**********************************
எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்
**********************************
புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்
**********************************
ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது
**********************************
எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்
**********************************
புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்
**********************************
ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது
**********************************
முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 21 '
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 21 '
**********************************
65 comments:
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்//
அட ஆமா... :)
//ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது//
:)
//முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 18 '//
:( பாவம் இல்லை..
//எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில் //
நல்லா இருக்குங்க.
நன்றி நாணல். நீங்கள் தான் பர்ஸ்ட்.
அனுஜன்யா
அங்க வந்தும் பின்னூட்டம் எழுதலை. Feel guilty. வருகிறேன்.
//எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்//
:)))))
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்//
:))))))
//ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது//
இவங்கள சமாளிக்கறது பெரும் வேல..!! ஆனா ஜாலியா இருக்கும்..!! :)))))
//முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 18 '//
அண்ணா பெண்ணுக்குத் திருமண வயது 21..!! :((
மொத்தத்துல எல்லாக் கவிதையும் வழக்கம் போல சூப்பர்..!! அண்ணா கலக்கிட்டீங்க..!! :))
நன்றி வேலன்.
ஸ்ரீ, தேங்க்ஸ். நா பாத்த ஆட்டோல '18' னு எழுதியிருந்தது என்று சொல்லாம்னு பார்த்தேன். நீ சொன்னா அப்பீலே இல்ல. '21' னு மாத்தி ஆச்சு. சரியா?
அனுஜன்யா
/* எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்*/
ஐந்தாறு தானா? கம்மியா இருக்கே ... :-)
எல்லாம் நன்றாக உள்ளன...
அருமையான கவிதைகள்.. அந்த படத்தில் இருக்கும் மழலைகளையும் சேர்த்து..
பெண்ணின் திருமண வயது என்று போட்டதன் காரணம் பால்யவிவாகத்தை தடுக்கத்தான்..
ஆனால் இன்று 21 வயதிலேயே திருமணம் செய்துவிடலாம் ஆனால் 30 வயதாகியும் பொருளாதாரத்தின் காரணமாக பலருக்கு ஆகவில்லையே என்ற சிந்தனையையே ஏற்படுத்துகிறது எனக்கு.. உங்களுக்கு?
நர்சிம்
அனுஜன்யா said...
//அங்க வந்தும் பின்னூட்டம் எழுதலை. Feel guilty. //
அய்யோ ஏன் இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்ல்லாம் சொல்றீங்க... :(
//வருகிறேன்.//
வாங்க வாங்க... :)
@ அமுதா
நன்றி.
@ நர்சிம்
நீங்கள் சொல்லியது இரு பொருளில் கொள்ளலாம் நர்சிம். பொருளாதாரப் பற்றாக்குறை காரணத்தால், மணம் செய்ய முடியாதவர்கள். பொருளாதார விடுதலை (financial independence) கிட்டியதில், திருமணத்தில் நாட்டமின்றி, அலுவலில் முன்னேறத் துடிக்கும் இன்றைய நகர மங்கைகள். (careeristic women). முந்தையது சூழல்கள்; பிந்தையது தேர்வுகள்.
வாழ்த்துக்கு நன்றி.
அனுஜன்யா
//அனுஜன்யா said...
ஸ்ரீ, தேங்க்ஸ். நா பாத்த ஆட்டோல '18' னு எழுதியிருந்தது என்று சொல்லாம்னு பார்த்தேன். நீ சொன்னா அப்பீலே இல்ல. '21' னு மாத்தி ஆச்சு. சரியா?//
அச்சச்சோ என்ன அண்ணா இது எனக்கு போயி தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு..!! :((
//நா பாத்த ஆட்டோல '18' னு எழுதியிருந்தது என்று சொல்லாம்னு பார்த்தேன். நீ சொன்னா அப்பீலே இல்ல. '21' னு மாத்தி ஆச்சு. சரியா?//
இது நான் சும்மா சொன்னேன்.!! :( If it hurs u really sorry anna..!! :((
அருமையாக ஹைக்கூக்கள் அனுஜன்யா...
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்
//
இது அற்புதம்... காரணம் இந்த பெர்பயூம் எல்லாருக்கும் பிடிக்கும். :)))
@ ஸ்ரீ
யாராக இருந்தாலும் நன்றி என்றால் சொல்லத்தான் வேண்டும். Absolutely no probs. Cool.
@ வெண்பூ
உங்களுக்கு இது பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால், எனக்கும் இது ரொம்ப பிடித்தது. (சுய பெருமைய பாருடா!)
அனுஜன்யா
//முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 21 '//
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்//
பின்றீங்க தல
////ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது//
super.
ஆனால் இத விட ஜாஸ்தியா கேட்கிறது எங்கள் வீட்டு நான்கு வயது :-)
//நா பாத்த ஆட்டோல '18' னு எழுதியிருந்தது என்று சொல்லாம்னு பார்த்தேன்.//
நீங்க ஆட்டோ அனுப்பரதுல பெரிய ஆள்னு நான் நம்பறேன் :))
முகுந்த்,
//ஆனால் இத விட ஜாஸ்தியா கேட்கிறது எங்கள் வீட்டு நான்கு வயது :-)//
அது யாரப்பா! கேசவப் பெருமாளாச்சே!
//நீங்க ஆட்டோ அனுப்பரதுல பெரிய ஆள்னு நான் நம்பறேன் :))//
'தல' ஆயாச்சு. ஆட்டோவும் இருக்கு. அடியாள் தான் வேணும். ஹம், நீ எப்போ வெளியூர் போகணும்?
தேங்க்ஸ் முகுந்த். Any indications of posting? (What a kill-joy I am!)
அனுஜன்யா
நான்குமே அருமை என்றாலும் ரொம்ப ரசித்தது:
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்//
narsim said...// இன்று 21 வயதிலேயே திருமணம் செய்துவிடலாம் ஆனால் 30 வயதாகியும் பொருளாதாரத்தின் காரணமாக பலருக்கு ஆகவில்லையே என்ற சிந்தனையையே ஏற்படுத்துகிறது எனக்கு.. உங்களுக்கு?//
நர்சிம் சொல்வதையும் தாண்டி இன்று படித்ததும் தங்கள் கால்களில் நிற்க விரும்பி வேலைக்குச் செல்ல ஆரம்பித்து அதிலும் ஒரு நல்ல நிலை வந்த பின்னரே திருமணம் என பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டதால் இப்போது 25, 30 சர்வ சாதாரணமாகி விட்டது எனத் தோன்றுகிறது எனக்கு..உங்களுக்கு?
//எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்//
நடுவில் அம்பு குத்திய காயங்களோடு
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை//
யார் என்னை முதலில் தழுவுவது என்று
//ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?//
அப்போ ரப்பர்
பென்சில் மரமா?
//முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்//
காதலிக்க நான் தயார்
நீங்கள் தயாரா?
அனுஜன்யா..
//எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்//
இக் ஹைக்கூ தவிர்த்து மற்றதெல்லாம் அந்த அளவுக்கு இல்லீங்க்ணா..
//விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்//
//காற்றில் பறித்த கொசுவை
யோசனைக்குப்பின் விடுவித்தேன்.
குறைந்திருக்கும் ஒரு கசையடி//
இதெல்லாம் உங்களோட பெஸ்ட்..
:)
//ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது//
அட..அட..அட..
எல்லாமே நல்லா இருக்கு(சத்தியமா சொறியல) :))
//தேங்க்ஸ் முகுந்த். Any indications of posting? (What a kill-joy I am!)
//
விரைவில்......
எவ்வளவு நல்ல எண்ணம் :)
ராமலஷ்மி,
வாங்க. உங்கள் பார்வை சரியானதே. Almost அதையேதான் நான் நர்சிமுக்கு பதிலாகச் சொல்லியிருக்கிறேன். நன்றி.
அனுஜன்யா
//Almost அதையேதான் நான் நர்சிமுக்கு பதிலாகச் சொல்லியிருக்கிறேன்.//
அட ஆமாம்:)! அமுதாவுக்கு என அந்த பதில் ஆரம்பமாகியிருந்ததால் கவனிக்கவில்லை:).
@ வால்பையன்
அண்ணா, விட்ருங்கண்ணா! உங்கள் ஹைக்கூ இன்னும் கலக்கலா இருக்கு.
அனுஜன்யா
@ சரவணகுமார்
சரவணா, வெளிப்படை பின்னூட்டத்திற்கு நன்றி. எவ்வளவு எழுதினாலும், மிகச் சிலவே மீண்டும் அசைபோட வைக்கும். இன்னும் கொஞ்சம் நல்லா எழுத முயற்சி செய்யுறேன்.
அந்த சாக்லேட் ஹைக்கூ கருத்து பரிசல்காரன் சொன்னது. நான் சும்மா வரிகளை மடக்கி எழுதினேன்.
@ அப்துல்லா
அட அட அட .. சொறியாவிட்டாலும் சொகமாத்தான் இருக்கப்பு.
@ முகுந்த்
ஹா ஹா ஹா
அருமையான ஹைக்கூ
வாழ்த்துக்கள்
நன்றி சுபாஷ். முதல் வருகை?
அனுஜன்யா
//@ வால்பையன்
அண்ணா, விட்ருங்கண்ணா! உங்கள் ஹைக்கூ இன்னும் கலக்கலா இருக்கு. //
சத்தியமா எனக்கு அதெல்லாம் எழுத தெரியாது.
சும்மா சொறிஞ்சு பார்த்தேன்
//எல்லா மரங்களுக்கும்
ஐந்தாறு பெயர்கள்
அந்தக் காதலர் பூங்காவில்
//
சூப்பர் அனுஜன்யா.. கலக்கலாயிருக்குது உங்க எல்லா ஹைக்கூவும்.. :)
//ரப்பர் மரமா?
அப்போ பென்சில்?
கேட்டது பத்து வயது//
மழலைத்துவத்தை அசத்தலாய் ஹைக்கூவாய் மாற்றியதும் அழகு..
//
முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 18 '
//
சிந்திக்கவேண்டிய ஹைக்கூ..
வாழ்த்துக்கள்...
@ வால்பையன்
உங்களுக்கா தெரியாது? irreversible விமர்சனம் ஒன்று போதுமே.
@ சென்ஷீ
வாங்க தல. நன்றி.
உங்க பக்கம் எல்லாம் ஒரே கும்மியா இருக்கு. அதுவும் ஆயில், ஸ்ரீமதி நெம்பவே அதிகம்.
@ Sen
நன்றி
அனுஜன்யா
முதிர்கன்னி கொஞ்சம் பழசு.ஆனால் எல்லாமே நல்லாயிருக்கு அனு..மழை கவிதை சிறப்பு
நன்றி முத்துவேல்.
அனுஜன்யா
//புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்//
அழகோ அழகு.....
இந்த பெர்ஃப்யூம் எங்கே கிடைக்கும்???
கிடைத்தால் அனுப்பி வைக்கவும்!!!
அன்புடன் அருணா
ABCD படிக்கக் கூப்பிட்டிருக்கேன்.....தெரியுமா???என்ன பண்றது?
கொஞ்சம் கஷ்டம்தான்....ரூல்ஸ் அப்பிடி....
அன்புடன் அருணா
அருணா, யாருக்குத்தான் பிடிக்காது இந்த பெர்பியூம். மழை என்றவுடன் உங்கள் உற்சாகம் உண்மையிலேயே அதிகம்தான்.
அனுஜன்யா
Very good......
இத்துடன் நிறுத்திக்கொள்வோம் நல்ல பெண்ணே!
அனுஜன்யா
வெண்பூ ://புறப்படும் முன்
அடித்துக்கொண்டது மழை
மண்வாசனை பெர்பியூம்//
இது அற்புதம்... காரணம் இந்த பெர்பயூம் எல்லாருக்கும் பிடிக்கும். :))) ரிப்பீட்டு.!
தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் :
காதலர் பூங்கா கவிதை மட்டுமே ஹைக்கூ (மிக நெருக்கமான அளவில்). மற்றவை ஹைக்கூ மாதிரி மட்டுமே. (நான் அறிந்த வரையில்)
ஹைக்கூவின் முக்கியமான விதிகள் :
- ஒரு snapshot இருக்கவேண்டும்
- மூன்றாமடியில் எதிர்பாராத திருப்பம்
- சின்ன செய்தி
- உருவகம், மனிதப்பண்புகளை ஏற்றிச்சொல்லல் போன்றவை (உ-ம், மரத்திற்கு பெயர், மழை பெர்ஃப்யூம் அடித்துக்கொள்ளல் etc.) தவிர்க்கப்படவேண்டும் ;
உ-ம் :
கண்ணகி சிலையின்
கை சிலம்பில்
சிலந்தி வலை
இரங்கல் கூட்டத்தில்
இடைவிடாது ஒலிக்கிறது
செல்போன்
சாலைவிபத்தில் இறந்தவனின்
திறந்திருந்த கண்களில்
மழைநீர்
அன்புடன்
முத்துக்குமார்
@ தாமிரா
நன்றி.
@ முத்துக்குமார்
நன்றி முத்துக்குமார் உங்கள் முதல் (கடைசியும் என்று சொல்லிவிடாதீர்கள்!) வருகைக்கு. நீங்கள் சொல்வது உண்மைதான். இதற்கு முன்பே முத்துவேல் என்னும் கவிஞ நண்பரும், வால்பையனும் கூட இதே மாதிரி சொல்லியும், அவ்வபோது திருந்துவதுபோல் நடித்துவிட்டு, நாய்வாலை சுருட்டிக்கொள்கிறேன். நீங்கள் சொல்லியுள்ளவை (நீங்களே எழுதியவையா?) அழகான ஹைக்கூ. ஆமாம், நீங்கள் என் இன்னும் பதிவு போடவில்லை. அல்லது.... நாங்கள் எல்லாம் கொண்டாடும் நா.முத்துக்குமார் தாங்கள் தானா?
தவறாக எடுத்துக்கொள்ள இதில் ஒன்றும் இல்லை.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா ! (உச்சரிக்க இனிமையான பெயர். பொருள் அறியத்தருவீர்களா ?)
நா.முத்துக்குமார் நானல்ல. (அவர் 'நல்ல முத்துக்குமார்' என்பார் பதிவ நண்பர் மூக்கு சுந்தர்)
இவை யாவும் எனது கவிதைகளும் அல்ல.
முதலாவது, ஜூ.வி-யில் எண்பதுகளில் சுஜாதா எழுதிய "ஹைக்கூ எளிய அறிமுகம்" தொடரின் இறுதியில் வாசகர்களுக்கு போட்டி வைத்து வென்றவைகளுள் ஒன்று. படித்தவுடன் மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்டது இது. மற்றவற்றுள் இன்னொன்று :
குளத்தில் சிறுநீர்
கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்
இரண்டாவது அசலான நா.முத்துக்குமார் எழுதினது.
மூன்றாவது, சமீப காலத்தில் க.பெ எழுதின சுஜாதா எ.பி.க (எனக்குப் பிடித்த கவிதை) பகுதியில் அறிமுகப்படுத்தின கவிதை.
ஹைக்கூ போல சிலது கிறுக்கியிருக்கிறேன். அம்பலம் காலங்களில் சுஜாதாவுக்கும் திசைகள் காலங்களில் மாலனுக்கும் அனுப்பி கருத்து கேட்டதில் முன்னவர் அம்பலம் கட்டுரையில் பொதுவாக 'யாரும் எனக்கு இனி ஹைக்கூவே அனுப்பாதீர்கள்' என்றுவிட, பின்னவரோ திசைகளில் ஹைக்கூ பற்றி ஒரு விளக்கக்கட்டுரையே எழுதினார். குற்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு.
ஏதோ சொக்கன் மட்டும் பெரிய மனது பண்ணி தி.ஒ.க குழுமத்தில் எனது இரண்டை வெளியிட்டார்.
அன்புடன்
முத்துக்குமார்
பி.கு : பதிவெல்லாம் போட ஆசைதான். ஆனால் என் தேனி சுறுசுறுப்பின் விளைவாக Server சுமை தாங்காது திணறப்போகிறதே என்ற பெருந்தன்மையால் ... ஹி..ஹி
பெர்ப்யூம் - நல்ல கற்பனை அனுஜன்யா!!
அப்புறம்..பென்சில்??..ம்ம் :-)
தொடருங்க உங்கள் ஹைக்கூ பயணத்தை!!
@ முத்துக்குமார்
மீள், விரைவு வருகைக்கு நன்றி. பெயர்? சும்மா குடும்ப உறுப்பினர்களின் பெயரை உல்டாலக்கடி பண்ணியதில் கிட்டிய முத்து. phonotically நல்லா இருக்குன்னு லட்சக்கணக்கான, சரி சரி, ஒரு பத்து பேர் சொல்லியிருக்காங்க. நீங்களும் அதில் ஒருவர்.
//குளத்தில் சிறுநீர்
கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்//
அசத்தல். நீங்கள் அனுப்பிய இருவரும் பெரியவர்கள். இப்போதான் பதிவுலகம் இருக்கிறதே. நாமே ராஜா. நாமே மந்திரி. தைரியமா கோதாவில் இறங்குங்கள். நாங்களும் உங்களை 'மொத்த' தயாராகிறோம்.
@ சந்தனமுல்லை
ஹம். நீங்க எல்லாம் 'பொழச்சு போகட்டும்னு' நல்லா இருக்குன்னு சொல்லிடறீங்க. முத்துக்குமார் இதெல்லாம் ஹைக்கூ என்று கலாய்க்கிறார். (சும்மா).
//பென்சில்// பப்பு கேக்குற கேள்வியவிடவா!
நன்றி சகோதரி.
அனுஜன்யா
நன்றி
அன்பு அனுஜன்யா...
முதலில் வாழ்த்துகள். ஊடகங்களில் உங்கள் பெயர் வருவதற்கு!
நான் சொல்லலாம் என்றிருந்தேன். முன்பே சிலர் சொல்லி இருக்கிறார்கள் போல் இருக்கிறது. சில 'ஹைக்கூ மாதிரி'கள்!
Arumaiyaana Hiku
அருமையானா ஹைக்கூ கவிதைகள் அனுஜன்யா :)))
@ வசந்த்
நன்றி உங்கள் முதல் வருகை. உங்க வலைப்பூ பார்த்தேன். பிரமாண்டம்; பிரமிப்பு; இங்க என்ன சார் செய்துகிட்டு இருக்கீங்க? பெரிய பத்திரிகைகளில் பிரபலம் ஆக வேண்டியவர். Seriously awesome. நீங்கள்தானே sci-fi எல்லாம் எழுதித் தள்ளியது. நீங்களும் வெண்பூவும் அப்போதுதான் அறிமுகம். வெண்பூ ஒட்டிக்கொண்டு விட்டார்.
ஹைக்கூ? நிறைய பேர்கிட்ட அடி வாங்கி ஆச்சு. நீங்களும் கொடுக்கலாம்.
எப்படி மறந்தேன் உங்கள் வலைப்பூவை! Very prolific writing. வருகிறேன் வசந்த்.
நன்றி பாராட்டுக்கு (ஊடகம்)
அனுஜன்யா
ஜி,
எங்கப்பா ஆளே காணோம். Not able to access your blog as well. அனன்யாவ பார்த்துவிட்டியா? நன்றி உன் கமெண்டுக்கு.
அனுஜன்யா
2 வதும் 3 வதும் அருமை
கடைசி ஏற்கனவே பார்த்த/படித்த ஞாபகம்
முதாலவது படித்தவுடன் எனக்கு தோன்றியது
50 ஆண்டு காலங்கள் வாழ வேண்டிய மரங்கள்
ஐந்தாறு வருடங்களில் மடியபோகின்றன
@ smile
நன்றி ஸ்மைல் ரசித்ததற்கு. ஆனால் நான் ஹைக்கூ விதிகளை நிரம்பவே மீறுவதாக நிறைய புகார்கள் (அன்பாகத்தான்) வருகின்றன. அதலால்... சாரி, ஆனால் நான் மாறுவேன் என்று தோன்றவில்லை.
அனுஜன்யா
//ஹம். நீங்க எல்லாம் 'பொழச்சு போகட்டும்னு' நல்லா இருக்குன்னு சொல்லிடறீங்க//
ஏன் அப்படி சொல்றீங்க? :-)
நான் வாசித்த வரை, எனக்குத் தோன்றியதை சொன்னேன்!!
@ சந்தனமுல்லை
நீங்கள் தோன்றுவதைத்தான் சொல்லுகிறீர்கள். நான் சும்மா என்னைச் செல்லமாகக் குட்டியவர்களை (முத்துவேல், வால்பையன், இந்த முறை முத்துக்குமார், வசந்த்) ஏதாவது சொல்ல வேண்டாமா, அதற்காக அப்படி எழுதினேன். நீங்கள் எப்போதும் போல பாராட்டிக்கொண்டு இருங்கள். இந்த மாதிரி ஊக்கப்படுத்தாவிட்டால், இன்னும் மோசமாக எழுதிவிடுவேன்.
அனுஜன்யா
என் எண்ணத்தை, தோன்றியதை பின்னூட்டமிட்டேன்
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
மரங்களில் இது போல் எழுதவதாலும்
விளம்பரதிற்க்காக அதில் ஆணி அடிப்பதாலும்
அதனுடைய வாழ்நாள் குறையும் என்ற கேள்வி ஞானம்
அதற்காக தான் அந்த வரிகள்
நான் இப்ப தான் வார்த்தைகளை கோர்க்கவே கற்று கொண்டிருக்கிறேன்
@ smile
//மரங்களில் இது போல் எழுதவதாலும்
விளம்பரதிற்க்காக அதில் ஆணி அடிப்பதாலும்
அதனுடைய வாழ்நாள் குறையும் என்ற கேள்வி ஞானம்
அதற்காக தான் அந்த வரிகள்
நான் இப்ப தான் வார்த்தைகளை கோர்க்கவே கற்று கொண்டிருக்கிறேன்//
நிச்சயமாக. ஆணி அடித்தால் ஆயுள் குறையும் என்பது மூடப்பழக்கம் என்று தோன்றினாலும், மரத்துக்கு அதுவும் வலிக்கும். ஆனால் மனித சமுதாயம் எவ்வளவு சுயநலத்தில் மூழ்கியுள்ளது என்பது நாமனைவரும் அறிவோம். விலங்குகள் மற்றும் தாவர உலகைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் கொள்ளையடித்து வருகிறோம்.
பதிவுலகு என்பது நம்மை வெளிப்படுத்திக்கொள்ள. மற்றவர்களுக்குப் பிடித்தால் நல்லது. இல்லாவிட்டாலும் உங்களுக்காவது திருப்தி இருக்கும். தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
தவறாக நீங்கள் ஏதும் சொல்லவில்லை. மேலும் எனக்கு குட்டு/மொத்து/அடி/உதை எல்லாம் வாங்கிப் பழக்கம்தான். அப்டியே லூசா விடுங்க சார்.
அனுஜன்யா
ஆணி அடிப்பது பெயர் எழுதுவது போன்றவையனால்
மரத்தில் வண்டு/பூச்சிகள் /ஓட்டுனி போன்றவை
குடியேறும் அதனால் மரத்தின் உயிர் குறையும்
(பேய் பிடித்து மரத்தில் ஆணி அடித்தால் பேய் போய் விடும்
என்பது வேண்டுமானால் மூடபழக்கம் ஆக இருக்கலாம் )
அப்புறம் சார் லாம் வேண்டாமே
உங்களுடன் சிறியவன் என்றே நினைக்கிறேன்
@ smile
ஆணி அடிப்பதில் அப்படியெல்லாம் விஷயம் உள்ளதா! ஓகே.
சிறியவன்! நடத்துங்க.. சாரி நடத்து .. எல்லோருக்கும் அண்ணாவா இருந்துட்டு போறேன். no probs.
அனுஜன்யா
//முதிர்கன்னி பயணித்த
ஆட்டோ பின்புறம்
'பெண்ணுக்குத் திருமண வயது 18 '//
என்ன சொல்ல ...
எந்த வகையராக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் அப்பிடியே போய்ட்டேயிருங்க...
நாலும் நச் சார்.
Post a Comment