Wednesday, August 27, 2008

பாராமுகம்


அவ்வப்போது
பார்த்திருந்த அவளை
இருமுறை பார்த்தேன்
சென்ற திங்களில்
வெண்மையும் பச்சையும்
இழைந்த ஆடையில்;
இலேசாக சலனம் கொண்டேன்
என்னைப்பார்க்கவில்லை என்றாலும்;
செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலம்தான் என்று
ஆறுதல் கொண்டேன்
பிறகு எப்போதும்
அவளைக் காணாவிடினும்

26 comments:

Unknown said...

கொஞ்சம் அர்த்தம் சொல்லுங்களேன் அண்ணா..!!

வால்பையன் said...

ஏன் இந்த கொலைவெறி!
நல்லதே நினைக்க மாட்டிங்களா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்குங்க...

/அவள் நலன்தான்/ அவள் நலம்தான் என இருக்கவேண்டுமோ?

anujanya said...

சுந்தர்,

நன்றி திருத்தியமைக்கு. மாற்றிவிட்டேன். நன்றி ஊக்கத்திற்கும்.

அனுஜன்யா

anujanya said...

@ ஸ்ரீ

என்ன வச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே?

@ வால்பையன்

அப்படி இல்லை குருஜி. ஒருவித அன்பின் பதட்டம். உங்கள் பின்னூட்டம் சுந்தரின் 'தேடுபொறி' க்கு சிறப்பு.

அனுஜன்யன்

Anonymous said...

//செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலம்தான் //

No news is good news என்றாகிவிட்டது வாழ்க்கை.

Unknown said...

//என்ன வச்சு காமெடி ஒண்ணும் பண்ணலியே? //

ம்ஹீம் இல்ல அண்ணா..!! :(

Aruna said...

தினசரி நலம் கூட இப்போது luxury ஆகிவிட்டதுதான்..
அன்புடன் அருணா

MSK / Saravana said...

கலக்கல்..
:)

விடுங்க, அந்த பொண்ணு நலமா தான் இருப்பாங்க..

anujanya said...

@ வேலன்

வருகைக்கு நன்றி. /No news is good news/ முற்றிலும் உண்மை என்னும் இன்றைய நிலை.

@ அருணா

உண்மைதான் அருணா. வருகைக்கு நன்றி.

anujanya said...

@ ஸ்ரீ

சிலரை அவ்வப்போது பார்ப்போம், அவர் யாரென்று தெரியாமலே. அவரிடம் உள்ள எதோ ஒன்று நம்மை ஈர்க்கலாம். அது காதலாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. திடீரென்று அவர் காணாமல் போய்விட்டால் ஒரு இனம் தெரியாத பதட்டம் ஏற்படும். அதைச் சொல்ல முயன்றேன்.

அனுஜன்யா

anujanya said...

நன்றி சரவணன்

புதுகை.அப்துல்லா said...

செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலம்தான் என்று
ஆறுதல் கொண்டேன்
//

அட!!!

Thamira said...

ரெண்டு நாளு நம்ப கடைக்கு லீவு உட்டுட்டு எல்லார் கடைகளுக்கும் போய் வரலாம்னு கிளம்பிருக்கேன், உங்க கடைக்கு ரொம்ப நாளா வரணும்னு நினைச்சு இப்போதான் வந்திருக்கேன். ஸாரிங்க. உங்க கடையில் கவிதை ஸ்பெஷலா? உண்மையிலேயே நல்லாருக்குதுங்க, பிறவற்றையும் படித்துவிட்டு பின்னர் வருகிறேன். (ஜஸ்ட்டுல அவார்டு மிஸ்ஸாயிருச்சே.. சே!)

புதுகை.அப்துல்லா said...

திடீரென்று அவர் காணாமல் போய்விட்டால் ஒரு இனம் தெரியாத பதட்டம் ஏற்படும். அதைச் சொல்ல முயன்றேன்.
//

அதைச் சொல்ல போட்டீங்க பாருங்க ஓரு உதாரணம் "செய்தித்தாளின்". உண்மையிலேயே நான் இதுவரை படிக்காத உதாரணம்.

ஜியா said...

:))) எனக்கு வாசிச்ச உடனேயே புரிஞ்சிடிச்சு :))) வழமைபோல் அருமை...

முகுந்தன் said...

யாரையாவது பாக்க வேண்டியது , இப்படி எழுத வேண்டியது.
வீட்டுல டின்னு கட்ட போறாங்க பாருங்க :-)

anujanya said...

@ அப்துல்லா

நன்றி என்னுயிர்த்தோழா! உனது அடுத்த கவிதை பார்த்தேன். நல்லா இருக்குன்னு அங்க வந்து சொல்றேன்.

@ தாமிரா

ஆஹா, ஸ்டார் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க! வாங்க தாமிரா. நன்றி. உங்க வளைக்கும் போயி வாக்களித்தாயிற்று.

@ ஜி

உங்க பின்னூட்டம் 'ஸ்ரீ' க்கு என்று நினைக்கிறேன். ஹா ஹா. நன்றி. பி.ந. பாணியில் இரண்டு பதிவுகள்ள மிரட்டறீங்க! வர்றேன்.

@ முகுந்த்

யாரு வீட்ல? என் வூட்லயா இல்ல அந்த பொண்ணு வூட்லயா? ஐயா நீர் ஒருவரே போதும்.

அனுஜன்யா

Unknown said...

அனுஜன்யா அண்ணா புரிஞ்சது தேங்க்ஸ்..!! :))

ஜி அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? :((

Ashok said...

அண்ணன் அவர்களே புதுமையான ஒரு உவமை சொல்லி என்னை போன்ற தம்பிகளை மேலும் சிந்திக்க வைத்து விட்டீர்கள் அண்ணா நன்றி இதை போல் மேலும் தம்பிளை சிந்திக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அசோக்

chandru / RVC said...

அனு, மறக்க முடியாத முகங்களைக் கொண்ட பெண்கள் உலகில் இருப்பதே இது போன்ற கவிதைகள் எழுதப்படவேண்டும் என்பதற்காகவா? ரசித்தேன் :)

chandru / RVC said...

அனு, மறக்க முடியாத முகங்களைக் கொண்ட பெண்கள் உலகில் இருப்பதே இது போன்ற கவிதைகள் எழுதப்படவேண்டும் என்பதற்காகவா? ரசித்தேன் :)

anujanya said...

அசோக்,

நன்றி உன்னுடைய (தம்பிதானே!) பாராட்டுக்கு. நீயும் நல்ல கவிஞர்கள் (நானில்லை) கவிதையைப் படித்து மேலும் எழுது.

அனுஜன்யா

anujanya said...

சந்திரா,

உங்களிடமிருந்து பாராட்டு என்பது மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஒரு கவிதையில் (நிறப்பிரிகை?) 'பிரிவின் நிறம் காவி' என்னை இன்னமும் என்னவோ செய்கிறது. நீங்கள் ஏன் நிறைய கவிதைகள் எழுதுவதில்லை?

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

:-)..உண்மைதான்..மனித வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது!!

anujanya said...

நன்றி சந்தனமுல்லை. 'திகழ்மிளிர்' போல 'சந்தனமுல்லை' யும் யோசிக்க வைக்கும் நல்ல பெயர். நன்றி உங்கள் தொடர் ஊக்கங்களுக்கு சகோதரி.

அனுஜன்யா