Thursday, May 28, 2009

பிரபாகரன் - நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?



(நீண்ட பதிவு. மன்னித்து விடுங்கள்)

கடந்த இரு வாரங்களாக மன உளைச்சல். புலிகளின் பின்னடைவு கடந்த ஒரு வருடமாக புரிந்தாலும், பிரபாகரன் பற்றிய செய்தி மனதை விசனமாக்கியது உண்மை. அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்று விவாதம் செய்தால், முடிவில்லாமல் போகும் அளவுக்கு சாதக பாதக அம்சங்கள் உண்டு அவரிடத்தில். யார், எங்கிருந்து பேசுகிறோம் என்பதில் இருக்கிறது அவர் நல்லவரா இல்லையா என்று.

என்னை ஒரு வருடம் முன்பு கேட்டிருந்தால், சராசரி இந்தியன் போல 'என்ன சந்தேகம். புலிகள் சரியில்லை. பயங்கரவாதிகள். மேலும், என்ன ஒரு ஆணவத் துணிச்சல் - நம்ம முன்னாள் பிரதமரைக் கொலை செய்வதற்கு?' என்ற 'பொதுப் புத்தி' என்று சிந்தனையாளர்கள் சாடும் குணம் என்னிடம் இருந்தது.

இப்ப
ஒரு வருடத்தில் என்ன நடந்து விட்டது? அவர்கள் - குறிப்பாக பிரபாகரன் - ஏன் இப்போது வேறு மாதிரி தெரியணும்? ஒரு இயக்கம் தேய்ந்து, அழிகிறது; ஒருவர் மரித்திருக்கக் கூடும் என்பதால் வரும் பச்சாதாபமா? என்றால், இல்லை என்றே சொல்வேன்.

நான் அறிந்த தமிழ் ஆர்வலர்கள், அரசியல், சமூக சிந்தனையாளர்கள் என்று பல்வேறு பிரமுகர்களின் வலைத் தளங்களைப் படிக்கும் வாய்ப்பும், முனைப்பும் கடந்த ஒரு வருடம் எனக்குக் கிடைத்தது. இதற்கு முன் என் தமிழார்வம் சராசரி தான். தமிழன் என்பதில் பெருமை. தொன்மையான மொழி மற்றும் கலாசாரம். ஆயினும், 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் கதாநாயகன் நேர்முகத் தேர்வில் சொல்லிக்கொள்ளும் 'தமிழ் பேசும் இந்தியன்' என்று சொல்லிக் கொள்ளவே விருப்பம் - இப்போதும், எப்போதும்;

நான் மதிக்கும் பலரும் இலங்கைத் தமிழர் விடயத்தில் புலிகளை ஒன்றுமே விமர்சனம் செய்யாத போது ஏன் இப்படி என்ற ஆர்வத்தில் படிக்கத் துவங்கியதில் ஈழ மக்களின் துயர நிலை, நியாயத்திற்கு அம்மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அமைதி வழிவிட்டு ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் என்று இயக்கத்தின் பின்புலம் பற்றி ஒரு சிறிய புரிதல் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை 'அவர்கள்' ஆக இருந்தவர்களின் நியாயங்கள், தர்க்கங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கின.


எங்கே மூளைச் சலவை செய்யப் படுகிறோமோ என்ற பதட்டத்தில் சரிசமன் நிலையை நீடிக்கச் செய்ய, துக்ளக் முதல் டைம்ஸ் ஆப் இண்டியா, NDTV என்று வெகுஜன இந்திய ஊடகங்களின் கருத்துகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இவைகளின் குரலின் பின் தென்படும் வெறுமை, மேம்போக்குத் தனம் மற்றும் சில சமயங்களில் போலித்தன்மை இவற்றை இலகுவில் உணர முடிகிறது. உதாரணம்: பிரபாகரன் பற்றி செய்தி சொல்கையில் (ஹெட்லைன்ஸ் டுடே என்று நினைக்கிறேன்) 'இங்கயிருந்து போயிருக்கும் தமிழர்கள், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து தான் நடக்க வேண்டும். மாறாக, குடியுரிமை, தனி ஈழம் என்பதெல்லாம் சிறிலங்கா எப்படி ஒப்புக் கொள்ளும்?' என்ற ரீதியில் அபத்தக் களஞ்சியமாக இருந்தது. இதைத்தானே தமிழரல்லாத இந்தியர்கள் உண்மை என எண்ணுவார்கள்? இப்படித்தானே கருத்தியல் அமைக்கப் படுகிறது. CNN-IBN ஏதோ தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போல "முல்லைத் தீவில் துன்புறும் மக்களின் நிறைய உறவினர்கள் தமிழ் நாடெங்கும் மிக வருத்தத்தில் உள்ளனர்' என்று இலங்கைத் தமிழர்களுக்கு NRI சான்றிதழ் கொடுத்தது.

உலகெங்கும் ஆங்காங்கே விடுதலை வேண்டி பல இனங்கள் போராட்டத்தில் இருந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியன், திபெத், காஷ்மீர், குர்டிஷ், செசென்யா, பாலஸ்தீனம், கொலம்பியாவின் பழங்குடிகள், I.R.A., போஸ்னியா, செர்பியா என்று அண்மைக்கால இரத்த வரலாறுகள் எங்கும் பரவி இருக்கிறது. ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

பேரினத்தைச் சார்ந்த அரசாங்கம், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, இனவாத அரசியலைக் கையிலெடுக்கும் போது துவங்குகிறது இத்தகைய சிற்றின ஒழிப்பு. பிரசார உத்திகளால், பேரினத்தின் மிருக உணர்வுகள் தூண்டப்பட்டு, அவற்றுக்குத் தீனி போடப் படுகிறது.

இந்த இடத்தில் மிக முக்கியமான அம்சம் பொது பிரக்ஞை/மனச்சாட்சி போன்றவை. Collective conscience of the majority. மற்ற போராட்டங்களை உன்னிப்பாக கவனிக்கா விட்டாலும், ஹம்மாஸ் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டங்களைப் பற்றி கருத்து கூறும் அளவில் நிகழ்வுகளை கவனித்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுவது, யூதர்களும் சரி, சிங்களவர்களும் சரி - இந்த விடயத்தில் மனிதாபிமானம், மனசாட்சி இவைகளை முற்றிலும் துறந்து, அரசாங்கத்தின் அராஜக இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மௌன பச்சைக்கொடி காட்டி உதவி இருக்கிறார்கள்.

எப்போது ஒரு அரசே (அதிகாரம் என்று கொள்ளலாம்) தன் குடிகளின் ஒரு சாராரை விரோத மனப்பான்மையில் பார்க்கிறதோ, பேச்சு வார்த்தைகள் இந்தக் கால கட்டத்தில் பயனளிக்கும் என்று எதிர்பார்ப்பது நிராசைதான். யாருக்குமே கத்தியின்றி, இரத்தமின்றி நியாயம் கிடைக்குமெனில், ஏன் அவைகளைக் கையில் எடுக்கப் போகிறார்கள். அதனால், ஈழப் போராட்டம் அமைதி மார்க்கத்திலிருந்து, ஆயுதப் போராட்டமாக வெடித்ததற்கு புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) போன்ற இயக்கங்களும் ஆயுத போராட்டத்தில் தான் குதித்தன. இந்த இயக்கங்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. இவைகளுக்குள் பெரிய வித்தியாசம் இருந்திருக்க சாத்தியக்கூறுகளுமில்லை. புலிகள் கை தாழ்ந்து, ஒரு பேச்சுக்கு TELO கை ஓங்கி இருந்தால், இன்று புலிகளைச் சாடும் நாம், TELO வைத் திட்டிக் கொண்டிருப்போம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால் புலிகள் பக்கம் தவறு இல்லை என்று சொல்ல வரவில்லை. நான் பார்த்த வரையில் அவர்கள் செய்த தவறுகள்:

1. மிதவாதிகள் (அமிர்தலிங்கம் போன்றோர்) அனைவரையும் கொன்றது.

2. மற்ற போராட்ட இயக்கங்களை இராஜ தந்திர முயற்சிகளால் ஒருங்கிணைக்காமல், தீர்த்துக் கட்டியது.

3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.

4. பொதுவாகவே, அவ்வப்போது கிடைத்த அமைதி வாய்ப்புகளை பயன்படுத்தாமல், ஆயுதக் குவிப்புக்கு அந்தத் தருணங்களை உபயோகித்துக் கொண்டது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை என்ற கோணத்தில் புலிகளின் நம்பகத் தன்மை முற்றிலும் இல்லாமல் போனது.

5. அவ்வப்போது கிடைத்த ராணுவ வெற்றிகளால், தன் பலத்தை மிகையாக எண்ணத் துவங்கியது.

6.சிங்களப் பொதுமக்களை தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் அன்னியப் படுத்திக்கொண்டது. இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது.

இதெல்லாம் சரி. இவ்வளவு தவறு செய்த இயக்கத்திற்கு எதற்கு கண்ணீர் சிந்த வேண்டும் என்றால் - புலிகளைப் போல, இப்போது இந்தியா மற்றும் அதற்குள் தமிழ் நாடு செய்த தவறுகளை அலசினால்:

1. முதலில் இந்திரா காந்தி ஆட்சியில், அவர் இலங்கையில் இன்னொரு வங்காள தேசத்தை உருவாக்க முயன்றார். இலங்கை இரண்டாப் பிரிந்து, ஈழம் மலர்வது இந்தியாவுக்கு நல்லது. இந்தியா இன்னும் பெரிய நாடாகும் என்ற கோணத்தில். அதனால், தார்மிக, ஆயுதங்கள், பயிற்சி என்று உதவிகள் எல்லா விதங்களிலும் தரப்பட்டது. தமிழகமும் உற்சாகமாகப் பங்கேற்றது.

2. அப்போதே SAARC மாநாடுகளிலும், தொடர்ந்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியாவின் மீது சிறிலங்கா அரசு இந்த விடயத்தில் குற்றம் சாட்டத் துவங்கி, காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் இவற்றுடன் சேர்ந்து இந்தியாவை விமர்சிக்கத் துவங்கியது.

3. ராஜீவ் காந்தி ஒரு நம்பிக்கை அடிப்படையில் (எனக்குத் தெரிந்த வரை அவருடைய நோக்கங்கள் நல்லவையாகவே இருந்தன) இரு சாராரையும் அமைதிப் பேச்சுக்குக் கொண்டு வரவைத்து, நிரந்தரத் தீர்வுக்கு முயன்றார். ஆனால், IPKF செய்த குளறுபடிகளாலும், அத்துமீறல்களாலும் அமைதி முற்றிலும் போய், ஈழ மக்கள் மனதில் ஆறாத வடுக்களையும், வஞ்சிக்கப்பட்ட உணர்வையும் தந்தது.

4. அவர் மறைவுக்குப் பின் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்த இந்திய அரசு இப்போது திடீரென்று புலிகளை முற்றிலும் ஒழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு, எனக்குப் புரிந்த வரையில் இந்த காரணங்கள் இருக்கலாம்.

a) இந்தியப் பெருங்கடல் இராணுவ கோணத்தில் இப்போது மிக மிக முக்கிய இடமாகி விட்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் எல்லாமே இதில் அதிகாரக் கோலோச்ச முயல்கின்றன. இப்போது தமிழர்களைக் கைவிட்டு, சிங்கள அரசுக்கு உதவினால், அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் முற்றிலும் சாய்வதைத் தவிர்க்கலாம்.

b) இந்தியாவுக்கும், காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பிரிவினைவாதங்களை ராணுவ பலத்துடன் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம். அதற்கான தார்மிக பலம், பிரிவினை கோரும் ஈழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுதல்.

இதில் தமிழகம் செய்த தவறு இது தான்:

இந்திய அரசு உண்மையில் ஒன்றும் ஈழ மக்கள் பால் அக்கறை கொண்டிருக்க வில்லை. தமிழகம் எப்போதும் தந்த அழுத்தமான எதிர்ப்பால், இந்திய அரசு சிங்களப் பேரின வாதத்தைக் கண்டித்தும், ஈழத்தை ஆதரித்தும் வந்தது. இந்திய அமைதிப் படை வீரர்கள் சென்னை திரும்பிய போது அவர்களை கௌரவிக்க மறுத்த கலைஞரின் முடிவால் இலங்கையில் நடப்பது பற்றிய கண்ணோட்டங்களில் ஒரு பெரிய திருப்பமே ஏற்பட்டது. அந்த அளவு பொறுப்புணர்வுடனும், ராஜதந்திரத்துடனும் கலைஞர் தலைமையில் தமிழகம் ஈழப் பிரச்சனையைக் கையாண்டு வந்தது.

இப்போது என்ன காரணத்தினாலோ அந்த போர்க்குணத்தைக் காண இயலவில்லை. Mute spectator எனப்படும் ஊமைப் பார்வையாளராக மட்டுமே தமிழக அரசு செயல் படுகிறது. மாநில, மத்திய ஆட்சி, பதவி அளிக்கும் சுகங்கள், வசதிகள் என்றுதான் என்னுடைய 'பொதுப் புத்தி' சொல்கிறது.

தமிழக மக்களுக்கும் புலிகளின் பால் இருந்த உணர்வு பூர்வ உறவு, ராஜீவ் கொலையினால் பெருமளவு குறைந்தது. இது தற்போதைய தமிழ் தலைவர்களுக்கு மிக ஏதுவாகப் போய், வெறும் தேர்தல் சமய ஊறுகாய் விடயமாகிப் போனது ஒரு துன்பியல் நிகழ்வு.

ஆக, இன்றைய தமிழக ஆளுமைகள் தங்கள் சுகத்திற்காக கொள்கைகளைத் தளர்த்தியதாலும், இந்தத் தருணத்தை இந்திய மத்திய அரசு சரியாக தனது strategic காரணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாலும், ஈழ மக்களுக்கு ஒரு மாபெரும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. சிறிலங்க அரசு இந்தத் தருணங்களின் மதிப்பை மிகத் துல்லியமாக எடை போட்டுப் பயன் அடைத்திருப்பது கண்கூடு.


ஒரு இந்தியனாக மிகவும் தார்மீக உயர்வில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, எனது புரிதலின் அடிப்படையில் இந்திய, தமிழக அரசுகளின் துரோகம் தரும் வலி அதிகம். மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு விசாரணையும் தேவை இல்லை என்று அவசரமாக அறிக்கை தந்து more loyal than the king என்று இந்தியா நிருபித்துக் கொள்ள முயல்வது பார்த்து வரும் வலி.எதிரிகளை மன்னிக்கலாம். மன்னிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளலாம். துரோகிகளை....ம்ம், அவர்களையும் புரிந்து கொள்ளலாம் - காலம் கடந்தாவது.

என்னைப் பொறுத்த வரையில் பெருங்குற்றவாளிகள் பாக் ஜலசந்திக்கு மேற்கிலும், வடக்கிலும் தான் இருக்கிறார்கள். பதிவின் துவக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தாலே, ஈழத்தை உண்ண வரும் தமிழகம் போலத் தான் தோன்றுகிறது. உங்களுக்கு?

பிரபாகரனைப் பொறுத்த வரையில், ஒரு வீரனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பெரிய போராட்டம் செய்தவராகவே தென்படுகிறார். All is fair in Love & War எனும் அடிப்படையில், தவறு என்றாலும், புலிகளின் பயங்கரவாதத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று பி.பி.சி. தளத்தில், இலங்கையில் இருந்து வெளிவரும் Island செய்தித் தாள், பிரபாகரன் பெரிய வீரன் என்றால், ஏன் ஓட ஒளிய வேண்டும்? சயனைட் குப்பி என்ன ஆயிற்று? என்று எள்ளலாகக் கேட்டதைப் படிக்க நேர்ந்தது.

அந்த அறிவிலிகளுக்குச் சொல்லிக் கொள்வது - அவர் கோழை என்றால், எப்போதோ இலங்கையை விட்டு வெளியில் இருந்து போராட்டம் செய்திருப்பார். இத்தகைய செயல், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கும். ஏனென்றால், ஒரு போராட்டம் தொடர, தலைமை மறைவிடத்திலிருந்து செயல் படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும், குடும்பத்துடன், வாழ்நாள் முழுதும் வனங்களில் செலவழித்து, குண்டடி பட்டு (அதுவும் தலையில் தான், புற முதுகில் அல்ல) இறந்தாக எண்ணப்படும் ஒரு வீரனை, இவ்வளவு கேவலப் படுத்துவதில் இருந்து அவர்களின் மன வக்கிரங்கள் புரிகிறது. ஈழ மக்களின் போராட்டத்துக்கான அடிப்படை சிங்கள பேரின வாதத்தின் முகமும் தெரிகிறது.

இதை நான் எழுதியது, என்னைப் போன்ற மிகக் குறைந்த அளவில் இந்த விடயம் பற்றி புரிதல் உள்ள இந்தியர்களுக்காக. இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமலே, புலிகளைப் புரிந்து கொள்ளவும், ஈழ மக்களுக்காக கவலைப்படவும் முடியும் என்று புரிய வைப்பதற்காக மட்டுமே.

இதில் தகவல், கருத்துப் பிழைகள் இருந்தால் - ஒரு குழந்தையின் முதல் தவறை மன்னிப்பது போல விட்டு விடுங்கள்.

64 comments:

முரளிகண்ணன் said...

பதிவின் நீளம் தெரியாத அளவுக்கு
கருத்துக்கள், அதை சொல்லிய விதம் அருமை

Anonymous said...

You have written good articale.

Chennai airport blast done by TEA(another tamil group); not by LTTE.

Common fallacy of 1980's:
Every other tamil eezham freedom groups called as "Puligal" in tamilnadu

Current fallacy: It is just like calling all north indians as 'Settu'and thinking their mother tongue is 'Hindi'

I wish you had to read and think with 360 degree view.

SUBBU said...

என்ன சொல்லி என்ன பன்ன், பாதிய முடிச்சிட்டானுங்க, மீதிய கூடிய சீக்கிரம் முடிச்சிடுவானுங்க :((((((((((

Anonymous said...

நல்ல ஆய்வு. இந்தியப் படைகள் தமிழர்களுக்குச் செய்த அட்டூழியங்கள் பற்று மேலும் தெரிந்து கொள்ளவும். ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள மர்மங்களையும் அறுந்து கொள்ளவும்.

sakthi said...

யார், எங்கிருந்து பேசுகிறோம் என்பதில் இருக்கிறது அவர் நல்லவரா இல்லையா என்று.

உண்மை

sakthi said...

என்னைப் பொறுத்தவரை 'அவர்கள்' ஆக இருந்தவர்களின் நியாயங்கள், தர்க்கங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கின.

இப்பொழுதாவது புரிந்து கொண்டீர்களே அது வரை மகிழ்ச்சியே

சிவக்குமரன் said...

எனக்கு முதல் முதலில் புலிகள் பற்றிய அறிமுகம் கிடைத்தது, நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது,'ஈழப் போராளிகள்' என்ற பெயரில் நிதி வசூல் செய்ய ஊர் ஊராக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் உடையும், தோற்றமும், பேச்சும் எங்களுக்கு மிக ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருந்தது. பிறகு அவர்களைப் பற்றி எங்கள் அப்போதைய தமிழ் ஆசிரியர் அளித்த விளக்கம், அவர்களை வியந்து பார்க்க வைத்தது. இப்போது வரை ஊடகங்கள் நமக்கு அளிக்கும் தகவல்களை வைத்து, அவரவர் பார்வையில் ஒரு முடிவெடுக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, நம் காலத்தில் ஈழ சுயாட்சியை நாம் காணப் போவதில்லை. குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவது ஒரு அடி எடுத்து வைப்போமே!!

sakthi said...

ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.


அதற்காக உலகில் எங்குமே நடக்காத கொடுமை அல்லவா நடக்கின்றது

பெண்கள் மேல் அங்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் உலகத்தில் இது வரை
இல்லாத அளவு மிக கொடுமையாக வக்கிரத்தின் உச்சமாக

மண்குதிரை said...

சகோதர யுத்தத்திற்கு புலிகளை மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது.
அதில் இந்தியா உளவுத் துறையின் பங்கும் இருப்பதாக அறிகிறேன்.

ராஜிவ் கொலை எல்லோருக்கும் உள்ள உணர்வுதான் என்றாலும் அது புலிகளுக்கு அரசியல் ஆதரவு திரட்டுவதற்கு பெரிய தடையாக ஆனது.

ஆண்டன் பாலசிங்கம் போன்றோர்கள் மறைவு பெரிய இழப்பு.

பிரபாகரன் மறைவு குறித்து பத்நாபாவின் அறிக்கை குழப்பமாக இருக்கிறது.

நேற்று இலங்கையில், ஒரு தமிழரின் கடை தீவைத்து கொழுத்தப்பட்டிருக்கிறது. யுத்தம் முடியவில்லை.........

நல்ல அலசல் தலைவரே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கட்டுரையில் சில இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. என்றாலும், உங்கள் பார்வையைத் தெளிவாக முன் வைத்திருக்கிறீர்கள். இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாம்.

அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட உங்களுடைய வழக்கமான எழுத்துகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது இது.

Suddi said...

Hi,

Very good article, though lengthy.

If Rajiv Gandhi was (really) assassinated by LTTE, then is it right for the government to take vengence?.

If it's so-called vengence that the Indian Govt has taken on LTTE (under the able-nole Thyagi Sonia Gandhiji), then this Govt is not fit to rule this country.

Even now, there are speculations that RG was assassinated by CIA, with the help of Chandrasamy and our own Subramanyan Swamy.. which samy did what, only the real samy knows :-)

Many hardcore terrorists have been arrested in India.
Kasab of Mumbai attack, Geelani (Ph. D. holder who provided lodging to Pak trained terrrorists) for Indian parliament attack case...

But these terrorists have not been punished right?. Just conduct a trial for years, do bubble-gum or a mega serial.. Then the issue dies out..

If it's the life of RG, it's precious. If it's the life of other Indian citizens, it's equal to dog's ****?.

This approach we cannot see in US or UK or any European nation.
Every citizen carries equal weightage... Atleast in a state of emergency.

only in India, we Indians as well as politicians say, RG sacrificed, SG sacrificed..

Nobody did any sacrifice, let's be clear in that..

With regard to Prabhakaran, I still feel that he should have joined hands with other SL tamil groups and unitedly fought in peaceful way.. That would have given him more international recognition.

Disclaimer : Neither I hate congress nor like the Gandhi's.. But I am a big fan of Maaveeran.
Hope I will not be subjected to some POTA or NSA laws :-)

Now elections are over, we can talk anything.. Thanks to our (Congress) politicians.

நந்தாகுமாரன் said...

ஒரு serious issue பற்றி ஒரு சீரிய கட்டுரை எழுதியுள்ளீர்கள்

குடந்தை அன்புமணி said...

தெளிவாக அலசியிருக்கிறீர்கள். பிரபாகரன் பற்றிய மர்மங்கள் இன்னும் விலகவில்லை. பத்பநாபாவின் அறிக்கை முன் பின் முரணாக இருக்கிறது. யாரைத்தான் நம்புவது... ஒன்றும் புரியவில்லை...

நையாண்டி நைனா said...

நானும் சில விசயங்களில் தெளிவு பெற்று கொண்டேன்.

nandri.

Mahesh said...

நல்ல அலசல் தலைவரே.. இன்னிக்கு என்ன அலசி துவைச்சு ஆராய்ஞ்சாலும் ஊடகங்கள் மூலமா படிந்து விட்ட பிம்பங்கள் மாறுவது சிரமம்னே தோணுது.....

இருபக்க குறை நிறைகளையும் சீர்தூக்கிப் பார்க்க முதலில் உணர்ச்சி வசப்படுதலிலிருந்து விலகி கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு மறுபடி திறந்த மனதோடு அணுகும்போது நமது அரசியல்வாதிகளுக்கும் புரியலாம். ஆனால் எப்போதுமே அந்தந்த காலக்கட்டத்தின் அரசியல் தேவைகளுக்கு ஏற்பவே நிலைகள் எடுத்தது கண்கூடு. பாழாய் போன அரசியல் :( அரசியல் அரசுக்கு மட்டுந்தானா இல்லை மக்களுக்கும் உண்டா என்பது புரியவே இல்லை.

உண்மைத்தமிழன் said...

குட்போஸ்ட் கவிஞரே..

கவிதைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு இது போன்ற உண்மைகளை கட்டுரை வடிவில் தாருங்கள்..

நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் அனைத்துமே உண்மைதான்..

முதலில் நானும் எனக்குக் கிடைத்திருந்த தகவல்களை வைத்து ஒரு மாதிரியாகத்தான் நினைத்திருந்தேன்.

பின்பு தோண்டத் தோண்டப் புதையலாகக் கிடைத்த தகவல்களினால் ஈழம் பற்றிய பொது அறிவு கிடைக்கப் பெற்று ஈழத்து ஆதரவாளனானேன்..

நன்றி.. நன்றி.. என்னுடைய பொன்னான நேரம் உங்களுடன் செலவானதற்கு..

டிஸ்கி..

இது நீளமான பதி்வு என்று நீங்கள் எழுதியமைக்கு எனது கண்டனங்கள்..

இதெல்லாம் சும்மா..!

கார்க்கிபவா said...

//இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலா//

தெரியாம சொல்லிட்டாரு தல.. இதை மனசுல வச்சு அடுத்த பதிவு இன்னும் பெருசா எழுதுடாதீங்க..:))

/காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான்//

அதுதான் இன்றைய புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம்.. இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சிங்கள ராணுவத்தால் பிரபாகரனின் கெண்டைக்கால் ரோமத்தைக் கூட புடிங்கியிருக்க முடியாது

புலிகள் பக்கம் நிறைய தவறு இருக்கலாம். ஆனால் அவர்கள் நோக்கம்... அதுதான் முக்கியம்.. தீர்ப்பு எழுதிய பின் பேனாவின் முனையை ஒடிப்பது போல ஈழம் மலர்ந்த பின் அவர்களுக்கான தண்டனையை இந்தியா தந்திருக்கலாம்.

என் அப்பா தவறே செய்திருந்தாலும், அவரை அடித்தவ்னைக் கூட நான் சும்மா விட மாட்டேன். அபப்டியிருக்க, சோனியா இப்படி செய்தத்தில் ஆச்சரியமில்லை..

எது எப்படியோ, புலிகள் பயங்கரவாதிகள் என்ற பொதுபுத்தியை அழிக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சி, வீழ்ச்சி என அனைத்தும் வரலாறாக்கப் படவேண்டும். சே அளவுக்கு இல்லையென்றாலும் பிரபாகரனும் வரலாற்று நாயகன் தான், என்னளவில்.

க.பாலாசி said...

பிரபாகரனின் செயல் எதுவாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகதான் இருந்தது, அது சிங்கள ஆதிக்கவாதிகளின் கொட்டத்தை அடக்குவதாகவே இருந்தது.

மேலும் சில தகவல்கள் பெற http://www.balajisinthanai.blogspot.com

Chellamuthu Kuppusamy said...

புலிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ஆயினும் சில கொழும்பு பத்திரிக்கைகள் லலித் அதுலத்முதலி கொலைக்குக் கூட புலிகளே காரணம் என்று எழுதுகின்றன. அப்படி வேண்டுமென்றே எழுதுவது வேறு - அவர்களை விட்டு விடலாம்.

உங்களைப் போல விமர்சனப் பூர்வமாக எழுதும் போது தகவல் பிழைகள் நேராமல் பார்த்துக்கொள்ளவும்.

//இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது//

இதைச் செய்தது புலிகள் இல்லை. அதே போல அலென் தம்பதிகளைக் கடத்தியது (ஈழ ஆயுதப் போராட்டத்தில் நடந்த ஒரே ஆயுதக் கடத்தல்), சூளை மேட்டில் தமிழக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது முதலிய செயல்களைச் செய்த ஆட்கள் (கருணா அல்ல) இன்று இந்தியாவின் ஆதரவோடு இலங்கையில் அமைச்சர்களாக உள்ளனர்.

வெத்து வேட்டு said...

do you know why IPKF had to fight war with LTTE?
LTTE was the one who broke Rajiv-JR accord.
LTTE is the sole reason for all Tamil's problem after 1987.
You are just trying to white wash ltte..so is Srilankan News papers about Srilanka and Indian main media about India.
your article is another ltte supporter's blabbering.
Don't blame anyone else..start with LTTE

Vinitha said...

Nice article, even though I don't believe in idolizing. I have written many articles about non violent method in my blog. At least leaders would have been alive.

Now UN says 50,000 families have been displaced since 1983. That is huge for an ethnic conflict.

But don't compare Prabhakaran with the Indian Mafiaso, might hurt "Eelam" Tamils.

A person who takes sword, dies with it!

vasu balaji said...

நடு நிலையில் எழுதப்பட்டுள்ள இடுகை. பாராட்டுக்கள். புரிதலுக்கு உதவும்.

வளர்மதி said...

மகிழ்ச்சியாக இருக்கிறது அனுஜன்யா.

இரண்டாவது பின்னூட்டமாக வந்துள்ள அனானி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளது போன்ற சிறு தகவல் பிழைகள், ஒன்றிரண்டு கருத்துப் புள்ளிகள் (என் நோக்கில்) தவிர்த்து ஆரோக்கியமானதொரு அரசியல் நோக்கில் எழுதியிருக்கிறீர்கள்.

பரவலான வாசகர்களுக்கு எளிமையாகச் சென்று சேரும் வகையில் ஆரோக்கியமான நோக்கில் நீங்கள் எழுதியிருக்கும் இப்பதிவு மிகவும் முக்கியமானது.

கையளிக்கப்பட்ட கருத்தமைவுகளை பரிசீலனைக்கு உட்படுத்தி மனமாற்றம் கொள்வது என்பது அத்துனை எளிதான விஷயம் அல்ல.

அத்தகைய மனநிலை உங்களுக்கு வாய்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மிக்க அன்புடன்
வளர் ...

Venkatesh Kumaravel said...

நல்ல அலசல். இருந்தாலும், கண்கெட்ட பிறகு என்ன தலைவரே சூரிய நமஸ்காரம்? இப்ப யாரை வச்சு பேச்சுவார்த்தைகள் நடத்த போறாங்களாம்? இலங்கையில் அமைதி திரும்பிதான் விட்டதா?

Kumky said...

அன்பின் நண்பரே,
புலிகள் பற்றி எழுதும் முன் தயவு கூர்ந்து ஷோபா சக்தி எழுதிய ‘ம்’ என்ற நாவலை படிக்கவும்.

Kajan said...

TULF (Tamil United Liberation Front) was a tamil political party in Sri Lanka.

http://en.wikipedia.org/wiki/TULF

நர்சிம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.. பெரும்பான்மையான கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்..

இதற்கு மிக நீண்ட பின்னூட்டம் இடவேண்டும்.. அல்லது பதிவாக.. வரும்.

ஆம்..மிதவாதிகளைக் கொன்றது.. ராஜந்திரத்தை மறந்தது என அடுக்கிக்கொண்டே போகலாம்..

நேர்த்தியான வார்த்தைகளைக் கொண்ட நேர்மையான பதிவு

G. Bala said...

சார் அருமையாக எழுதியிருகிறீர்கள்.... எனக்கு சில விடயங்கள் புரியவில்லை

1. பிரபாகரன் இறந்து விட்டாரா இல்லையா என்பதே குழப்பத்தில் இருக்க நம்மூர் ஆட்கள் "டெத் சர்டிபிகட்" கேட்டது எதற்காக... ராஜிவ் கேசை முடிக்க இப்பொழுது என்ன அவசரம்... எனக்கும் சரியான புரிதல் இல்லாமல் இருந்த போது கேட்டதை எல்லாம் நம்பினேன்.. முத்துகுமாரின் மரண சாசனத்தை படித்தவுடன் தான் எனக்கு ஈழ தமிழர்களை பற்றி தெரிந்துகொள்ளும் எண்ணம் வந்தது... அதை ஒரு முறை படித்து பாருங்கள்...

Suresh Kumar said...

அருமையான அலசல் நண்பரே

thamizhparavai said...

அனுஜன்யா சார்...
எனக்கு இந்தப் பிரச்சினையில் இருந்த குழப்பங்களில் பலவற்றைத் தெளிவு படுத்திய கட்டுரை. இன்னும் விவரமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

IPKF க்கும்,புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றி குழப்பம் இருக்கிறது.
எது எப்படியோ, ஈழத்தமிழர்களின் நிலை அடுத்து எவ்வாறாக இருக்கும் என அனுமானிக்க முடியவில்லை...

அ.மு.செய்யது said...

//1. மிதவாதிகள் (அமிர்தலிங்கம் போன்றோர்) அனைவரையும் கொன்றது.//

பிரபாகரன் சிறுவனாக இருக்கும் போது "செல்வா" போன்ற மிதவாதிகள் ஒடுக்கப்பட்டதை கண்டு தான் போராட்டத்தின் போக்கை மாற்ற வேண்டுமென்று நினைத்தார்.அதற்கு மிதவாதிகளையே முதல் குறியாக வைத்தது அவர் செய்த முதல் தவறு.

விரிவான‌ ப‌திவு.என‌க்கும் சில‌ மாற்று க‌ருத்துக‌ள் இருக்கின்ற‌ன‌.

நாடோடி இலக்கியன் said...

நல்ல அலசல் அனுஜன்யா.

pandiyan said...

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது உங்களில் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?

(2) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

(3) கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுரத்தில் இருந்த பன்னாட்டு அரசியல் மாமா சப்புரமணி சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?

(4) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே போபர்சு ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?

5) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் காங்கிரசுக் கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

(6) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே பாலசுதீன யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(7) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

(8) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(9) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(10) சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் சாகடித்தது எதற்காக?

(11) புலனாய்வு செய்த புண்ணாக்குகளிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(12) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் விசாரிக்கவில்லை.

(13) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

(14)சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது?


(15)திருபெரும்புதூர் உள்ள காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள். இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்?

(16)திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். ஆனால் இதுவரையில் மௌனமாக இருக்கிறார். ஏன்?

(17) மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்?

(18)ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை?

(19) உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்?

(20) வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை?


-மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள காங்கிரசு முண்டங்களே விடை கூறுங்கள்..

இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா? ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

சரண் said...

அருமையான பதிவு..

பிரபாகரனின் நோக்கம் உன்னதமானதாக இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் இந்தப் புலிகள் இயக்கம் உருவானது அதே நோக்கம் கொண்ட பல இயக்கங்கள் கொல்லப்பட்டு என்பதை ஜீரணிக்க முடியவில்லை.. எந்த மக்களைக் காக்க போராடினார்களோ அதே மக்களை, வீரர்களைக் கொல்வதென்பது எப்படிப் பார்த்தாலும் தப்பென்றே படுகிறது. அது மட்டுமில்லாமல் எந்த ஒரு இரண்டாம் கட்ட தலைவன் உருவாகினாலும் அவர்களை கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் கொன்றதும் (பல உதாரணங்கள், புலிகள் ஆதரவாளர்கள் யாரும் இதை மறுப்பதாகத் தெரியவில்லை), பிரபாகரனை மேலும் கெட்டவனாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் அவரை விட்டால் தமிழ் இனத்துக்கு வேறு ஒரு தலைவனில்லை என்பதுதான் இன்னும் சோகம்..


ஆனால் பாண்டியனின் கேள்விகளைப் பார்க்கும் போது.. ஒரு மிகப் பெரிய சதிவலைப் பின்னப்பட்டிருக்கிறது என்பது போலத் தோன்றுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக நம் திராவிட இனம் அழிக்கப்பட்டு வருவது என்னமோ உண்மை..

கீழை ராஸா said...

மிகச் சரியான பாராட்டத்தக்க அலசல்...

"காத்தான் குடி" சம்பவங்களையும் அலசலில் சேர்த்திருக்கலாம்...

Maayavan said...

@அனுஜன்யா..

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்...

//இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது//

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தங்கள் தகவல்களை சரி பார்க்கவும்..


@
pandiyan...

உங்கள் கேள்விகளின் யதார்த்ததுக்கு நான் தலை வணங்குகிறேன்...

rooto said...

பலே பாண்டியா!!! உங்கள் கேள்விகள் அத்தனையும் சிந்திக்கவைப்பவை!!!
வெத்துவேட்டு உம்மையாவே வெத்துவேட்டுதான். ஒட்டுகுழு நாய்களின் குரைப்பை யாரும் கண்டுகொள்ள தேவையில்லை!!

அத்திரி said...

அருமையான அலசல் அண்ணே.... இதே மாதிரியான தங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

ராஜீவை கொன்றது சரி. இந்திய ராணுவம் யாலில் பண்ணிய அட்டூளியங்களுக்கு அவரைக் கொன்றது 100% சரி. இது அனைத்து பாதிக்கப்பட்ட தமிலீல மக்களின் கருத்து.இந்திய ராணுவத்தினால் நாசமாக்கப்பட்ட பெண்ணினாலேயே இது நிறைவேறியது. பிரபாகரன் நல்லவரா இல்லையா என கூற தமிலீல மக்களுக்கு மட்டுமே உரிமை இருக்கு.

K.R.அதியமான் said...

good post.

//3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.
//

The main reason for targeting Rajiv was not revenge (for IPKF atrocites) but a (wrong) calculation that after 1991 elections, Rajiv will become PM again and will send back the IPKF to SL to finish off LTTE.

LTTE's assesment of Indian ground realities and politics was almost always flawed and they certainly did not understand that India will never again send a IPKF into SL.
Indian establishment had learnt a bitter lesson post 1990 and realised that Rajiv was conned by the cunning Jeyawardane to do the dirty job of the SL army (that is dis arming LTTE first).

lot of illusions and wrong assements led to the down fall of LTTE in the long run.

also see this long report in wiki about the past
LTTE murders and genocide :

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

and LTTE's methods to raise funds included arms, drugs
smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc
also they forced recruited boys.

See these too :

USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war
http://www.janes.com/press/press/pc070719_1.shtml

from Jane's Defence Weekly :
http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml

and i wrote the following in orkut :

ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி
விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்
பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,
ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்
(ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம
பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக
முக்கியமானவர்கள்.

உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை
கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.

பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை
நோக்கு பார்வையும் கொண்டவர்.

யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
வெளிப்படையாக‌ பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,
புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.

அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்க‌வில்லை.

http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham

http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece
Anton Balasingham
Journalist who became the chief strategist and negotiator of the Tamil
Tigers in their struggle for autonomy


this is a mail from my professor :

sub : intransigence of LTTE

Dear Athiyaman,

The LTTE wasted all glorious opportunities for an honourable
compromise. Mr. Anton
Balasingam also has to share a part of the blame. The worst crime is
the unnecessary
suffering and loss of lives in the last three months when LTTE knew
that it had absolutely
no chance of victory. By their mistake, they have also done a lot of
disservice to the surviving
members of the Tamil community.

But past is past.

If the scoundrels of Tamilnadu politics keep their mouth shut at this
hour of immense tragedy,
it might benefit the surviving members of Tamil community in Sri Lanka
more. By trying to make
the gullible believe that Prabhakaran is still alive, these rascals
want to ensure their political
survival in Tamilnadu unmindful of the effect it would have to fan the
Sinhalese majoritarian
propoganda and politics.

Let us hope for the best.

கே.என்.சிவராமன் said...

அனு,

பதிவுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், உங்களது உரையாடல்களில், இந்தப் பதிவு முக்கியமானது என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

// பிரபாகரனை மேலும் கெட்டவனாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. -சூர்யா//

சூர்யா கூறியது மிகவும் உண்மை

//ஆனாலும் அவரை விட்டால் தமிழ் இனத்துக்கு வேறு ஒரு தலைவனில்லை என்பதுதான் இன்னும் சோகம்..//
இப்படி தமிழ்நாட்டில் சிலர் நினைப்பது தான் மிகவும் துன்பமானது.இந்த கொலை வெறி பிடித்த மனநேயாளி இலங்கை தமிழர்கள் தலைவராக ஒரு போதும் ஆக முடியாது. இவரால் மக்கள் அனுபவித்த துன்பம் இனி போதும்.

புகழன் said...

விஷயங்கள் நிறைய இருக்கும் போது இந்தப் பதிவு அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை.
இன்னும் பேச வேண்டிய பேச மறந்த, மறுத்த விஷயங்கள் நிறையவே உள்ளன.

இருபுறத்தின் போரிலும் கடைசியில் இழந்து நிற்பது பொதுமக்கள்தான்.

புகழன் said...

//
sakthi said...
ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.


அதற்காக உலகில் எங்குமே நடக்காத கொடுமை அல்லவா நடக்கின்றது

பெண்கள் மேல் அங்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் உலகத்தில் இது வரை
இல்லாத அளவு மிக கொடுமையாக வக்கிரத்தின் உச்சமாக

May 28, 2009 3:10 PM

//

//அதற்காக உலகில் எங்குமே நடக்காத கொடுமை அல்லவா நடக்கின்றது//

உலகில் எல்லா இடங்களிலும் நடப்பதைப் போன்றுதான் இங்கும் நடந்துள்ளது.
எங்குமே நடக்காத கொடுமை என்று வரைமுறைப்படுத்த முடியாது.

வியட்நாம் முதல் இன்றைய ஈராக் வரை அமெரிக்கர்கள் செய்த கொடூரங்களை ஒப்பீட்டளவில் பார்த்தால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறைவுதான் (அதற்காக இது ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்ல வர வில்லை. சிங்கள ராணுவக் கொடூரங்களையும் குறைத்துச் சொல்லவில்லை.)

இலங்கைப் பிரச்சினை நமக்குத் தெரிந்தது போல் உலகின் பல நாடுகளில் நடக்கும் பிரச்சினைகள் தெரிய வருவதில்லை.
மூடி மறைக்கப்படுகின்றன.


இந்த லட்சணத்தில் ராஜபக்சேவை விசாரிக்க ஐ.நா. தயாராகிறதாம்.

நல்ல ஜோக்.

புகழன் said...

பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையில்லை.


அவர் நல்லவரா இருந்தா என்ன கெட்டவரா இருந்தா என்ன?


30 வருட போராட்டத்தின் முடிவு என்ன ஆனது? என்று சிந்திக்கும் போது,

பிரபாகரனை சில நல்ல விஷயங்களுக்கும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு எதைச் செய்யக் கூடாது என்பதையும் பிரபாகரன் செய்த தவறுகளிலிருந்து படிப்பிணை பெற்று மீண்டும் ஒரு நேர்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயல வேண்டும்.



எக்காரணம் கொண்டும் ஈழத் தமிழர்களின் போராட்டங்களை இந்தியத் தமிழர்கள் அரசியலாக்கி விடக்கூடாது.

ராம்.CM said...

நீளம் தெரியாத அளவிற்கு ஆழம்.

ச.முத்துவேல் said...

உங்களின் அரசியல், சமூகக் கருத்துகள், விவாதங்களின் உள்ளே பேசும் அளவுக்கு என் ஆர்வமும் ஈடுபாடுமில்லை.

ஆனால், நான் குறிப்பிட விரும்புவது உங்களின் இந்த வகையான எழுத்தாற்றல். ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டியிருந்தேன் எனினும், இம்முறை சில மடங்குகள் முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் உங்களால், மிகச் சிறப்பாக எழுதமுடியும் நாள் வெகு தொலைவிலில்லை.
படைப்பிலக்கியங்களைப் போல் சொல்லாமல் சொல்வது இங்கு முடியாது. தெளிவாக, ஆதாரப்பூர்வமாக சொல்லியாகவேண்டும். அதற்கு நிறைய மெனக்கிடவேண்டும். அந்த உழைப்பும், ஆர்வமும், அக்கறையும் இப் பதிவில் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் வேண்டும்.

ஏன் இவ்வளவு நாள் இப்படி எழுதாமல் இருந்தாமல் என்று கேட்கத் தோன்றுகிறது.

Ashok D said...

War does not determine who is right only who is left.

Bertrand russell.

போர் எவ்வளவு முட்டாள்தனமானது, துயரமானது என்பது தெறிந்தும் போர் நின்றபாடில்லை. இது மனிதனின் அறியாமையே காட்டுகிறது. இங்கே சாருவின் ‘வன்முறையின் தோல்வி” கட்டுரையும் நினைவு கூறலாம். ஆனால் ஈழ மக்களின் அவலம், அந்த நெடுந்துயர்????குழந்தைகளின் கொடூர மரணங்கள்???? நான் பயந்து நடுங்கி என் பிள்ளையை அனைத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.

நல்ல பதிவு, பதிவுக்குள் பல பதிவு.

Anonymous said...

கொழும்பு கொட்டாஞசேனை புதுச் செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங் கண்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dPj0U0ecQG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e

http://www.asiantribune.com/?q=node/17963

http://www.newstin.co.uk/tag/uk/124022013

Anonymous said...

கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dPj0U0ecQG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e

http://www.asiantribune.com/?q=node/17963

http://www.newstin.co.uk/tag/uk/124022013

அகநாழிகை said...

அனுஜன்யா,
சிந்திக்க வைக்கும் பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.
பிரபாகரன் என்ற மாவீரனின் மரணம் பற்றிய விவரங்கள் இன்னமும் மர்மாகவே நீடிப்பதில் உள்ள அரசியல் என்ன என்று யோசித்திருக்கிறோமோ..

பாண்டியன் என்பவரின் பின்னூட்டக்கேள்விகளும் இதன் தொடர்ச்சியாகவே நீள்கிறது. (நானறிந்தவரையில் ‘பாண்டியன்‘ அவராகத்தான் இருக்க முடியும். அவரால் மட்டுமே இத்துணை விவரங்களுடன் பிரபாகரனைப்பற்றி பேசமுடியும் என்று கருதுகிறேன்)

அப்புறம் ஒரு விஷயம், ஏன் நீங்கள் பெரிய பதிவு, சிறிய பதிவு என்றெல்லாம் எழுதி, அதற்கு மன்னியுங்கள் என்றெல்லாம்...
எழுதும்போது 16 வரிகளில் கட்டுரை வரைக என்ற மனோபாவத்துடனே எழுத முடியுமா என்ன?

மீண்டும்
வாழ்த்துக்கள் அனுஜன்யா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

anujanya said...

@ முரளி

நன்றி முரளி

@ Anonymous

You are right sir. I stand corrected. Thanks for pointing this out. Agree with you on fallacies too.

@ சுப்பு

ஆம், விரக்தியா இருந்தாலும், நம்பிக்கையை விடவே கூடாது இல்லையா?

@ அனானி

நன்றி. ஓரளவு தகவல்கள் அறிந்தேன். மேலும் முயல்வேன்.

@ சக்தி

//இப்பொழுதாவது புரிந்து கொண்டீர்களே அது வரை மகிழ்ச்சியே//

Better late than never என்று சொல்வார்களே - அது போல.

ஆம் சக்தி, இனப்போராட்டங்களில் இந்த அளவு பாலியல் வன்முறை நானும் வேறெங்கும் கேள்விப்படவில்லை.

@ சிவக்குமாரன்

நன்றி சிவா. ஆம், நம்பிக்கை எப்போதும் வேண்டும்.

@ மண்குதிரை

ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் பற்றி தெரிந்திருந்தும் எழுத மறந்துவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

@ ஜ்யோவ்

நன்றி ஜ்யோவ்.

@ Suddi

Even I dont think or say that RG 'sacrificed'. But, nonetheless, the killing is a huge mistake from all angles. Agree with you on common man-big shots treatment. The POTA/NSA laws are what is keeping the common man in India from voicing his true opinion. Thanks.

@ Nundhaa

நன்றி நந்தா. இதை விட ஜ்யோவ் பதிவில் உன் கமெண்டை ரசித்தேன்.

@ அன்புமணி

உங்கள் குழப்பம் தான் பெரும்பாலோருக்கு. நன்றி அன்பு.

@ நையாண்டி

நன்றி நைனா :)

@ மஹேஷ்

ஊடகங்கள், அரசியல், பொது மக்களின் அதித உணர்ச்சிவசப்படும் தன்மை எல்லாமே காரணம். நன்றி மஹேஷ்.

@ உண்மைத் தமிழன்

நன்றி அண்ணாச்சி. என் கவிதைகள் மேல் உங்கள் கருத்தும் புரிகிறது :)

நீளம் - :)))

@ கார்க்கி

நன்றி கார்க்கி. உன் நிலை எனக்கு முன்பே தெரியும். நேற்றைய பதிவும் அதேதான் சொல்கிறது.

@ பாலாஜி

நன்றி பாலாஜி. பார்க்கிறேன்.

@ செல்லமுத்து குப்புசாமி

சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார். தவறுக்கு வருந்துகிறேன். முதலில் முகப்பில்/பதிவில் திருத்தி விடலாமா என்று நினைத்தேன். பிறகு, தவறு செய்ததற்கும், பிறகு உங்கள் போன்றவர்கள் சுட்டிக் காட்டியதற்கும் நிரூபணம் இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். நன்றி.

@ வெத்து வேட்டு

There are always two sides to a coin. You will see from the feedbacks that there are dramatically different views on things you have commented. I have only tried to be honest with myself and if that appears a "supporter's blabbering", then so be it. Thanks anyway for coming :)

@ Vinitha

On paper, no one can dispute the merits of Non-violence. But, you also need a benign aggressor/ruler to appreciate its merits. If you are dominated by beasts, while it is still nice to talk about non-violence and appear politically correct, reality is different.

I dont remember to have compared Prabakaran with Indian Mafiaso :).

As for swords - Some times it is better to take swords, die of it rather than being a tame vegetable all through. Thanks for your comments.

@ பாலா

நான் எழுதியது இதற்கு தான். மிக்க நன்றி பாலா.

@ வளர்

எனக்கு மொழி எப்போதுமே உன்னைப் போன்றோ, அய்யனார் போலவோ கைவசப் படாது வளர். ஆயினும், என்னளவிலும் கூடியவரை எளிய மொழியில், jargons இல்லாமல் எழுத முயன்றேன். யாரும் மாற்ற முயலாததால் தான் கொஞ்சமாவது மாற்றம் வந்தது :)

தவறுகளுக்கு - வருந்துகிறேன்.

கருத்துப் புள்ளிகள் - அதுவும் இருக்கும். வளர், ஜ்யோவ், பை.காரன், நரசிம் என்று உங்களுக்கு இடையேயும் இந்த விடயத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும் என்றும் தோன்றுகிறது. உனக்கு மகிழ்ச்சி என்பதில் எனக்கும் மகிழ்ச்சி என்றாலும், இது நடக்கும் பின்புலம் தான் .......

நன்றி வளர் யாவற்றுக்கும்.

anujanya said...

@ வெங்கிராஜா

நீங்க சொல்றது எல்லாமே சரிதான் வெங்கி. ஆனாலும், நம்பிக்கை மட்டும் இழக்கக் கூடாது. நன்றி.

@ கும்க்கி

நன்றி தல. அவசியம் படிக்கிறேன். ஆயினும் அது ஒரு நாவல். அதாவது ஒருவரின் பார்வைகள் என்பது தானே. நீங்க சொல்வதை வெச்சுப் பார்த்தால், கொஞ்சம் எதிர்மறைக் கருத்தா இருக்கும் போல இருக்கு. இருந்தாலும் படிக்கிறேன்.

@ Kajan

Already wrongly mentioned about Chennai Airport blast. This is another error in my post. Thanks for pointing this out too Kajan. Regret the error.

@ நர்சிம்

நன்றி தல. I know this is a topic close to your heart. எழுதுங்கள்.

@ G.Bala

நிறைய விஷயங்கள் நமக்கு இன்னமும் முழுதாகத் தெரியவோ புரியவோ இல்லை என்பது தான் உண்மை. முத்துக்குமாரின் மரண சாசனம் அப்போதே படித்தேன். ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவர். இங்கே வெறும் ஒரு வாரம் தலைப்புச் செய்தியாகி, இப்போது மறந்து போன பலருள் ஒருவராகியது ஒரு அவலம். நன்றி பாலா.

@ சுரேஷ்

நன்றி சுரேஷ்.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. IPKF, ராஜீவ் மரணம் என்று விளங்காத மர்மங்கள் நிறைய இருக்கு.

@ வா(வ)ரம்

நன்றி

@ செய்யது

நன்றி.

@ நாடோடி இலக்கியன்

நன்றி நாடோடி

@ pandiyan

அய்யா, சுனாமி போல தாக்குகிறீர்கள். நிறைய அதிர்ச்சியான குற்றச்சாட்டுகள். முன்பே கேள்விப் பட்டும் இருக்கிறேன். நான் காங்கிரஸ்காரன் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

@ சூர்யா

நன்றி சூர்யா. சாதக/பாதக அம்சங்கள் நிரம்பியவர்கள் தாமே நாம் எல்லோரும். அவர் விடயத்தில் எல்லாமே மிகைபடுத்தித் தெரிகிறது.

@ கீழை ராசா

நன்றி சார். 'காத்தான் குடி' பற்றி எனக்கு பரிச்சயம் இல்லை சார். நீங்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.

@ மாயவன்

நன்றி மாயவன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. மன்னிக்கவும்.

@ rooto

நன்றி உங்கள் வருகைக்கு.

@ அத்திரி

நன்றி அத்திரி. நான் என்ன வெச்சுக்கிட்டா இல்லைங்கறேன். நம்ப கிட்ட அவ்வளவுதான் அப்பு :)

@ அனானி

உங்கள் கோவம் முற்றிலும் நியாயமானதே. அதனால் உங்களுக்கு நன்றியுடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் ஒப்புக் கொள்ளவில்லை.

@ அதியமான்

Thanks.

//The main reason for targeting Rajiv was not revenge (for IPKF atrocites) but a (wrong) calculation that after 1991 elections, Rajiv will become PM again and will send back the IPKF to SL to finish off LTTE.//

This is a very different perspective and to me appears as a more valid kind of motive from 'movement' angle rathar than a vendetta for atrocities committed. I am saying this from the point of view of strategy. If a movement is seeking vendetta at the cost of its imminent peril, then it is foolish. Instead if it is carrying out a 'pre-emptive strike' to thwart another IPKF incursion, then, however foolish the notion may be, it is a different matter altogether. However, only the deep insiders within LTTE will know the real motive. Also, it has become debatable whether LTTE were the sole assasins or were merely used.

முன்பே சொன்னது போல, ஆன்டன் பாலசிங்கம் பற்றி கொஞ்சமாவது இந்தப் பதிவில் எழுதி இருக்க வேண்டும்.

நன்றி அதியமான்.

@ பை.காரன்

நன்றி பை.காரன் - இத்துடன் என்னை விட்டு விட்டதற்கு :)

@ அனானி

நீங்கள் ஏதோ விதத்தில் அவர் நடவடிக்கைகளால் துன்பப் பட்டிருக்க வேண்டும். ஆயினும், பலருக்கும் பல கருத்துகளும் இருப்பதைப் பார்க்கவும் செய்கிறீர்கள். நன்றி.

@ புகழன்

நன்றி உங்கள் வருகைக்கு. நிறைய 'அனுபவித்த' விரக்தி உங்களிடம். இங்கு ஈழம் அரசியலாகி வெகு நாட்களாகி விட்டது நண்பா.

@ ராம்

ரொம்ப நாட்கள் கழித்து வருகை தல. நன்றி.

@ முத்துவேல்

நன்றி முத்துவேல். மொத்தத்தில் 'கவிதை' யிலிருந்து தொலைந்து போ என்கிறாய் :)

@ அசோக்

நன்றி அசோக். உங்களைப் போலவே நானும், இன்னும் பலரும்.

@ அனானி

நன்றி; நன்றி.

@ அகநாழிகை

மிக்க நன்றி வாசு. உங்களுக்கு இன்னும் அதிகம் தெரிந்து இருக்க வேண்டும்.

//எழுதும்போது 16 வரிகளில் கட்டுரை வரைக என்ற மனோபாவத்துடனே எழுத முடியுமா என்ன?//

இதை தயவு செய்து நம்ம கார்க்கியிடம் சொல்லுங்கள் :)

நன்றி வாசு.

பின்னூட்டம் எழுதிய, பின்னூட்டத்தில் திட்ட நினைத்து 'பொழச்சுப் போ' என்று விட்டு விட்ட அனைவருக்கும் : நன்றி.

என் முதல் வருட முடிவு இந்த பதிவுடன் வெளி வந்தது சோகமாக இருந்தாலும், சற்று பெருமையாகவும் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா

Anonymous said...

well written article. I totally agree with you about the news content of the north Indian news channels such as NDTV, HT, TIMESNOW and so on...i think they feel there are no south Indian states in India. If they wish not to give importance to news of Srilankan tamils, no problem, but supporting Srilankan govenment and running walk the talk program with Rajapakshe is height of hatefulness of NDTV towards tamilians....sending 500 crores of tax payer money to Srilanka without a proper rehab program is true mockery...
sudhakar, excuse for writing anonymous as the office system don't let me log in to any account

Anonymous said...

பாண்டியன் கேட்டாரே கேள்விகள். ஒரு காங்கிரஸ்காரராலும் பதிலளிக்க முடியாது. அந்தளவுக்கு குற்றம் தோய்ந்த கைகள். நன்றி பாண்டியன். பிரபாகரன் இல்லாத வாழ்வை ஈழ மக்கள் எண்ணி பார்க்கவே முடியாது என நினைக்கிறேன்.

ஸ்ரீ.... said...

நல்லதோர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்த உணர்வு. தெளிவான பார்வையில் எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

anujanya said...

@ Anonymous

The main stream English channels have only superficial knowledge and pay cursory interest to affairs in the South and North East India. Most of their anchors are from the North and Western parts and have a general indifference to knowing things from South and North East.

But to be fair, we are also guilty of absolutely ignoring the North East. How many of us really know whats happening there or are interested?

Thanks for your visit.

@ அனானி

நன்றி உங்கள் வருகைக்கு.

@ ஸ்ரீ

மிக்க நன்றி ஸ்ரீ உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

@ கட்டபொம்மன்

வரேங்க.

@ வாரம்

நன்றி.

அனுஜன்யா

Anonymous said...

Read this post from NDTV....
http://www.ndtv.com/news/blogs/arms_and_the_men/double_standards_of_the_west.php

anujanya said...

@ Anaonymous

Thanks. Gave my feedback. For some reason they chose not to publish it. Sort of expected it :)

Anonymous said...

சிறப்பா எழுதியிருக்கீங்க.....

அதுசரி, ஆங்கிலத்தில் பின்னூட்டுபவர்களுக்கு ஆங்கிலத்திலே தான் பதில் சொல்லவேண்டுமா என்ன?
தமிழில் பதிவைப் படித்து படித்துத்தானே பின்னூட்டுகிறார்கள்...

- தமிழ்த்தம்பி

Anonymous said...

very well analysed. expecting more.

read this too.
Hon. V. Prabhakaran : An Avathar for Thamils
http://tamilcause.blogspot.com/2009/11/hon-v-prabhakaran-avathar-for-thamils.html

மணிப்பக்கம் said...

// புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) //

ஈழ தமிழர்களிடம் ஒரு பயம் இருக்கிறது ;)

இந்திய இறையாண்மைக்கும் ஈழ பிரச்சிணைக்கும் ... கலைஞர், சோணியா டயலாக் கெல்லாம் நமக்கெதுக்கு ...?

இறையாண்மை வேடம் போடுவர்களால் ஈழத்துக்கு எந்த காலத்திலும் எதுவும் நடந்து விடாது!

Anonymous said...

30ற்கு மேற்பட்ட போராளி குழுக்கள் புலிகளைப் போலவே போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பெரிய குழுக்களாக வளர்ந்தவை ரெலோ, ஈரோஸ், ப்ளொட், ஈ.பி.டி.பி போன்றவையே. அவர்களை எல்லாம் நஞ்சூட்டின அறையில் கொல்லாமல் விட்டது தான் தலைவர் விட்ட பெரும் பிழை. சினிமாவில் காட்டுவது ஓடி ஓடி அருவாளால் வெட்டி கொல்லவும் இல்லை. சுட்டு கொல்லவும் இல்லை. அதற்காகப் புலிகள் யாரையுமே கொல்லவில்லை என்று சொல்லவில்லை. சிலர் தமிழ் குழுக்களில் சிலரைக் கொன்றார்கள். யார் அந்த கொல்லப்பட்டவர்கள். தன் இனப் பெண்களை கூட்டிக்கொடுத்தார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள், கொள்ளை அடித்தார்கள். அந்த தமிழ் குழு ஆட்களை விட்டு வைத்தால் சிங்களவன் தமிழினத்தை அழிக்க முதல் அவர்களாகவே அழித்திருப்பார்கள். என் குடும்பத்தில் ஒருவருக்கு தீங்கு விளைவிக்க ஒருவன் தொடர்ந்து முயன்றால் அவனை கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லையே. செல்வ் டிவென்ஸை சட்டம் அனுமதிக்குதே. என்ன புலிகள் ஒரு குழுவாக செல்ஃப் டிவென்ஸ் செய்தார்கள்.

இன்னும் இருக்கு. எழுத நேரம் இல்லை. தொடர்ந்து விவாதத்தை நடத்த கொஞ்சம் சலிப்பாகவும் இருக்கு. சேகுவேராவுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவர் எங்கள் தலைவர். மூளைச்சலவை செய்யப்படவில்லை. ஆட்சியின் கீழ் வாழ்ந்திருக்கிறேன்.

அன்டன் பாலசிங்கம் தான் மூளை போலவும் தலைவர் டம்மி பீஸ் போலவும் இங்கே யாரோ சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது மூஞ்சியில் ஒரு குத்துவிட முடியவில்லையே என்று தோன்றுகிறது. அன்டன் பாலசிங்கம் தலைவர் சொல்வதைக் கேட்டு நடப்பவர். எல்லாவற்றையும் சீ.ஈ.ஓ.வே வந்து சதாரண நிலை ஊழியர்களுக்கு எப்போதும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். எல்லாப்பிரச்சினைகளுக்கு அந்த கம்பனி தலைவரே வந்து பப்ளிக்கில் பேச முடியாது. அதற்காக தேர்ச்சி பெற்ற பேச்சாளர்களை வைத்திருப்பார்கள். அவர்கள் போல ஒருவரே அன்டன் பாலசிங்கம். கிட்டத்தட்ட கம்பனிகளின் லொபியிஸ்ட் மாதிரி. அந்த அந்த துறையில் படிச்ச, அனுபவம் உள்ளவர்கள் மாதிரி இவருக்கு பொலிடிக்ஸ் படிச்ச அறிவு இருக்கு. அதுக்காக அவருக்கு எல்லாம் தெரியும், தலைவர் முட்டாள் தனம் செஞ்சார் என்று சொல்லது எல்லாம் டூ மச்.

ஒன்றை மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரே ஒரு தலைவர் தான் புலிகளுக்கும் தமிழர்களுக்கும். அது மேதகு.வே.பிரபாகரன் அவர்களே. அவருக்கு பொலிடிக்ஸ் டிகிரி இல்லை என்றகிற ஒரே காரணத்திற்காக பொலிடிக்ஸ் தெரியாது என்றல்ல. அனுபவ அறிவும் வாழ்க்கையுமே பலதையும் சொல்லிக்கொடுக்கிறது. அப்படித் தான் பல படிக்காத மேதைகள் தோன்றி இருக்கிறார்கள்.

அன்டன் பாலசிங்கம் ஒரு பொலிடிக்கல் க்ரஷுவேட் என்பதால் அவருக்கு பொலிடிக்ஸ்ல எல்லாம் தெரியும் என்றில்லை. அவர் ஒரு மேனேஜர் மாதிரி. அவ்வளவு தான். இதனால் அவரை கொறைச்சு சொல்லுகிறேன் என்றில்லை. அவரை ஏதோ பெரிய அறிவுஜீவி என்றும் தலைவரை டம்மி பீஸ் என்றும் பலர் நினைத்து பேசுவது எரிச்சலை வரவழைக்கிறது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தலைவர் எடுத்த முடிவுகளுக்கு காரணம் இருக்கும். அது அவருக்கு மட்டுமே தெரிஞ்சது. தலைவரைத் தெரிந்தவர்களுக்கும் தெரியும்.

உண்மையில் புலிகள் பற்றி தெரியவேண்டும் என்றால் தலைவராகச் சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமே பல உண்மைகள் தெரியும். "ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள், அது ஊர் உலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்" என்று ஒரு பாடலில் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

அன்டன் பாலசிங்கத்தின் மனைவி கணவரின் உதவியாளரே தவிர என்றுமே புலிகளின் எந்த ஒரு பிரிவுகளுக்கும் தலைமை தாங்கியதில்லை.

Anonymous said...

உங்கள் பார்வை மாற்றத்திற்கு சந்தோசம்.