Thursday, July 23, 2009

பொதுவான போது


'போது' என்பதை 'பொது'
என்று அடித்து விட்டான்
சிக்கனச் சிங்காரமென்பதால்
புதிதாக ஒரு 'போ' மட்டும்
தயாரித்துக் கொண்டான்
இப்போது இந்த 'போ'வை
'பொ' வுக்கும் 'து' வுக்கும்
இடையில் நுழைத்தால்
அது குடும்பத்தில்
குழப்பமுண்டாக்கி
விவாக ரத்தில் முடியுமென்றான்
தயாராக இருக்கும் 'போ' வை
ஏற்கெனவே இருக்கும்
'பொது' வுக்கு முன்னால்
வைத்து, மெல்ல
நடுவில் உள்ள 'பொ' வை
ஒரு விபத்தில்
அழித்து விடலாம்
இறுதியாகக் கிடைக்கும்
'போது' ஒரு
விதவை விவாகத்தில்
பிறந்தது என்றும்
சொல்லிக்கொள்ளலாம் என்றான்
கம்பிகளுக்கு அப்பால்

62 comments:

Raju said...

Aha... Whatanideasirji!

I type like this "pothu" in transliteration and do some editing and you made a poem outta it!

Raju said...

இந்த பக்கம் சும்மா, எட்டிப் பாத்தது ஒரு குத்தமா சாமீ..!
உஹூம்.. நமக்கு தாங்காது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு அனுஜன்யா. இந்த மாதிரி சில வார்த்தைகளோட மாற்றம் நமக்கு ஆச்சரியமான படிமங்களைத் தரும்.

அப்புறம், அது என்ன ‘எழுதின கவிதைகள்'. அப்ப நாங்கல்லாம் சுட்டா போடறோம் :)

மண்குதிரை said...

இந்த விளையாட்டு நல்லா இருக்கு தலைவரே

கே.என்.சிவராமன் said...

அனு,

சொற்களோட அழகா விளையாடியிருக்கீங்க :-). அதனாலயே வார்த்தைகள் நிறம் மாறிக்கிட்டே பூத்து குலுங்குது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கிபவா said...

யப்பா சாமீ அணுகுண்டேதான் :))

சுந்தர்ஜி, எழுதிய கவிதைன்னுதானே சொல்றாரு.. “நான் எழுதிய கவிதைன்னா “சொல்றாரு?

Suresh Kumar said...

பொதுவான போது நல்லா இருக்கு

Vidhoosh said...

ம்ம். நல்லாருக்கு.

///இந்த பக்கம் சும்மா, எட்டிப் பாத்தது ஒரு குத்தமா சாமீ..!
உஹூம்.. நமக்கு தாங்காது.//// எதிர் கவுஜ மன்னர்கள் ராஜுவும், வாலும் "போது"ம் "போது"ம் ஓடிடுவாங்களா??? easy. just for fun.

--
வித்யா

Anonymous said...

உங்க தங்கமணி விளையாட்டுக்குச் சொன்னது உண்மையாகிடுபோல இருக்கே?

அமிர்தவர்ஷினி அம்மா said...

திடீர் திடீர்னு இப்படியாகிறதுதான் பயம்மா இருக்கு சார் :)

நர்சிம் said...

ரொம்ப நேரமா என்ன பின்னூட்டம் போடுறதுன்னே தெரியாம..

அதாவது

புரியாம..

போதும்யா பொது.(நடுவில் த் தை நான் அழிக்கவில்லை,நுழைக்கவுமில்லை)ஸ்ஸ்ஸ்..இங்க வந்தா என்னையும் மாத்திட்டீங்களே யூத்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஒரே குழப்பமா இருக்கே. உலகே மாயம்... வாழ்வே மாயம்....

-ப்ரியமுடன்
சேரல்

வால்பையன் said...

உங்களை கம்பிகளுக்கப்பால் உட்கார வைக்கலைனா நாங்க ஆஸ்பத்திரி பெட்டுல தான் படுக்கனும் போல!

:)

வால்பையன் said...

//மண்குதிரை said...

இந்த விளையாட்டு நல்லா இருக்கு தலைவரே//

எங்கூட வாங்க செத்து செத்து விளையாடலாம்!

மணிகண்டன் said...

பொதும் அனுஜன்யா பொதும்.

நாடோடி இலக்கியன் said...

" நீயெல்லாம் ரொம்ப தூரம் போகனும்டே"ங்கிற மாதிரி இருக்கு சார்.

ரொம்ப யோசிச்சும் புரியல.

Kumky said...

உடம்பு தாங்காது.
ரவி ஷங்கர் ப்ளீஸ்.

பித்தன் said...

எங்கூட வாங்க..... உஹூம்.. நமக்கு தாங்காது.

நந்தாகுமாரன் said...

super boss

நையாண்டி நைனா said...

'பொ' வுக்கும் 'து' வுக்கும்
இடையில் நுழைத்தால்
அது குடும்பத்தில்
குழப்பமுண்டாக்கி
விவாக ரத்தில் முடியுமென்றான்
தயாராக இருக்கும் 'போ' வை
ஏற்கெனவே இருக்கும்
'பொது' வுக்கு முன்னால்
வைத்து, மெல்ல
நடுவில் உள்ள 'பொ' வை
ஒரு விபத்தில்
அழித்து விடலாம்
இறுதியாகக் கிடைக்கும்
'போது' ஒரு
விதவை விவாகத்தில்
பிறந்தது என்றும்*/

http://tamil498a.blogspot.com-லே வரப்போற மேட்டரா... இல்லே வந்த மேட்டரா... அதை மட்டும் சொல்லுங்க போதும் எனக்கு.... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராமலக்ஷ்மி said...

பொழிப்புரை யாரும் சொல்வாங்கன்னு பார்த்தால்
போதும்னு ஜகா வாங்குறாங்க பாதிபேரு:)!
புரிந்த மீதி பேரு சொல்லிட்டாங்க பெருமையா அருமைன்னு!
இரண்டுக்கும் நடுவிலே நான் ’என்னளவில் புரிந்தவரை’
உணர்கிறேன் பிரமாதம்னு!

Mahesh said...

என் முதுகுல இருக்கற மச்சத்தை நானே பாத்துக்க முடியலயேன்னு இத்தனை நாள் இருந்த வருத்தத்தைப் போக்கியதற்கு நன்றி !!!

துபாய் ராஜா said...

நல்லகவிதை....

இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே பக்கத்துல உக்காந்துக்கங்க... பின்னாடி வர்றகூடிய சந்ததிகள் அத பாத்து படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க...

வீக்கெண்ட்ல அடிச்ச சரக்கோட 'போ'தையெல்லாம் 'பொ'தைன்னு எறங்கிடுச்சு.

:))))))))

அ.மு.செய்யது said...

எனக்கு தண்ணி அடிச்சது கிடையாது.

கஞ்சா அடிச்சது கிடையாது.

போதை ஊசி போட்டது கிடையாது.

ஆனா இதெல்லாம் நடந்துரும்னு பயமா இருக்கு..யோச்சி சொல்லுங்க...

அ.மு.செய்யது said...

உங்க‌ள புக‌ழ‌ த‌மிழ்ல‌ வார்த்தை கிடைக்க‌வில்லை.

( டோண்டு அங்கிள் கிட்ட‌ சொல்லி பிரெஞ்ச் ல‌ தேட‌ சொல்லிருக்கேன்.)

பா.ராஜாராம் said...

இது நல்ல யோசனை அனு,..பின்னூட்டங்களை முழுக்க வாசிக்க நேர்கிறபோது உணர முடிகிறது...இன்னும் கவிதை முடியவில்லை என!இந்த படத்தை இப்போதைக்கு தூக்கிவிடாதீர்கள்..

Venkatesh Kumaravel said...

//இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே பக்கத்துல உக்காந்துக்கங்க... பின்னாடி வர்றகூடிய சந்ததிகள் அத பாத்து படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க...//
இங்க என்ன கவிதையோட கமெண்டும் செம இண்டரஸ்டிங்கா போய்கிட்டு இருக்கு! சார்... நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார்!

Ashok D said...

தலைப்பு புரியுதேன்னு கவிதக்குள்ள வந்தா... தப்பாயிடுச்சே...

சே.. வடை போச்சே...

அடுத்த வாசிப்பில் புரியுமான்னு பாக்கலாம்... முடியல...

பரிசல்காரன் said...

இன்னைக்கு கவிதையைப் போட்ட எனக்கு இப்படியும் எழுதலாம்டான்னு சொல்லுது உங்க கவிதை.

இருங்க.. அப்பாலிக்கா உங்களை வெச்சுக்கறேன்!

நேசமித்ரன் said...

அனுஜன்யா

அசத்தல்
பின்றீங்க தலைவரே..!

மங்களூர் சிவா said...

ஹீரோ டயலாக் சூப்பர்

மங்களூர் சிவா said...

/
நர்சிம் said...

ரொம்ப நேரமா என்ன பின்னூட்டம் போடுறதுன்னே தெரியாம..

அதாவது

புரியாம..
/

அதுக்குதான் ஸ்டாண்டர்ட் டெம்ப்ளேட் பின்னூட்டமெல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கனும்
:))))))))))

Unknown said...

மிகவும் அருமையான கவிதைங்க..!!!

(நல்லவேள, குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல..!!??)

நட்புடன் ஜமால் said...

ஐயா!

கவிதையா இது

இத்தனை வரிகள் போட்டு எழுதியிருப்பதற்கு வலிமை பலமா சேர்க்குது தலைப்பு

யோசிப்பதை விட வாசித்து கொண்டேயிருக்கிறேன்

புரிந்து-விட்டதா என்ற புரியாத நிலையில்

தராசு said...

"தொட்டவையனைத்தும்
விட்டுப்போனதில்
மொட்டுகள் கூட
எட்டிப் போனது.

கட்டிப் போட்டவை
சுட்டிக்காட்டிய
வட்டப் பாதையில்......"

என்னது, என்ன சொல்றீங்க, போதுமா, நிறுத்திக்கறதா, சரி சரி வணக்கம்.

Unknown said...

:))

இராம்/Raam said...

மூணு நாலு தடவை படிச்சதும் புரிஞ்சிருச்சு... :)

அருமை

நாஞ்சில் நாதம் said...

//இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே பக்கத்துல உக்காந்துக்கங்க... பின்னாடி வர்றகூடிய சந்ததிகள் அத பாத்து படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க...//

:)))))

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கு மயக்கம் வருது... லப்டாப்ப சாத்திட்டு கொஞ்ச நேரம் படுக்கிறேன்....

மணிநரேன் said...

புரியுதானு படித்து படித்து பார்க்கிறேன்...ம்ஹூம்.

பொதுவானவர்களுக்கு புரியாத போதுதான் கவிதையா!!!!
(நான் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் : சரியா/தவறா)

இரவுப்பறவை said...

அன்புமிகு அனுஜன்யா,

புரிந்தது என்று சொன்னால் என்னையும் அதில் சேர்த்து
விடுவார்கள்,
அதானால் எனக்கும் புரியவில்லை என்றே சொல்லி வைக்கிறேன்...

மறைபொருள் அருமை...

---சௌந்தர்

ச.முத்துவேல் said...

உள்ளேன் அய்யா!(குழப்பத்தில்)

மேவி... said...

vara vara romba payama irukku unga kavithaiyai padikka.....lol


(nangalum ilakkiyavathi than)

விநாயக முருகன் said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

'மாது' என்பதை 'மது'
என்று அடித்து விட்டான்.
சிக்கனச் சிங்காரியென்பதால்
புதிதாக ஒரு 'மா' மட்டும்
தயாரித்துக் கொண்டான்
இப்போது இந்த 'மா'வை
'ம'வுக்கும் 'து'வுக்கும்
இடையில் நுழைத்தால்,
அது கும்பத்தில்
குழப்பமுண்டாக்கி
விவாக ரத்தில் முடியுமென்றான்
தயாராக இருக்கும் 'மா'வை
ஏற்கனவே இருக்கும்
'மது'வுக்கு முன்னால்
வைத்து, மெல்ல
நடுவில் உள்ள 'ம'வை
ஒரு விபத்தில்
அழித்து விடலாம்
இறுதியாகக் கிடைக்கும்
'மாது' ஒரு
விதவை விவாகத்தில்
பிறந்தது என்றும்
சொல்லிக்கொள்ளலாம் என்றான்
தாலிக்குப் பின்னால்.

***

ச்சும்மா டாஸ்மாக்கு.. இல்ல..இல்ல.. டமாஸ்க்கு..! :)

வால்பையன் said...

வசந்தகுமார்!

நான் போதைக்கும் பேதைக்கும் சண்டை போட்டுகொண்டிருந்தேன்!

நீங்க அசால்டா முடிச்சிடிங்க!

பெரிவங்க! பெரியவங்க தான்!

சூப்பரா இருந்தது!

MSK / Saravana said...

:)
:)
:)
(escape)

ஆதவா said...

என்னமோ எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியறது!! புரிஞ்சும் புரியாமல்!@!
(என் தளத்தின் உங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க.)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சும்மா ஜாலிக்குன்னு சொன்னாலும், வசந்தகுமாரின் கவிதையும் நல்லாயிருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

நிஜமா நல்லவன் said...

பல தடவை படிச்சும் புரிஞ்சுதா புரியலையான்னு தெரியாமலே பின்னூட்டம் போட்டுட்டு போறேன்!

anujanya said...

@ Raju

//Aha... Whatanideasirji!//

Still laughing man. Thanks.

@ டக்ளஸ்

கண்ணா, சாரி பா. பயந்திட்டியா? எப்பவும் இப்படி இருக்காது. (இத விட கொல வெறியோட இருக்கும்). நன்றி டக்ளஸ் முதல் வருகைக்கு.

@ ஜ்யோவ்

நினச்சேன் இந்த மாதிரி சிறு வார்த்தை/ எழுத்து விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும்னு.

எழுதின கவிதைகள் - சில சமயம் நாம் பிறர் கவிதைகளையும் போடறேன்ல- அதனால.

சுட்ட கவிதைகள் - நல்ல ஐடியாவா இருக்கே!

@ மண்குதிரை

வாங்க நண்பா. நன்றி. அது சரி, நிறைய எழுதத் துவங்கிட்டீங்க. வரணும்.

@ பை.காரன்

நன்றி பை.கா. உங்க கூட பேசியது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

@ கார்க்கி

டேய், நீ ஒருத்தன் போறும் என் பேர கெடுக்க :)

@ சுரேஷ்

உங்க கமெண்ட் எனக்குப் பிடிச்சிருக்கு சுரேஷ் :). நன்றி
.
@ விதூஷ்

வாங்க கவிதாயினி. ஆஹா, கடைசியில் வாலையே கலாய்க்க ஒத்தரு வந்தாச்சு :)
நன்றி வித்யா.

@ வேலன்

யோவ். சரி சரி. ஏதாவது சொன்னா, இன்னும் போட்டுக் கொடுப்பீங்க அங்க :)

நன்றி வேலன்

@ அமித்து.அம்மா

ஹி ஹி ஹி. பயப்படாதீங்க. சாதாரணமாதான் சிரிச்சேன்.

பதிவுலகுக்கு ஒரு பை.காரன் போறும்கறீங்க. நன்றி AA.

@ நர்சிம்

//போதும்யா பொது.(நடுவில் த் தை நான் அழிக்கவில்லை,நுழைக்கவுமில்லை//

இன்னமும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் நர்சிம்.

@ சேரல்

என்னது குழப்பமா? சரி சரி. லூஸ்ல விடுங்க. நன்றி சேரல்.

@ வால்பையன்

//உங்களை கம்பிகளுக்கப்பால் உட்கார வைக்கலைனா நாங்க ஆஸ்பத்திரி பெட்டுல தான் படுக்கனும் போல!//

ஹா ஹா ஹா. எதிர் கவுஜையா போடுறீங்க? வேணும் நல்லா. மண்குதிரை பாவம் குரு; அவர விட்டுடுங்க.

நன்றி குரு.

@ மணிகண்டன்

அது அது :) நன்றி மணி.

@ நாடோடி இலக்கியன்

வாங்க தல. உங்க மொத வருகையே இப்படி மண்ட காயுதா? லூஸ்ல விடுங்க. நன்றி பாஸ்.

@ கும்க்கி

யோவ். முடிஞ்சா தனியா அடிச்சு ஆடு. இதுக்கு ஏன் அவரைக் கூப்பிடுற? அவரு அடிச்சா எனக்குத் தாங்காது :)

நன்றி கும்க்கி.

@ பித்தன்

நீங்க கூட எ.கவிதை எல்லாம் எழுதுறீங்களே! ம்ம், ஸ்டார்ட் மீஜிக். நன்றி பாஸ்.

@ நந்தா

Thanks buddy

@ நையாண்டி நைனா

யோவ், ரொம்ப வெவகாரமான ஆளா இருக்கியே! அதெல்லாம் இல்ல. இது ச்சும்மா தமாசுக்கு. நன்றி நைனா.

@ ராமலக்ஷ்மி

அப்பாடி, நீங்களாவது 'பிரமாதம்'னு சொன்னீங்களே :)

நன்றி சகோ.

@ மஹேஷ்

ROTFL. அட்டகாசமான கமெண்ட் மக்ஸ். Your sense of humour is awesome. நன்றி.

@ துபாய் ராஜா

ஹா ஹா. முதல் வருகையே அட்டகாசம். குத்துங்க எசமான் குத்துங்க. நன்றி ராஜா.

@ செய்யது

'அலை பாயுதே'? - ம்ம், நடக்கட்டும். முதல்ல உண்மையாவே புகழுறியோன்னு பயந்துட்டேன் :)

நன்றி செய்யது.

@ ராஜாராம்

வாங்க ராஜா. நம்ம கொட்டாயில, அடுத்த படம் ரெடியார வரைக்கும் இதே தான். 'இன்றே கட்சி'னு போடுற தெகிரியம் கிடயாது :)

நன்றி ராஜா.

@ வெங்கிராஜா

ஆமாமில்ல வெங்கி? என்னை இவ்வளவு பேரு கலாய்ச்சா உனக்கு 'செம இன்டரஸ்டிங்'ல? நல்லா இரு :)

நன்றி வெங்கி.

@ அசோக்

தன முயற்சியில் சற்றும் மனந்தளரா அசோக்....

நன்றி அசோக்.


அனுஜன்யா

anujanya said...

@ பரிசல்

இதானே வேணாங்கிறது. இத டைப் செய்யும்போது உங்க கிட்டேந்து இன்னொரு சூப்பர் கவிதை. அடங்குங்கப்பா.

நன்றி கே.கே.

@ நேசமித்ரன்

நன்றி நேசா. அருமையான கவிதைகள் அங்க எழுதி இருக்க. வாரணும். நிதானமா படிக்கணும்.

@ சிவா

ஹலோ, உங்க கிட்டேந்து தப்பிச்சுட்டு இங்க வந்தா, விட மாட்டியா? நன்றி சிவா.

@ பட்டிக்காட்டான்

பரவாயில்ல, சீக்கிரமே பதிவுலகைப் பத்தி புரிஞ்சிகிட்டீங்க. நன்றி தல.

@ ஜமால்

'நட்புடன்' ஜமால் கேட்கும் கேள்வி - //கவிதையா இது//

நல்லா இருங்கப்பு :)

நன்றி ஜமால்.

@ தராசு

வாவ், உங்களுக்குள் இப்படி ஒரு கொலைவெறி கவிஞனா? சூப்பார்.

@ ஸ்ரீமதி

ஆரம்பிச்சிட்டியா?

@ இராம்

வாங்க தல. என்னது உங்களுக்கு புரிஞ்சிடிச்சா? எல்லாரும் ஓடியாங்க. ஒருத்தரு மாட்டிக்கிட்டாரு :)

நன்றி இராம்.

@ நாஞ்சில் நாதம்

நல்லா இருங்க. உங்கள் முதல் வருகை? நன்றி நா.நா.

@ விக்கி

ஹா ஹா ஹா. நன்றி விக்கி.

@ மணிநரேன்

//பொதுவானவர்களுக்கு புரியாத போதுதான் கவிதையா!!!!// அதேதான். பாருங்க இப்ப நீங்களும் கவிதை எழுதிட்டீங்க.

நன்றி நரேன் உங்க முதல் வருகைக்கும்...வேற...இனி வரபோவதற்கும்.

@ இரவுப்பறவை

வாங்க சௌந்தர். 'மறைபொருள்' ? கலக்கல் ஆள் தான் நீங்க. நன்றி.

@ முத்துவேல்

ஹா ஹா. லூஸ்ல விடுங்க முத்து.

@ MayVee

தமிழ் Font இன்னும் கிடைக்கலியா உனக்கு? ரொம்ப நாளாச்சு அங்க வந்து. வந்து கவனிக்கிறேன் :) நன்றி பாஸ்.

@ வி.மு

அடேய்! உன்ன தனியா கவனிக்க வேண்டும். நன்றி

@ வசந்த்

மது, மாது - இது தமாஸ் இல்ல. உண்மையிலேயே டாஸ்மாக்கு தான். இத இதத் தான் உங்க கிட்ட எதிர் பாக்குறோம் வசந்த்.

நன்றி

@ வால்பையன்

குரு, அவரு உங்களைவிட மூணு வயசு (என்ன விட ஒரு வயசு) சின்னவரு. உங்க ஊருதான்.

@ சரா

புரியலியா சரா? நீ சரியான 'Tube Light'? சாரி குழல் விளக்கு?

நன்றி சரா.

@ ஆதவா

இதுல ஒண்ணும் பயப்படுவதற்கு இல்ல ஆதவா. கொஞ்ச நாளில் சரி ஆகிடும் :)

ரெகுலரா எழுதுங்க. இல்லாட்டி, நான் இந்த மாதிரி கவிதைகள் நிறைய எழுதிடுவேன்.

@ ஜ்யோவ்

அதானே பாத்தேன். மது/மாது வந்தால் குருஜி வரணுமேன்னு.

ஆனா, உண்மையிலேயே அது கலக்கலா இருக்கு.

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

நல்லவேளை. நீங்கள் தப்பாக எதுவும் நினைத்துக் கொள்ளவில்லை. நன்றி.

***

அன்பு சுந்தர்ஜி...

மிக்க நன்றிகள் சார்.

ரௌத்ரன் said...

தல..வாணாம்..ஏற்கெனவே இங்க வெயில் ஜாஸ்தி...இத படிச்சு ரெண்டு பக்கமும் கைய உட்டு ஓமக்குச்சி நாராயணன் ஸ்டைல நான் மண்டைய பிச்சுக்கரத பாத்து பக்கத்துல இருந்த பிலிப்பைனி தூர ஓடிப்போயிட்டான்..இன்னும் கல்யாணம் கூட ஆகலங்க..அதுக்குள்ள தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் வர வச்சிடுவீங்க போல :)

நல்லாயிருக்கு அனுஜன்யா...

Unknown said...

ஆஹா.......... ஓஹோ... ....!!

அற்புதம்....!!


அழகு வரிகள்...!!


என்ன ஒரு நளினம்....!!! என்ன ஒரு எழுத்து நடை...!!


மீண்டும்... மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்...!!!






இது போல உங்களிடம் உள்ள மீதி சரக்கை எதிநோக்கும் ,


அன்பு ரசிகன் ,


லவ்டேல் மேடி......!!!!

விநாயக முருகன் said...

http://nvmonline.blogspot.com/2009/07/blog-post_9182.html

Thamira said...

ஹை ஹை.. சூப்பர்.! பதிவுலகமே இங்கதான் இருக்குது போல.. ஹிஹி.. என்னியும் சேத்துக்கங்க. நா ஏன் உடனே பதில் போடலைன்னா, படிச்சதும் டமால்.! ஆகிட்டேன். எழுந்து பதில் போட இம்மா நேரமாகிவிட்டது.

அப்புறம் குருஜிக்கும், பை.காரனுக்கும் தவிர்த்து வேறு யாருக்கும் புரிஞ்சிருக்குமோனு நினைச்சி பயந்துபோய்ட்டேன். அப்படி ஏது நடக்காம சில பெரிய கைகள்கூட ஜகா வாங்கி ஓடிப்போயிடுச்சுங்க.. ஹாஹா.. வெற்றி நமக்கே.! (அதாவது ஒங்களுக்கே.!)

anujanya said...

@ வசந்த்

தப்பாகவா? நா ரொம்ப 'நல்லவனூனு' சொல்றாங்க :) நன்றி வசந்த்.

@ ரௌத்ரன்

ஹா ஹா! உன் கவிதைகளும் சமயத்தில் எங்களுக்கு அப்படித்தான் இருக்கு :)

நன்றி ரௌத்ரன்

@ மேடி

உன்னை அடக்கத் தான் ஒரு ஆளத் தேடிக்கிட்டு இருக்கேன். நல்லா இரு மேடி :)

@ வி.மு.

நன்றி வி.மு. ரொம்ப சந்தோசமா இருக்கு.

@ ஆதி

ஏன்னா ஒரு வில்லத்தனம்! உன்னைய மாதிரி ரெண்டு பேரு ம்ஹும், நீர் ஒருவரே போதுமய்யா.


அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

யாராவது கோனார் உரை போட்டுருக்காங்களானு பார்த்தா.. வழக்கமா போடறா பைத்தியக்காரன் கூட போடலை... உங்களுக்கே இது கொஞ்சம் ஜாஸ்தியா தெரியலையா.. இன்னிக்கு பூரா யோசிச்சாலும் சிக்காது போலருக்கே பாஸு....

anujanya said...

@ கிருத்திகா

ஹா ஹா! Google transliteration - எழுத்துகளைச் சேர்ப்பதும், அழிப்பதும் நாம் தினந்தோறும் செய்வதுதானே. சேர்ப்பது விவாகமென்றால், அழித்தல் விவாக ரத்தாகவோ, மரணமாகவோ இருக்கலாமே (எழுத்துக்களைப் பொறுத்தவரையில்). இன்னும் கொஞ்சம் நீட்சியில், கடவுள் எழுதும் தாறு மாறு கவிதையின் சேரும், அழியும் எழுத்துக்கள்தான் நாமோ!

கோவிக்காதீங்க :)

அனுஜன்யா

நாடோடி இலக்கியன் said...

//உங்க மொத வருகையே இப்படி மண்ட காயுதா?//
ஹி ஹி ,இது எனக்கு முதல் முறை அன்று,உங்க ஞாபக சக்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.கொஞ்சம் பழைய பதிவுகளெல்லாம் பாருங்க என்னோட பின்னூட்டமும் இருக்கும்.
:)

anujanya said...

@ இலக்கியன்

ஊப்ஸ். சாரி பாஸ். இந்த யூத்தா இருந்தாலே ....நிறைய ஞாபக மறதி வரும் போல :)

நன்றி பாஸ்.

அனுஜன்யா