கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.
வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்
அவர்கள் என்னை
பார்க்கவில்லை. அல்லது
பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்
(நவீன விருட்சம் இதழில் வெளியானது)
31 comments:
கவிதை வெகு அருமை.
//ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்//
அற்புதம் அனுஜன்யா. வாழ்த்துக்கள்.
"பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்"..
ம்ம்ம்ம் கவன ஈர்ர்ப்புக்கு ஆயிரம் வழிகள்... நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள்.
இப்போதுதான் அழகிசிங்கர் ப்ளாக்கில் பின்னூட்டம் செய்தேன்.
ரொம்ப அருமையா இருக்கு தலைவரே !
//இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்//
ஏதோ லேடிஸ் காலேஜ்குள்ள புகுந்த அனுபவம் போலிருக்கிறது.
நல்ல கவிதை விருட்சத்தில் ஏற்கனவே படித்து விட்டேன்.
// முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி ///
ஏனுங்கோ .....!!!!! கணக்கு பாடத்துல நீங்க புலியோ.......????
கவிதை நெம்ப சூப்பரா இருங்குதுங்கோ.......!!!! படிக்கிறதுக்கு நெம்ப ஈசியா இருந்துதுங்கோ.......!!!!
" வாழ்க வளமுடன் " ....!!!!
Super anna :))
கவிதை வழக்கம்போலவே....
.
.
.
.
.
.
.
.
.
.
புரியல :(
//ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்//
எப்போதும் போல் வித்தியாசமான சிந்தனையில் உங்கள் கவிதை...
அருமை
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்
: கடைசியில் இதுதானே நிதர்சனம்,
கனவைப்போல ஆரம்பித்து முடிவு அருமை.
ஜூடாஸ்கள் - அர்த்தம் சொல்லுங்க சார்.
முதலிலேயே ஏன் பின்னூட்டம் இடவில்லை என்று கேட்பீர்களேயானால்..
பின்னூட்டத்தப் பார்த்துத்தான் குத்து மதிப்பா எந்த திசையில கவிதை பயணிக்குதுனு தெரிஞ்சு, அப்புறம் கவிதையை அதன் ஆழத்தில் இருந்து படிக்க முடிகிறது.
ரொட்டியும் மீன்களும் தொட்டிக்குள் என்றாகிவிட்டதே..
வழக்கம்போல் அனு’ஜம்’யா
சிலுவையை கரையில் வைத்து செல்ல உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது!
அப்படி வைத்து செல்லும் உரிமை உங்களுக்கு இருக்குமானால் மீண்டும் ஏன் தூக்கி செல்ல வேண்டும்!
எல்லாத்தையும் நீங்களே செய்யுங்க!
துக்கம் மட்டும் நாங்க படனுமா?
/அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்//நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்/
நிர்ப்பந்தங்கள் ..
நல்ல கவிதை. கடலுக்குள் போய் வந்ததுபோலிருக்கிறது.
நல்ல கவிதை.....கடலும் அதன் மீன்களும் சலிக்காதவை....
//நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.//
அருமை அண்ணே
தேவகுமாரர்கள் மட்டுமே
சிலுவைகள் சுமக்க வருகின்றனர்
கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.////
நல்லா இருக்குது!! நேரடியான வர்ணனை!!
எங்கு சுத்தினாலும் கடைசியில்
வீட்டுக்கு தான் வந்து சேரனும்
தேவகுமாரர்கள் மட்டுமே
சிலுவைகள் சுமக்க வருகின்றனர்
கவிதை அருமை, பிக் பாக்கெட் சிறுகதையும் வாசித்தேன், மிகப்பிடித்திருந்தது
இப்படித்தான் நானும் கடலுக்குள் சென்றேன்..... அதே மீன்கள், ஜீவராசிகள்,
ஆசைகள் என்றுமே வடிவமெடுத்து முன்வருவதில்லை. நான் எதைப் பற்றி ஆசைப்படுகிறேனோ, அதுவே எனக்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது. எது எனக்கு நேரெதிராக இருக்கிறதோ, அது எனக்கருகே அமர்ந்து கொள்ளப் பார்க்கிறது.
ஜூடோஸ்களின் சக்வாசம் எல்லோருக்கும் அதிகமுண்டு. தவிர்ப்பதும் இயலாததும் அவரவர் திறமை!!!
நல்ல கவிதை... சொல்ல வந்ததை நறுக் கென்று சொன்ன கவிதை!!
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்///
அழகான வரிகள்!
\\எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்\\
மிக ரசித்த வரிகள்
அப்பப்ப இந்தியா வரும்போது சாக்லேட் வாங்கிக்கிட்டு வருத்த ஞாபக படுத்திச்சு ! ஹி ஹி ஹி
இந்த முறை கவிதை புரிஞ்சதுன்னு சொல்லமாட்டேன். ஏன்னா இதுக்கும் நீங்க சிறுகதைன்னு லேபில் பண்ணி இருக்கீங்க.
நாய்களுக்கு பிஸ்கட் போடும்போது இல்லாத உணர்வு, மீனுக்கு ரொட்டி போடும்போது இருந்திருக்கிறது. அப்படித்தானே? இருக்கத்தானே செய்யும். அழகழகான மீன்களுக்கு நடுவே இருக்கும்போது.
முதலில் உள்ள வர்ணனை கண்களுக்கு விருந்தாகவும், இறுதியில் உள்ள வரிகள் சிந்தனைக்கு தீனியாகவும் இருக்கிறது.
நன்றி.
அன்புடன்
மனசற்ற கொடி
@ ராமலக்ஷ்மி
உங்களுக்கு தான் முதல் பரிசு. நீங்க என் பதிவுக்கு முதல்; நான் அங்க கடோசி. நன்றி ராமலக்ஷ்மி.
@ கிருத்திகா
ஆஹா, நம்ம காரக்டரையே ...... :)
நன்றி கவிதாயினி.
@ மண்குதிரை
தலைவரே என்கிறீர்கள். 'மண்குதிரை' யை நம்பி இறங்கலாமா :)
நன்றி.
@ வேலன்
நீங்களும் கிருத்திகா மாதிரி என்னோட காரக்டர .....
நன்றி வேலன்.
@ லவ்டேல் மேடி
நன்றிங்க்னா. பின்னூட்டங்களில் உங்களோடது தனி ஸ்டைலுங்கோ.
@ ஸ்ரீமதி
நன்றி ஸ்ரீ.
@ வெண்பூ
உன்னோட கடவுச் சொல்லே இங்க வந்தா 'புரியல' என்பது தான். நீ என்றாவது 'புரியுது' என்றால், உன் ப்ளாக் கடத்தப் பட்டது என்று எல்லோரும் புரிந்து கொள்ளலாம் :)
சிறிய வயதில் இயேசு பற்றி கதை படித்து/கேட்டிருக்கிறாயா? ஒரு பெரிய கூட்டத்திற்கு ஐந்து ரொட்டிகள், இரண்டு மீன்கள் கொண்டு பசியாற்றியதை?
@ புதியவன்
நன்றி புதியவன். உங்க இடத்திற்கு வந்து கொஞ்ச நாட்கள் ஆச்சு.
@ அமுதா
நன்றி அமுதா. புதியவனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும்
@ அமிர்தவர்ஷிணி அம்மா
நன்றி அமித்து.அம்மா. ஜூடாஸ் - ஏசுவைக் காட்டிக் கொடுத்ததாக நம்பப் படுபவன்.
@ நர்சிம்
//பின்னூட்டத்தப் பார்த்துத்தான் குத்து மதிப்பா எந்த திசையில கவிதை பயணிக்குதுனு தெரிஞ்சு, அப்புறம் கவிதையை அதன் ஆழத்தில் இருந்து படிக்க முடிகிறது.//
நம்ப மாட்டீங்க. ஆனாலும் உண்மை: எனக்கும் அதே நிலை தான்.
நன்றி தல.
@ வால்பையன்
வாங்க குரு. இந்த மாதிரி கேள்வி கேக்குறது ரொம்ப சுலபம். பதில் சொல்றது ...இதுக்கு நீங்க பேசாம எதிர் கவிதை எழுதிடுங்க :)
@ முத்துவேல்
நன்றி முத்துவேல். ஒரு வார்த்தையில் ... அதான் வேலன் உங்கள அப்பிடி புகழுராறு.
@ coolzkarthi
மீன்கள் சலிக்காதவை என்று சொல்வது பார்க்க மட்டும்தானே? இல்லை புசிக்கவுமா? நன்றி கார்த்தி.
@ அத்திரி
நன்றி சகா.
@ புன்னகை
சரிதான். இல்லை, அவர்களை சிலுவையில் அறைவது நமக்கு சுலபமாக இருக்கிறது என்றும் கொள்ளலாம் :) நன்றி.
@ தேவன்மயம்
நன்றி தேவன். ரொம்ப நாட்கள் கழிச்சு வரீங்க. நீங்களாச்சு பரவாயில்ல. நான் வரேவே இல்ல இல்ல?
@ புன்னகை
அது என்ன, மூன்று பின்னூட்டங்கள். நன்றி.
@ யாத்ரா
நன்றி யாத்ரா.
@ ஆதவா
வாங்க ஆதவா. உங்க முதல் வருகை? உங்க பின்னூட்டமே அபாரமா இருக்கு ஆதவா. கவிஞரா நீங்க? நன்றி.
@ ராம்
நன்றி ராம்.
@ முரளி
வாங்க தல. நாம எல்லோரும் தினமும் உணர்வது தானே? நன்றி.
@ மணிகண்டன்
இந்த வருடம் குசும்பனுக்கு விருது கிடைப்பது கஷ்டம்னு நினைக்கிறேன் :)
நல்லா இரு மணி :)
@ உழவன்
ஆஹா, கிருத்திகா, வேலன் ..இப்போ நீங்க. நன்றி தலைவா.
@ மாசற்ற கொடி
என்ன பார்ட்டி இன்னும் வரலியேன்னு நினச்சேன். இது உங்கள் கவிதை முயற்சியா? :))) கோச்சுகாதீங்க, ச்சும்மா.
அனுஜன்யா
உங்கள் கவிதைகள் எண்ணும் ரொட்டி துண்டுகளுக்கு இப்பது 71 மீன்கள் இது 100 பலவாகி வாழ வாழ்த்துகள். நல்ல கவிதை. உங்க கதையையும் படித்தேன் நவீன விருட்சத்தில் வாழ்த்துகள்
@ மின்னல்
சாரி. இன்று தான் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லாததை கவனித்தேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
அனுஜன்யா
வலைச்சரத்தில் இப்பதிவுக்கு இணைப்பும், ஒரு அழைப்பும்.
சகோ, எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு. உந்துதல், கற்பனை எதுவும் இப்ப இல்லை. நாம எழுதுறது முதல்ல நமக்கு பிடிக்கணும் இல்ல :). ஆரோக்கியமற்ற பின்னூட்டங்களை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாததும் ஒரு குறை. மொத்தத்தில் ஒரு நல்ல வாசகனாக முதலில் இருப்போம்னு நிம்மதியா இருக்கேன்.
நீங்க தொடர்ந்து வெளுத்துக் கட்டுவதில் ரொம்பவே பெருமிதம் எனக்கு. இன்னும் இன்னும் ..... சாதனை புரிய வாழ்த்துகள்.
உங்கள் அன்புக்கு ......... எப்பவும் போல நன்றி மட்டுமே சொல்ல முடியுது.
அனுஜன்யா
Post a Comment