Tuesday, August 12, 2008

சிக்னல் சிந்தனைகள்அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி

**************************************

நிறப்பிரிகை

அவன் அழகாயிருந்தான்
கவர்ச்சியாகவும் தான்;
என்னையும் அவன்
அப்படித்தான்
பார்த்திருக்க வேண்டும்.
ஒருமாதிரி கண்டதும் கா...
பச்சை விழுந்ததால்
விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்

30 comments:

வால்பையன் said...

//அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி//

இதை இயக்க ஸ்விட்சுன்னு ஒன்னு இருக்குமே.
அது அதையும் அறிந்த சுழியா

//அவன் அழகாயிருந்தான்
கவர்ச்சியாகவும் தான்;
என்னையும் அவன்
அப்படித்தான்
பார்த்திருக்க வேண்டும்.
ஒருமாதிரி கண்டதும் கா...//

காக்கா வலிப்பு வந்துருச்சுன்னு தானே சொல்ல வந்திங்க

வால்பையன்

முகுந்தன் said...

//விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்//

நல்ல வேளை,
பொது இடத்தில் ஒன்னும் நடக்கல :-)

Bee'morgan said...

வாவ்.. ரொம்ப சாதாரணமா தெரிந்தாலும் முதல் கவிதையின் மறை பொருள் கொள்ளை அழகு.. இரண்டில் எனக்குப் பிடித்தது அதுதான்.
நிறப்பிரிகையில் தவறான புனைவிற்கு இட்டுச்செல்லும் வார்த்தைத் தேர்வு அருமை.

M.Saravana Kumar said...

// முகுந்தன் said...
//விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்//

நல்ல வேளை,
பொது இடத்தில் ஒன்னும் நடக்கல :-)
//

ரிப்பீட்டேய்..
;)

அனுஜன்யா said...

நன்றி முகுந்த், முருகன் மற்றும் MSK

ஜி said...

:)))

ரௌத்ரன் said...

//அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி//

நல்லாருக்குங்க.....

இனியவள் புனிதா said...

//நிறப்பிரிகை

அவன் அழகாயிருந்தான்
கவர்ச்சியாகவும் தான்;
என்னையும் அவன்
அப்படித்தான்
பார்த்திருக்க வேண்டும்.
ஒருமாதிரி கண்டதும் கா...
பச்சை விழுந்ததால்
விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்//

காதலா? இப்படி எத்தனைப் பேரிடம்? ஆனாலும் ஒரு வகை உண்மை...ஒரு சில ஜொள்ளுகளை இங்கும் பார்க்கலாம்!

Sri said...

Anna super-ah irukku kavithaigal..!!
:-))

(sorry tamil font illa, so tanglish.!! :-( )

அனுஜன்யா said...

@ ஜி,

நன்றி. மழைக்கவிதை கலக்குறீங்க.

@ ரௌத்ரன்

நன்றி ரௌத்ரன். உங்கள் முதல் வரவு.

@ புனிதா

புனிதா, இன்றைய நெரிசலான வாழ்வு முறையில், சிக்னலில் கட்டயாமாக நிற்க வேண்டிய தருணத்தையும் ஒரு burgar சாப்பிடுவதுபோல் தவணை முறையில் காதல் செய்யும் இன்றைய யூத்!

@ Sri

நன்றி ஸ்ரீ. கதையெல்லாம் அட்டகாசமா எழுதற !

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

:-))

VIKNESHWARAN said...

கண்டதும் பத்திக்கிச்சு ஆனா விளக்கு விழுத்து ஊத்திகிச்சு இதை தானெ சொல்லவரிங்க?

அனுஜன்யா said...

சந்தனமுல்லை,

நட்சத்திரப் பதிவரின் முதல் வருகை. :-)))

அனுஜன்யா

அனுஜன்யா said...

விக்கி, அதேதான். ரொம்பநாளா இந்தப் பக்கம் காணோம்.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

சிகப்பு விழுந்த போது சிந்திக்க ஆரம்பித்து, மஞ்சளிலே மனதிலே வரிகளை ஓட்டி பச்சை விழுந்ததும் வந்து விழுந்த கவிதைகளா..:) அருமை அனுஜன்யா!

அனுஜன்யா said...

பின்னூட்டமே கவிதையாக எழுதும் கலை உங்களுக்கு உள்ளது. பாராட்டுக்கு நன்றி சகோதரி.

அனுஜன்யா

Aruna said...

அழகிய யதார்த்தம்....
அன்புடன் அருணா

r.selvakkumar said...

சிக்னல் மாறிய கணங்களில்
தோன்றி மறைந்த எண்ணங்களை
அழகாக எழுதியிருக்கிறீர்கள்

அனுஜன்யா said...

@ அருணா

நன்றி அருணா உங்கள் தொடர் ஆதரவுக்கு.

@ செல்வகுமார்

முதல் வருகை செல்வா. நன்றி ரசித்ததற்கு.

அனுஜன்யா

பிரபு said...

அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி
//////////
இதை இயக்க ஸ்விட்சுன்னு ஒன்னு இருக்குமே.
அது அதையும் அறிந்த சுழியா

////////

இதையே நானும் சொல்லுறேன்

அனுஜன்யா said...

வால்பையனுக்கு விசிறிகள் அதிகம்தான், என்னையும் சேர்த்து. நன்றி உங்கள் முதல் வருகைக்கு.

அனுஜன்யா

வால்பையன் said...

புல்லரிக்குது

Lakshmi Sahambari said...

//நிறப்பிரிகை

அவன் அழகாயிருந்தான்
கவர்ச்சியாகவும் தான்;
என்னையும் அவன்
அப்படித்தான்
பார்த்திருக்க வேண்டும்.
ஒருமாதிரி கண்டதும் கா...
பச்சை விழுந்ததால்
விர்ரென்று பிரிந்தோம்
அவரவர் வேலையில்//

- Rasithen !!

அனுஜன்யா said...

லக்ஷ்மி,

தங்கள் முதல் வருகை. இப்போதுதான் உங்கள் வலைபூவிற்கு சென்று பார்த்தேன். அழகாக எழுதும், உயிரோசை/கீற்று என்று மிளிரும் பெரிய கவிதாயினி நீங்கள். நன்றி.

அனுஜன்யா

சுபாஷ் said...

கருப்பொருளை அழகாக சொல்லியுள்ளீர்கள்

அனுஜன்யா said...

நன்றி சுபாஷ்.

அனுஜன்யா

Anonymous said...

//நிறப்பிரிகை// Title ரொம்ப அருமைங்க. கவிதை ரொம்ப சூப்பர்!

- Gandhi

அனுஜன்யா said...

@ tbkg

காந்தி, உங்கள் முதல் வருகை. நான்கூட அப்படிதான் நினச்சேன். சுயபெருமை ஜாஸ்தின்னு சொல்லுவாங்களேன்னு சும்மா இருந்துட்டேன். நன்றி உங்கள் வருகை மற்றும் 'சூப்பர்' ருக்கு.

அனுஜன்யா

மின்னல் said...

அரைக்கம்பத்தில் தொங்கியபடி
'நில் கவனி செல்' என்று
மாறி மாறி அதிகாரம்
முழுக்கம்ப உச்சியில்
அனைத்தும் அறியும் ஒளி

enna solla arumainu mattum solli mudikka kudatha kavithai ithu.

நிறைகுட‌ம் த‌ழும்ப‌து மேல் இருக்க‌
அரைகுட‌ங்க‌ள் ஆடிக்கொண்டு இருக்கின்றோம் எத்த‌னையோ விச‌ய‌ங்க‌ளுக்காக‌...
விள‌க்குக‌ள் மாறுவ‌து போல‌ எத்த‌னை ஆசைக‌ள் ஆசைக்கு ஆசைக‌ள் அத‌ற்கான‌ அதிகார‌ம் தானே தேட‌ல்க‌ள் ஓடல்க‌ள் அழ‌கான‌ வாழ்க்கை த‌த்துவ‌தை சொல்லிட்டிங்க‌ வாழ்த்துக‌ள்

அனுஜன்யா said...

@ மின்னல்

மிக்க நன்றி உங்கள் புரிதலுக்கு.

அனுஜன்யா