அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும்
சமீபத்தில் ஜெமோ திருவட்டாறு அருகில் உள்ள திற்பரப்பு அருவி பற்றி எழுதியிருந்தார். உடனே நான் குளித்த அருவிகள் பற்றி சிந்தனை விரிந்தது. கல்லூரி நாட்களில் திருப்பதி என்றால் போக வர காசு கிடைக்கும் என்பதால் திருப்பதியும் சென்றுவிட்டு, திரும்பி வருகையில் கோனே நீர்வீழ்ச்சியில் கும்மாளமிட்டது மறக்கவே முடியாது. பிறகு வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அந்தப் பழக்கம் தொடர்ந்தது பல வருடங்கள். நாங்கள் எப்போதுமே ஆறு பேர் நண்பர்கள். அவர்களில் ஒருவனின் தங்கையிடம் மனம் நாட்டம் கொள்ளத் துவங்கி, ஒரு தருணத்தில் என் காதலியின் அண்ணனாக மட்டும் தோன்றத் துவங்கிய காலகட்டம். இன்னொரு தொடை நடுங்கி நண்பன், 'எப்படிடா இவன் கிட்ட சொல்லப் போற?' என்று நடுங்கியபோது, அருவிக் குளியலுக்கு நடுவில் 'மச்சி, உன் தங்கையை நான் கல்யாணம் செய்துகட்டுமா?' என்று சிரித்துக் கொண்டே கத்தினேன். அவனும் உற்சாகத்தில் (அருவிச் சத்தத்தில் வேறு ஒன்றுமே கேட்காது) தலையை ஆட்டினான். போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போ அவன் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான். அவளும். நான் மட்டும் ஞே.
அடுத்த அருவி கும்பக்கரை அருவி. மிக அழகான இடம். கொடைக்கானல் மலை அடிவாரம். வத்தல குண்டு - பெரிய குளம் ரஸ்தாவில் பெரியகுளத்துக்கு மிக அருகில் (தகவல் சரி தானா முரளி/நர்சிம்?) மெயின் ரோடிலிருந்து ஒரு இரண்டு கி.மீ. சைக்கிளில் பயணித்தால் ...... கும்பக்கரை அருவி. உயரம் அதிகமில்லை. ஆனால், நல்ல அகலம். நிறைய தண்ணீர். உட்கார்ந்து ஆனந்தமாகக் குளிக்கலாம்.
கொடைக்கானலில் இருந்து இறங்கும் வழியில் 'சில்வர்' ஏதோவில் அவசரக் குளியல் செய்தது இலேசாக ஞாபகம் இருக்கு. இது தவிர்த்து, மண்டியா-மைசூர் சாலையருகில் 'பெல்மூரி' நீர்வீழ்ச்சி பிரசித்தம். காவிரி நீர். ஆனால் இடுப்பு அளவு உயரம் கூட இல்லாத இந்த செல்ல நீர்வீழ்ச்சியை, நாம் நிறைய திரைப் படங்களில் நாயகன்/நாயகி இருபது துணை நடிகைகளுடன் ஆடிப் பாடும் காட்சிகளில் நிச்சயம் பார்த்திருப்போம்.
சென்ற நவம்பர் மாதம் மங்களூர் சென்ற போது அருகில் குதரேமுக்-சிங்கேரி மலைப் பகுதியில் ஒரு திருப்பத்தில் ஒரு திடீர் அருவி. உடனே காரை நிறுத்தி குளித்தது மறக்க முடியாத அனுபவம்.
குளிக்காமல் பார்த்து, வியந்து, பயந்து வந்துவிட்ட அருவி 'சிவசமுத்திரம்' என்று நம்மவர்களாலும், 'ஷிம்ஷா' என்று செல்லமாக கன்னடர்களாலும் அழைக்கப் படும் பேரருவி. அனைவரும் ஒரு முறை கட்டாயம் பார்த்தே தீர வேண்டிய நீர் வீழ்ச்சி. காவிரி ஆற்றில் அமைந்தது.
எங்கள் அண்டை வீட்டுப் பெண், பொறியியல் கல்லூரி பிக்னிக் சென்ற போது, இந்த பிரம்மாண்ட நீர் வீழ்ச்சியில் அநியாயமாக கால் சறுக்கி மாய்ந்து போனது, இன்னமும் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும், ஒரு மௌன வலியாக நிரந்தரம் கொண்டிருக்கிறது. சம்பிரதாயதிற்க்காகச் சொல்லவில்லை. A very promising life taken away so early, so cruelly.
கவிஞர் விக்ரமாதித்யன் எழுதினர்: "அருவியை நீர் வீழ்ச்சி என்றால் வலிக்கிறது". உண்மை. குளிக்க முடிந்தால் அருவி என்றும், பயமாக ஒதுங்கி பார்க்க மட்டும் முடிந்தால் நீர்வீழ்ச்சி என்றும் கொள்ளலாமா? ஆனால், ஷிம்ஷா மட்டும் எனக்கு இன்னமும் நீர் வீழ்ச்சிதான்.
உங்களை கனமான மனதுடன் அனுப்பும் எண்ணம் இல்லை. அதனால், கடைசியாக அருவிகள் பற்றி மேலும் இரண்டு விஷயங்கள்.
அதற்கு முன், கவிஞரா இருந்துகொண்டு கவிதை போடா விட்டால் எப்படி? இதோ அருவி பற்றி எனக்குப் பிடித்தமான வா.மணிகண்டனின் கவிதை.
ஏணிகளை வரிசையாகக் கட்டி
அருவி மீது ஏற முயன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமானவன் சொன்னான்.
உச்சியை அடையும் கணம்
விழத்துவங்கினேன்.
எப்படி
எலும்பு மிஞ்சியது என்றும்
இலை
சுழன்று
விழும்
தேவதச்சன் கவிதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.
இட்லி வாங்கி வரச் செல்வதாக
தாயுமானவன்
கிளம்பிச் சென்றான்.
ம்ம், இப்ப இரண்டு விஷயங்கள்:
நயாகரா நீர் வீழ்ச்சி - அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள பிரம்மாண்டம். கனடா பக்கத்திலிருந்து இன்னும் அழகாகத் தெரியும். உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? என்ன பாஸ், கூகிள், விக்கி, நாட் ஜியோ எவ்வளவு இருக்கு. எங்க வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பது டொரோண்டோ. பார்க்கலாம்..நம்ம ராசி எப்படி என்று.
நயகரா என்றதும் ஒரு துணுக்கு ஞாபகம் வந்தது:
ஒரு கைடு நிறைய சுற்றுலா பயணிகளை நயகரா நீர்வீழ்ச்சி அருகில் கொண்டு சென்று அதைப் பற்றி பேசினார். இடையில் "பெண்களே, தாங்கள் சற்று பேசுவதை நிறுத்தினால், இங்கு ஒரு நீர்வீழ்ச்சி விழும் சப்தம் கேட்கக்கூடும்' என்றார்.
கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும். நான் போக மாட்டேன் என்றா சொல்கிறேன். போயிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று தானே சொல்கிறேன். ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம். குருப்புல யாரா? வாசகர் சார் வந்தா தான் நான் வருவேன் :)
Friday, March 20, 2009
(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
நல்ல அனுபவங்கள். கும்பக்கரை அருவிக்கு சைக்கிளில் சென்ற தருணங்கள் மறக்க இயலாதவை. குமரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறு அருவிகளில் ஒரே நாளில் குளித்த அனுபவமும் ருசிகரமானது.
கும்பக்கரை தகவல் சரி தான்..ஆனால் பிரிவில் இருந்து ஆறு கி.மீ வரை இருக்கும்.
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எல்லா அருவி அனுபவமும்.. :)) நான் குற்றாலம் போயிருக்கேன்.. ;)))
நீங்க மட்டும் ஞே:))??
அருவியில் குளித்தாற் போலவே சிலுசிலுவென செல்கிறது பதிவு:)!
அருவியில் நனைந்த உணர்வு ! முடிந்தால் பொள்ளாச்சியில் monkey falls ம் செல்லவும். மிக அருமையான இடம்.
அன்புடன்
மாசற்ற கொடி
நல்லா இருக்கு பதிவு.
//குளிக்க முடிந்தால் அருவி என்றும், பயமாக ஒதுங்கி பார்க்க மட்டும் முடிந்தால் நீர்வீழ்ச்சி என்றும்//
விளக்கமும் நல்ல இருக்கு.
// கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும். //
நானும்.
அருவி பற்றிய பதிவில் குற்றாலம் இல்லாவிட்டால் எப்படி?
கவிதை எழுதலைனா குற்றாலம் கூட்டீட்டு போறோம் ;)
நல்லா எழுதியிருக்கீங்க அனுஜன்யா!. விக்கி கவிதையும் டாப் (முழுசா தரக்கூடாதோ!).
நயாக்ரா என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது :
நயாக்ரா ஃபால்ஸ்
வயாக்ரா ரைஸஸ்
சுஜாதா பாணியிலே சொல்லனும்னா 'வால் அறுந்த பட்டம் மாதிரி சுத்துனாலும்' சொல்ல வந்ததை சொல்லிட்டிங்க.
சுஜாதா பாணியிலே சொல்லனும்னா 'வால் அறுந்த பட்டம் மாதிரி சுத்துனாலும்' சொல்ல வந்ததை சொல்லிட்டிங்க.
ஃஃ
போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போ அவன் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான். அவளும். நான் மட்டும் ஞே.
ஃஃ
இதத்தான் from frying pan to fire னு சொல்வாங்களோ !!!???
ஃஃ
குருப்புல யாரா? வாசகர் சார் வந்தா தான் நான் வருவேன் :)
ஃஃ
ஒரு குரூப்பாதான்யா கிளம்பீருக்கீங்க...
(வடிவேல் பாணியில்)
//போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போ அவன் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான். அவளும். நான் மட்டும் ஞே.
////
அப்போ அவங்களத்தான் கல்யாணம் பண்ணிருக்கீங்களா!
நல்லா இருந்தது. ஆனா, ஒவ்வொரு அருவியப் பத்தியும் விளக்கியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்!
நல்லா எழுதி இருக்கீங்க அனுஜன்யா. நயாகரா போகும் வாய்ப்பு கிடைச்சா, நிறைய எண்ணெய் தடவிக்கிட்டு குளிக்க போங்க. ரொம்ப force ஜாஸ்தியாம். அப்புறம் முழு வழுக்கை ஆயிடும் !
//கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும்.//
அண்ணே உங்களைப் போய் எப்படி டேய்னு கூப்பிட முடியும் அவ்வ்வ்......... ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க,தராசு,கேபிள்சங்கர் எல்லாம் யூத்து......... அதனால..........
அனுபவங்கள் நல்லா இருக்குங்க, எனக்கு அருவின்னதும் எழுத்தாளர் ஆதவன் நினைவு வந்துட்டார், காகிதமலர்கள்,இரவுக்கு முன்பு வருவது மாலை, என் பெயர் ஆதிசேஷன்,,,,,,
its true,
A very promising life taken away so early, so cruelly
தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும் குற்றாலம் பற்றி எழுதாம என்ன கட்டுரை?
ஜூன், ஜூலை, ஆக்ஸ்டு 3 மாசம் சொர்க்கம்.
அருவி பற்றிய நினைவுகளை நானும் ஒரு கட்டுரையாகப் போடுகிறேன்.
/கவிஞர் விக்ரமாதித்யன் எழுதினர்: "அருவியை நீர் வீழ்ச்சி என்றால் வலிக்கிறது". /
வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்,இதேபோல. யார் முதலில் என்று எனக்குத்தெரியவில்லை.
குங்குமம் போட்டிக்கு, இதேமாதிரி, ஆனா,கொஞ்சம் வேற மாதிரி(அப்பல்லாம் வைரமுது, விக்கி யாரையுமேப் படிச்சதில்ல),ஒரு கவிதையை எழுதிஅனுப்பீட்டு,(அதுவும் வைரமுத்துவுக்கே),ரொம்ப சந்தோசத்துல இருந்தேன். ஆனா சேவியர் அண்ணன் சொல்லிட்டாரு.இதுமாதிரி வை.மு. கவிதை ஒன்னு இருக்குதுன்னு. ரிசல்ட்டுக்காக் காத்திருக்கிற வேலை மிச்சமாச்சு.
நயாகரா மேட்டர் சூப்பர். கலவையான உண்ர்வுகளை ஏற்படுத்தின பதிவு.
விகடனில் கிருஷ்ணவேணி படிக்கிறீங்களா....அருமையாக இருந்தது...
குற்றாலம் மட்டுமல்ல.. அப்படியே நம்ம ஏரியா அகத்தியர் அருவிவரைக்கும் போய்ட்டுவரலாமே :-)
ஒரு திருத்தம் நாவலின் பெயரில் ஆதிசேஷன்( என குறிப்பிட்டிருந்தேன்) அல்ல, ராமசேஷன் என்பதே சரி
//ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம்.//
வ.மொ.
//'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும்.//
நானும் நானும்... நீங்கத்தான் பரிசல்க்கு இட்லி க்ளூ குடுத்த ஆளா? ஓகே ஓகே :))
@ தமிழ் பிரியன்
நன்றி தமிழ். ஒரே நாளில் ஆறு அருவிகள்? அட்டகாசம். கி.மீ.யும் ஆறா? நன்றி.
@ ஸ்ரீமதி
நன்றி. அப்ப, குற்றால குருப்புல நீ கிடையாது :)
@ ராமலக்ஷ்மி
நன்றி. உங்க சொந்த ஊரில் அருவிகள் அதிகம் தானே?
@ மாசற்ற கொடி
ஆளுக்கேற்ற அருவி என்று Monkey Falls போகச் சொல்லுகிரீர்கள? இருக்கட்டும்.
@ ரவிசங்கர்
நன்றி ரவி.
@ வெயிலான்
//நானும்.//
கரெக்ட். வெயிலான் என்றதும் விருதுநகரும், வெய்யிலும் மட்டுமே நினைவு. சாரி பா!
//அருவி பற்றிய பதிவில் குற்றாலம் இல்லாவிட்டால் எப்படி?
கவிதை எழுதலைனா குற்றாலம் கூட்டீட்டு போறோம் ;)//
கிர்ர்ர்ர்ர்ர்ர்
@ ஜ்யோவ்
விக்கி கவிதையைத் தேடினேன். வந்தது இவ்வளவுதான்;
//நயாக்ரா ஃபால்ஸ்
வயாக்ரா ரைஸஸ்//
வலையுலக வாத்ஸ்யாயனர்னு சும்மாவா பேரு!
@ சிவக்குமரன்
நன்றி சிவா. நன்றி சிவா. (இரண்டு பின்னூட்டங்களுக்கும் :) )
@ வாசகன்
சும்மா; உங்கள மட்டும் விட்டு விடுவோமா? நன்றி.
@ பப்பு
நன்றி. பதிவு அப்புறம் ரொம்ப நீளமாகிவிடும் :)
@ மணிகண்டன்
//அப்புறம் முழு வழுக்கை ஆயிடும் !//
இப்ப மட்டும் என்னவாம்? ஆனாலும், உன்ன 'கவனிக்க' வேண்டும் :)
@ அத்திரி
//ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க,தராசு,கேபிள்சங்கர் எல்லாம் யூத்து......... அதனால..........//
நன்றி அத்திரி. ஹா ஹா ஹா.
@ யாத்ரா
நன்றி யாத்ரா.
@ வேலன்
நன்றி வேலன். போடுங்க. Authentic ஆக இருக்கும்.
@ முத்துவேல்
நன்றி முத்துவேல்.
@ தண்டோரா
'கிருஷ்ணவேணி' ? இங்கு விகடன் கிடைப்பது கஷ்டம். எப்பவாவது தான் படிப்பது.
@ உழவன்
நிச்சயமா 'அகத்தியரையும்' பார்த்திடலாம். நன்றி.
@ பரிசல்
நன்றி.
அனுஜன்யா
அருவியில் குளித்தாற் போலவே சிலுசிலுவென செல்கிறது பதிவு
நெம்ப வசதியா போச்சு...!!! தம்பி..... நீங்க ஒரு சிறந்த வாடர்பால்ஸ் டேட்டா பேஸ் .....!!!!
நெம்ப தேங்க்ஸ்ங்கோ தம்பி....!!!
வாசித்தேன், ரசித்தேன்
//நெஞ்சு படபடக்கிறது
அருவியை நீர் வீழ்ச்சி என்று
யாராவது சொல்லிவிட்டால்//
நண்பர் ச முத்துவேல் சொல்லும் விக்ரமாதித்யன் கவிதை இதுதான்.
வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் பொருள் இதுதான்.
@ ராம்
நன்றி ராம்.
@ லவ்டேல் மேடி
நன்றி அண்ணே.
@ மண்குதிரை
நன்றி. எனக்கும், சரியான வரிகள் ஞாபகத்தில் இல்லை.
அனுஜன்யா
அருவிகளைப் பற்றிய நல்ல பதிவு... நயாகரா ஜோக் மிகவும் ரசித்தேன் :)
நான் முதல்ல பாத்த அருவி எங்க ஊர் திருமூர்த்தி மலை அருவி. ஆஹா... ஆஹா...
//ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம். குருப்புல யாரா? வாசகர் சார் வந்தா தான் நான் வருவேன் :)//
நீங்க்ளே அந்த நல்ல லாரியத்தை ஆரம்பியுங்களேன்
Very nice post. Are you in Mumbai?
//கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும்.//
Bloggers envy?
@ ஜி
சாரி ஜி. உன் கமெண்ட இப்பதான் பார்த்தேன். ஆமா, முன்ன மாதிரி ரெகுலரா எழுதுவது இல்லையா?
நீயும் அதே ஏரியாவா? சரிதான். பரிசலுக்குக் க்ளூ குடுத்த ஆள், ரமேஷ் அண்ணாவா இருக்கக் கூடும். பரிசல் என்னை எல்லாம் கவிஞர்னு ஒத்துக்கொள்ள ... சரி விடு.
@ மஹேஷ்
உங்க ஊர் திருமூர்த்தி மலை அருவி? எங்கே இருக்கு? வீட்டுக்கு வந்தா சாப்பாடு உண்டா?
@ வால்பையன்
செஞ்சுடலாம் குரு.
@ ராஜு
நன்றி ராஜு. ஆம், மும்பையில். நீங்கள்? Not exactly bloggers envy; They hail from that place :)
அனுஜன்யா
Post a Comment