Friday, May 21, 2010

சா(ல்)மன் மீன்கள்

நகருக்குப் புறம் காட்டி
அன்பு செலுத்தும் காதலர்கள்
மற்றும்
காதல் செய்யும் அன்பர்கள்
வழிந்தோடும் காதலை
உள்வாங்கும் அலைகள்
காதலின் உத்வேகத்தில்
நிறம் மாறும் வானம்
முற்றிய காதல்
முழுதாய் வற்றியபின்
கடல் துறந்து
நகருள் நுழைந்து
நிரந்தரமாய் தொலையும்
சா(ல்)மன் மீன்கள்
புதிய காதலரின் அன்புக்கும்
அன்பர்களின் காதலுக்கும்
சில காதல் தோல்விகளுக்கும்
எப்போதும் தயாராக அலைகள்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் வானம்

(அகநாழிகை இதழில் பிரசுரம் ஆகியது)

20 comments:

க ரா said...

நல்லாருக்கு சார்.

Ashok D said...

பரவாயில்லை .. பொழச்சிபோங்க... :)

Ashok D said...

//அலைகள்
அனைத்தையும் கண்காணிக்கும் //

அலையும் காதல்ன்னு கூட சொல்லிக்கலாம் ;)

நேசமித்ரன் said...

//நிரந்தரமாய் தொலையும்
சா(ல்)மன் மீன்கள்
//

காதலின் உன்மத்தம் பேசும் வரிகள்

சா(ல்)மன் மீன்கள் -ஆழங்களில் மிளிரும் அழகு

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

வால்பையன் said...

சுவற்றிற்கு முதுகு காட்டி
சரக்கு அடிக்கும் நண்பர்கள்
மற்றும்
சைடிஷ் திண்ணும் வம்பர்கள்
வழிந்தோடும் நுரையை
உள்வாங்கும் பீர்கிளாஸ்
விரலின் உத்வேகத்தில்
எகிறி பறக்கும் மூடி
புளித்த பீர்
முழுதாய் குடித்தபின்
மூக்கு விடைத்து
வாய் திறந்து
நாற்றமாய் வரும்
கு”பீர்” ஏப்பம்
புதிய பீரின் வாசத்துக்கும்
வம்பர்களின் தொல்லைக்கும்
சில பீர் காலியாகும்
எப்போதும் சைடிஷ் இல்லாமல்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் பீர்பாட்டில்

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையாக இருக்கு . வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒரு புது கவிதை

Mahesh said...

நீர் கவிஞரய்யா !!!

அத்திரி said...

இன்னைக்குத்தான் நீங்க எழுதின கவிதை புரிஞ்சிருக்கு......................??/?

Kumky said...

சால்மன் மீன்கள்..

நல்ல ஒப்புமை.

நிற்க.

கடலின் ஆற்றுப்படுத்தல்கள் காதலுக்கு மட்டுமேவா...

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை. அகநாழிகையிலும் வாசித்தேன்.

எறும்பு said...

I like வால்பையன் கவுஜ..
:)

உயிரோடை said...

வாழ்த்துகள் அனு அண்ணா

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு அனு.

வால்ஸ்.. :-))

பிரதீபா said...

"சில காதல் தோல்விகளுக்கும்
எப்போதும் தயாராக அலைகள் "

லேசாக அல்ல
கொஞ்சம் பலமாகவே..
வ.லிக்.கிறது

Ashok D said...

அலைகழிக்கும் காதல் :)

Unknown said...

ஹூக்கும்..

விநாயக முருகன் said...

அழகாய் இருந்தது அனுஜன்யா. வாழ்த்துக்கள்

anujanya said...

@ ராமசாமி கண்ணன்

நன்றி பாஸ். முதல் வருகை?

@ அசோக்

வாங்க வெற்றிக் கவிஞர். சரி சரி.

@ நேசமித்ரன்

ஒரு முறை நீங்கள் சா(ல்)மன் மீன்கள் பற்றி எழுதினீர்கள். அதிலிருந்து பிறந்தது தான் இது :). நன்றி பாஸ்.

@ மதுரை சரவணன்

நன்றி பாஸ். மதுரையா உங்க ஊரு? எச்சரிக்கையாகவே இருங்கள்.

@ வால்பையன்

குரு, இது நியாயமா? :)))

@ பனித்துளி சங்கர்

நன்றி பாஸ்.

@ மகேஷ்

நக்கலு... சரி பார்த்துக்கறேன்.

@ அத்திரி

அடப்பாவி..

@ கும்க்கி

காதலுக்கும், சில கா.தோல்விகளுக்கும், இன்ன பிறவுக்கும் கூடத்தான் :)

நன்றி தல

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. எப்படி இருக்கீங்க?

@ எறும்பு

டேய், ஓடிப்போயிடு :)

@ உயிரோடை

நன்றி தங்கச்சி.

@ ராஜாராம்

ராஜா, இது நியாயமா?

@ பிரதீபா

நன்றி. உங்கள் முதல் வருகை?

@ ராஜாராம் (மீண்டும்)

சாரி பாசு, இன்னும் படிக்கல. என்னென்னவோ நடந்துடிச்சு :(. படிக்கிறேன்.

@ அசோக்

எதுக்குயா திரும்ப வந்த?

@ திருஞான சம்பத்

ரொம்ப அவசியம் :)))

@ வி.மு.

நன்றி பாசு. எப்படி இருக்கீங்க?

@ thalaivan.com

என் திறமைகளா? போங்க பாஸ், ரொம்ப புகழுறீங்க.

@ தமிழிஷில் மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

அனுஜன்யா

பிரம்மன்கவி என்கிற கிரிநாத் said...

கவிதை அருமை...