சாயும் பொழுதும், சாயம் போதலும்
சிகப்புக் கழுத்துப் பட்டையில்
சிந்திய காப்பித் துளிகள்;
மாலையில் மனைவி
சுருட்டியபடியே
கறை போகாதென்றாள்,
காப்பி கறையை பார்த்தபடியும்
லிப்ஸ்டிக் சாயத்தை
ஸ்பரிசித்தபடியும்.
சுருட்டப்பட்டது
பேராண்மையும் கூட;
காலை சுவைத்தது
இரவில் கசந்தது.
35 comments:
:((
நாந்தான் ஃபர்ஸ்டா??
கடைசி இரண்டு வரிகள்
இரவில் இனித்தது
பகலில் கசத்தது
என்றால் வேறு அர்த்தம் கொடுக்குமோ?
@ ஸ்ரீ
சும்மா, கவிதைதானே. நான் ரொம்ப நல்லவன்.
@ வால்பையன்
தல, வர வர உங்க ரவுசு தாங்க முடியல. எல்லாத்தையும் எதிர் கவித ஆக்குறீங்க! :))) ஆமாம், வேறு அர்த்தம் கொடுக்கும். ஆனால், மேலே உள்ள வரிகளுடன் ஒத்துப் போகுமா?
அனுஜன்யா
சுருட்டியபடியே
கறை போகாதென்றாள்,
மிக பெரிய மனது அவன் மனைவிக்கு
// அனுஜன்யா said...
@ ஸ்ரீ
சும்மா, கவிதைதானே. நான் ரொம்ப நல்லவன்.//
என் அண்ணா நல்லவன்னு தான் ஊரு உலகத்துக்கே தெரியுமே.. இத நீங்க தனியா வேற சொல்லனுமா அண்ணா?? :))
// நான் ரொம்ப நல்லவன். //
அப்படியா..? சொல்லவே இல்ல.. :)
@ மின்னல்
ஆம். உண்மைதான். மன்னிக்கமுடியாததை மன்னித்தாளா என்று தெரியாது!
@ ஸ்ரீ & பாலா
ஸ்ரீ, உனக்குத் தெரிகிறது. பாலாவுக்கு ... ஹம்.
அனுஜன்யா
யார் அண்ணா பாலா?? :))
அண்ணா.. இதெல்லாம் ரெம்பவே ஓவரு.. இப்படியெல்லாம் என்ன அசிங்கப்படுத்தக் கூடாது.. :-(
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. :)
@ ஸ்ரீ
bee'morgan என்ற பீட்டர் பெயரின் பின் பாலமுருகன் என்ற அழகிய பெயருடன் உள்ள படைப்பாளி பற்றி உனக்குத் தெரியாதா! ஐயகோ!
@ bee'morgan
பாலா, இந்த அறிமுகம் போதுமா!
அனுஜன்யா
அச்சச்சோ சாரி பாலா அண்ணா.. :))உங்க ப்ளாக் தெரியும்.. பட் உங்க நிஜம் பெயர் தெரியாது.. :))
@ அண்ணா..:
ஆகா.. அருமை.. இப்போதைக்கு போதும்... நின் சேவையில் யாம் மகிழ்ந்தோம்.. (lol)
@ ஸ்ரீ:
No worries. அரசியல்ல இதெல்லாம் ..... ... ....! :))
நல்லா வந்திருக்கு கவிதை.
//காலை சுவைத்தது
இரவில் கசந்தது.//
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
இதற்கு இதுதான் முடிவு.
உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும். நிச்சயம் விலையுண்டு.
சுந்தர் மாதிரி எழுதறீங்க..
கவிதை நல்லா இருக்கு..
//அனுஜன்யா said...
@ ஸ்ரீ
சும்மா, கவிதைதானே. நான் ரொம்ப நல்லவன்.//
அட.. என்னங்கணா.. எப்போதும் பொய் சொல்லிக்கிட்டு..
ஹி ஹி ஹி..
மத்தவங்க சொன்னதேதான்... கடைசி இரண்டு வரிகள்... எவ்வளவு நிஜம்!
அனுஜன்யா,
நல்லா இருக்கு!
@ சுந்தர்
உங்கள் முதல் வருகையா? நன்றி.
@ ஜ்யோவ்ராம்
நன்றி. (கேட்டு வாங்குறது வேற மாதிரி இனிக்குது :)) )
@ முத்துவேல்
நன்றி முத்துவேல். (எச்சரிக்கைக்கும்)
@ சரவணன்
சரா, ஏதோ ஜ்யோவ்ராம் கொஞ்சம் நட்பா இருக்குறது பிடிக்கலியா? நிச்சயமா கோவம் வரும் அவருக்கு.
@ குருநாதன்
நீங்களும் இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். நன்றி. முகுந்த் எங்கே ஆளையே காணோம்?
@ ரவிசங்கர்
நன்றி ரவி.
அனுஜன்யா
நல்லா இருந்தது!
உங்களோட "துயிலும் பெண்" S.ராமகிருஷ்ணனோட site-ல படிச்சேன், ரொம்ப நல்லா இருந்தது (உங்களோடதுதனே?). கலக்குங்க!
Gandhi
@ tkbg
நன்றி காந்தி.
அது நான்தான். எஸ்ராவுடன் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
அனுஜன்யா
//கறை போகாதென்றாள்,
காப்பி கறையை பார்த்தபடியும்
லிப்ஸ்டிக் சாயத்தை
ஸ்பரிசித்தபடியும்.//
அழகான வரிகள். கவிதை நல்லா இருக்கு.
@ புதியவன்
நன்றி. உண்மையிலேயே புதியவன்தான் நீங்கள் இங்கு.
அனுஜன்யா
நன்றி! முகுந்தன் ஒரு சிறிய இடைவெளி விட்டு கூடிய சீக்கிரம் மறுபடியும் ஒரு வலம் வருவார். :)
ஆஹா.. கலக்குறீங்களே.. ஒரு சின்ன கவிதைக்குள்ள ஒரு பெரிய கதையவே சொல்லிட்டீங்களே.. சூப்பர்.. அருமை அனுஜன்யா.. பாராட்டுக்கள்.
அனுஜன்யா,
கொஞ்சம் வேலை... அதான் ரொம்ப நாளா வர முடியலை....
எப்பவும் போல் போதில் அறைந்தது போல் இருந்தது...
அனுஜன்யா,
கொஞ்சம் வேலை... அதான் ரொம்ப நாளா வர முடியலை....
எப்பவும் போல் பொட்டில் அறைந்தது போல் இருந்தது...
@ குருநாதன்
சொன்னவுடன் முகுந்த் ஆஜர். நன்றி குரு.
@ வெண்பூ
ரொம்ப பிசியா தல? நன்றி.
@ முகுந்தன்
ஹாய் முகுந்த். எவ்வளவு நாளாச்சு! Settled? கேஷவ் எப்படி இருக்கிறான்? நேரம் கிடைக்கும் போது வரவும். நன்றி, 'எப்போதும் போல்' பாராட்டுக்கு.
அனுஜன்யா
கசப்பும் இனிப்பும் ஒன்றே. இரண்டும் சுவைகள் தான்..
நல்லாயிருக்கு..
நன்றி வண்ணத்துப்பூச்சியார். சினிமாவில் நிறைய ஆர்வம் போலும்!
அனுஜன்யா
உலக சினிமாவில் ஆர்வம் அதிகம்.
5 பாட்டு,4 fight பிடிக்கலை..
நன்றி..
@ வ.பூச்சியார்
:)))
@ முபாரக்
_/\_
அனுஜன்யா
Post a Comment