Tuesday, April 7, 2009

அரி முகங்கள்


போதையில் வீசியெறியப்பட்டு

மேசையில் சிதறியிருந்த 

பல்வேறு அறிமுகங்கள்

நாலைந்து வரிகளின் பின்

அடுக்கப்பட்ட பொய்கள்

ஒவ்வொரு அட்டைக்கும்

சொல்ல ஒரு கதை 

சுய அட்டைகளும்

பலப்பல மேசைகளில்

வீசியெறியப்பட்டு

காறி உமிழப்படலாமென்று

நினைவில் நிறுத்தியது

முகத்திலடித்த குளுநீர்

காலை புறப்படுமுன்

சட்டைப்பையில்

மூன்று அட்டைகள்

இன்றைய வேடங்கள்

அநேகமாய்

நண்பன், விசுவாசி

மற்றும் கனவான்

என்று இருக்கலாம்

('கீற்று' இதழில் பிரசுரம் ஆகியது)

32 comments:

புதியவன் said...

//அநேகமாய்
நண்பன், விசுவாசி
மற்றும் கனவான்
என்று இருக்கலாம்//

மூன்று முகமூடிகளுடன் முடிவு அருமை...

கார்க்கிபவா said...

இங்கேயும் மொத பேஷண்ட் நான் தானா?

ராமலக்ஷ்மி said...

//இன்றைய வேடங்கள்
அநேகமாய்
நண்பன், விசுவாசி
மற்றும் கனவான்
என்று இருக்கலாம்//

அருமை, குறிப்பாக இவ்வரிகளுடன் கவிதையும் தலைப்பும்.

மண்குதிரை said...

rasiththeen anujanyaa !

சென்ஷி said...

முகமூடிகளற்று நடை பழகுதல் சாத்தியமின்மைகளின் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறது. கவிதை அருமை :-)

மாசற்ற கொடி said...

அரிதாரம் பூசிதானே வேலைக்கு செல்கிறோம் (lipstick, mascara அல்ல ) ஆகையால் இது தவிர்க்க முடியாததே !

அன்புடன்
மாசற்ற கொடி

Prabhu said...

அட, நல்லாருக்கு!

ச.முத்துவேல் said...

மீண்டும் நிர்ப்பந்தங்கள் குறித்த கவிதை.ஆதவன் படைப்புகளில்( நான் இதுவரைப் படித்தவரை), உங்கள் கவிதையிலிருக்கும் மையச்சரடு நன்றாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.உங்கள் சிலவரிக் கவிதை அவற்றை வெளிப்படுத்துவதும், உணர்த்துவதும் அருமை.வேலை, வேடம், நிர்ப்பந்தங்கள்..எல்லாமே சலிப்பையும் விரக்தியையும் அளிக்கிறது.குறிப்பாக இலக்கிய(வி)வாதிகளுக்கு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

உண்மை!

-ப்ரியமுடன்
சேரல்

நாணல் said...

ஹ்ம்ம்ம் அரி முகங்கள்... நம் எல்லோரின் அரி முகங்கள் தான்... நல்ல கவிதை..

Karthikeyan G said...

Fine Sir!!

மேவி... said...

nalla irukku anne ;
chennai vanthudan detaila commentgiren

யாத்ரா said...

கவிதை நிதர்சனம், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது தான் வாழ்க்கை, yes all are hypocrites

thamizhparavai said...

தலைப்பிலேயே கவிதை முடிவு பெற்றாலும் கூட நல்ல கவிதை....

அ.மு.செய்யது said...

உள்ளுறை பொருளை அழ‌காக‌ வெளிக்கொணர்ந்த‌மை பாராட்டுக‌ளுக்குரிய‌து.அருமையான கவிதை அனுஜன்யா..

நீங்க‌ள் மும்பைவாசியா ?? நான் பூனே ( புதுசு ) வாசி.

பூனேவில் த‌மிழ் ப‌த்திரிக்கைக‌ள்,புத்த‌க‌ங்க‌ள் எங்கே கிடைக்கும் என‌ உங்க‌ளுக்கு தெரியுமா ?

narsim said...

எல்லா வரிகளும் அருமை. எதையும் தனித்து எடுத்துப் போட முடியவில்லை.

Thamira said...

கவிதை பிரமாதம், நிதர்சனத்தை வெளிப்படுத்தும் அற்புத வரிகள்.! (என்ன ஏதோ சந்தேகமா பார்ப்பது போல தோன்றுகிறதே? அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல..)

sakthi said...

போதையில் வீசியெறியப்பட்டுமேசையில் சிதறியிருந்த பல்வேறு அறிமுகங்கள்நாலைந்து வரிகளின் பின்அடுக்கப்பட்ட பொய்கள்

arampame arumai

sakthi said...

arumayana kavithai

valthukkal nanbare

மணிகண்டன் said...

கவிதையும் படமும் - இரண்டுமே அருமை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பிடிச்சிருக்கு கவிதை அனுஜன்யா!

குடந்தை அன்புமணி said...

முதன்முறையாக இங்கு வருகிறேன். மனிதர்கள் அணியும் முகமூடிகளை கழற்றினால் நாற்றம் எடுக்கும். கழற்றாமலே கண்டு விலகிவிடுவதே நல்லது! கவிதை நன்றாக இருக்கிறது தோழரே!
எனது கவிதைக்குரல் வலைக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

வால்பையன் said...

//இன்றைய வேடங்கள்

அநேகமாய்

நண்பன், விசுவாசி

மற்றும் கனவான்

என்று இருக்கலாம்//

இது பாஸிடிவ் அப்ரோச்
இதுவே அதிஷாவா இருந்தா!

திருடன், ரவுடி மற்றும் மாமாகாரன் என்றும் இருக்கலாம்னு விளிம்ப தொட்டிருப்பார்!

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இன்றைய வேடங்கள்

அநேகமாய்

நண்பன், விசுவாசி

மற்றும் கனவான்"

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

//இன்றைய வேடங்கள்
அநேகமாய்
நண்பன், விசுவாசி
மற்றும் கனவான்
என்று இருக்கலாம்//

அருமை..

ராம்.CM said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்... நல்லாயிருக்கு..

anujanya said...

@ புதியவன்

நன்றி புதியவன். ரொம்ப நாட்களாச்சு அங்கு வந்து :(

@ கார்க்கி

நல்ல வேளை நீ போணி பண்ணல

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ.

@ மண்குதிரை

நன்றி மலைச்சாமி :)

@ சென்ஷி

நன்றி சகா. நீண்ட நாட்களுக்குப் பின்

@ மாசற்ற கொடி

எஸ் :(. நன்றி.

@ பப்பு

அட, நன்றி.

@ முத்துவேல்

புரிதலுக்கு நன்றி நண்பா. உயிரோசையில் மொத்தமா நண்பர்கள் எல்லோரும் குத்தகையா?

@ சேரல்

நன்றி. உயிரோசைக்கு வாழ்த்துகள்.

@ நாணல்

வாங்க நாணல். உங்கள் தளத்திற்கும் சென்று நாட்கள் பல. கோவிக்காதீர்கள்.

@ கார்த்திகேயன்

வாங்க தல. நன்றி.

@ MayVee

கவிஞர் பீட்டரில் பின்னூட்டம்? :)) நன்றி.

@ யாத்ரா

நன்றி யாத்ரா. உயிரோசைக்கும் வாழ்த்துகள். You are rocking.

@ தமிழ்ப்பறவை

நன்றி தமிழ்ப்பறவை. உங்கள் முதல் வருகை?

@ செய்யது

வாங்க செய்யது பாய். ஆமா, மும்பைதான். ஒரு வார இறுதியில் மும்பை வாங்க.
புனே பற்றி அவ்வளவு தெரியாதே.

@ நர்சிம்

அப்பிடிப் போடுங்க. நன்றி தல.

@ ஆ.மூ.கிருஷ்ணன்

எனக்கென்னவோ டவுட்டாதான் இருக்கு. எதுக்கும் நன்றி.

@ சக்தி

வாங்க சக்தி. உங்கள் முதல் வருகை? நன்றி.

@ மணிகண்டன்

நிசமாத்தான் சொல்லுறியா மணி? நன்றி.

@ ஜ்யோவ்ராம்

நன்றி குரு.

@ குடந்தை அன்புமணி

வாங்க. உங்கள் முதல் வருகை. அங்கேயும் வந்தேனே. நன்றி அன்பு.

@ வால்பையன்

எ-கவிதை எக்ஸ்பெர்ட். நன்றி குரு.

@ கிருத்திகா

உங்க favourite topic இந்த முறை உங்கள் அனுமதி இல்லாமல் எழுதியாச்சு :)
நன்றி கிருத்திகா

@ அமித்து.அம்மா

நன்றி சகோ.

@ ராம்

நன்றி தல. உங்கள் தொடர் ஊக்கத்திற்கு பல நன்றிகள்.

அனுஜன்யா

thamizhparavai said...

//நன்றி தமிழ்ப்பறவை. உங்கள் முதல் வருகை? //
தூக்கிலிடப் பட்ட தாளைப் பற்றிய கவிதையின் பின்னூட்டம் பார்க்க..நன்றி...

ரௌத்ரன் said...

என்னங்க..படிச்ச உடணே புரியுது :)

நல்ல கவிதை அனுஜன்யா...

anujanya said...

@ தமிழ்ப்பறவை

ஓ, சாரி நண்பா. நீங்கள் சொன்னதில் மீண்டும் அந்தக் கவிதையையும், உங்கள் பின்னூட்டத்தையும் படித்தேன். அபார ஞாபகம் உங்களுக்கு. நடுவில் எழுதிய கவிதைகள்/கட்டுரைகள் அவ்வளவாகப் பிடிக்கவில்லை போலும் :)

நன்றி. முடிந்த போது மீண்டும் வருக.

@ ரௌத்ரன்

செம்ம லொள்ளு. இருக்கட்டும் தல. நன்றி ரௌத்ரன். அங்க வந்தும் ரொம்ப நாளாச்சு. வரேன்.

அனுஜன்யா

thamizhparavai said...

அவ்வப்போது வருவேன்... பிடிக்கவில்லை என்பதல்ல... பின்னூட்டம் போடுமளவிற்கு என் மண்டைக்குள் சில கவிதைகள் ஏறாது. அதனால்தான்.
இடையில் அந்த ‘நிழல்கள்’, உறைவாள் இதெல்லாம் வச்சு ஒரு கவிதை படிச்சேன். அதுக்கு மூலமான ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையையும் படிக்கப் போய் மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம்.
இருந்தாலும் புரியும் அப்பிடின்ற நம்பிக்கையில் வந்துக்கிட்டுதான் இருக்கேன்...வாழ்த்துக்கள்..

anujanya said...

@ தமிழ்ப்பறவை

நன்றி நண்பா. ஆம், அந்தக் கவிதை கொஞ்சம் சிக்கல் தான். (அப்ப மீதி? என்றெல்லாம் கேக்கக் கூடாது) என்னுடைய அனுபவத்தில், நான் சொல்ல வந்ததை விட, பல முறை, வாசிப்பவரின் புரிதல் வேறு தளத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். அதனால, தைரியமா, கருத்த சொல்லுங்க தல.

அனுஜன்யா