சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்
விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்
விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்
35 comments:
மீ த ஃபர்ஸ்ட்டு :))
மூணு ஹைக்கூவுமே கலக்கல் :))
//சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
//
:)
இது ரொம்ப நல்லாருக்குது..
கடைசி ஹைக்கூவ நான் ஏற்கனவே பரிசல்காரன் பதிவுல பாராட்டியாச்சு.. சும்மா நச்சுன்னு இருக்குது...
சென்ஷி,
நன்றி. உங்கள் பதிவெல்லாம் பார்த்தபின் இனி ஹைக்கூ கூட எழுதலாமா வேண்டாமா என்ற யோசனைதான்.
அனுஜன்யா
/
வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்
/
அந்த ரயில்விபத்தில்
அப்படின்னு இருந்தா சரியா இருக்கும்!!
மீதி இரண்டும் அருமை
//சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
//
படத்துக்கு பொருத்தமான ஹைக்கூ
அருமை.
சிவா,
அடப்பாவி. என்ன வன்முறை எண்ணம்! யோசித்ததில் நல்லாவே இருக்கு. நன்றி.
அனுஜன்யா
//விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
WOW..
கலக்கலான கவிதை..
//விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
அருமை!
அட..!
இப்படித்தான் ஆச்சரியப்படத் தோன்றுகிறது.எப்படி உங்களால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது!3ம் அருமை.
///சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்//
என் ஓட்டு இதுக்கே!
//விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
இத முதல்லயே எனக்கு சொல்லீட்டீங்க!
இருந்தாலும்..
இங்கயும் சொல்லிக்கறேன்..
கலக்கல்!
// ச.முத்துவேல் said...
அட..!
இப்படித்தான் ஆச்சரியப்படத் தோன்றுகிறது.//
நாங்களும் `அட' -ன்னுதாங்க ஆச்சரியப்படுவோம்! அதுலென்ன ஆச்சரியம்?
////விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
Amazing...
சரவணகுமார் மற்றும் கவிநயா,
முதல் வருகை. மிக்க நன்றி.
அனுஜன்யா
முத்துவேல், நன்றி. உங்களுக்காகவே எல்லாமே மூன்று வரிகளில்.
அனுஜன்யா
கே.கே.,
என்ன பெருந்தன்மை. இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் மூன்றாவது ஹைக்கூ (விஷம்/சாக்லேட்) கருத்து முற்றிலும் பரிசல்காரனுடையது. நான் அதை மூன்று வரிகளில் மடக்கி எழுதினேன்.
அனுஜன்யா
முகுந்த்,
நன்றி. ரொம்ப பிசியா? 'சென்னைத் தமிழ்' வண்ணத்துப்பூச்சி எப்போதுமே இந்த வலைப்பூவில் முதலில் வருமே.
அனுஜன்யா
அனுஜன்யா,
வெள்ளிக்கிழமை கொஞ்சம் வேலை இருந்தது... அதான் லேட் ..
முகுந்தன்
நானும் கவிதை மாதிரி ஏதோ எழுத முயன்றிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் ...
மூன்றுமே அருமை. முக்கியமாக முதல் கவிதையும் அதற்கு பொருத்தமான படமும்.
கடைசி கலக்கல்
நண்பரே எல்லாமே சூப்பராக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
நன்றி வெண்பூ. அறிவியல் கதை இன்னும் இருக்கிறதா கைவசம்?
நன்றி மது.
விக்கி, நன்றி. அடுத்த 'புதைந்த நினைவுகள்' எப்போது?
அனுஜன்யா
//அறிவியல் கதை இன்னும் இருக்கிறதா கைவசம்?
//
அடுத்தது போட்டாச்சே அனுஜன்யா.. இன்னும் பார்க்கலயா??
மாயா..மாயா..எல்லாம் மாயா..
http://venpu.blogspot.com/2008/07/blog-post_27.html
மூன்று முத்தான கவிதைகள் அண்ணா.:-)
//விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
சூப்பர்..!!
சூப்பர்...!!
சூப்பர்....!!
நன்றி ஸ்ரீ. தங்கை என்பதால் ஒருமையில் விளிக்கிறேன். உன்னுடைய வலைப்பூ முகப்பில் உள்ள புகைப்படம் தான் முதல் ஹைக்கூ. அதைப் பார்த்தவுடன் தோன்றிய கவிதை தான் அது.
அனுஜன்யா
அப்படியா??
நன்றி அண்ணா..!! :-))
மறுபடியும் ஒரு "அருமையான கவிதைகள்" போட்டுக்குறேன்.... முதல் ஹைக்கூ ரொம்ப சூப்பர்...
நன்றி ஜி.
//விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
Just Toooooo good!
+Gandhi
சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
romba arumaiyana azamana rasanainga ungaluku
@ மின்னல்
உங்கள் பாராட்டுக்கு நன்றி
அனுஜன்யா
அருமை
@ tvr
நன்றி திரு ராதாகிருஷ்ணன். முதல் முறையாக வருகிறீர்கள். நம்ப மாட்டீர்கள். நேற்றுத்தான் உங்கள் 'தனம்' பற்றிய வலைப்பதிவை படித்தேன். நேரக்குறைவினால் (சோம்பல் என்று சொல்லவேண்டும்) பின்னூட்டம் இடவில்லை.
அனுஜன்யா
விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட் //
நல்ல கவிதை நகரவிடாமல் செய்து விடும் தன்மையுடையது. வரிகளின் மீது மீண்டும் மீண்டும் மீள்பார்வை கொள்ளச் செய்தது.
மிகவும் ரசித்தேன். நன்றி
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
Post a Comment