Monday, June 1, 2009

வேகமுள்


கடைசியில் உட்கார்ந்தவள்
ஐந்தாண்டுத் திட்டம் தீட்டி
வீடு கட்டிக் கொண்டிருந்தாள்
முன்னாலமர்ந்து ஒட்டியவன்
பிரிந்த காதலியை எண்ணிப்
பின்னால் சென்று கொண்டிருந்தான்
நேற்றைய வீட்டுப்பாடத்திற்கும்
நாளைய மாதத் தேர்வுக்கும்
இடையில் அமர்ந்து
சிக்கிக்கொண்டிருந்த மகள்;
பெட்ரோல் டேங்க் மேலமர்ந்து
நிலாவுடன் பேசி வரும் மழலை;
இவர்களின் கால, தூர பரிமாணங்களைத்
துல்லியமாய்க் கணிக்கவியலா
வேகம் காட்டும் முள்
பௌதீக சராசரியாக
'அறுபது' என்றது.


('மனிதம்' ஏப்ரல் 2009 மின்னிதழில் பிரசுரம் ஆனது)

48 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

//இவர்களின் கால, தூர பரிமாணங்களைத்
துல்லியமாய்க் கணிக்கவியலா
வேகம் காட்டும் முள்//

அற்புதமான வரிகள்.

முன்னரே மனிதம் இதழில் வாசித்து ரசித்தது. இப்போது சொல்லிக் கொள்கிறேன் என் வாழ்த்துக்களை:)!

நந்தாகுமாரன் said...

மனிதர்களின் சிந்தனை வேகத்தை ஒரு speedometer உடன் அருமையாக connect செய்து எழுதியுள்ளீர்கள் ...

na.jothi said...

அருமையா இருக்கு அண்ணா

vasu balaji said...

ஹை. ரொம்ப நல்லா இருக்குங்க.

Vijayashankar said...

அருமையா இருக்குங்க.

எப்படி அந்த இதழில் பிரசுரம் செய்வது?

நாங்களும் முயற்சி செய்யலாமே?

--
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு

கே.என்.சிவராமன் said...

நல்லா இருக்கு அனு.. :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மிக நல்ல கவிதை அனுஜன்யா!
வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

மாதவராஜ் said...

நல்லாயிருக்குங்க.
வாழ்க்கை இப்படித்தான் சுமந்து கொண்டு பயணிக்கிறது....

Ashok D said...

சூப்பர்... அனுஜன்யா...

வண்டி ஓட்டத்தில்
அவரவர் மன ஓட்டம்
ஓடுவதோ காலம்


(’நாற்பது’ என்பது மிக சரியாகயிருக்கும் என்பது என் தாழ்மையான க. )

அகநாழிகை said...

அனுஜன்யா,
படிக்கையில் இருசக்கர வாகனத்தில் குடும்ப சகிதம் பயணிக்கின்ற காட்சியை கண்முன் வைக்கிறது.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நந்தாகுமாரன் said...

இது அபத்தவியல் சார்ந்த ஒரு நல்ல கவிதையும் கூட ...

Sanjai Gandhi said...

வாவ்.. நிஜமாவே புரிஞ்சது மாமா.. ஒரு அழகான குட்டிக் கதை கவிதையாக.. :)

நாணல் said...

நல்லா இருக்குங்க... நல்லதொரு கற்பனை, நல்ல கவிதை நடை....

வெண்பூ said...

அருமை அனுஜன்யா.. என் மரமண்டைக்கு புரிவதற்கு இருமுறை படிக்க வேண்டி இருந்தது. ஆனால் புரிந்தபின் மூன்றாம் முறை அனுபவித்து படிக்க முடிந்தது. பாராட்டுகள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அற்புத வரிகள்.

Anonymous said...

வரவர எல்லோருக்கும் புரியும்படிக் கவிதை எழுதுகிறீர்கள; உங்க லெவல்ல இருந்து இறங்கி எங்க லெவலுக்கு வந்து.

நல்லா இருக்கு அனுஜன்யா.

அ.மு.செய்யது said...

சான்ஸே இல்ல...

தாறுமாறு...

thamizhparavai said...

தல கலக்கலா இருக்கு...

யாத்ரா said...

இந்த மனதின் கால தூர பரிமாணங்களை எப்படி அவ்வளவு துல்லியமாக கணித்து விட இயலும். அழகு, அப்படியான மனங்கள், ஒரு வாகனத்தில் பயணிப்பது. இந்தக் கவிதை விரிக்கும் காட்சியும் அதன் அகவுலகும், இந்த ஒட்டு மொத்த மனோநிலைகளை வாகனத்தை இதன் பயணத்தை காட்சிப் படுத்தியிருக்கும் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இக்கவிதை சார்ந்து இதே கருத்தியலில் எனக்கு பல காட்சிகள் என் மனதில் விரிகிறது.

sakthi said...

அருமை அண்ணா

வாழ்கையின் ஒவ்வொருவரின் பார்வை பற்றியுமான அற்புதமான கவிதை

sakthi said...

வெண்பூ said...

அருமை அனுஜன்யா.. என் மரமண்டைக்கு புரிவதற்கு இருமுறை படிக்க வேண்டி இருந்தது. ஆனால் புரிந்தபின் மூன்றாம் முறை அனுபவித்து படிக்க முடிந்தது. பாராட்டுகள்...

எனக்கும்

ரசித்தேன் மிக மிக

Anonymous said...

அனுஜன்யா,

உங்க உயரத்திலிருந்து இறங்கி வந்து எங்க லெவலுக்குக் கவிதை எழுதியிருகீங்க. எல்லோருக்கும் புரியும் கவிதை. நன்று.

ஆ.சுதா said...

கவிதை நன்று

மணிநரேன் said...

நன்றாக உள்ளது..:)

புதியவன் said...

//இவர்களின் கால, தூர பரிமாணங்களைத்
துல்லியமாய்க் கணிக்கவியலா
வேகம் காட்டும் முள்
பௌதீக சராசரியாக
'அறுபது' என்றது.//

யதார்த்தமான வரிகளில் கவிதை அருமை...

மனிதம் மின்னிதழில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...

விஜய் ஆனந்த் said...

எனக்கும் இந்த கவிதை புரியுது...

:-)))...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இம்மாதிரியான நேரடிக் கவிதைகளை நேசிக்கும் இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன் போலும்.

ரொம்பப் பிடிச்சிருக்கு கவிதை.

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க்ணா!

த.அகிலன் said...

அருமை.. மனசுக்குள் ரொம்ப நெருக்கமாயிருந்தன வரிகள். அவையுள் உறைந்த காட்சிகளும்..

Karthikeyan G said...

Super!!

RaGhaV said...

:-))))))

Thamira said...

பிரமாதம்.. நெஜமாத்தான்பா.! அண்ணாச்சி, சுந்தர்ஜியின் பின்னூட்டங்கள் பாத்தீங்கதானே.. இதுதான் எனக்கு புரிகிறது, ரசிக்கமுடிகிறது.

ராம்.CM said...

நல்ல கற்பனை, நல்ல கவிதை..!

மேவி... said...

:-)

(கவிதையை ரசிக்கும் நிலையில் இப்போ இல்லை ; ஆதனால் smiley மட்டும்)

அன்புடன் அருணா said...

சூப்பரா இருக்குங்க!

உயிரோடை said...

வேகமுள்..

தலைப்பே அருமை.

ஆனா கவிதை கொஞ்சம் தாறுமாறா இருக்கோ?

இல்லை எனக்கு தான் புரியலையோ தெரியலை.

TKB காந்தி said...

அனுஜன்யா, கவிதை நல்லா இருக்கு. படித்ததும் மறுபடியும் பார்த்தேன் இது உங்களோட கவிதைதானான்னு, எனக்கும் புரியற மாதிரி எழுதியிருக்கிறீங்களே!

anujanya said...

@ ராமலக்ஷ்மி

அதுக்கு முன்னமேயும் வாசித்தவர் தான் நீங்க :)

நன்றி சகோ. ஒரே பக்கத்தில், நீங்க எழுதிய கவிதைக் கீழே தான் இந்தக் கவிதையும் பிரசுரம் ஆனது இல்லையா?

@ நந்தா

நன்றி நந்தா.

@ J

நன்றி புன்னகை.

@ பாலா

நன்றி பாலா. உங்க தளத்துக்கு வந்தேனே :)

@ விஜய்

இன்னும் பதிவுகள் எழுத ஆரம்பிக்கவில்லையா? editor@manidham.com என்னும் முகவரிக்கு உங்கள் கதை/கவிதை/கட்டுரைகளை அனுபலாம். வாழ்த்துகள் விஜய்.
நன்றி.

@ பை.காரன்

நன்றி நண்பா. எவ்வளவு உற்சாகம் தருகிறது இது!

@ சேரல்

வாங்க சேரல். மிக்க நன்றி.

@ மாதவராஜ்

நன்றி மாதவ். எவ்வளவு எழுதுகிறீர்கள் மாதவ். அபாரம்.

@ அசோக்

வாங்க கவிஞர். நன்றி. உனக்கு நாற்பது கி.மீ. நான் யூத் என்பதால் அறுபது கி.மீ. :)

@ அகநாழிகை

நன்றி வாசு. கவிஞர் பாராட்டு என்றால் மகிழ்ச்சியே தனி.

@ நந்தா

இது என்னை திட்டும் பின்னூட்டம் இல்லை என்று பிரார்த்திக்கிறேன் :)

@ சஞ்சய்

புரிஞ்சிடிச்சா? அப்ப இது கவிதை இல்லையா?

@ நாணல்

வாங்க சகோதரி. ரொம்ப நாளாச்சு நீங்க இந்த வந்து. உடனே நீ மட்டும் என்று என்னைக் கேள்வி கேட்க மாட்டீர்கள் என்று தெரியும் :) நன்றி நாணல்.

@ வெண்பூ

அய்யய்யோ, முதல்ல சஞ்சய். இப்ப நீ. நிச்சயமா இது கவிதை இல்லைன்னு நினைக்கிறேன். ஹ்ம்ம்

@ ராதாகிருஷ்ணன்

ரொம்ப நன்றி சார்.

@ வேலன்

இப்படித் தாக்குகிறீர்கள். இருந்தாலும் நன்றி அண்ணாச்சி.

@ செய்யது

நன்றி செய்யது. 'தாறுமாறு' - :)))

@ தமிழ்ப்பறவை

வாங்க கவிஞர்/ஓவியர். நன்றி.

@ யாத்ரா

மிக்க நன்றி யாத்ரா. இப்படி ஒரு நல்ல கவிஞன் புகழ்வது மகிழ்ச்சியா இருக்கு.

@ சக்தி

நன்றி சக்தி. வெண்பூ கூட எல்லாம் சேராதீங்க.நந்தா/ யாத்ரா/ அக நாழிகை/சேரல் இப்படி படியுங்க. அப்புறம் நான் எழுதுவதை சீண்டக் கூட மாட்டீர்கள்.

@ வேலன்

இதை ஏன் பல முறை சொல்றீங்க வேலன்? ச்சும்மா... நன்றி.

@ முத்துராமலிங்கம்

நன்றி நண்பா. உங்க இடத்துக்கு வரணும்னு ரொம்ப நாளா திட்டம். வரேன்.

@ மணிநரேன்

நன்றி மணி. உங்க முதல் வருகை?

@ புதியவன்

நன்றி நண்பா - காதல் மன்னா!

@ விஜய் ஆனந்த்

சஞ்சய், வெண்பூ இவங்களோட சேர்ந்து விட்டீர்களா? நன்றி.

@ ஜ்யோவ்

ஒண்ணும் புரியல குரு. நீங்க, சிவா எல்லாம் சொல்வதில் ஏதாவது உள்குத்து... எதுக்கும் நன்றி என்று சொல்லிக் கொள்கிறேன்.

@ சென்ஷி

நன்றி மச்சி.

@ அகிலன்

'காதலின் சிறைக்கைதி', 'சாத்தானின் காதலி' என்று அபார எழுத்துக்களை எழுதும் நீங்கள் ஏன் கொஞ்சமாக எழுதுகிறீர்கள் அகில்? நன்றி உங்கள் பாராட்டுக்கு.

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்தி. நீ பெரிய விமர்சகன். அதனால சந்தோஷம்.

@ ராகவேந்திரன்

நன்றி ராக்ஸ்.

@ ஆதி

சஞ்சய், வெண்பூ, விஜய் ஆனந்த், இப்ப நீங்க. எல்லாம் ஒரு குருப்பாத்தான் வரிங்க. நன்றி ஆதி.

@ ராம்

நன்றி தல. உங்க பதிவுகளைப் படிச்சு ரொம்ப நாட்களாகி விட்டது நண்பா. ரயில் பயணம், பணி மாற்றம் என... வரேன்.

@ MayVee

//(கவிதையை ரசிக்கும் நிலையில் இப்போ இல்லை ; ஆதனால் smiley மட்டும்)//

என்ன ஆச்சு நண்பா? ஆல் ஓகே?

@ அருணா

வாங்க ப்ரின்சி. இங்க சில பேரிடம் சொன்னதுதான். உங்க தளத்துக்கும் வந்து ... சரி, சீக்கிரம் வருகிறேன்.

@ உயிரோடை

//ஆனா கவிதை கொஞ்சம் தாறுமாறா இருக்கோ?//

'தாறு மாறு' என்பது ஒரு புகழ்ச்சி என்பது பொருள். வேணும்னா அ.மு. செய்யது கிட்ட கேளுங்க. நன்றி உங்கள் முதல் வருகைக்கு.

அனுஜன்யா

Ashok D said...

என்னோட கேள்வி: இரண்டு குழந்தை ஒரு wifeவொட பைக்கில அறுபது kmla ஓட்டமுடியுமா?

//வாங்க கவிஞர். நன்றி. உனக்கு நாற்பது கி.மீ. நான் யூத் என்பதால் அறுபது கி.மீ.//

தல இதேல்லாம் ஒவரு.. நான் தனியா போனா... 120 km in highway.. cityla 30-40 kmர தாண்டமுடியாது.
நீங்க யூத்து 60 kmன்னா
நாங்க டபுள்ச்ட்ராங் யூத்து 120km

சரி.. என்னை கவிஞர்ன்னு வேற சொல்லிட்டீங்க... அதனால நீங்க யூத்துன்னு ஒத்துக்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா புரியுது சார் இந்தக் கவிதை.

நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லாருக்கு.... குறியீடுகளால் அளவிடமுடியாதவைகளை குறியீட்டால் அளந்துவிட்டீர்கள்.... அருமை.. வாழ்த்துக்கள்.

ny said...

வணக்கம் sir!
இந்த முன்னோடிக் கவிதை தந்த இன்பத்தில்...
சரியாய் ஒரு வருடம் முன்பு ராட்டினத்தில் சுழலத் தொடங்கிய கவிதை வரை பின்னோடினேன்..

கடற்கரையில் ஒரு காலையில் காக்கைக்கூட்டத்தால் திருப்பி விடப்பட்டு நிஜத்தின் நிழல்களில் குதிகால் எம்பிக் கண்டேன் உயிரோசையில் உங்கள் பேரோசையை!!
இனிக்கத் தொடர்வேன் இனி :))

கார்க்கிபவா said...

வாவ்...

நீங்க ஜோக்கு கூட எழுதுவீஙக்ளா தல?

anujanya said...

@ அசோக்

மும்பையில் அப்படிதான் போகிறார்கள். ஒரு வேளை மும்பையில் யூத்துகள் அதிகமோ :)

@ அமித்து.அம்மா

நன்றி மேடம் :)

@ கிருத்திகா

நன்றி கிருத்திகா.

@ கார்டின்

நீங்க சொன்ன எல்லாமே அவ்வளோவ் குளிர்ச்சியா இருக்கு. 'Sir' வேண்டாமே. கார்க்கி சொல்வதை நம்பி என் வயதை நிர்ணயிக்காதீர்கள் - பாருங்க, கவிதைக்கும் ஜோக்குக்கும் வித்தியாசம் தெரியாத (அப்)பாவி அவன்.

@ கார்க்கி

மேலே சொன்னது போதும்னு நினைக்கிறேன் - கிர்ர்ர்ர்ர்

அனுஜன்யா

வணங்காமுடி...! said...

ஒரே நேரத்தில் கால ஓட்டத்தில் பின் நோக்கியும், முன் நோக்கியும் பயணிக்கும் பெற்றோர்.... கால வெளி தாண்டி நிலாவிடம் நேராய் பேசும் குழந்தை.... நேற்றைய, நாளைய சிக்கல்களில் சிறுமி.... அனைவரையும் தாங்கும் ஒரு வண்டி....
வெகு அழகாய் அனைவரையும் யதார்த்தத்தில் இணைக்கும் ஒரு புள்ளியாய் அந்த இறுதி வரி...

அற்புதம்...

anujanya said...

@ வணங்காமுடி

வாங்க சுந்தர், உங்கள் முதல் பின்னூட்டம். முடிந்த போதெல்லாம் வரவும். நன்றி.

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

கவிதை
ரொம்ப நல்லா இருக்கு
வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

anujanya said...

வாங்க கவிஞர், மிக்க நன்றி.

அனுஜன்யா