Monday, May 10, 2010

அபயனுக்காக ஒரு கவிதை

கண்ணாமூச்சி

அவனுக்கும் அவளுக்கும்

கண்ணாமூச்சியில் அதிகப் பிரியம்
அங்காடியில் காணாமல் போனவளை
வைர மாலைக்குள் கண்டெடுக்கிறான்
வீட்டுக்குள்ளிருந்தே மாயமானவனை
அறுபத்தாறாம் பக்கத்திலிருந்தோ
நீள்சதுர கண்ணாடியின்
இருபது மூன்றாம் தடத்திலிருந்தோ
மீள் கொணர்வாள்.
ஒருமுறை அவள் ஒரு பாடலுக்குள்;
ஒருமுறை அவன் ஒரு ஆடலுக்குள்;
சில முறை அவள் ஒப்பனைக்குள்
பல முறை அவன் குறுந்தகடுக்குள்
நேற்று பார்த்தபோது
எதிரெதிரே நின்றாலும்
எதையோ தேடினார்கள்
கண்ணாமூச்சியைத்
தொலைத்து விட்டதாகத்
தெரிந்து கொள்ள முடிகிறது
இவனோ இவளோ
எதிர்பாராத இடத்தில்
கண்டுபிடிக்கப் பட்டார்களோ
என்ற பதட்டம் மெல்லப்
பரவுகிறது இப்போது

(அபயன் நன்றாக, வேகமாகச் சாப்பிடுவதற்காக எழுதியது. அபயன் யாரென்பது, அவன் தந்தை பின்னூட்டம் போடும் போது தெரிய வரலாம்)

18 comments:

பா.ராஜாராம் said...

அருமை அனு!!

-இப்படிக்கு,
(அபயன் அப்பாவிற்குள்ளும் பொருந்தும்)
சசி அப்பா. :-)

Madumitha said...

அபயன்கிட்ட
சொல்லியாச்சாக்
கவிதையை?

பிரவின்ஸ்கா said...

அருமை

--பிரவின்ஸ்கா

கார்க்கிபவா said...

:))))





































வ்ழக்கம் போல, இது திருந்தாத கேசு கார்க்கி என்ற சிரிப்போடு நகர்கிறேன். ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதியிருக்கிறேன். படிச்சிட்டு மார்க் போடும்படி கேட்டுக் கொள்கிறேன் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல்

Prasanna said...

அருமை..!

உயிரோடை said...

ந‌ல்ல‌ க‌விதை அனுஜ‌ன்யா. வாழ்த்துக‌ள்

பூமா ஈஸ்வ‌ர‌மூர்த்தியின்

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

என்று க‌விதை நினைவுக்கு வ‌ந்த‌து.

மணிகண்டன் said...

:)- இப்படிக்கு abyan(அபயன்,அப்யன் !!) அப்பா.

பாவம் அவன் ! இந்த கவிதையை நான் படிச்சு காட்றதா இல்ல :)-

CS. Mohan Kumar said...

நல்லாருக்கு.

Ashok D said...

இப்பொழுது பிரதிக்குள்ளும் :)

நேசமித்ரன் said...

//நீள்சதுர கண்ணாடியின்
இருபது மூன்றாம் தடத்திலிருந்தோ
//

இது அனுவிடம் மட்டும் தேடக் கூடிய வரி

அடிக்கடி எழுதுங்க தலைவரே

Anonymous said...

நன்றாக இருக்கிறது.

ஏன் இத்தனை தாமதம்?.

ஏப் 13க்கு பிறகு அடுத்த பதிவுக்கு ஒரு மாதம் எடுத்திருக்கிறீர்கள்.

நந்தாகுமாரன் said...

கவிதை மட்டும் எழுதுங்கள் ... கவிதை பற்றிய metadata அவசியமெனில் கவிதையோடே இருக்கட்டும் ... இப்படி தனியாகக் கூவி ஒரு நல்ல கவிதையை ஏன் சிதைக்கிறீர்கள் ...

Thamira said...

அபயன் நிச்சயம் வேகமாக சாப்பிட்டிருப்பான்.

(நெருங்கி வர முடிகிறது. ஆனால் தொடமுடியவில்லை, உங்கள் பெரும்பாலான கவிதைகளை. இதையும்)

ராமலக்ஷ்மி said...

நன்றாக இருக்கிறது கவிதை:)!

வரிகள் வெகு அழகு.

Thamira said...

அய்யன்மீர், பதிவுக்கு வருகை தரவும், அழைப்பை ஏற்கவும்.

http://www.aathi-thamira.com/2010/05/blog-post_12.html

ராகவன் said...

அன்பு அனுஜன்யா,

ரொம்ப நல்ல கவிதை...
“வீட்டுக்குள்ளிருந்தே மாயமானவனை
அறுபத்தாறாம் பக்கத்திலிருந்தோ
நீள்சதுர கண்ணாடியின்
இருபது மூன்றாம் தடத்திலிருந்தோ
மீள் கொணர்வாள்”

எனக்கு மிகப்பிடித்தது இந்த வரிகள்... நமக்கும் கொஞ்சம் கத்துக்குடுங்கோ அனுஜன்யா...

அன்புடன்
ராகவன்

anujanya said...

@ ராஜாராம்

நன்றி - சசி அப்பா :)

@ மதுமிதா

சொல்லவேண்டியவர் முடியாது என்கிறார். நன்றி பாஸ்.

@ பிரவின்ஸ்கா

ஹாய், ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து. நன்றி பாஸ்.

@ கார்க்கி

அது...வி.சிறுகதை? ஸ்ஸப்பா.. ஓகே ஓகே. பின்னூட்டம் போட்டாச்சு.

@ அப்பாவி தங்கமணி

நன்றி சகோ

@ பிரசன்னா

நன்றி

@ உயிரோடை

நன்றி லாவண்யா. அந்த கவிதை நல்லா இருக்கு.

@ மணிகண்டன்

ஓ, அப்யன் என்று சொல்லணுமா? யோவ், படிச்சு காட்டுயா. என்ன மாதிரி பெரிய கவிஞனா வரக்கூடும் :).

@ மோகன் குமார்

நன்றி பாஸ்

@ அசோக்

ஹ்ம்ம், அப்புடீங்கற ! நன்றி அசோக்

@ நேசமித்ரன்

இதுக்கே தாவு தீருது நேசன். உங்கள மாதிரி மொழி, கற்பனை வளம் எல்லாம் நம்ம கிட்ட லேது :(

நன்றி நேசன்.

@ வேலன்

நேசனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும். பரிசலை இந்த மாதிரி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று இந்த அவையில் உங்களைக் கேட்கிறேன் :)

@ நந்தா

எப்படியோ..உங்களுக்கே தெரியாமல் 'நல்ல கவிதை' னு சொல்ல வெச்சுட்டேன். will take care boss. நன்றி.

@ ஆதி

அதேதான். இன்னும் கொஞ்சம். கரெக்ட்.
நன்றி ஆதி

@ ராமலக்ஷ்மி

ரொம்ப நாட்களுக்குப் பின் மேடம் வறீங்க :)

நன்றி சகோ.

@ ஆதி

ஹ்ம்ம். அழைப்புக்கு நன்றி. முயற்சி செய்கிறேன். இதிலயும் பிட்டு அடிக்க முடியுமான்னு...

@ ராகவன்

என்னது! உங்களுக்கா.. என்ன வெச்சு காமெடி...

நன்றி ராகவன்

@ தமிழிஷில் மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா