Thursday, July 10, 2008

மேலும் சில ஹைகூக்கள்

கருவாட்டுச் சந்தையிலே
உயிருள்ள இரு மீன்கள் !
அசைவம் பழகியது
அன்று முதல்தான்.


தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்


கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.


காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி

29 comments:

Bee'morgan said...

கண்ணாடியில் கீறல்கள் ஹைக்கூ மாதிரி தெரியவில்லை என்றாலும் நன்று..!
காற்றில் பறித்த கொசு அற்புதம்.. :) இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நிச்சயம் நினைவை விட்டு அகலாது..

Sen22 said...

//தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும் //

இந்த ஹைகூ நல்லாஇருக்கு...

பரிசல்காரன் said...

//காற்றில் பறித்த கொசுவை//

இதில் `பறித்த' என்கிற வார்த்தைப் பிரயோகத்தை மிக ரசித்தேன்..

//கருவாட்டுச் சந்தையிலே
உயிருள்ள இரு மீன்கள் !
அசைவம் பழகியது
அன்று முதல்தான்./

எனக்கு ரொம்பப் பிடிச்சது இதுதான் அனுஜன்யா!

அனுஜன்யா.. இதுக்குமுதல் பதிவுல என் மின்மடல் முகவரி கேட்டிருந்தீங்க.. இப்போதான் பார்த்தேன்... என் ப்ரோஃபைல்ல குடுத்துட்டேன்.. இதோ நோட் பண்ணிக்கோங்க..

kbkk007@gmail.com

VIKNESHWARAN ADAKKALAM said...

அது என்னங்க இனியவல் புனிதா தளத்துல வந்து என்ன கும்மி வச்சிருகிங்க... :))

எதுக்கு போகாத தளத்தை பற்றி கேட்கிறிங்க... ஸ்பை வச்சி என்னை பார்க்கிறிங்களோ??

VIKNESHWARAN ADAKKALAM said...

துளிப்பா நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்....

கடைசி துளிப்பா என்ன சொல்ல வரிங்கனு விளங்கல... கொஞ்சம் விளக்கம் போடுவிங்களா? எனக்கு கவிதை ஞானம் கம்மி...

சென்ஷி said...

//காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி//

கலக்கல்..... :)))))

அப்ப உங்களுக்கு சகல வித மான மரியாதைகளுடன் சொர்க்க வாசல் திறக்கப்படும் வாய்ப்பில் ஒரு துளி அதிகரித்துள்ளது :)

anujanya said...

நன்றி பாலமுருகன். ஆமாம், ஹைக்கூ என்பது ஒரு சுலப அடையாளம். விக்கி சொல்வது போல் 'துளிப்பா' என்றால், இப்ப வரும் ஆறு பேர் கூட வரமாட்டீர்கள். நன்றி.

நன்றி செந்தில். புது கவிதை எழுதியாகி விட்டதா?

கே.கே. நன்றி. பெரிய ஆள்தான். ஆனாலும் சென்ஷி மாதிரி, வந்துட்டுப் போங்க.

விக்கி, இரு குறிப்புகள். (1) இனியவள் புனிதா என்றில்லை. எங்கு சென்றாலும், உங்கள் பின்னூட்டம் எப்போதும் முதல் ஐந்தில் உள்ளது. அதைப் பாராட்டத்தான் செய்தேன். (2) உங்கள் கவிதை ஞானம் பற்றி எனக்குத் தெரியும். இல்லாவிட்டாலும் சென்ஷி பின்னூட்டம் பார்த்தால் புரியும். உங்கள் தொடரும் ஊக்கத்துக்கு நன்றி

Last but not the least, மிக நன்றி சென்ஷி. கொஞ்சம் தீவிர கவிதை என்றால் வர மாட்டீர்களோ?

அனுஜன்யா

முகுந்தன் said...

//தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்//

நச் வரிகள்... சூப்பர்

Anonymous said...

வாவ் அருமையா இருக்குங்க

anujanya said...

நன்றி முகுந்த் நன்றி (இருமுறைக்காக)

புனிதா, நன்றி. பாட்டெல்லாம் போட்டு கலக்கறீங்க !

அனுஜன்யா

Prawintulsi said...

//காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி //

Exccellent!.

ச.முத்துவேல் said...

என்னுடைய பணிவான ஆலோசனை ஒன்று.ஹைக்கூ 3 வரிகளிலமைவது நலம்.//தலைவனுக்காகக்காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
தீக்குளித்த சடலமாக.

சரியா,பாருங்கள்.ஆலோசனை பிடிக்கவில்லையெனில் நிராகரித்துவிடலாம்.

Anonymous said...

//தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்
//

வாவ்... கலக்கல் !

anujanya said...

முத்துவேல், நல்ல ஆலோசனைதானே. முடிந்தவரை முயல்கிறேன். நன்றி

நன்றி சேவியர். உங்களைவிடவா?

அனுஜன்யா

ஜி said...

துளிப்பா == ஹைக்கூ ??

Arumai..

சென்ஷி said...

//Last but not the least, மிக நன்றி சென்ஷி. கொஞ்சம் தீவிர கவிதை என்றால் வர மாட்டீர்களோ?

அனுஜன்யா//

கவிதையில் தீவிரம், அதி தீவிரம் என்று தரம் பிரித்து படித்துப்பார்த்ததில்லை. ஆனால் எல்லா வகைக்கவிதைகளையும் வாசிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. :))

Ramya Ramani said...

\\காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி\\

அருமை :))

VIKNESHWARAN ADAKKALAM said...

//குறைந்திருக்கும் ஒரு கசையடி//

அட ஆமாம்... குறைந்தபட்சம் என படித்துவிட்டதால்தான் புரியாமல் போய்விட்டது...

அகரம் அமுதா said...

////////கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.//////


வாழ்த்துகள். அழகிய ஹைக்கூக்களை அளித்துவருகிறீர்கள்.

anujanya said...

பிரவீன், உங்கள் முதல் வருகை. நன்றி.
ஜி, தேங்க்ஸ்.
நன்றி சென்ஷீ. நீங்கள் வந்தால்தான் முழுமை.
ரம்யா, நீங்களும் முதல் முறையா? நன்றி.
அமுதா, நீங்க வெண்பால பின்னுறீங்க !
அனுஜன்யா

chandru / RVC said...

நல்ல ஹைக்கூக்கள் அனு. உண்டாக்கும் பிம்பங்கள் பிரம்மாண்டமாய் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

/
தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்
/

எளிமையான ஆனால் கருத்து பொதிந்த கவிதை! நன்று

மங்களூர் சிவா said...

/
கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.
/

:)))))))))
உண்மை கவிதையோ!?!?

மங்களூர் சிவா said...

//
காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
ஆஸ்பத்திரியில் மலேரியாவுடன் நான்

//

இது எப்படி இருக்கு!?!?

anujanya said...

சந்திரசேகர்,

முதல் வருகைக்கு நன்றி.

அனுஜன்யா

anujanya said...

சிவா,

ஹ்ம்ம். 'கவிதைக்குப் பொய் அழகு' தெரியுமில்லே. இனி ஹைக்கூ எழுதியவுடன், திருத்தம் செய்ய உங்களிடம் அனுப்புகிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்.

அனுஜன்யா

MSK / Saravana said...

//காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி//

நல்லா இருக்கு..
:)

anujanya said...

சரவணகுமார், (உங்களை எப்படி சுருக்கமாக அழைப்பது?)

நன்றி.

அனுஜன்யா

MSK / Saravana said...

MSK என்று..
:)