இணைப்பு தளர்ந்த
எல்சீடி திரையென
பொதுவாய் கறுத்தும்
அவ்வப்போது
ஒளிக் கீற்றுடனும்
உபாதையில் வானம்;
வெளிவந்ததைக் கொட்டியபின்
துடைத்த மேகங்களையும்
துரத்தியபின்
எல்லாம் சரியான வானத்தில்
புதிதாய் தரவிறக்கம் செய்யப்பட்ட
(பின்னால் வைரஸ் தாக்கக்கூடும்)
ஒளிரும் கர்சராய் சூரியன்;
தகிக்கிறது சாலை ;
நவீன ஓவியம் முறைக்க
உள்ளே நுழைந்தோம்;
பொழுது கழியும் ஆனந்தமாக;
ரசிப்போம் மூடிய கண்களுடன்
ஏசியின் உறுமலுடன்
தவழ்ந்து வரும் மெல்லிசையை;
இளமஞ்சள் திரவத்தைப் பருகுவோம்
வெளியுலுள்ளவர்களைக் கவனியாமல்;
செயற்கை ஒளி லேசாகக் கவிந்த
இந்த ஞாயிறு நன்றாக நினைவிருக்கும் -
உன்னை வெகு நாட்களுக்குப்பின் சந்திப்பதால்.
பின்குறிப்பு:
ஒரே நாளில் 'வளரின்' மொழிபெயர்ப்பு, சுந்தர் கவிதை மற்றும் அய்யனார் படித்த ஜெ.கே.யின் 'reverse' உத்தி எல்லாம் படித்து ‘வானிலை மாற்றம்’ எழுத முற்பட்டதால் வந்த விளைவு. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களாக.
17 comments:
அ-கவிதை??? எனக்கு எங்கேயுமே 'அ' வர்ற மாதிரி தெரியலையே... :)))
திரும்ப வாசிக்கும்போது லேசா 'அ' வர்ற மாதிரி தெரியுது... யாராவது சொல்றாங்களான்னு பாத்துட்டு நானே கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன் :))))
ஜி,
வாங்க. மாட்டினீங்க. அ-கவிதை என்பது 'கவிதையை எழுதிவிட்டு வார்த்தைகளையும் வரிகளையும் கலைத்துப் போட்டால், படிப்பவர்கள் deconstruct செய்து அவர்களுக்கான கவிதையை உருவாக்கிக்கொள்ளலாம்'. இவ்வாறு சொல்லியவர் ஜ்யோவ்ராம் சுந்தர். அவர் இந்த மாதிரி அ-கவிதைகள் எழுதி பெரிய ஜாம்பவான்கள் பலர் அதை deconstruct & reconstruct செய்து பல புதுக்கவிதைகள் எழுதி உள்ளனர்.
இதேபோல் நேற்று அய்யனாரின் பதிவில் அலுப்பைத் தவிர்க்க 'reverse' முறையில் காரியங்கள் செய்வது பற்றி எழுதினார். இத்துடன் சுந்தர் எழுதியிருந்த கவிதை (அ-கவிதை அல்ல) ஞாபகம் வந்தது. பேசாமல் அந்தக் கவிதையை reverse பண்ணி எழுதினேன். அதற்கு மேல் நான் ஏற்கனவே பாதி எழுதி முடிக்க முடியாது முழித்துக்கொண்டிருந்த பா.கவிதையை (பாதி கவிதை) ஒட்டிவிட்டேன். பச்சை வண்ணம் எனது. நீலத்தில் தொடர்ந்தது சுந்தரின் கவிதை reverse பாணியில்.
தலை சுத்துதா? சுந்தர் sportingly எழுதுங்கள் என்றார். அய்யனார் கிட்ட போக பயம். இங்க எங்க வரப் போகிறார் என்ற தைரியம். அதனால் அவர்கிட்ட பேசவில்லை.
அனுஜன்யா
சுந்தரின் "கொண்டாட்டம் கலை வாழ்வு" கவிதையை அப்படியே திருப்பி போட்டு (தலைப்பு உட்பட).. உங்கள் கவிதையும் சேர்த்து ஒரு அ-கவிதை செய்துவிட்டீர்..
வாழ்த்துக்கள்..
//அ-கவிதை என்பது 'கவிதையை எழுதிவிட்டு வார்த்தைகளையும் வரிகளையும் கலைத்துப் போட்டால், படிப்பவர்கள் deconstruct செய்து அவர்களுக்கான கவிதையை உருவாக்கிக்கொள்ளலாம்'. இவ்வாறு சொல்லியவர் ஜ்யோவ்ராம் சுந்தர்.//
அப்படியா??
அனுஜன்யா
எப்படிலாம் சிந்திக்கிறீங்க :)
eppadi ippadiyellam?
sorry , some problem with the system. unable to type in tamil.
நன்றி M.S.K.
அனுஜன்யா
அய்யனார், உங்கள் தனிமையின் இசை கேட்கையில் கிடைக்கும் சுகம் பற்றி உங்களுக்கே கூட தெரிய வாய்ப்பில்லை. நாங்கள் எல்லாம் கொஞ்சம் மெல்லிசை வாசிக்கிறோம். நன்றி.
அனுஜன்யா
முகுந்த், வந்தது தான் முக்கியம். எப்பிடியா? எனக்கே தெரியலப்பா!
அனுஜன்யா
சூப்பரா இருக்குங்க...
நன்றி விக்கி
அனுஜன்யா
நான்கூட இனி இப்படி எழுத முயற்சிக்கலாமோ? நல்லா இருக்கு!
பின்னுட்டத்தில் என்னன்னமோ சொால்லியிருக்காங்க.. நமக்கெல்லாம் பத்தாது பா.. :) எது எப்டியிருந்தாலும், ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்துகள்..
//ஒரே நாளில் 'வளரின்' மொழிபெயர்ப்பு, சுந்தர் கவிதை மற்றும் அய்யனார் படித்த ஜெ.கே.யின் 'reverse' உத்தி எல்லாம் படித்து ‘வானிலை மாற்றம்’ எழுத முற்பட்டதால் வந்த விளைவு.//
ஒரு மாதிரி ஆயிட்டீங்க போலிருக்கு :)
நன்றி புனிதா. நீங்களும் நிச்சயமாக முயற்சிக்கலாம்.
அனுஜன்யா
நன்றி முருகன்.
அனுஜன்யா
வளர்,
இல்லையா பின்ன! வளர்/அய்யனார்/சுந்தர் அப்படீனா, வலையே அதிருதில்ல. Heady cocktail concoction.
அனுஜன்யா
Post a Comment