Tuesday, February 10, 2009

மரணத்தின் பிரதிபலிப்பு


சமீப காலங்களில்
எங்களுக்குள் இந்த ஊடல்;
எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!
என்னை அழகு என்று எப்பொழுதும்
சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே
எவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்
மணமான பின்னும் தொடர்ந்த காதலில்
இப்போதெல்லாம் பிணக்குதான்;
அருகே செல்லவே பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி அலுத்துவிட்டது -
இருவருக்கும்தான்.
வாழ்க்கையின் சுவையும் ரசமும்
போயே விட்டதாக உணர்ந்தோம்.
தனியே ஒரு நாள் சந்தித்தோம்
நிறைய பேசினோம்
தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை
என்றெல்லாம் சொல்லியபோது
பெரிதாய் சட்டை செய்யவில்லை
தற்கொலைவரை போகும்
என்று எண்ணவில்லை
அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்

(நவீன விருட்சம் இதழில் வெளியானது)

48 comments:

ராமலக்ஷ்மி said...

//சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்//

அந்த நூறுமுகங்களும் சொல்லாமல் விட்டதையும் வரிகளுக்கிடையே ஊகிக்க முடிகிறது. 'மரணத்தின் பிரதிபலிப்பு’ பலரது வாழ்க்கையின் பிரதிபலிப்பும் கூட. அருமையான படைப்பு.

வாழ்த்துக்கள் அனுஜன்யா.

வால்பையன் said...

வாழ்க்கை என்னும் மாயக்கண்ணாடி உடைந்து விட்டதா?

ஒரே சோக கீதமாக இருக்கிறதே!

மாதவராஜ் said...

அனுஜன்யா!

பிரிவின் சுவை மரணத்தின்
நாக்குகளால் பெரும்பாலும் அறியப்படுகிறது.
வாழ்வின் சுவையை விட வெறுமையும், வெறுப்பும் மிக எளிதாக மனிதர்களை பற்றிக் கொள்கின்றன.
என்ன செய்ய...
எல்லாவற்றையும் materialistic ஆக பார்க்க முடியவில்லைதான்!

வெண்பூ said...

புரியுது.... ஆனா புரியல....

TKB காந்தி said...

'தனியே ஒரு நாள் சந்தித்தோம்,'

'சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்'
- அழகான லைன். கடைசியில் வர வர அருமையாக இருந்தது. புரியறமாதிரி எழுதினத்துக்கு தேங்க்ஸ்ங்க :)

TKB காந்தி said...

நீங்க நெறைய கவிதைகள் எழுதுறீங்க ஆனா கொஞ்சம் மட்டும் இங்க போடறீங்க. இங்கையும் publish பண்ணீங்கனா நாங்களும் படிப்போமே...

TKB காந்தி said...

ரெண்டு கமெண்ட் போட்டாச்சு, இதோட சேர்த்து மூணு :)

narsim said...

லேசா புரியுது தல.. வார்த்தை ஜாலம் கலக்கல்..

காதலர் தின குத்தா இது??

narsim said...

//(நவீன விருட்சம் இதழில் வெளியானது//

அய்யய்யோ இத பார்க்காம அந்த பின்னூட்டத்த போட்டேன் தல..அத அழிச்சுருங்க..

மிக நல்ல கவிதை..அற்புதம்

பரிசல்காரன் said...

என்னங்க... இது..

இப்படியெல்லாம் எழுதி பிரமிக்க வைக்கறீங்க?

அபாரம்!!

பரிசல்காரன் said...

@ நர்சிம்



மனுஷன் இவ்ளோ அனுபவிச்சு எழுதியிருக்காரு..

செம நக்கல்யா உங்களுக்கு.

ரௌத்ரன் said...

அழகு...

முரளிகண்ணன் said...

காதலர் தினம் வரும் வேளையில் அதன் அடுத்தக் கட்டத்தை பற்றிய கவிதை.

அழகு வார்த்தைகை கோர்த்து அதிசோகம்.
\\தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது\\

கனத்த மனத்துடன் ரசித்தேன்

கார்க்கிபவா said...

கவிதைக்கு பொருத்தமான படம்.. மிரள வைக்கிறீங்க தல.

அடுத்த கமெண்ட் மதியம். அப்போ படிக்கறப்ப இன்னொரு அர்த்தம் கிடைக்காதுன்னு பார்க்கிறேன்

Anonymous said...

அனுஜன்யா,

காதலிக்கும்போது ஒவ்வொரு வார்த்தையும் சுவையுள்ளதாகத் தோன்றுகிறது. அதுவே கல்யாணமாகி சிறிதுகாலாமகிவிடின் வெறுப்பை உமிழும் குணமுள்ளதாகவே ஆகிவிடுகிறது.

எதிர்பார்ப்பு அதிகமிருக்கும் இடத்தில்தான் சிறு ஏமாற்றமும் பூதாகரமாகத் தெரியும் என்பதை ஏனோ இத்தலைமுறையினர் அறியமறுக்கின்றனர்.

உங்கள் கவிதை அருமை. அதிலும் கடைசி வரிகள் மிக அதிகம்.

na.jothi said...

நல்லா இருக்கு
ஆனா மரணம் வரையும் எதுக்கு
ஒரு மூணு மாசம் தனியா
டூர் போய்ட்டு வாங்க
பிணக்கெல்லாம் பிடலெடுத்து போய்டாது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதையை நான் ஏற்கனவே படிச்சிட்டனே :)

நல்லா வந்திருக்கு.

மாசற்ற கொடி said...

படித்தவுடன் புரிந்தாலும் (ஓரளவு) பின்னூட்டங்களக்கு பிறகு (esp வேலன் அண்ணாச்சி) இன்னும் கொஞ்சம் புரிந்தது.

This reminded me of a forward where a mother asks her daughter to open a bank account and deposit money whenever they(Husband & wife) felt happy. And when they decide to split, they need to close the account - a glance at the happiness they have shared - binds them together again.

இது அதையும் தாண்டிய நிலையோ !

அன்புடன்
மாசற்ற கொடி

Unknown said...

நல்லா இருக்கு அண்ணா :)

மேவி... said...

என்ன சொல்ல அனுஜன்யா....
வழக்கம் போல கலக்கி இருக்கிங்க......
நானும் வழக்கம் போல முன்று முறை படித்து பார்த்து விட்டேன்....
படம் அருமை.... எங்க இருந்து உங்களுக்கு மட்டும் கிடைக்குது....


"சமீப காலங்களில்
எங்களுக்குள் இந்த ஊடல்;
எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!"
என்னக்கு இது தான் புரியல.... முழுமை காதல்யில் ஊடலுக்கு என்ன வேலை....

"என்னை அழகு என்று எப்பொழுதும்
சொல்லியதும் நினைவுக்கு வருகிறது."
ஆமாம்.... கோவம் வரும் போது இப்படி தான் மனசு "மதில் மேல் பூனை"மாதிரி இருக்கும்...

"இப்போதெல்லாம் பிணக்குதான்;
அருகே செல்லவே பிடிக்கவில்லை.
ஒரு மாதிரி அலுத்துவிட்டது -
இருவருக்கும்தான்."
ஒரே கருத்தை வார்த்தைகளை கொண்டு மாற்றி இரு விதமாய் சொல்லி இருக்கிங்க.

"தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது"
அட..... 4o s 50s
ல இருக்கறவங்க மனசை சூப்பர் ஆ சொல்லறிங்க.....
வயது அக ஆக பெண்கள் காதலை பல்வேறு சொந்தங்கள் பங்கு போட்டு கொள்ளிகின்றன......


"அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்"
இதை இப்படியும் எடுத்துக்கலாம் ;
"காலையில் எழுந்த உடன் தலைவனின் கோவம் ,இயலாமை , காதல் இன்மை போன்ற நூறு முகம்கள் சுக்குநூறாக சிதறி இருந்ததது ; தலைவன் மீண்டும் அவன் தலைவியை காதலிக்க துடங்கினான்"
என்ங்க இதுவும் சரி தானே.....

மேவி... said...

என்னொரு அர்த்தமும் என்னக்கு கிடைச்சுருச்சு......

புதியவன் said...

மரணத்தின் பிரதிபலிப்பை உணர முடிகிறது கவிதையில்...ரொம்ப நல்லா இருக்கு கவிதை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பயத்துடனே படிக்கவேண்டியிருக்கிறது.

மரணத்தின் பிரதிபலிப்பை.

தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை ////////

:)-

கிருத்திகா ஸ்ரீதர் said...

கவிதைக்கான தலைப்பு கவிதையைவிட கனமானதாயுள்ளது....

அன்புடன் அருணா said...

//அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்//

அழகிய வரிகள்....அழகிய கவிதை...
அன்புடன் அருணா

ச.முத்துவேல் said...

/ஒரு மாதிரி அலுத்துவிட்டது -
இருவருக்கும்தான்/

கல்யாணம் ஆனவராச்சே.(ச்சும்மாஆ)

/தற்கொலைவரை போகும்
என்று எண்ணவில்லை
அடுத்த நாள் காலை
சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்/

இறந்தவரின் பாடு மேல்.
வாழ்கிறவரை,
வாழ்கின்றவரைக்கும்
கொல்லும் உறுத்தல்.

நல்ல கவிதை.

ச.முத்துவேல் said...

/எதிர்பார்ப்பு அதிகமிருக்கும் இடத்தில்தான் சிறு ஏமாற்றமும் பூதாகரமாகத் தெரியும் /

என் மனசிலும் அடிக்கடி ஓடும் வரிகள் இவை.

/ஏனோ இத்தலைமுறையினர் அறியமறுக்கின்றனர்/

நீங்களும் யூத்துதான் அண்ணாச்சி.
சிந்திக்கறதுல, அப் டூ டேட் வாழ்க்கையில.

anujanya said...

@ ராமலக்ஷ்மி

நன்றி உங்கள் புரிதலுக்கு. you the first :))

@ வால்பையன்

சோக கீதம்! ச்சும்மா :)

@ மாதவராஜ்

ஆம், மாதவ். வருகைக்கு நன்றி

@ வெண்பூ

அதான் வெண்பூ. நடத்து. :)

@ காந்தி

நன்றி காந்தி. சொன்ன வாக்கைக் காப்பற்றியதற்கும் :)

@ நர்சிம்

லொள்ளு? எனக்குப் பதில் பரிசல் பதில் சொல்லிட்டாரு.

@ பரிசல்காரன்

நன்றி கே.கே. பாராட்டுக்கும், நர்சிம்மை 'கவனித்துக்' கொண்டதற்கும் :)

@ ரௌத்ரன்

தப்பித்தேன் ரௌத்ரன் :) நன்றி.

@ முரளி

நன்றி முரளி. காதலர் தின வாரத்தில் இப்படி ஒரு கவிதை! என்னா டைமிங்கப்பா!

@ கார்க்கி

நன்றி சகா. மதியம் திரும்ப படிக்கலையா இல்ல புது அர்த்தம் கிடைக்கவில்லையா?

@ வேலன்

வாங்க வேலன். நீங்க பாராட்டினால் கூடுதல் மகிழ்ச்சி. நன்றி

@ smile

மூணு மாசம் தனியா டூர்? அதுல ஆரம்பிச்ச வம்பு தானேயா இது :)

@ ஜ்யோவ்

நன்றி குரு. தெரியும், நீங்க சொல்லித்தான், பிரசுரம் ஆனதே தெரியும்.

@ மாசற்ற கொடி

அந்த fwd matter ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.

@ ஸ்ரீ

நன்றி ஸ்ரீ.

@ MayVee

ஊடல் இல்லாவிட்டால் அது காதலே இல்லை :) உங்க புரிதல் ரொம்ப பாசிடிவா இருக்கு. நன்றி.

@ புதியவன்

நன்றி புதியவன். நீங்க ரொம்பவே கலக்குறீங்க!

@ அமித்து அம்மா

பயப்படாதீங்க. இது ச்சும்மா :). நன்றி.

@ கிருத்திகா

வாங்க கவிதாயினி. நன்றி. அப்புறம், வாழ்த்துகளும் - விகடனில் வந்ததற்கு (உங்க முகமூடிக் கவிதைகளுக்காக) - எல்லோரும் படிக்க வேண்டிய நல்ல கவிதைகள்.

@ அன்புடன் அருணா

நன்றி அருணா. உங்க தளத்துக்கு வந்து ரொம்ப நாட்கள் ஆயிற்று. மன்னியுங்கள்.

@ முத்துவேல்

வாங்க கவிஞர்! நன்றி. ஆமா, அண்ணாச்சியும் யூத்து தான் :))

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"@ கிருத்திகா

வாங்க கவிதாயினி. நன்றி. அப்புறம், வாழ்த்துகளும் - விகடனில் வந்ததற்கு (உங்க முகமூடிக் கவிதைகளுக்காக) - எல்லோரும் படிக்க வேண்டிய நல்ல கவிதைகள்."

நானா??? இன்னும் வரல விகடன்ல வந்தா யூ த பர்ஸ்டா வைச்சுக்கறேன்.... :)

கார்க்கிபவா said...

/@ கார்க்கி

நன்றி சகா. மதியம் திரும்ப படிக்கலையா இல்ல புது அர்த்தம் கிடைக்கவில்லையா?//

அப்போ படிக்கல என்பது உண்மை. இப்போ படிச்ச போதும் என் மரமண்டைல வேற எதுவும் தோணல என்பதும் உண்மை

உயிரோடை said...

என்ன இது இவ்வளவு விரத்தி.

//சுக்குநூறாக சிதறி இருந்ததில்
என் நூறு முகங்கள்//

அழகான படிமம்.

கவிதையாயினும் தற்கொலையை கூடாது.(அப்ப நீங்க கவிதை எழுதாதீங்கன்னு சொல்றது புரியுது)

உயிரோசை கவிதையை வலையில் பதிப்பித்து இருக்கின்றேன் தங்கள் வேண்டுகோள்படி. வந்து போங்க மின்னல் பக்கம்

மேவி... said...

"@ MayVee

ஊடல் இல்லாவிட்டால் அது காதலே இல்லை :) உங்க புரிதல் ரொம்ப பாசிடிவா இருக்கு. நன்றி. "

அட ...
நானும் தான் ஏழு வருடமாய் காதலித்து கொண்டு இருக்கிறேன்....
ஒரு நாள் கூட சண்டை போட்டதில்லை

anujanya said...

@ கிருத்திகா

இன்னும் பார்க்கவில்லையா. யூத்புல் விகடன்ல உங்க வலைப்பூவுக்குச் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். (http://youthful.vikatan.com/youth/index.asp) Good blogs என்ற தலைப்பில். வாழ்த்துகள்.

@ கார்க்கி

பரவாயில்ல. அப்ப உண்மையிலேயே கவிதையில் மேட்டர் அவ்வளவுதான்னு வெச்சுக்கணும். நிஜமாவே, நான் எழுதியதை விட, படிச்சவங்க புரிதல் மேல் தளங்களில் இருந்தது.

@ மின்னல்

அலுப்பில் துவங்கும் விரக்தி. இது தற்கொலைதான் என்று முடிவாகச் சொல்லுவீர்களா?

உங்க கவிதை படித்தேன். Truly fantastic. நிறைய எழுதுங்கள் மின்னல்.

@ MayVee

ஏழு வருடமாகக் காதல்? அதுவும் சண்டையே இல்லாமல்? சான்சே இல்ல. செய்துகொண்டிருப்பது கல்யாணமாக இருக்க வேண்டும். எங்க கல்யாணத்துக்கு பிறகு சண்டையே இல்லை. Total surrender :)))

அனுஜன்யா

Unknown said...

அச்சச்சோ நான் மறந்தே போயிட்டேன் :((

Unknown said...

இப்போ காப்பாத்திட்டனா?? இப்போ காப்பாத்திட்டனா?? இப்போ காப்பாத்திட்டனா?? ;)))

anujanya said...

@ ஸ்ரீ

ஸ்ரீ, ஏன் இந்தப் பதட்டம். என்னைக் காப்பாற்றும் தெய்வம் எப்போவுமே நீதானே? மிக்க நன்றி தங்காய் :))))

அனுஜன்யா

மணிகண்டன் said...

அனுஜன்யா,

கவிதை சூப்பர் !

எனக்கு கவிதை படிச்சா புரியவேமாட்டேங்குது. அத தவிர படிக்கற பொறுமையும் வரமாட்டேங்குது. இத எப்படி சரி பண்ணலாம் ?

கதை, உரைநடை, வெறும் பேப்பர் இதுல எதுவா இருந்தாலும் படிக்க புடிச்சி இருக்கு...புரியவும் புரியுது..ஆனா கவிதை ?

இது எவ்வளவு தீவிரமான பிரச்சனை அப்படின்னு உங்களுக்கு புரிய வைக்க இந்த பின்குறிப்பு :-

ஜ்யோவ்ராம் சுந்தரின் " அ" கதை கூட புரியுது !

MSK / Saravana said...

நல்லா இருக்கு கவிதை..

//இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை//
நச்.. :)

அண்ணா.. ஒரு டவுட்.. வீட்டில பிரச்சனையா?? இல்லை நீங்க காதலர் தின எதிர்ப்பாளரா??

மதன் said...

முன்பே படித்தேன்.. வாழ்த்துக்கள் தல..!

anujanya said...

@ மணிகண்டன்

மணி, இது எல்லோருக்கும் பொதுவாக உள்ள உபாதை. எனக்கும் அப்படித்தான் :) என்ன, நான் எழுதியது மட்டும் உலகின் ஒரே கவிதை என்பது போல திரும்பித் திரும்பிப் படிப்பதால் புரிந்த மாதிரி பிரமை தோன்றும்.

Jokes apart, on a more serious note, கதை, பத்தி எழுத்துகளில் ஆசிரியன் வாசகனுக்குப் புரிய வேண்டும் என்னும் பதட்டத்தில் ஒரு பொதுவான அலைவரிசையில் எழுதுவான். கவிதையில், சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டியிருப்பதால், பூடகமாக இருக்கும். இந்த முறையில், வாசகன், ஆசிரியன் அலைவரிசை பற்றி தெரிந்தால், தேடி புரிந்து கொள்ளலாம். அல்லது, தனது அலைவரிசையில், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு, அதே வார்த்தைகளை வேறு தளத்தில் புரிந்து கொள்ளலாம். In that sense, poems are a medium for one to interpret in one's own way and deduce. நல்ல வாசகன் பெரும்பாலும் ஆசிரியனைக் காட்டிலும் மேலான புரிதலும், வாசிப்பின்பமும் பெறுவது இயல்பே. உண்மையாகவே, இந்தக் கவிதையிலும், படித்தவர்களின் புரிதல் மேலான தளத்தில் இருப்பது எழுதிய எனக்கு மட்டுமே தெரியும்.

கவிதையில் நாட்டம் வருவதற்கு ஒரே வழி, நாமும் கவிதை முயற்சியில் இறங்குவதுதான்; அப்போதுதான் அதன் நடைமுறைத் தொந்தரவுகள் தெரிய வரும். மற்றவர்கள் என்ன, எப்படி செய்கிறார்கள் என்ற இயல்பான ஆர்வம் வரும். அப்புறம், மற்றவர்கள் தலைவிதிப்படி, நீ ஒரு சராசரி/நல்ல/உயர்ந்த கவிஞனாக வரலாம்.

"கவிதையைக் காதலிப்பது எப்படி அல்லது கவிஞனாவது எங்ஙனம்" என்னும் தலைப்பில் வர இருக்கும் என்னுடைய நூலின் முக்கிய அத்தியாயம் இது. காசோலை அனுப்பினால் மற்ற விவரங்கள் அனுப்பப்படும். vpp வசதியும் உண்டு :))

@ சரவணன்

சரா, இரு கொஞ்சம் மூச்சு வாங்குது. இந்த மணி ரொம்பப் படுத்திவிட்டார். கவிதை கொஞ்சம் தீவிரமா இருந்தால், உடனே 'வூட்ல பிரச்சனையா நைனா' என்று கேட்டால் என்ன சொல்ல! இது ஆகஸ்ட் மாதம் எழுதி, பிரசுரமான கவிதை. ஒரு வேளை அப்போ பிரச்சனை இருந்திருக்கலாம் :) போலவே காதலர் தினமும். நாமளே காதலித்துவிட்டு எப்படிப்பா?

@ மதன்

நன்றி சகா. உயிர்மை/கீற்று என்று ஒரே அதகளம் பண்ணுற. வாழ்த்துகள்.

அனுஜன்யா

மதன் said...

அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.. நீங்க வேற காமெடி பண்ணிகிட்டு..! :)

மண்குதிரை said...

அனுஜன்யா அருமையான கவிதை.

நல்ல மொழி வளம்.

எனக்கு பிடித்த வரிகள்,
''தேய்ந்துபோய் சாதலைவிட
நடுவயது மரணம் மேலானது
இயற்கை மரணத்தைவிட
விபத்துக்கள் சுலபமானவை''

மணிகண்டன் said...

நீண்ட விளக்கத்துக்கு ரொம்ப நன்றி அனுஜன்யா.

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...

உண்மைதான் சொல்லிக்கொண்டு பிரிந்துவிடலாம் இழந்துவிட்டதன் உன்னதங்களாவது மீதமிருக்கும்...

ச.முத்துவேல் said...

/அலுப்பில் துவங்கும் விரக்தி. இது தற்கொலைதான் என்று முடிவாகச் சொல்லுவீர்களா?/

நானும் சரியாகப் புரிந்துகொள்ளாமல்தான் இருந்திருக்கிறேன். இப்போது நன்றாகப் புரிகிறது.

மணிகண்டனுக்கு அளித்த விளக்கம் , நன்றாக இருக்கிறது.

anujanya said...

@ தமிழன்

நன்றி. சாரி, இன்று தான் உங்க பின்னோட்டத்துக்கு பதில் போட முடிந்தது.

@ முத்துவேல்

நன்றி முத்துவேல். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

அனுஜன்யா

Anonymous said...

u live in a different world