Sunday, July 8, 2012

அனுமானங்கள்









அனுமானங்கள் 

ஜன சந்தடி மிகுந்த
தெரு முனையில்
பேசிக்கொண்டிருந்தனர்
புதுக் காதலர்களா?
குறுகுறுப்பைக் காணவில்லை
மணமானவர்களா?
சலிப்பும் தென்படவில்லை
அல்லது...
இல்லை ஒரு வேளை...
பிரிந்து செல்லத் துவங்கி
தயங்கி அவன் பார்த்தபோது
திரும்பவில்லை
அவள்
திரும்பியபோது
பார்க்கவில்லை அவன்
ஹ்ம்ம்.
‘அல்லது’க்கு ஒரு கதையும்
‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும்
தானாகவே சேர்கிறது இப்போது

[நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது]

8 comments:

chandru / RVC said...

அருமை அனு. சமீபத்தில் நண்பன் ஒருவன் விவரித்த குறும்படக் கதையும் உங்கள் கவிதையை ஒத்திருந்தது.

chandru / RVC said...

அருமை அனு, சமீபத்தில் நண்பன் ஒருவன் விவரித்த குறும்படக் கதையும் இதையே ஒத்திருந்தது.!

anujanya said...

நன்றி சந்திரா.

chandrapal said...

ஜன சந்தடி....
குறுகுறுப்பு....
இம்மாதிரியான சொல்லங்காரங்கள், அழகியலாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்...

chandrapal said...

ஜன சந்தடி...
குறுகுறுப்பு...
இம்மாதிரியான சொற்கள் அழகியலாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

chandrapal said...

ஜன சந்தடி...
குறுகுறுப்பு...
இம்மாதிரியான சொற்கள் அழகியலாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.

anujanya said...

நன்றி சந்திரபால்.

ஞாயிறு நீங்கள் எழுதியிருந்த கவிதையை இப்போது படித்தேன். [காகிதப் பூக்கள்]. நல்லா இருக்கு. நீங்கள் நேசமித்ரன் கவிதைகள் படித்து இருக்கிறீர்களா? அவரும் விஞ்ஞானம் சார்ந்த கவிதைகள் நிறைய எழுதுவார். அட்டகாசமாக இருக்கும்.

chandrapal said...

நேசமித்ரன் கவிதைகளைப் படித்திருக்கிறேன். அவருடைய கிராமியப் படிமங்களில் கரைந்து போயிருக்கிறேன்... "நான் பிணவரைக் காவலன்"- என்ற கவிதையை சமீபத்தில் படித்தேன்.