Thursday, August 6, 2009

வாடா WADA வாடா (எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (7th August '09)





அது 1988 ஆம் வருடம். செப்டம்பர் 24 ஆம் திகதி. தென் கொரியாவின் தலை நகர் சியோலில் ஒலிம்பிக்ஸ் நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த விளையாட்டுப் பிரியர்களின் பார்வை முழுதும் அன்று நடக்கபோகும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் மீது. உலகத்தின் அதி வேக மனிதன் யார்? கார்ல் லூவிஸ்? அல்லது பென் ஜான்சன்? அவர்களிடம் முன்னமேயே போட்டியும், பொறாமையும் நிறைந்திருந்தது. உலகையே ஸ்தம்பிக்க வைத்து 9.79 வினாடிகளில் பென் ஜான்சன் ஒலிம்பிக் முதல் பரிசை வென்றார். லுவிஸ் இரண்டாம் இடம்.

மூன்று நாட்கள் கழித்து, அவருக்கு வழங்கப்பட்ட விருது அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. காரணம்? போட்டிக்குப் பின் நடந்த சோதனையில் அவர் ஸ்டானோசோலோல் என்னும் ஊக்க மருந்தை உபயோகித்து வென்றது தெரிய வந்தது. அவரால் மூன்று தினங்கள் பூரிப்பில் திளைத்த கெனடா தேசமே அவமானத்தில் குன்றியது. இரண்டாவது வந்த லுவிஸ் முதலிடம் வென்றதாக அறிவிக்கப் பட்டார். ஆயினும் அது போட்டி நடக்கும் அன்று வெல்வதற்கு ஈடாகுமா?

பின்னாட்களில் லுவிஸ், இரண்டாம் இடம் கிடைத்த கிறிஸ்டி ஆகியோரும் இது போன்ற ஊக்க மருந்து சர்ச்சைகளில் சிக்கினார்கள் என்பது கூடுதல் தகவல். இப்போதும் கூட மொத்த ஓட்டப்பந்தய வீரர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் இத்தகைய தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துவதாக பல்வேறு அறிக்கைகள் சொல்கின்றன.



அடுத்து நாம் பார்க்கப்போவது எல்லோரும் செல்லமாக 'ஸ்விஸ் மிஸ்' என்று அழைத்த மார்டினா ஹிங்கிஸ். டென்னிஸ் விளையாட்டில் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் போட்டிகளை வென்ற அழகிய வீராங்கனை. கெண்டைக்கால்களில் ('கெண்டைக்கால்கள்' என்றதும் சமீபத்தில் படித்த 'நீலப் பூக்கள்' என்னும் பிரமாதமான கவிதை நினைவுக்கு வருகிறது - இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம்) தொடர்ந்து வந்த பிரச்சனைகளால் ஆட்டத்திலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்தார். பிறகு சிகிற்சை முடிந்து, திரும்ப ஆட வந்து, நன்றாக விளையாடத் துவங்குகையில் .... திடீரென்று தாம் டென்னிஸ் விளையாட்டிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார். காரணம்? 2007 விம்பிள்டன் போட்டிகளில் போது 'கொக்கைன்' என்னும் போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக தெரிய வந்தது. அவர் அதை 'நான் தெரிந்து அதை செய்யவில்லை' என்றாலும், முற்றிலும் மறுக்கவில்லை. சச்சரவு இல்லாத, சுத்தமான ஆட்டம் என்று அறியப்பட்ட டென்னிஸ் உலகம் ஆட்டம் கண்டது.

சரி, இதெல்லாம் இப்போ எதுக்குய்யா சொல்ற என்கிறீர்களா? ஒரு விஷயம் சொல்வதற்கு முன் தகுந்த முஸ்தீபுகளுடன் சொன்னால் தான் சுவாரஸ்யம் என்பது ...ம்ம், சான்றோர் வாக்கு.

நாளை தினசரிகளில் 'இந்திய வீரர்களில் ஐந்து பேர் போதை மருந்து பயன் படுத்தியதாக ஒப்புக் கொண்டனர். இந்தியா வென்ற ட்வென்டி 20 உலகக் கோப்பை செல்லுபடியாகாது என்று அறிவிக்கப் படுகிறது' என்ற ரீதியில் தலைப்புச் செய்திகள் வந்தால் நம் அனைவருக்கும் எப்படி இருக்கும்?

கிரிக்கெட் விளையாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக performance enhancing drugs எனப்படும் ஊக்க மருந்து உபயோகம் நாம் கேள்விப்பட்டாலும், சர்வதேச தடகள விளையாட்டு அளவு நிலைமை மோசமில்லை என்பது சிறிய ஆறுதல். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், பாகிஸ்தானின் முஹம்மத் இஸ்மாயில் போன்ற பெயர்கள் முன்னமேயே களங்கப் பட்டுவிட்டன. இந்தத் தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), WADA (World Anti-Doping Agency) எனப்படும் உலக போதை மருந்துத் தடை நிறுவனத்தின் மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாட்டையும் கொண்டு வர முனைப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க செயல்.

ஆனால், அதற்கு நம் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் தயக்கம் காட்டுவதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (BCCI) வழக்கம் போல ICC யுடன் மோதல் செய்யும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரிகிறது. நம் உள்ளூர் சானியா மிர்சா, மகேஷ் பூபதியிலிருந்து அயல்நாட்டு அயன் சாப்பல், இன்னபிற பெருசுகள் வரையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சர்வதேச நட்சத்திரங்களான ரோஜர் பெடரர், நடால் இவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லாத போது சுண்டைக்காய் சச்சின், டிராவிட், தோனி, யுவராஜ் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்னும் தொனியில் எள்ளலும் வருகிறது.

சரி நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு என்னதான் பிரச்சனை? 'முடியாது; நாங்க இந்த மாதிரி ஏதாவது ஊக்க மருந்து பயன் படுத்துவோம்'னு இவங்க சொல்றாங்களா? இல்லை. WADA வின் சட்ட திட்டங்களுள் ஒரு நிபந்தனை: 'Whereabouts' எனப்படும் 'எங்குள்ளார்கள்' என்னும் தகவல் பற்றியது. அதாவது, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஒவ்வொரு நாளிலும் ஒரு மணி நேரம் (வாரத்தில் ஐந்து தினங்கள்) முன் அறிவிப்பில்லாத போதை மருந்து உபயோக பரிசோதனைக்குத் தயாராக இருக்கவேண்டும் என்பது. எந்த நாள் வேண்டுமானாலும் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்தில் சோதனைக்கு உட்பட அவர் தயாராக இருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டிலிருந்து அமலுக்கு வந்த நிபந்தனை, தற்போது வாரத்தின் ஏழு நாட்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் தயக்கம் மற்றும் எரிச்சலை உண்டு பண்ணி இருக்கிறது.

நமது கிரிக்கெட் வீரர்கள் மட்டுந்தான் என்றில்லை. பெல்ஜியம் நாட்டின் விளையாட்டு மையம் இந்த சட்டம் "ஐரோப்பிய யூனியனின் மனித உரிமை சட்டங்களை" மீறுவதாக ஒரு நிலை எடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போலவே, கால்பந்தாட்ட வீரர்களின் சங்கமும் சில சட்டங்களின் அடிப்படையில், WADA வின் இந்த சச்சரவுக்குள்ளான விதியை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் FIFA (சர்வதேச கால்பந்தாட்ட கழகம்) இரண்டுமே வீரர்களின் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த 'whereabouts' விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் விசிறிகள், ஊடகங்களின் இடைவிடா துரத்தல்கள் போன்றவை எந்த முதன்மை சர்வதேச வீரருக்கும் இருக்கும் அதே அளவிலோ, அல்லது அதைவிட மிகுதியாகவோ தான் இருக்கிறது. அவர்களுடைய privacy (தனிவெளி?) நிச்சயம் மிக மிக அவசியம். சச்சின் போன்ற மெகா ஸ்டார்களுக்கு உயிர் ஆபத்தும் அதிகம். அதனால் 'whereabouts' என்ற பெயரில் கொடுக்கப்படும் பயண, தங்கும் விவரங்கள் வெளியே கசிந்தால் அதன் விளைவுகள் பயங்கரமாகிவிடும் என்ற அச்சம் உள்ளது. ஆனால், அதே சமயம் WADA என்பது பல ஆண்டுகளாக மிகப் பொறுப்புடன் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு. இது வரை அவர்களிடம் தரப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்ததாக செய்தி இல்லை. மேலும், போதை மருந்து தடை என்பது விளையாட்டுத் துறையில் மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

அதனால், முதலில் தயக்கமும், பயமும் இருந்தாலும், விளையாட்டின் நன்மையைக் கருதி, தங்கள் மீது அனாவசிய சந்தேகத்தின் நிழல் விழுவதை தடுக்க, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த விதிக்கு ஒப்புக்கொள்வதே நல்லது.

அப்பாடா, ஒரு அதி முக்கிய விடயத்தில், என்னுடைய மேலான கருத்தைச் சொல்லிய திருப்தியில் அடுத்த மேட்டருக்குத் தாவலாம்.
**************************************************************
உரையாடல் அமைப்பு நடத்திய 'கதை போட்டி' முடிவுகள் இந்த வார இறுதியில் வரும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. இவ்வளவு பேர் உற்சாகமாகப் பங்கேற்றதே மிகப் பெரிய விஷயம். பள்ளி மாணவர்களைப் போல் முடிவுக்கு ஆர்வம் கலந்த பயத்துடன் காத்திருக்கும் பதிவர்களைப் பார்த்தால் நம் ஒவ்வொருவருள்ளும் இருந்த சிறுவன்/சிறுமி இன்னும் உயிர்ப்புடன் ஒரு மூலையில் இருப்பது தெரிகிறது. அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.

வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள். ஜஸ்டு மிஸ் ஆகப் போகும் ஏனைய அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள். பங்கு பெறுதல் வெற்றி பெறுவதைவிட முக்கியம் இல்லையா? பல சிரமங்களுக்கு இடையில் உரையாடல் அமைப்பினர் (எனக்குத் தெரிந்து பை.காரன், ஜ்யோவ்) இந்த மாதிரி ஒரு போட்டி நடத்தி பரிசு வழங்குவது பெரிய விஷயம். என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும் - அவர்களுக்கும் மற்றும் திரைக்குப் பின்னால் அவர்களுக்கு உதவுபவர்களுக்கும்.
**************************************************************
ஒரு சிறிய புதிர். கொஞ்சம் மூளையைக் கசக்கினால் எளிதில் விடை கிடைக்கும்.

நாங்கள் நான்கு பேர். நாங்கள் என்றால் யூத் ஆகிய நான், அதே போல யூத் ஆன கார்க்கி, யூத் என்றாலும், சற்று நிதானமும் இருக்கும் நர்சிம், யூத் இல்லாததால் வெறும் நிதானம் மட்டும் இருக்கும் ஜ்யோவ்.

நாங்கள் நால்வரும் ஒரு நள்ளிரவில் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டும். தொங்கும் பாலம். ஒரே சமயத்தில் இருவருக்கு மேல் அதில் நிற்க முடியாது. கைவசம் டார்ச் அவசியம் வேண்டும் அந்தப் பாலத்தைக் கடக்க. ஒரே சமயத்தில் இருவர் செல்கையில், அந்த இருவரில் மெதுவாகச் செல்பவரின் வேகத்தில் தான் உடன் செல்லும் நபரும் போக முடியும்.

இப்போது பாலத்தைக் கடக்க நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் நேரம் :

அனுஜன்யா - 1 நிமிடம்
கார்க்கி - 2 நிமிடம்
நர்சிம் - 5 நிமிடம்
ஜ்யோவ் - 10 நிமிடம்

எவ்வளவு குறைந்த நிமிடங்களில் எங்களால் அந்தப் பாலத்தைக் கடக்க இயலும்?

சரி சரி, ரொம்ப ஈசியாக இருந்தால் தெரியப் படுத்துங்கள். அடுத்த முறை....இன்னும் ஈசியாகத் தருகிறேன்.

48 comments:

அப்பாவி முரு said...

12 நிமிடங்கள்?

அ.மு.செய்யது said...

முதல் பாதி மட்டும் தான் வாசித்தேன்.

வொளாட்டு செய்திங்கோ...

சச்சினை சுண்டைக்காய் என்று வர்ணித்த அனுஜன்யாவிற்கு எனது கண்டனத்தினை
முதலில் இங்கு பதிவு செய்கிறேன்.

Thamiz Priyan said...

Anujanyaji-1 sunderji-10 avvvvv vaoaiya kannadikiren.

Thamiz Priyan said...

12 minutes?

Thamiz Priyan said...

Federer, luwis munnadi sachinai sundaikkai enpatha? Vanmaiyaha kandikkiren. Keppai enru solli irunthal pothum. :-)))

ராமலக்ஷ்மி said...

1. மேலான கருத்தை கன்சிடர் செய்யலாம் வீரர்கள். [சுண்டைக்காய்கள் என சொல்ல வந்தேன். அ.மு.செய்யது பயம் காட்டுகிறார்:-o!]

2.//பங்கு பெறுதல் வெற்றி பெறுவதைவிட முக்கியம் இல்லையா?//

இல்லையா பின்னே, ஜே ஜே என நடந்த ஒரு திருவிழாவில் கலந்து கொண்ட திருப்தி. வெற்றி பெறப் போகிறவர்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்களும்!

3.//கொஞ்சம் மூளையைக் கசக்கினால்//

நிறைய பேர் கேட்கப் போகிறார்கள், ஏற்கனவே உங்கள் கவிதைகளுக்குக் கசக்குவது போதாதா என்று:)!

//சரி சரி, ரொம்ப ஈசியாக இருந்தால் தெரியப் படுத்துங்கள். அடுத்த முறை....இன்னும் ஈசியாகத் தருகிறேன்.//

அதுசரி, எப்படி நீங்க மட்டும் ஈசியா ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு மற்றவர்களை பின் தங்க விட்டிருக்கிறீர்கள்? நியாயமா?

புதிருக்கு விடை? ஹி, யாராவது சொல்லுவார்கள். பிறகு வந்து பார்க்கிறேன்.

பாலராஜன்கீதா said...

//அனுஜன்யா - 1 நிமிடம்//
நீங்க யூத்துதான். ஒப்புக்கொள்கிறோம்.
:-)

நட்புடன் ஜமால் said...

இது ஒரு ஃப்ளாஷ் கேமில் வந்தது

நல்ல முயற்சி ...

Vidhoosh said...

விளையாட்டு செய்தி, விளையாட்டில்லை. :(
=========
கதை போட்டி, வயிற்றில் பட்டாம்பூச்சி.
=========
முதல்ல இந்த மாதிரி புதிரெல்லாம் கொடுத்த MODERATION போடுங்க.

LET'S CONSIDER அனுஜன்யா = ஆஞ்சநேயா

1.ஜ்யோவ்-வை தூக்கி கொண்டு அந்த பக்கம் போக ஒரு நிமிடம். இப்போது ஜ்யோவ் கையில் டார்ச்.
2. அனு திரும்பி வர ஒரு நிமிடம்.
3. அதே போல நர்சிம்-மைத் தூக்கிச் சென்று திரும்பி வர 1+1 இரண்டு நிமிடம்.
4. கார்கி-யை தூக்கி சென்றால் முடித்தது ஐந்து நிமிடத்தில் வேலை.

--வித்யா

Vidhoosh said...

ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அனு மட்டும் பாலத்தை கடக்க முடியும். WADA கவனிக்க....

நையாண்டி நைனா said...

நாலு பேரும் ஒண்ணா போனாதான் நல்லது... ஏன்னா ஒற்றுமை வலியது...!

(அப்பாடா..!! பாலம் வலியது கிடையாது நாம எல்லாரும் தப்பிசிருவோம்... )

கார்க்கிபவா said...

நக்கலுக்கு சொல்வதென்றால் , 12 நிமிடம். ஏன்னா ஒரு டார்ச்தான் இருக்குன்னு நீங்க சொல்லவேயில்லையே தல :)))

இப்ப ஒரு டார்சதான் இருக்குன்னு வச்சுப்போம்..

முதலில் ஜ்ய்வோமும் அனுவும் 10 நிமிடம்

பிற‌கு அனு வர ஒரு நிமிடம்

அனுவோடு நர்சிம் செல்ல ஐந்து நிமிடம்..மீண்டும் அனு வர 1 நிமிடம்

அடுத்து கார்க்கியும் அனுவும் செல்ல இரண்டு நிமிடம். ஆக 19 நிமிடம்.. சரியா?

அது சரி, கார்க்கி செல்ல 2 நிமிடம் அனு செல்ல ஒரு நிமிடம் தானா?. கணக்கே தப்பு தல.. :))

anujanya said...

@ விதூஷ்

சரியான விடை தவிர, மற்ற (விடை சரியில்லாத) கமெண்டுகளை ரிலீஸ் செய்கிறேன். இதுவரை யாரும் சரியான விடை சொல்லவில்லை என்பதை மட்டும் மிக மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறேன் :)

அனுஜன்யா

Vidhoosh said...

ஐயோ. இது சீரியஸ் புதிர் தானா? நான் எதோ ஜோக் என்று நினைத்தேனே. பரிசெல்லாம் உண்டா...

அப்படி என்றால் பிடியுங்கள் விடையை.

குறைந்தது மொத்தம் பதினேழு நிமிடங்கள் ஆகும்.
அனு+கார்கி = 2 நிமிடங்கள்
அனு returns = 1 நிமிடம்
நர்சிம்+ஜ்யோவ் = 10 நிமிடங்கள்
கார்கி returns = 2 நிமிடங்கள்
கார்கி+அனு = 2 நிமிடங்கள்

2+1+10+2+2 = 17 நிமிடங்கள்.

ரைட்டா?

--வித்யா

Vidhoosh said...

என் கமெண்ட் ரிலீஸ் ஆகலைனா பதில் கரக்டுன்னு வச்சுக்கலாமா?
---வித்யா

anujanya said...

@ விதூஷ்

கரெக்ட் வித்யா. பரிசா? 'புதிர் அரசி' என்று பட்டம் கொடுக்கச் சொல்கிறேன் - உரையாடல் அமைப்பினரிடம் :)

சூப்பர்மா.

அனுஜன்யா

Vidhoosh said...

அட ஆச்சரியமே? பதில் சரியா? அதென்ன, அரசி, நான் இன்னும் இளவரசிதான்.(ஹி ஹி...)

அதெப்படி, அனு மட்டும் சௌகரியமாய் ஒரு நிமிடம்னு போட்டுகிரதுன்னு நினைச்சேன்.

//ஒரே சமயத்தில் இருவர் செல்கையில், அந்த இருவரில் மெதுவாகச் செல்பவரின் வேகத்தில் தான் உடன் செல்லும் நபரும் போக முடியும்//

விஷயம் இங்கல்ல இருக்கு.

--வித்யா

துபாய் ராஜா said...

'WADA' குறித்த தகவல்கள் அருமை.
------------------------------
போட்டியில் பங்கு கொண்ட அனைவ்ருக்கும் வாழ்த்துக்கள்.
----------------------------
'புதிர்' பதில் எப்போது ??!!

தராசு said...

//@ Vidhoosh said...
ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அனு மட்டும் பாலத்தை கடக்க முடியும். WADA கவனிக்க....//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

Ashok D said...

தல first half கொஞ்சம் போர்.. தூக்கம் வந்துடுச்சு.

climax கணக்கு என்பதால் ஆளவிடுங்க ஒடியே போரேன்.

அனுஜன்யா - 1 நிமிடம்
ஜ்யோவ் - 10 நிமிடம்
(இது கொஞ்சம் ஓவர், என்ன பன்றது நீங்கல யூத்துன்னு சொல்லிட்டீங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

->அனுஜன்யா, கார்க்கி - 2
<-அனுஜன்யா - 1
->நர்சிம், ஜ்யோவ் - 10
<-கார்க்கி - 2
->அனுஜன்யா, கார்க்கி - 2

மொத்தம் 17 நிமிடங்கள். சரியா?

-ப்ரியமுடன்
சேரல்

நேசமித்ரன் said...

என்னதிது கேள்வி பதில் எல்லாம் கேட்டுகிட்டு சிறுபிள்ளத்தனமா . பாருங்க பயப்படுதில்ல குழந்தைங்க எல்லாம் .
என்ன ஒரு வில்லத்தனம் இதெலாம் என் டிரைவர் கிட்ட கேட்டுக்கோங்க .

ஆகா ..! பதில் வேற சொல்லிட்டு போய்ட்டாங்களா.யாரது இளவரசியாம்ள.. சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும் .நம்ம புள்ளதேன் .

அனு..

அருமையான கருத்தாய்வு விளையாட்டு குறித்த பத்திகளில் .உங்கள் கூற்று வழிமொழியத் தூண்டுகிறது -சுண்டக்காய் கொஞ்சம் இடிக்கிறது
கதை போட்டியின் முடிவுகள் குறித்து நானும் ஆவல் மிக காத்திருக்கிறேன்
பதிவின் இறுதிப் பகுதி குறித்துதான் மேலே எழுதி இருப்பது :)

Sridhar Narayanan said...

இந்த ஊக்க மருந்துகள் பத்தி நமக்கு சரியான அறிவில்லைன்னுதான் சொல்லனும். விளையாட்டு வீரர்கள் மத்தியில் கொஞ்சம் ரிஸ்கான விஷயம் இது.

முதல்ல டார்ச் வாங்கிட்டு வாங்க. அப்புறம்தானே கடக்க முடியும். :)

சுந்தருக்கே பத்து நிமிடம்னா, அதீதனுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? இருபது நிமடமா? :))

மாசற்ற கொடி said...

விளையாட்டை பற்றி சீரியஸ் கருத்து.

போட்டி முடிவுகள் - நாளை காலை சிதைவுகள் தளம் - +2 results தளம் போல் காணப்படும்.

விடை - 17 நிமிடங்கள்
(அனுஜன்யா & கார்க்கி - 2 அனுஜன்யா - 1 நர்ஸிம் & சுந்தர் - 10 karki 2அனுஜன்யா & கார்க்கி - 2 )

அன்புடன்
மாசற்ற கோடி

anujanya said...

சேரல் மற்றும் மாசற்ற கொடி - இரண்டு பெரும் சரியான விடை சொல்லிட்டீங்க. வாழ்த்துகள்.

அனுஜன்யா

நாஞ்சில் நாதம் said...

//இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம்\\

புறாவுக்கு மணியடிக்கிற கதையால்ல இருக்கு

நாஞ்சில் நாதம் said...

///ஒரு சிறிய புதிர். கொஞ்சம் மூளையைக் கசக்கினால் எளிதில் விடை கிடைக்கும்///

மூளையைக் கசக்குற ஏரியாவா பாத்து கலக்குறிங்க (கவிதை, கணக்கு)

18 நிமிஷம் சரியா ?

மங்களூர் சிவா said...

/
நாங்கள் நான்கு பேர். நாங்கள் என்றால் யூத் ஆகிய நான், அதே போல யூத் ஆன கார்க்கி,
/

:)))))))))))

மங்களூர் சிவா said...

முஸ்தீபு ரொம்ப சின்னதா இருக்கு!

மங்களூர் சிவா said...

சொல்ல வந்த விசயம் நல்ல விஷயம்.

வால்பையன் said...

போதை மருந்து சோதனைக்கு உட்படுவது அவ்சயமே ஆனால் கண்ட நேரத்தில் கூப்பிடுவோம் என்பது அவர்களுக்கு எரிச்சல் ஊடும் விசயமாக இருக்கலாம்!

****************

உரையாடலுக்கு எழுதிய சிறுகதையில் சிறிது டச்சப் செய்திருந்தால் சிற்றிதழிலோ, வெகுஜன பத்திரிக்கையிலோ வரகூடிய தகுதியான சிறுகதை என நண்பர்கள் பாராட்டியதே லட்சருபாய்க்கு மேல் பரிசு வாங்கியது போல் இருக்கு!

இப்போ இல்லாட்டியும் அடுத்த போட்டியில் வாங்கிடுவேன்!

**************

புதிர்

ஹிஹிஹிஹி

நான் கணக்கு பண்றத விட்டு ரொம்ப நாளாச்சு!

Anonymous said...

ஹலோ கார்க்கி உங்கள மாதிரி யூத்தா?

இதுக்கு நீங்க கார்க்கிய ^$@!$#%^%& அப்படின்னு சொல்லியிருக்கலாம்.

நந்தாகுமாரன் said...

Interesting is the word

நந்தாகுமாரன் said...

Vishoosh's solution to the puzzle is amazingly interesting

யாத்ரா said...

இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா,

19 நிமிடங்கள்

சரியா ?

Cable சங்கர் said...

இதுக்கு முன்னால் அனுப்பிய புதிருக்கான பதிலை நீங்கள் வெளியிடாததால் என் பதில் கரெக்ட் என்று எடுத்து கொள்ளலாமா..? :) எப்பூடி..?

Unknown said...

// எவ்வளவு குறைந்த நிமிடங்களில் எங்களால் அந்தப் பாலத்தைக் கடக்க இயலும்? //


அட.... இப்புடி மொட்ட தாத்தன் .. குட்டையில உளுந்த மாதிரி .... கேள்வி கேட்டா எப்புடீங்கோ தலைவரே....!!

பாலம் எவ்ளோ கிலோமீடர் தூரம் ....?


அதோட எடை என்னோ ....? எத்தன பில்லரு.....?


எந்த கம்பெனி கட்டுச்சு ....? எந்த வருசம் ....?


எந்த தலைவர் ஓப்பன் பன்னுனாங்கோ ...?


அந்த பாலத்துல ... எத்தன நாயர் டீ கட ...? எத்தன சமோசா கட...?

வருத்த கடல எத்தன பேர் விக்குராங்கோ...? எத்தன பேரு வருத்த கடலையவே மருவுடியும் வறுத்து கருக வெச்சுகிட்டு இருக்காங்கோ...?


பாலத்த எப்புடி கடந்தீங்கோ...? சைககில்லையா...? டயர் வண்டியா...? நட வண்டியா...?


இதையெல்லாம் கொஞ்சம் தெளிவா குடுத்தீங்கன்னா... நெம்ப கரெக்கட்டா சொல்லிபோடுவன் பாத்துக்கோங்கோவ்.......!!!

பரிசல்காரன் said...

//இது ஒரு விளம்பர இடைவேளை என்றும் நீங்கள் கொள்ளலாம்//

இங்க நிக்கறீங்க நீங்க!

பரிசல்காரன் said...

இப்பதான் முழுசும் படிச்சேன்.

யூத்துகள் சம்பந்தப்பட்ட (அல்லது சம்பந்தப்படாத) கடைசி புதிரில் என்னை ஒரு கதாபாத்திரமாக சேர்க்காமல் புறக்கணித்த உங்களைக் கண்டித்து இந்தப் பதிவை நிராகரிக்கிறேன்.

நெக்ஸ்ட் மீட் பண்றேன்!

Thamira said...

நையாண்டி நைனா said...
நாலு பேரும் ஒண்ணா போனாதான் நல்லது... ஏன்னா ஒற்றுமை வலியது...!

(அப்பாடா..!! பாலம் வலியது கிடையாது நாம எல்லாரும் தப்பிசிருவோம்... )

// ரிப்பீட்டு.!

Kumky said...

பதிவையே மறக்குமளவிற்க்கு பின்னூட்டங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது ஜென்யாஜி.

குறிப்பா நைனா என்ன சொல்லியிருக்கார் பார்தீங்களா?

நீங்க யூத்துதான்னு ஏற்றுக்கொள்ளாத எவரேனும் இந்நாட்டிலிருந்தால் சொல்லுங்கள்.....ஆட்டோ, கார், பஸ், சைக்கிள் எது வேண்டுமானாலும் அனுப்பத்தயார்.

விளையாட்டு வீரர்களின் ப்ரைவசி பாதிக்கப்படுவதை உணர முடிகிறது.எதிர்ப்பிலும் நியாயம் இருக்கிறதல்லவா?

உரையாடல் சிறுகதை போட்டியின் முடிவுகள் வந்துவிட்டது.அதன் பின்னான பின்னூட்டங்களை பார்த்து சங்கடமாகத்தானிருக்கிறது.கைக்காசை போட்டு போட்டி நடத்துகிறார் பை..
நடுவர்கள் நியமித்ததில் ஏற்பட்ட குழப்பங்களையும் நடுவே பதிவு மூலம் சொல்லியிருக்கிறார்.மிகுந்த சிரமப்பட்டு ஜ்யோவும் பை யும் எல்லா கதைகளையும் வாசித்து முடிவு அறிவிக்கிறார்கள்.அதற்கு பதிவரகளின் பின்னூட்டங்கள் இருக்கிறதே....அய்யோ பாவம்.

மீண்டும் பதிவுக்கு வருவோம். முஸ்தீபு ரொம்ப பலமாகத்தானிருக்கிறது.
இவர்களுக்கு இப்படி சொன்னால்தான் புரியும் போலும் என்று உங்களுக்கு தோனியதா?
கவிதைகளுக்கும் இது போல முஸ்தீபுகள் இனி வருமா?

Kumky said...

அப்புறம் இந்த லவ்டேல் மேடி இருக்காரே......வேணாம் விடுங்க.

ஒரு யூத்து கோவிச்சிகிட்டார் பாருங்க.
கார்க்கிய விட நீங்க யூத்துன்னா அப்போ அவர் உங்கள விட யூத்தில்லையா?

anujanya said...

@ அப்பாவி முரு

வாங்க முருகன்/முகுகேசன்? உங்க முதல் வருகை?

நீங்க அப்பாவி என்பதால் உங்க விடை ....சாரி சரி இல்லை.

நன்றி. திரும்ப வாங்க.

@ செய்யது

சச்சினை நான் சுண்டைக்காய் என்று சொல்வேனா? அதுவும் மும்பையில் இருந்துகொண்டு? இப்படி எல்லாம் எள்ளல் வருகிறது என்று சொன்னேன் (தப்பிச்சிட்டடா மாதவா).

நன்றி செய்யது. பூனா தானே? Please take care with all that stuff on Swine Flu.

@ தமிழ் பிரியன்

வாங்க ஜின்னா

//Anujanyaji-1 sunderji-10 avvvvv vaoaiya kannadikiren.//

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது. ஆனாலும் பாருங்க, ஜ்யோவ் பத்தி எழுதும் போதே கண்டிக்கிறேன் என்பது கண்ணடிக்கிறேன் என்று வருது :))

12 நிமிடங்கள் சரியான விடை இல்லை ஜின்னா.

//Federer, luwis munnadi sachinai sundaikkai enpatha? Vanmaiyaha kandikkiren. Keppai enru solli irunthal pothum. :-)))//

செய்யதுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும் :)

@ ராமலக்ஷ்மி

WADA - உங்கள் கருத்துக்கு நன்றி.

//நிறைய பேர் கேட்கப் போகிறார்கள், ஏற்கனவே உங்கள் கவிதைகளுக்குக் கசக்குவது போதாதா என்று:)! //

கிர்ர்ர்ர்ர்.

//அதுசரி, எப்படி நீங்க மட்டும் ஈசியா ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு மற்றவர்களை பின் தங்க விட்டிருக்கிறீர்கள்? நியாயமா?//

அதுதான் யூத்தாக இருப்பதின் அனுகூலங்கள் :)

நன்றி சகோ.

@ பாலராஜன் கீதா

வாங்க பாலா. நம்ப மாட்டீர்கள். ரொம்ப நாளா நோ நியூஸ். ஒரு மின்னஞ்சல் செய்யலாம்னு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க.

//நீங்க யூத்துதான். ஒப்புக்கொள்கிறோம்.
:-)//

அது அது.

@ ஜமால்

நன்றி ஜமால்.

@ விதூஷ்

//LET'S CONSIDER அனுஜன்யா = ஆஞ்சநேயா//

யோவ் தாமிரா சாரி ஆதி, இப்ப திருப்தியா? போட்டோ எடுக்காத போட்டோ எடுக்காதனு எவ்வளவு கெஞ்சினேன்? இப்ப பாரு.

வித்யா, இது ஒரு solution. இதுக்கு 'interesting solution' னு சொல்ல ஒரு நந்தா வேற. நல்லா இருங்க.

//ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அனு மட்டும் பாலத்தை கடக்க முடியும். WADA கவனிக்க...//

Thats the power of youth. ஓகே ஓகே அடங்கறேன்.

@ நையாண்டி நைனா

//நாலு பேரும் ஒண்ணா போனாதான் நல்லது... ஏன்னா ஒற்றுமை வலியது...!

(அப்பாடா..!! பாலம் வலியது கிடையாது நாம எல்லாரும் தப்பிசிருவோம்... //

நீ நல்லவன்னு தெரியும். ஆனா இவ்வளவு நல்லவன்னு தெரியாது. மும்பை தானே! எங்க போயிடப் போற! கவனிச்சுக்கறேன்.

@ கார்க்கி

சரி சரி இப்ப சொல்றேன். இருப்பது ஒரே ஒரு டார்ச் தான்.

உன்னோட விடை சரி இல்லை. இன்னும் கொஞ்சம் improve செய்யலாம்.

//அது சரி, கார்க்கி செல்ல 2 நிமிடம் அனு செல்ல ஒரு நிமிடம் தானா?. கணக்கே தப்பு தல.. :)//

வாசுகி கிட்ட தான் தோத்தேன். உங்கிட்டயாவது ஜெயிக்கலாம்னா....

@ விதூஷ் (மீண்டும்)

சரியான விடை சொன்ன 'புதிர் அரசி' சாரி 'புதிர் இளவரசியே". வாழ்த்துகள்.

@ துபாய் ராஜா

வாங்க ராஜா. புதிர் பதில் இப்ப ரிலீஸ் பண்ணியாச்சு. ஆமாம், நீங்க ஏன் ட்ரை பண்ணல?

@ தராசு

யோவ், பரிசல், ஆதி பதிவுகள்னா 'ஆஹா, ஓஹோ' எல்லாம் போட வேண்டியது. இங்க வந்து கலாய்க்க வேண்டியது. நல்லா இருங்க :)


அனுஜன்யா

anujanya said...

@ அசோக்

//தல first half கொஞ்சம் போர்.. தூக்கம் வந்துடுச்சு. //

உன் நேர்மையைப் பாராட்டுகிறேன். உண்மையில் எனக்கும் திரும்ப படிக்கும் போது பெரிய கொட்டாவி வந்தது.

நான் யூத் என்பதையும் முழு மனசோட ஒத்துக் கொண்டிருந்தால் உன்னோட நேர்மை எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் :)

நன்றி அசோக்

@ சேரல்

இது என்ன 'சேரல் வாஆஆரமா?' இப்படி கில்லி அடிக்கிறீங்க. புதிர், உரையாடல் என்று? வாழ்த்துகள் சேரல்.

@ நேசமித்ரன்

வாங்க நேசன். பின்னூட்டமே படு சுவாரஸ்யமா எழுதுவதில் நீங்க முன்னணி.

நன்றி நேசன்.

@ ஸ்ரீதர்

வாங்க ஸ்ரீதர். மொதல்ல கைய கொடுங்க - உரையாடல் வெற்றிக்கு. அப்புறம் கோஸ்ட் டு கோஸ்ட் எப்படி இருக்கு/இருந்தது?

//சுந்தருக்கே பத்து நிமிடம்னா, அதீதனுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? இருபது நிமடமா? :))//

ஹா ஹா ஹா.

நன்றி ஸ்ரீதர்.

@ மாசற்ற கொடி

வாழ்த்துகள். சரியான விடை. என்னது உரையாடல்...? அட விட்டுத் தள்ளுங்க. நன்றி மா.கொ.

@ நாஞ்சில் நாதம்

அப்பாடா ஒரு வழியா நாலு வார்த்தை பேசிட்டீங்க. ஆனா சரியான விடை 17 நிமிடங்கள்.

சரி, எப்ப பதிவு எழுதப் போறீங்க? நாங்களும் கலாய்க்கனுமில்ல :)

@ சிவா

//முஸ்தீபு ரொம்ப சின்னதா இருக்கு//

அக்மார்க் 'மொக்கை' நக்கல் ! நல்லா இரு சிவா :)

@ வால்பையன்

எரிச்சல் இருந்தாலும், பொது நன்மையை முன்னிட்டு WADA விதிகளுக்கு உடன்படுவது நல்லது இல்லையா குரு?

உங்க கதை இன்னும் படிக்கல.

என்னது 'கணக்கு பண்ணுவதா'? யோவ், ஜ்யோவ் என்றாலே ஏன் எல்லாரும் இப்படி திங்க் பண்றீங்க ? :)))

நன்றி குரு.

@ வேலன்

//இதுக்கு நீங்க கார்க்கிய ^$@!$#%^%& அப்படின்னு சொல்லியிருக்கலாம்//

அவனே சும்மா இருந்தாலும் .... சரி சரி ஒரு extra large in Cascade. ok?

@ நந்தா

வாங்க ஹீரோ. முதலில் கை கொடுங்க - உரையாடல் வெற்றிக்கு. உங்க கதை பிரமாதம்.

நான் ஆஞ்சநேயா என்றால் உங்களுக்கு சுவாரஸ்யமா? ஏன் இந்த கொலைவெறி? :))

நன்றி நந்தா

@ யாத்ரா

நானும் உன்ன மாதிரிதான் யாத்ரா. நல்லா கவிதை எழுதுவேன் (சரி சரி) . கணக்கு மட்டும் கொஞ்சம் வீக். சரியான விடை பதினேழு நிமிடங்கள் யாத்ரா.

ரெண்டு நாளா 17 னு யாராவது சொன்னாலே இலேசா பீதி கிளம்புகிறது.

நன்றி யாத்ரா.

@ கேபிள்

ஆஹா, இப்பூடி ஒரு வில்லத்தனமா?

நன்றி சங்கர்.

@ மேடி

ஏய், இந்த மாதிரி கலாய்க்க ஆரம்பிச்சு, இப்ப உனக்கு பெரிய fan club ஆரம்பிச்சிட்டாங்க.

But really good one this time.

கலக்கும்மா - வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது மேடியாக இருப்பதால்....

@ பரிசல்

நன்றி கே.கே.

என்னது நீங்க யூத்தா? நீங்க இன்னமும் பதின்ம பருவத்தில் இருக்கீங்கன்னு.... சரி சரி சேத்துக்கலாம். ஆனா கொஞ்சம் பய.. ம்.... சரி விடுங்க.

@ ஆதி

திருப்தியா? இது மாதிரி ஒரு நண்பர். அதுக்கு ஒரு குழு. ச்சே.

அனுஜன்யா

anujanya said...

@ கும்க்கி

வாங்க தல. இந்த யூத்தா இருப்பதில் பெரிய துன்பமே... அதை எப்பவும் நிருபிக்க வேண்டியிருப்பதில் தான்.

உரையாடல் - இப்போது (குறைந்த பட்சம் சில நாட்களாவது) வென்றவர்கள் ஒளி வெள்ளத்தில் மிதப்பதை அனைவரும் கை தட்டும் மனோபாவம் இருக்க வேண்டும். அதே சமயம் ஆரோக்கியமான விமர்சனங்களும் வருவதில் தவறு இல்லை. அதைத் தானே சிவராமனும் விரும்புகிறார்?

//கவிதைகளுக்கும் இது போல முஸ்தீபுகள் இனி வருமா?//

ஏன் கும்க்கி ஏன்? ஏன் இந்த கொல வெறி?

மேடி - :)

வேலன் - :))))

நன்றி கும்க்கி.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

பள்ளி மாணவர்களைப் போல் முடிவுக்கு ஆர்வம் கலந்த பயத்துடன் காத்திருக்கும் பதிவர்களைப் பார்த்தால் நம் ஒவ்வொருவருள்ளும் இருந்த சிறுவன்/சிறுமி இன்னும் உயிர்ப்புடன் ஒரு மூலையில் இருப்பது தெரிகிறது. அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் //

கண்டிப்பாக, மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.


புதிர் :))))))))))

Unknown said...

//@ Vidhoosh said...
ஆமா. அதெப்படி ஒரு நிமிடத்தி அனு மட்டும் பாலத்தை கடக்க முடியும். WADA கவனிக்க....//

ரிப்பீட்டு....

அப்புறம் புதிர்..

இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவையோ..??!!

anujanya said...

@ அமித்து.அம்மா

சரிதான். ஆனால், முடிவு வந்த பின்னும் சிறுபிள்ளைத் தனமா சண்டை போடுவது ....நல்ல தமாசு.

நீங்களே புதிரில் கலந்துகல என்றால் ..

நன்றி AA.

@ பட்டிக்காட்டான்

வாங்க தல. புதிரில் சிம்பிள் தானே. அடுத்த முறை ட்ரை பண்ணுங்க. நன்றி.

அனுஜன்யா