்மி, ரேட்டை கொறச்சுக்குங்க pls.. :)

anujanya said...

@ கார்த்திகேயன்

வெளியூரில் குளிக்க ஒரு ஐம்பது ரூவா முடியாதா? விட்டால் இலவசம் என்பீர்கள் போல :) (உங்க வலைப்பூவில் நிறைய கவிதைகள்! நல்ல தொகுப்பு)

அனுஜன்யா

வெண்பூ said...

//
அனுஜன்யா said...
@ கார்த்திகேயன்

வெளியூரில் குளிக்க ஒரு ஐம்பது ரூவா முடியாதா? விட்டால் இலவசம் என்பீர்கள் போல
//

2000 ரூவா இலவசமா தருவீங்க.. 50 ரூபா குளியல் இலவசமா கிடையாதா? :)))

மணிகண்டன் said...

"முட்டாளாய நீங்கள் என்று கேட்டது " உங்கள சுத்தமா புரிஞ்சிக்காம முட்டாள்தனமாக கேட்டதுன்னு சொல்லிட்டேன் ! கால்ல வேணும்னா விழறேன். மன்னிச்சுடுங்க என்னைய !

anujanya said...

@ வெண்பூ

இரண்டாயிரமா! (தருமி ஸ்டைல்). எனக்கு இல்லை. ஆமா, எதுக்கு, எங்கக் கொடுக்குறாங்க?

@ மணிகண்டன்

ஏலே மணி, என்னப்பா இது. சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதினது. நா நெஜமாவே அத சீரியசா எடுத்துக்கொள்ளவில்லை. லூஸ்ல விடு. ஆனா மவனே, நான் எந்தப் பதிவ போட்டாலும் 'சூப்பரு' னு ஒரு பின்னூட்டம் போட்டுரு. ஓகே?

அனுஜன்யா

மணிகண்டன் said...

சூப்பரு