Wednesday, July 8, 2009

இரு அழகிகள்


கடற்கரையின் ஈர்ப்புகளில்
இரண்டு அழகிகள்
உயரமான சின்னவள்
சுட்டித் தனமாக என்மீது
சிறு கொம்பை வீசியபோதுதான்
அவர்களைப் பார்த்தேன்
பெரியவளின் அமைதி
பேரழகாக இருக்கும்
சில நாட்கள் கைகளை
ஆட்டி ஆட்டி பேசுவாள்
பல நாட்கள் ஒன்றும் பேசாது
ஓவிய மௌனம் காப்பாள்
சிறுகச் சிறுக எங்களுக்குப்
பரிமாற நிறைய விஷயங்கள்
ஊரை, உலகைச் சுற்றும் நான்
தினமும் அவளுக்குச்
செய்தி சொல்லுவேன்
எப்போதும் நிற்குமவள்
இருபது நான்கு
மணிகளில் நடந்ததை
என்னிடம் சொல்லிடுவாள்
சிலவற்றை நான்
திரித்துச் சொல்லுகையில்
இலேசாகத் லையாட்டி
சில வார்த்தைகளை உதிர்ப்பாள்
பிறகு தெரிந்தது
பூமிக்குக் கீழிருந்தும்
வானத்தின் உயரத்திலிருந்தும்
அலை வரிசைகளிலிருந்தும்
அவளுக்குச் செய்திகள்
வந்தவண்ணம் இருப்பதென்று
மரங்களோடு பேசுகிறதாகவும்
மனப் பிறழ்வு வந்ததென்றும்
அம்மா கூறுவது கேட்கிறது
இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்

(உயிரோசை 20.04.09 மின்னிதழில் பிரசுரமானது)

41 comments:

நட்புடன் ஜமால் said...

எப்போதும் நிற்குமவள்
இருபது நான்கு
மணிகளில் நடந்ததை
என்னிடம் சொல்லிடுவாள்\\


வரிகள் இரசிக்கும் படியாக இருந்தது.

இரண்டு முறை படித்து விட்டேன்


இன்னும் முழுதாய் விளங்கயில்லை

மீண்டும் வருவேன் ...

"அகநாழிகை" said...

அனுஜன்யா,
இந்தக்கவிதை ஏற்கனவே உயிரோசையில் வாசித்ததுதான்.

இறுக்கமான மொழியில் சொல்லப்பட்ட இக்கவிதையில் வாசிக்கும்போதே ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும்‘ஓவிய மௌனம்‘ என்ற வார்த்தை ஆகச்சிறந்ததாக தோன்றுகிறது.

000

//ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்//

அருமையான வரிகள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

மங்களூர் சிவா said...

மிக அருமை!

J said...

நல்லா இருக்கு
கடைசி 3 வரி இல்லாமலும்

மங்களூர் சிவா said...

/
இருபது நான்கு
மணிகளில்
/

இருபத்தி நான்கு மணிகளில் இதை இப்படி பிரிச்சு எழுதலாமா?

இது நம்ம ஆளு said...

இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்

பிரமாதம்

வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

கார்க்கி said...

ம்ம்... புரியும்படி ஒரு நல்லக் கவிதை தல..

MayVee said...

கவிதை நல்ல தல ....

அனா பாருங்க கடைசில வருது ல "பிறழ்வைக்" ன்னு ஒரு வார்த்தை ..... அதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரியல ...... அதனால் முழுமையா ரசிக்க முடியல ....

Nadesh said...

//இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்//


நல்ல கவிதை தோழர்..

நர்சிம் said...

//பிறழ்வைக் கேட்கிறேன் நான்//

இந்த சொல்லு முன்னாடி என் செல்லு தோத்துப் போச்சே.

Anonymous said...

// ஓவிய மௌனம் //

அழகிய சொல்லாடல். கவிதைச் சொல்லிச் செல்வதைவிட சொல்லாமல் சொல்லுவததிகம்.

நட்புடன் ஜமால் said...

மனப் பிறழ்வு\\

ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்\\


நல்லாயிருக்கு நண்பரே!

(எத்துனை முறை படித்தேன் என்று கேட்காதீர்கள் ...)

அ.மு.செய்யது said...

//சிலவற்றை நான்
திரித்துச் சொல்லுகையில்
இலேசாகத் தலையாட்டி
சில வார்த்தைகளை உதிர்ப்பாள்//

ரசித்த வரிகள்.

தாறுமாறு பண்றீங்க..

பாலா said...

ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்


konuteenga bosssssss

yappaaaaaaaaaaaa

இராம்/Raam said...

அருமை... :)

Mahesh said...

அருமை அனு...

//ஓவிய மௌனம்// இதே போல் "ஓவியச் சிரிப்பு" என்று ரவிவர்மாவின் ஓவியங்களுடன் ஒரு ஒப்பீடு உண்டு... அந்த பிரயோகம் இதிலும்..... மிக ரசித்தேன்...

RAMYA said...

//
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்
//

அருமைங்க!
வார்த்தைகள் அலங்காரமா வந்திருக்கு!

மாசற்ற கொடி said...

"உயரமான சின்னவள்", "ஓவிய மௌனம்"

Simply Superb !

மிக அருமையான கவிதை. தேர்ந்து எடுத்த வார்த்தைகள், அழகான கருத்து, மற்றும் எளிமை.

அன்புடன்
மாசற்ற கொடி

மணிகண்டன் said...

எல்லாரும் ரசிக்கறாங்க. நானும் ரசிச்சேன்.

அருமை.

செந்தழல் ரவி said...

கலக்கல்...ஓட்டு போட்டாச்சு......

ராமலக்ஷ்மி said...

//பல நாட்கள் ஒன்றும் பேசாது
ஓவிய மௌனம் காப்பாள்//

அழகு.

//சிலவற்றை நான்
திரித்துச் சொல்லுகையில்
இலேசாகத் தலையாட்டி
சில வார்த்தைகளை உதிர்ப்பாள்//

:)!

//மரங்களோடு பேசுகிறதாகவும்
மனப் பிறழ்வு வந்ததென்றும்
அம்மா கூறுவது கேட்கிறது//

இயல்புதான்.

//இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்//

அருமை. புரிந்துதான் சொல்கிறேன்:)!

நேசமித்ரன் said...

அவளுக்கு செய்தி வரும் இடத்திலிருந்துதான் உங்களுக்கு
கவிதைகள் வருகின்றன போல....
ஓவியமௌனத்தில் ஆழ்ந்து மோன தவமியற்றி
அயல் வெளி சொற்கள் கேட்கும் கவிஞரே வாழ்த்துக்கள் !
அருமை !

ச.முத்துவேல் said...

ரொம்ப ரசித்தேன். நல்லாயிருக்கு.
@கார்க்கி
நான் வளர்கிறேனே மம்மி யா? மகிழ்ச்சி.

Nundhaa said...

எத்தன தடவ சொல்றது ... நல்லா இருக்கு ... நல்லா இருக்கு ... நல்லா இருக்கு :)

லவ்டேல் மேடி said...

அருமையான கவிதை....!!

யாத்ரா said...

\\இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்\\

உயிரோசையிலேயே மிகவும் ரசித்தேன் இந்தக் கவிதையை, மறுபடியும் வாசிப்பதில் மகிழ்ச்சி.

தமிழ்ப்பறவை said...

அழகு...ரசித்தேன்...

D.R.Ashok said...

தனியான வாசிப்புக்கு உள்ளிழுக்கிறது உங்களது வசிய சொற்க்கள்
வளைபோடும் வார்த்தை பூக்களில்
மாட்டிக்கொள்ளாமல் கரையினிலே
நின்று ரசித்தேன்
பலமுறை படித்து மகிழ்ந்தேன்

(thank god மனப் பிறழ்வு வாராதற்கு நன்றி)

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக அருமை

" உழவன் " " Uzhavan " said...

பதின்ம வயதில் இந்த இரு அழகிகளைக் கடக்காதவர்கள் இல்லை எனவே சொல்லலாம்.
அருமை.

செந்தழல் ரவி said...

பின்னூட்டம் போட ஏனிந்த தாமதம்....என்று கேட்காதீர்கள்...

அருமையான கவிதையை நான் தான் தாமதமாக படித்திருக்கிறேன்.......

சூப்பர்.......

நிஜமா நல்லவன் said...

அருமை!

sakthi said...

இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்

அருமை

அனுஜன்யா said...

@ ஜமால்

நீங்க தான் முதல் ஆள். பரவாயில்ல, திரும்ப வாசித்து, பாராட்டியதற்கு நன்றி.

@ அகநாழிகை

நன்றி வாசு. நீங்க சொன்னா இன்னும் பெருமை.

@ சிவா

நன்றி சிவா. பிரிச்சு எழுதலாமான்னு தெரியாது. ஆனா, 'அங்க' பிரிச்சு மேயும் உங்கள எல்லாம் நான் பொறுத்துக் கொள்ளவில்லை? :))))))

@ J

அப்படியா? சில பேருக்கு அந்த வரிகள்தான் புடிச்சிருக்கு போல! நன்றி புன்னகை.

@ இது நம்ம ஆளு

வணக்கம் தமிழன். நன்றி. நிறைய 'உடல் நலம்', செய்திகள் என்று களை கட்டுகிறது உங்க தளம். அவகாசம் ஏற்படுத்திக்கொண்டு அங்கு வருகிறேன்.

@ கார்க்கி

டேய்.... சரி சரி 'நன்றி' திரு கார்க்கி அவர்களே.

@ MayVee

வாப்பா கவிஞர்! 'பிறழ்வு' என்பது பொதுப் புத்தியில் 'பைத்திய நிலைமை' என்றறியப்படும் :). நன்றி.

@ Nadesh

ஹாய் அருண்! உங்கள் முதல் வருகை? உங்கள் பாராட்டுக்கு நன்றி. Made a fleeting visit to ur blog. Wow! It looks extremely interesting. Should find some time to read your posts. Thanks buddy.

@ நர்சிம்

தல, என்ன வெச்சு ... சரி சரி நன்றி.

@ வேலன்

நன்றி வேலன்.

@ செய்யது

வா செய்யது. உன்கிட்ட புடிச்சதே உன்னோட 'தாறுமாறு' கமெண்டு தான் :) நன்றி.

@ பாலா

வாங்க பாலா. உங்க முதல் வருகைன்னு நினைக்கிறேன். நிறைய கவிதைகள் எழுதுகிறீர்கள். நிதானமா படிக்கணும். பாராட்டுக்கு நன்றி பாலா.

@ இராம்

வாங்க தல. ரொம்ப நாளுக்கு அப்புறம் வரீங்க. (நீ வந்தியான்னு எல்லாம் கேட்கக் கூடாது :))) ). நன்றி.

@ மஹேஷ்

நன்றி மஹேஷ்.

@ ரம்யா

உங்கள் முதல் வருகை ரம்யா? நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.

@ மாசற்ற கொடி

கவிதையும் உங்களுக்கு இவ்வளவு பிடிக்குமா? நன்றி மா.கொ.

அனுஜன்யா

அனுஜன்யா said...

@ மணிகண்டன்

மணி...சரி சரி ஒரு நாள் மாட்டுவ :) நன்றி மணி.

@ ரவி

நன்றி ரவி (இரண்டுக்கும்)

@ ராமலக்ஷ்மி

வாங்க சகோ. நீங்க கவிதாயினி. உங்களுக்குப் புரியாமலா? நன்றி.

@ நேசமித்ரன்

பின்னூட்டத்தில் கவிதை? இதை எல்லாம் நாங்க பதிவாகவே போடுவோம் :)

நன்றி நேசமித்ரன்.

@ முத்துவேல்

நன்றி முத்து. அப்படிப் போடு அருவாள.

@ நந்தா

இன்னும் சில முறையும் சொல்லலாம். எனக்கு கேக்க நல்லாத்தான் இருக்கு நந்தா. நன்றி.

@ மேடி

டேய், நெசமாத்தான் சொல்லுறியா? :)) நன்றி.

@ யாத்ரா

நன்றி யாத்ரா. நீங்களே பாராட்டினா...மகிழ்ச்சியா இருக்கு.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. இன்னும் அங்க வந்து உன் கதை படிக்கல. வரேன். கோவிச்சுக்காதே.

@ அசோக்

அடேங்கப்பா, பின்னூட்டமெல்லாம் கள கட்டுது. நன்றி அசோக்.

@ அமித்து.அம்மா

நன்றி AA.

@ உழவன்

வாங்க நண்பா. உண்மைதான். நன்றி

@ ரவி

தாமதம் இல்ல ரவி. கவிதை படித்து கொஞ்சம் ஞாபக மறதியோ :). இருந்தாலும் இரண்டு முறை வந்து பாராட்டியதற்கு நன்றி ரவி.

@ நிஜமா நல்லவன்

வாங்க மாப்பி. ரொம்ப நாளா ஆளக் காணும்? நன்றி.

@ சக்தி

வாங்க சகோ. நன்றி உங்கள் பாராட்டுக்கு.

அனுஜன்யா

Nadesh said...

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்? முதல் பின்னூட்டம் என்பதே சரி! நான் உங்கள் கவிதைகளின் தீவிர ரசிகன்.

பாராட்டவோ கருத்து சொல்லவோ எனக்கு தகுதியும், வயதும் இல்லாத இடங்களில் மௌனமாக ரசித்து விட்டு திரும்பி விடுவது வழக்கம்.

//சில நாட்கள் கைகளை
ஆட்டி ஆட்டி பேசுவாள்
பல நாட்கள் ஒன்றும் பேசாது
ஓவிய மௌனம் காப்பாள்//

//பிறகு தெரிந்தது
பூமிக்குக் கீழிருந்தும்
வானத்தின் உயரத்திலிருந்தும்
அலை வரிசைகளிலிருந்தும்
அவளுக்குச் செய்திகள்
வந்தவண்ணம் இருப்பதென்று
மரங்களோடு பேசுகிறதாகவும்
மனப் பிறழ்வு வந்ததென்றும்
அம்மா கூறுவது கேட்கிறது
இத்தனை நாட்கள்
ஏனிந்தத் தாமதம் என்று
பிறழ்வைக் கேட்கிறேன் நான்//

மேற்கண்ட வரிகளின் அழகில் மயங்கி மனப் பிறழ்வு கண்டு ஏதோ கிறுக்கி தொலைத்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.

//Made a fleeting visit to ur blog. Wow! It looks extremely interesting.//

Really? Thanks for your visit.

Arun.

T.V.Radhakrishnan said...

ரொம்ப ரசித்தேன்

பா.ராஜாராம் said...

அற்புதமான கவிதை,அணு...
"இத்தனை நாட்கள் ஏனிந்த தாமதம்
என்ற பிறழ்வை கேட்கிறேன்"க்கு பிறகு
மீண்டும் கவிதையை முதலில் இருந்து வாசிக்க தேவையாக இருக்கிறது...
இறுக்கமான மொழி,கவிதையாக மாறும் தளம் அந்த
"பிறழ்வை கேட்கிறேன்".
கவிதையை ஒருமுறை வாசிக்க அனுமதிக்க
மாட்டீர்கள் போல!...
really fantastic...அணு!

உயிரோடை said...

//ஓவிய மௌனம்//

மிக கவர்ந்த வார்த்தை. கவிதை நல்லா இருக்கு அனுஜன்யா வாழ்த்துகள்

Karthikeyan G said...

Super Sir!!

அனுஜன்யா said...

@ Nadesh

அருண், இது என்ன அராஜகம். ரசித்தால், உடனே நகராமல் ஒரு பின்னூட்டம் போடுங்கள். பெரிய ஆட்களுக்கே புகழ்ச்சி பிடிக்கிறது. நான் எல்லாம் ரொம்ப சாதாரணமானவன். ச்சும்மா சொன்னேன்.

ஆனால், பாராட்டவும், கருத்து சொல்லவும் வயது, தகுதி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா லூஸ்ல விடுங்க :)

@ TVR

ரொம்ப நன்றி சார்.

@ ராஜாராம்

வாவ், பெரிய தல வந்துட்டீங்க. ரொம்ப நன்றி சார்.

@ உயிரோடை

நன்றி லாவண்யா

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்தி.


அனுஜன்யா