உலைக்களமும் இரும்புத் தாதுவும்
கைவசமான பூரிப்பில்
கொல்லன் என அறிவித்துக்கொண்டேன்
உருக்கும் வேலையை
தீயிடம் விட்டுவிட்டாலும்
வார்க்கும் கலை வசப்படவில்லை
பூஜ்ய வளையங்கள்
செய்ய மட்டும் அறிந்ததால்
மாளிகையின் வெளிக்கதவை
மறுதலித்துவிட்டேன்
நீள்வட்ட வளையங்களை
வீதியில் வீசிவிட்டேன்
என் உலைக்களத்தில்
நானே ஈ ஆனேன்
நுரை தள்ளி வீழ்ந்தவனுக்கு
சிறுமியொருத்தி கொடுத்தாள்
வீதியில் புழுதிபட்ட
முட்டை வளையத்தை;
சவுக்குக் கம்பங்களை
அருகருகில் வைப்பதற்கு
சங்கிலி வளையங்கள்
செய்யக் கற்றேன்
மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம்
(உயிரோசை 16.02.09 மின்னிதழில் பிரசுரமானது)
33 comments:
எத்தனையோ உள்ளர்த்தங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் கவிதை. மிகவும் ரசித்தேன்.
-ப்ரியமுடன்
சேரல்
//மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம்//
"கொல்லன்"
ஒரே வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள்... அருமையான கவிதை
உயிரோசையிலே வாசித்திருக்கிறேன். மறுபடியும் பகிர்ந்ததற்கு நன்றி அனுஜன்யா!
கவிதை அருமை.
//உருக்கும் வேலையை
தீயிடம் விட்டுவிட்டாலும்
வார்க்கும் கலை வசப்படவில்லை//
வரிகள் அழகு.
கவிதை மிகவும் அருமை
‘வார்க்கும் கலை வசப்படவில்லை’ என்ற வரி வச(சிய)ப்படுத்தி விட்டது தல..
அறிவித்துக்கொள்ளுதலுக்கும் அறியப்படுதலுக்குமான வித்யாசங்களில் ஊஞ்சாலாடுவது தான் வாழ்க்கையின் அங்கீகாரமெனப்படுவது..... நல்ல கவிதை.... மிக நேர்த்தியான வடிவமைப்பு, வார்த்தைகள்... நீங்க கவிதைல ரொம்ப ஜொலிக்கறீங்க அனுஜன்யா.....
"கொல்லன்" என்னை தன் சங்கிலியால் கட்டி"விட்டான்".
அருமையான கவிதை
கவிதை பிடித்திருந்தது.
அருமையா எழுதியிருக்கீங்க.
உயிமையில் உங்கள் கவிதை 'இரு அழகிகள்' படித்தேன் நன்று.
அனுஜன்யா,
கவிதை பிடித்திருந்ததது. வாழ்த்துக்கள்.
- “அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
என்னை என்னுடன் எளிதில் தொடர்பு கொள்ள வைத்தது !!
அழகழகான வார்த்தைக்கோர்வைகள்.. ரசனை.!
கொல்லன்
அழகான ஆக்கம் அனுஜன்யா..
சுண்டியிழுக்கம் வார்த்தை நயமும்,உள்ளுறை பொருளும் எடுத்தாள்கிறது.
கொஞ்சம் கொஞ்சமா கர்வம் வந்துகிட்டு இருந்தது - அனுஜன்யா கவிதைகள் புரிய தொடங்கியதால்.
அதுக்கு வச்சிட்டீங்க ஆப்பு !
உயிரோசையில் வாசித்திருக்கிறேன், கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
//உயிரோசை 16.02.08 மின்னிதழில் பிரசுரமானது)//
எனக்கு தேதி நாள் கிழமை வருடம் இதெல்லாம் தெரியாது, ஒருகணம் நான் மிரண்டே விட்டேன் இது 2008 ஆ அல்லது 2009 ஆ என,,,
இருந்தாலும் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருந்தது கூட என்னைப் பல எண்ணங்களைத் தூண்ட காரணமாயிருந்தது, 2008 க்கு சென்று வந்தேன்
Jk சொல்வார், காலமற்று வாழ்தலைப் பற்றி, இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் எது எதுவோ நினைவு வருது.
//மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம்//
மிகவும் அருமை.
// மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம் //
நெம்ப அருமையான வரிகளுங்கோவ் ....!!!
கலக்கல் கவிதை..!!
வாழ்த்துக்கள்....!! வாழ்க வளமுடன்...!!!
நல்ல வாசகானுபவம் தந்தது.
முதல் ரெண்டு வரி படிச்சதுமே ஏற்கனவே படிச்ச ஞாபகம் ம்ம்ம்ம்.. :)) மறுபடியும் படிக்க நல்லா இருக்கு அண்ணா :)))
சொல்ல மறந்துட்டேன்... தளம் ரொம்ப அழகா, யூத் ஃபுல்லா ;))இருக்கு அண்ணா.. :))))))
நல்ல கவிதை அதோடு கவர்ந்திருழுக்கும் வார்ப்புருவும் நன்று.
'கவிதை எழுதுகிறேன்' என்ற மனநிலையோடு எழுதுகிறீர்களோ... ரொம்ப தர்க்கரீதியாக யோசித்து எழுதுவது போலுள்ளது. கொஞ்சம் பித்தம்தான் பிடிக்கட்டுமே!
@ சேரல்
நன்றி நண்பா.
@ புதியவன்
நன்றி நண்பா. உங்க ரெண்டு பேரு தளத்திற்கும் வந்து நாட்களாகி விட்டது. வரேன்.
@ மண்குதிரை
வாங்க தல. நன்றி.
@ ராமலக்ஷ்மி
நன்றி சகோ. 'மனிதம்' - வாழ்த்துகள் :)
@ VASAGAN
நன்றி. ஒரு நிமிடம் எங்க இன்னொரு 'வாசகன்' (எங்க தலையில் குட்டும் குரு) சார்தான் வந்து பாராட்டினாரோன்னு நினெச்சேன்.
@ நர்சிம்
நன்றி தல.
@ கிருத்திகா
மிக்க நன்றி கிருத்திகா. உங்கள மாதிரி ஆட்கள் பாராட்டினால் மவுசு அதிகம் தான் :)
@ Chill-Peer
வித்தியாசமான பெயர். உங்க முதல் வருகை. நன்றி சில்.
@ Nundhaa
உங்களுக்கும் முதல் வருகை? நன்றி நந்தா.
@ ஆ.முத்துராமலிங்கம்
வாங்க தலைவா. மிக்க மகிழ்ச்சி. உங்க தளத்துக்கும் வரணும். நன்றி.
@ அகநாழிகை
நன்றி வாசு.
@ மஹேஷ்
நன்றி மஹேஷ்.
@ ஆதி
நெசமாவா? ஆதி, என்ன வெச்சு .... சரி தேங்க்ஸ் பா.
@ செய்யது
நன்றி செய்யது.
@ மணிகண்டன்
:). உனக்கு இது வேணும்.
@ யாத்ரா
சரி பண்ணிட்டேன் தல. ஏதோ பழம்பெரும் கவிஞன் அப்படி சொல்லிக் கொள்ளப் பார்த்தேன். ம்ஹும்! நன்றி.
@ மேடி
வாங்க தல. செம்ம கமெண்டு. நன்றி மேடி.
@ செல்வா
நன்றி செல்வா.
@ ஸ்ரீமதி
தெரியும் நீ படிசிருப்பன்னு. நன்றி ஸ்ரீ.
தளம் மாத்தி அமைத்துக் கொடுத்தது நம்ம வேலன் அண்ணாச்சிதான். அவருக்கு தான் நன்றி சொல்லணும்.
@ வெயிலான்
வாங்க கவிஞர்! நன்றி. வார்ப்புரு - மேலே உள்ள கமெண்டு பாருங்க.
@ ஜ்யோவ்
'நச்'.
முடியல. அப்பப்போ தல காட்டுது. இருப்பினும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளரா விக்கிரமன் .....
அனுஜன்யா
நல்லா இருக்குங்க அனுஜன்யா. முன்னமே படித்திருந்தாலும் இப்போ படிக்கும்போது வித்தியாசமா இருக்கு.
மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம்//
really nice sir
பூஜ்ய வளையங்கள்
செய்ய மட்டும் அறிந்ததால்
மாளிகையின் வெளிக்கதவை
மறுதலித்துவிட்டேன்
ithuku per than kavithaiyoo???
nan appo mokkai than pottutu erukena???
என் உலைக்களத்தில்
நானே ஈ ஆனேன்
நுரை தள்ளி வீழ்ந்தவனுக்கு
சிறுமியொருத்தி கொடுத்தாள்
வீதியில் புழுதிபட்ட
முட்டை வளையத்தை;
chance ee illai nga anna vithyasamana varthaigal
@ காந்தி
ஹாய், காந்தி. எங்கே ரொம்ப நாட்களாக ஆளைக் காணோம். நன்றி. அப்புறம் இன்னிக்கு பார்த்தேன். NRI கவிதை நல்லா வந்திருக்கு (உயிரோசையில்). சூப்பர்.
@ சக்தி
வாங்க சக்தி. உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதைனு நினைக்கிறேன். தேங்க்ஸ். வெகு சிலரைத் தவிர வெகு பலர் 'மொக்கை' தாம் எழுதுகிறோம். நன்றி உங்கள் பாராட்டுக்கு. இந்த 'சார்' எல்லாம் வேண்டாமே. என்னதான் நான் யூத் என்றாலும் நீங்க 'அண்ணா' என்றால் நோ ப்ராப்ளம் :)
அனுஜன்யா
ஹாய் :) வேலையில் முழுகிட்டேங்க. அதுனால பதிவும், ‘கருத்தும்’ போட முடியல :)
‘உயிரோசை’ வாழ்த்திற்க்கு நன்றி.
அருமை நண்பரே.. வாழ்த்துக்கள்!
@ காந்தி
வேலை நிச்சயம் முக்கியம். கலை, இலக்கியமெல்லாம் (நம்மைப் போன்றவர்களுக்கு) அதற்குப் பிறகு தான்.
@ உழவன்
நன்றி உழவன்.
அனுஜன்யா
அழகான கவிதை... ஆனால் எனக்கு மட்டும் புரிய நெடுநேரமாகிறது...எப்படிப்பா இந்த வார்த்தைகள், கவிதைக்கான கருக்கள் எல்லாம் பிடிக்கிறீங்க? ஆச்சர்யமா இருக்கு... சாமானியனுக்கு அப்பாற்பட்டவை போல் தோற்றமளிக்கின்றன.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல ரீனா. எழுத எழுத பழகிடும். சுந்தர், கார்க்கி இவங்க கமெண்ட் எல்லாம் படிச்சா, 'ச்சே, நாம் ஏன் கவித எழுதுறோம்'னு கூட தோணும். நன்றி ரீனா.
அனுஜன்யா
Post a Comment