மும்பையில் பல வருடங்கள் கட்டப்பட்டு, வெகுநாட்களாக காத்திருந்த பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு (Bandra-Worli Sea Link - BWSL) ஒரு வழியாக கடந்த மாதம் முப்பதாம் திகதி அன்னை சோனியாவால் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. பாலத்திற்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்கும்படி சரத் பவார் கடைசி நிமிடத்தில் கேட்டுக்கொள்ள, அவ்வாறே நாமகரணம் நடந்தேறியது. அவர் பாவம், தேர்தல் சரிவைச் சரிக்கட்ட காங்கிரசுடன் புதுப்பாலம் கட்டுவதை புரிந்து கொள்ளாத சிவசேனை புலிகள் மண்ணின் மைந்தன் பெயர்தான் வைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தபடியே எதிர்த்தார்கள். சிவசேனையினர் எப்போதும்போல 'சிவாஜி' பெயர் வைக்கக் கோருவார்கள் என்று நினைத்தேன். ஒரு மாறுதலுக்கு 'வீர் சாவர்கர்' பெயர்தான் வேண்டும் என்றார்கள். ஆனால், இந்த விடயத்தில் தமிழ் நாட்டில் கழகங்கள் போலவே, முழு இந்தியாவிலும் காங்கிரஸ்காரர்களை மிஞ்ச முடியாது. ராஜீவ் மும்பையில் பிறந்தவர். அதனால் அவரும் 'மண்ணின் மைந்தர்' என்று ஒரு தடாலடி கொடுத்தனர். வேண்டுமென்றால், காங்கிரஸின் முதல் தலைவியான அன்னி பெசன்டின் அத்தை பெண் மும்பையில் வேலை செய்தார் என்று கண்டுபிடித்து, அவர் பெயரை வைக்கும் சாமர்த்தியமும் அவர்களுக்கு உண்டு. இவ்வளவு பேசிவிட்டு, 'நமக்கு எதுக்கு சார் அரசியல்' என்று ஒதுங்கும் சாமார்த்தியம் நமக்கும் உண்டு என்பதால் இப்போதைக்கு இதிலிருந்து விலகுவோம்.
இப்போது பாலத்தின் பெருமைகளைப் பற்றி:
மொத்த நீளம் - 5.6 கி.மீ. (கடல் மேல் மட்டும் பார்த்தால் 4.8 கி.மீ.)
Cable Stayed Bridge எனப்படும் தூண்களிலிருந்து கம்பிகள் தாங்கிப் பிடிக்கும் பாலம் இந்தியாவில் முதல் முறை.
செலவு - 1650 கோடி ரூபாய்கள்.
தினமும் பிரயாண நேரம் அரை மணி நேரம் குறையும்; மற்றும் வருடத்துக்கு சுமார் நூறு கோடி ரூபாய் எரிபொருள் சேமிப்பிலும் கிடைக்கும்.
First day First show ரசிகனின் அதே கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் நானும் சென்றேன். அநியாய நெரிசல். முதல் ஐந்து நாட்களுக்கு இலவச சவாரி. இந்தத் தடத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத, நவி மும்பை, தாணே, மாடுங்கா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான மக்கள், தத்தம் வாகனங்களில் குடும்பத்துடன் வந்துவிட்டதால், வரலாறு காணாத கூட்டம். வெறும் எட்டு நிமிடங்களில் ஆக வேண்டிய பயணம், எண்பது நிமிடங்கள் (நிஜமாவே) ஆனது.
பயணக்கட்டணம் ஐம்பது ரூபாய் ஒரு முறைக்கு. சீசன் டிக்கெட் ஒரு மாதத்திற்கு 2500 ரூபாய். Smart card (சாதூர்ய அட்டை?) 2250 ரூபாய் - ஐம்பது சவாரிகளுக்கு. இப்போது கூட்டம் இல்லாமல், I-Pod இல் ஒரு பாட்டு முடிவதற்குள் பயணம் முடிந்து விடுகிறது.
பொது சேவையான BEST பேருந்துகளுக்கும் சலுகை இல்லாத கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிகள் இருப்பதால், BEST நிறுவனம் தற்போதைக்கு இந்த 'புதுப் பெண்டாட்டி' பக்கம் போகாமலிருப்பதில் மத்திய தர, பேருந்து பயணிகளுக்கு நிரம்பவே வருத்தம். நியாயமான கோவமும்கூட. வெறும் பணக்காரர்களுக்காக ஒரு பாலமா என்று கேள்வி கேட்கத் துவங்கி இருக்கிறார்கள். ஆபிஸ் தயவில் தினமும் இதில் செல்லும் பாக்கியம் உள்ள எனக்கும் கொஞ்சம் பணக்காரத் தோரணை வந்துவிட்டது, என் மனைவியின் எள்ளல் சிரிப்புக்கு நடுவிலும்.
**************** *************** *************
மைக்கேல் ஜாக்சன் மரணம் உண்மையில் எதிர்பாராத, சோக நிகழ்வு. Immensely gifted and a very intriguing personality. அதி-திறமை உள்ள மேதைகள் மற்ற விடயங்களில் கிட்டத்தட்ட பிறழ்வு நிலையைத் தொடுகின்றனர். அவருக்கு தன் இசையைக் காட்டிலும், தன் நடனத்தை விடவும், தன் தோற்றத்தில் ஒரு மாபெரும் ஈடுபாடு. தன் உடலை அந்த அளவுக்குச் சிதிலப்படுத்திக்கொண்டார். புகழ், பணம் இவற்றைச் சரிவரக் கையாள முடியாத பல பிரபலங்களில் இவரும் பிரதானம்.
உடனே நினைவுக்கு வரும் மற்றொருவர் மைக் டைசன். அண்மைக் காலங்களில் சம்பாதித்ததைக் கோட்டைவிட்ட பிரபலங்களில் டென்னிஸ் வீரர்கள் போர்க் மற்றும் பெக்கெர் இருக்கிறார்கள்.
Back to MJ. எத்தனைப் பாடல்கள்! எத்தனை ஆல்பங்கள்! Toe-tapping என்று சொல்லப்படும், நமக்கும் ஆடியே தீரவேண்டும் என்று தோன்றும் தாளகதியில் அமைந்த பாடல்கள். Beat it, Its Black-Its White போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள்; Thriller, Dangerous போன்ற வரலாற்றுச் சாதனை படைத்த ஆல்பங்கள். Moon Walk போன்ற அபார புதிய கற்பனைகள். எல்விஸ், பீட்டில்ஸ் போலவே எம்ஜெவும் ஒரு சகாப்தம். Long Live MJ.
MJ பற்றி ஒரு அருமையான பதிவு கார்க்கி எழுதி இருக்கிறார். Dont miss it.
**************** *************** *************
என் நண்பர்களுடனான குழும மின்னஞ்சலில் ரங்ஸ் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் ரங்கராஜன் என்ற நண்பர் அனுப்பிய ஆங்கில மின்னஞ்சலின் சாராம்சம்:
தென் ஆப்பிரிக்காவிலிருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்றில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு அடுத்த இருக்கையில் ஒரு கருப்பு நிறத்தவர் அமர்ந்திருந்தார். அதில் கோபமும், அருவருப்பும் அடைந்த அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணிடம் முறையிட்டார். அந்தப் பணிப்பெண்ணும் உள்ளே சென்று, தலைமை விமானியிடம் உரையாடிவிட்டு, மீண்டும் இந்த இருவர் அருகில் வந்து "வேறு இருக்கை எகானமி வகுப்பில் இல்லை. பிசினஸ் வகுப்பிலும் இல்லை; பொதுவாக நாங்கள் எகானமி வகுப்பில் உள்ளவர்களை 'முதல் வகுப்பில்' அமர்த்துவதில்லை. ஆனால் தற்போது விதிகளைத் தளர்த்தி உங்களை அங்கு அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று .....அந்த கருப்பு நிறத்தவரைக் கேட்டுக் கொண்டனர். இது ஒரு உண்மைச் சம்பவம் என்றும் அந்த மின்னஞ்சல் சொல்லியது. அந்த வெள்ளை நிறப் பெண் அன்று முதலாவது மனம் மாறியிருக்க வேண்டும்.
ஜெமோவின் தளத்தில் 'நிறம், இனம், கடிதங்கள்' என்ற தலைப்பில் இருந்த இடுகையில் ஜெமோ இவ்வாறு குறிப்பிடுகிறார்:
பேதங்களை உருவாக்க நிறமும் இனமும் எளிமையான வழிகள். ஏனென்றால் அடையாளம் வெளிப்படையாக திட்டவட்டமாக இருக்கிறது. அதற்குமேல் நிறம் ஒரு பிரச்சினையே அல்ல. தங்கள் மனவிரிவின் மூலம், நாகரீகம் மூலம், பேதங்களை உருவாக்கும் அடிப்படைவாத மனநிலையை மனிதர்கள் தாண்டமுடியும் என்றால் நிறம் அவர்களை ஒருபோதும் பிரிக்கமுடியாது.
**************** *************** *************
இந்த முறை சேரல் என்னும் நல்ல கவிஞனின் சில கவிதைகள்.
நினைவோடு அலை
அலையாடிய குழந்தைகளை
கரையில்
மணல்வீடு கட்ட அனுப்பிவிட்டு
கை கோர்த்துக்
கடலாடுகின்றனர் இரு தாய்மார்
அவர்கள்
முகத்தலடித்துத் தெறித்து
வழிந்தோடுகிறது,
அவர்களின்
பிள்ளைப்பிராயத்து
அலையொன்று
தவம்
முன்னொருநாள்
பௌத்த பிட்சுகள்
தவமிருந்த நதிக்கரையில்
தவமிருந்தேன்
தூரத்தில்
ஒற்றைக்காலில்
நிலை கொண்டிருந்தது
நெடுங்காலமாய்
இந்த நதியையே
நனைத்துக் கொண்டிருக்கும்
கொக்குகளின் வழி வந்த
ஒரு கொக்கு
பிட்சுகள் பார்த்த கொக்குகளை
நான் பார்க்கவில்லை
எத்தனையோ கொக்குகள்
பார்த்த தவத்தை
இந்தக் கொக்கு
பார்க்கவில்லை
சில குறுங்கவிதைகள்
மேய்ச்சல் முடிந்து திரும்பும்
ஆடுகள் - கடைவாய் உமிழ்நீரில்
பசுங்காடு
சுத்தம் செய்பவன்
எல்லாக் கறைகளையும்
கழுவித் துடைக்கிறது
தண்ணீர்
தண்ணீர்
செய்யும் கறையை
எது கொண்டு
கழுவுவேன்?
தன்னிரக்கம்
வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்
மேலே உள்ள 'தன்னிரக்கம்' என்ற கவிதையின் வீச்சு எனக்குக் கொஞ்சம் ஆத்மநாமை நினைவு படுத்தியது. உடன் ஞாபகத்தில் வந்த ஆத்மநாம் கவிதை இது:
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்
இருபத்தைந்தே வயதாகும் இந்த இளைஞரிடம் நிறைய எதிர்பார்க்கலாம்.
44 comments:
நாந்தான் மொதொ !!
//Smart card (சாதூர்ய அட்டை?)//
இலகு அட்டை?? Easy Card மாதிரி பெயரில் தொனித்தாலும் உபயோகத்தின் அடிப்படையில் அது இலகுவாக இருப்பதுதானே??
எதைப் பற்றியும் பற்றாமலும் மீது பற்று கொள்ள வைக்கிறீர்கள்..நல்ல வரவு.
சுட்டிக்கு நன்றி தல..
என்னது? லின்க் கொடுக்கலையா? கொடுங்க பாஸ்...
ஹிஹிஹிஹி
அனுஜன்யா,
இந்தப் பாலம் உங்களுக்கு மிகவும் நிம்மதியைத் தரும். அதிக நேரம் மிச்சமாகக் கூடும். அதைப் படிக்கச் செல்விடலாம்.
சேரல் கவிதைதான் இந்த வாரம் அரிமுகப் படுத்தலாம் என இருந்தேன். நீங்கள் முண்டிக் கொண்டீர்கள்.
முத்து வேல் வலைப்பூவைப் பற்றி கல்கியில் வந்திருக்கிறது படித்தீர்களா?
தென் ஆப்பிரிக்கா...!!
கடந்த காலங்களில் பட்ட அடிகள்
// இவ்வளவு பேசிவிட்டு, 'நமக்கு எதுக்கு சார் அரசியல்' என்று ஒதுங்கும் சாமார்த்தியம் நமக்கும் உண்டு என்பதால் இப்போதைக்கு இதிலிருந்து விலகுவோம்.//
சாமார்த்தியத்தை பாராட்டுகிறேன்.
அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் மேட்டரு நானும் படித்திருக்கிறேன்.
present sir!
BWSL may probably the 'second' cable stayed bridge. We already have one in Kolkata over the Hooghly river. Vidyasagar Setu.
ரெப்ரஷண்ட் சார்...
பாலம் மேட்டர் சுவாரஸ்யம்...
சேரலின் ‘மேய்ச்சல் ஆடுகள்’ மற்றும் ‘தன்னிரக்கம்’ எனக்கும் மிகமிகப் பிடித்தவை...
இன்னும் கொஞ்சம் அதிகமாப் பற்றியோ, பற்றாமலோ இருந்திருக்கலாம்னு தோணுது....
// பாந்த்ரா-வொர்லி பாலம் //
ஐ... நம்ம பிராஜக்ட்டு.....!! எங்க கம்பெனியோட அடுத்த லைட்டிங் ப்ராஜக்ட் அங்கதான்....!! நான் ஒன் ஆப் தி எலக்ட்ரிகல் இன்ஜினியர் இன் திஸ் ப்ராஜக்ட்.....!! மும்பை வருவனே.....!! அங்க வந்து கவனுச்சுகிறேன் உங்களைய.....!!!!
// முன்னொருநாள்
பௌத்த பிட்சுகள்
தவமிருந்த நதிக்கரையில்
தவமிருந்தேன் //
யாரு நீங்களோ..... !! சத்திய சோதன.....
// தண்ணீர்
செய்யும் கறையை
எது கொண்டு
கழுவுவேன்? //
வாங்குங்கள் சர்ப் எக்ஸ்-எல் ... இப்பொழுது முற்றிலும் புதிய பாக்குகளில்.......!!!
பூனேவில் தான் நானுமிருக்கிறேன்.
வாய்ப்பு கிடைக்கும் போது மும்பை வருகிறேன்.இதுவரை மும்பையை பார்த்ததில்லை.
முந்தைய பின்னூட்டம் என்னுடையது.லாகின் ப்ராப்ளம்.
அ.மு.செய்யது
// பாந்த்ரா-வொர்லி பாலம் //
டெய்லி பயணமா? நல்லது!.
// இவ்வளவு பேசிவிட்டு, 'நமக்கு எதுக்கு சார் அரசியல்' என்று ஒதுங்கும் சாமார்த்தியம் நமக்கும் உண்டு என்பதால் இப்போதைக்கு இதிலிருந்து விலகுவோம்.//
சூப்பர்!
கவிதைகள் as usual கலக்கல்!
அனுஜன்யா,
பந்த்ரா வர்லி பாலம் பற்றிய பகிர்வு அருமை. ஒருமுறையேனும் பாலத்தினுள் பயணிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியது.
000
மை.ஜா. இசையுலகின் மறுக்க முடியாத புரட்சியாளர்தான். கறுப்பின மக்களின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டவர். தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் இருந்த அகச்சிக்கலே அவரது முக, தோற்ற மாறுதல்களுக்கு காரணம். ஆளுமைகளுக்கும், மனப்பிறழ்வுகளுக்கும் அதீத தொடர்பிருப்பதன் காரணம் விரிவாகப் பேசப்பட வேண்டியது.
000
சேரலில் கவிதைகள் அனைத்தும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உணர்வலைகளை தட்டியெழுப்பும் கவிதைகள்.
நீங்கள் பகிர்ந்துள்ள சேரலின் கவிதைகள் அனைத்தும் அருமை.
முதல் கவிதையில்,
//அவர்கள்// என்ற வார்த்தையை நீக்கி விட்டால்,
முகத்திலடித்துத் தெறித்து
வழிந்தோடுகிறது,
அவர்களின்
பிள்ளைப்பிராயத்து
அலையொன்று...
கவிதையின் அழகு இன்னமும் கூடிவிடுகிறது.
பகிர்தலுக்கு நன்றி.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
என்ன இருந்தாலும் உங்க கவிதை இல்லாம ஒரு பதிவா?
உங்க ரசிகர்கள் எல்லாம் ரொம்ப ஃபீலிங் ஆயிருவாங்கள்ல?
பொளக்கறீங்க பாஸூ...
எத்தனையோ கொக்குகள்
பார்த்த தவத்தை
இந்தக் கொக்கு
பார்க்கவில்லை
]]
அருமை (நல்ல பகிர்வு ...)
//பயணக்கட்டணம் ஐம்பது ரூபாய் ஒரு முறைக்கு. சீசன் டிக்கெட் ஒரு மாதத்திற்கு 2500 ரூபாய். Smart card (சாதூர்ய அட்டை?) 2250 ரூபாய் - ஐம்பது சவாரிகளுக்கு.//
எனகென்னவோ அதிகமா தான் தெரியுது!
மைக்கேல் ஜாக்சன் - நிறவெறி கொன்று பசிதீர்த்திருக்கும் மற்றோர் கலைஞன்
நிஜம் தான் புகழ்- பணம் கையாளத்தெரியாத கலைஞன்
seral kavithai - காடு மிச்சமுள்ள மிருகத்தை எனக்கு நினைவுறுத்தியது
அற்புதமான கவிதைகளுக்கு சொந்தக் காரர்
அவர் வீச்சு குறையாதிருக்கவும் அவரின் வெளி விரிவடையவும்
வாய்ப்புகள் அதிகம் இருப்பதாய் தோன்றுகிறது
அவரது ஒவ்வொரு படைப்பிலும்
பாலம் - எவ்வளவு செய்திகளை நுட்பமாக தருகிறீர்கள் . உங்களின் பார்வைகளை பதிவு செய்யும் விதமும் அற்புதம்
எதையோ எதிரிபார்த்து வரும் வாசகர்களை கொஞ்சம் ஏமாற்றாது உங்கள் எழுத்து என்பதை இம்முறையும் பலமாக நிரூபித்து விட்டீர்கள்.
சபாஷ் பாஸ்!
சூப்பர் பாஸ்
சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.பாலம் பற்றிய பகிர்விலும், சேரலின் கவிதைகளிலும் சுவாரசியம் அதிகம்.
இதுபோல் அடிக்கடி எழுதுங்கள்.
மைக்கேல்
சேரல்
..................நிரம்புகிறேன்
சேரலின் கவிதைகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் ... எனக்குப் பிடித்த கவிஞர்கள் வரிசையில் அவர் இருக்கிறார் ... ஒரு சில வெகு ஸ்வாரஸ்யமான, நான் எண்ணி வியக்கும், கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார் குறிப்பாக நீங்கள் இறுதியில் குறிப்பிட்ட கவிதை
பாலம் பற்றிய தகவல்கள் சுவாரசியம். காண விழைகிறேன். கவிதைகள் அழகு.! சேரலுக்கு வாழ்த்துகள்.!
அதிக பட்சம் ஏழு ஸ்க்ரால்களுக்குள் பதிவெழுதுபவர்களுக்கு குலுக்கல் முறையில் சிக்கன் பிரியாணி வாங்கித்தரலாம் என்றூ இருக்கிறேன். உங்களூக்கு கிடைக்காது போல தெரிகிறது.
நானும் சேரலின் கவிதைகளை இரசித்திருக்கிறேன். சைட்பாரில் லின்கோடு போட்டு வைத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் கருப்பு-வெள்ளை, கோகுலகிருஷ்ணன் கந்தசாமி, மண்குதிரை, ப்ரவின்ஸ்கா எல்லோரும் எடுத்தாளப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில்.
அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அனுஜன்யா. உங்கள் பின்னூட்டம் எப்போதுமே பெரிய ஊக்கமாக இருந்து வருகிறது. தொடர்ந்து பயணிக்க முயற்சி செய்கிறேன். வாழ்த்திய தோழர்களுக்கும் நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
நண்பர் சேரலின் அருமையான கவிதைகளை பகிர்ந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.
அனுஜன்யா, பாலம் பத்தி எழுதி இருக்கற தகவல் நல்லா இருக்கு. மும்பை வந்து நானும் உங்க ஆபீஸ் வண்டில வந்துடறேன். என்ன சொல்றீங்க ?
Smart card (சாதூர்ய அட்டை?)//
:))))
சேரலின் கவிதைகளோடு, நகைச்சுவை இழையோட பாலத்தைப் பற்றிய குறிப்பும் நன்றாக இருந்தது.
பாலம் பற்றிய விளக்கங்கள் அருமை. பார்க்க பயணிக்க ஆவலைத் தருகிறது உங்கள் விவரிப்பு.
//தினமும் பிரயாண நேரம் அரை மணி நேரம் குறையும்; மற்றும் வருடத்துக்கு சுமார் நூறு கோடி ரூபாய் எரிபொருள் சேமிப்பிலும் கிடைக்கும்.//
இதே நோக்கத்தில் பல வருடங்களாக பேசப் பட்டு வந்த மெட்ரோவுக்கான வேலைகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப் பட்டு ரொம்ப ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது பெங்களூரில். ஆனால் கார்டன் சிட்டியின் பலநூறு வயதுடைய மரங்கள் பலவும் பலி. கொடுக்கும் விலை:( ? அப்புறம் எம்.ஜி.ரோடின் கம்பீரம் போயே போச்சு.
சேரலின் கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
பாலத்தை பற்றிய உபயோகமான தகவல்களும் அழகான கவிதைகளும்... நன்று அனுஜன்யா
@ மஹேஷ்
நீதா மொதோ போணி. நல்லாத் தான் போகும் :)
Smart card is smart in the sense, it calculates the number of trips travelled so far, flashes the balance available in the card. மற்றபடி எல்லா அட்டைகளுமே 'இலகுவில்' காரியம் முடிக்கத்தானே?
@ அசோக்
நீங்க இப்படியே புன்னகை செய்துட்டு போயிட்டா ..... ஒண்ணும் இல்ல. அப்பவும் 'நன்றி' சொல்வேன்.
@ நர்சிம்
நன்றி தல.
@ கார்க்கி
அதான பாத்தேன். சுயநலம்! சரி சரி கொடுத்தாச்சு. நன்றி கார்க்கி.
@ வேலன்
ஆமா வேலன். சேரல் பத்தி நீங்களும் எழுதுங்களேன். உங்க தளத்துக்குன்னு பிரத்தியேக வாசகர்கள் இருக்காங்களே.
முத்து - நம்ம சொத்து.
நன்றி வேலன்
@ மின்னுது மின்னல்
வாங்க மின்னல் - உங்க முதல் வருகை?
தென் ஆப்பிரிக்கா - உண்மைதான் :(
நன்றி மின்னல்
@ தராசு
வாங்க தல. நன்றி.
@ நிஜமா நல்லவன்
மாப்பி - கருத்து ஒண்ணும் சொல்லல? சரி சரி நன்றி :)
@ மஹேஷ்
நீங்க சொல்றது சரி. இது இந்தியாவில் இரண்டாவது cable stayled bridge. பெரியது என்று வேண்டுமானால் சொல்லலாம். (மீசைல மண்ணு ஒட்டக்கூடாதுல்ல!). சுட்டிக் காட்டியதற்கு நன்றி மஹேஷ்.
@ கும்க்கி
சரி சரி. நன்றி :)
@ தமிழ்ப்பறவை
நன்றி பரணி. இன்னும் கொஞ்சம் அதிகமா? தாமிரா கமெண்டு படிங்க :)
@ மேடி
அய்யய்யோ, வரதுக்கு முன்னாடி சொல்லிடு. நா எஸ் ஆயிடறேன் :)
லொள்ளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. நன்றி மேடி :)
@ செய்யது
பூனே கிட்டதானே. வாங்க. நன்றி செய்யது.
@ சிவா
நன்றி சிவா. இங்க பரம சாதுவா பின்னூட்டம் போடுற. அங்க ..டெர்ரர் பார்ட்டி :)
@ அகநாழிகை
அதுக்காகவாவது மும்பை வாங்களேன் வாசு.
//ஆளுமைகளுக்கும், மனப்பிறழ்வுகளுக்கும் அதீத தொடர்பிருப்பதன் காரணம் விரிவாகப் பேசப்பட வேண்டியது.//
நீங்களே ஒரு கட்டுரை எழுதலாமே வாசு?
நன்றி
@ ஜோசப்
டேய்.. சரி சரி. நன்றிங்க்னா.
@ செல்வேந்திரன்
நன்றி செல்வா.
@ ஜமால்
ஆமாம், ஜமால், அது ரொம்ப நல்ல கவிதை. நன்றி ஜமால்.
@ வால்பையன்
அதிகம் தான். அப்பதானே பணக்காரர்கள் மட்டும் போக முடியும் :(
நன்றி குரு
@ நேசமித்ரன்
நன்றி நேசமித்ரன். உங்கள் பின்னூட்டங்களும் கிட்டத் தட்ட உங்கள் கவிதைகள் அளவுக்கு அழகு.
அனுஜன்யா
@ பரிசல்காரன்
கே.கே. - ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொன்னா அதன் மதிப்பு இன்னும் கொஞ்சம் அதிகம்தான். நன்றி பாஸ்.
@ நாஞ்சில் நாதம்
உங்க முதல் வருகை? எப்படியோ, ரொம்ப நன்றி பாஸ்.
@ முத்துவேல்
சரிங்க்ணா. நீங்க சொல்லிட்டா அப்பீலே இல்ல :). முத்து, ச்சும்மா. ஒரு வெளையாட்டுக்கு. கல்கியில் வந்ததுக்கும் வாழ்த்துகள்.
நன்றி முத்து.
@ Kartin
நன்றி கார்த்தி. உங்கள் தளத்திற்குச் சென்றேன். நல்ல கவிதைகள் எழுதுறீங்க. தொடருங்கள்.
@ நந்தா
வாங்க நந்தா. நிதமும் யாத்ரா, முத்து, உங்கள், சேரல், பிராவின்ஸ்கா கவிதைகள் புதுசா வந்திருக்கான்னு பாக்கணும்னு நினைப்பேன். முடிந்தவரை பார்த்து விடுவேன். நன்றி நந்தா.
@ ஆதி
நன்றி திரு ஆதி அவர்களே.
//உங்களூக்கு கிடைக்காது போல தெரிகிறது.//
யோவ், தமிழ்ப்பறவை என்ன சொல்லுறாருன்னு கொஞ்சம் படியுங்க :)
@ வெங்கிராஜா
ஆமாம், உங்க கவிதை ரசனை அசத்தல் வெங்கி. செஞ்சுடலாம். நன்றி வெங்கி.
@ சேரல்
வாங்க வாங்க கதாநாயகரே! உங்கள் கவிதைகள் தரும் இன்பம் அப்படி. இப்ப மாதிரியே, அல்லது இன்னும் அதிக வீச்சில் நீங்கள் தொடர வேண்டும்.
நான் சொல்ல மறந்தது, உங்க பயணக் கட்டுரைகள். நல்ல சுவாரஸ்யம்.
@ யாத்ரா
வாசிப்பின்பத்தைப் பகிர்வதில் இன்னும் மகிழ்ச்சி பெருகும் யாத்ரா. நன்றி.
@ மணிகண்டன்
என்னய்யா இது? எல்லாரும் பயமுறுத்துறீங்க. மேடி வறேங்குறார். இப்ப நீ வேற. சொல்லிட்டு செய்யுங்கப்பா. நான் தப்பியோட ஈசியா இருக்கும் :)
Anytime welcome Mani.
@ செய்யது
வாவ். ரொம்ப சந்தோசம் செய்யது.
@ அமித்து.அம்மா
நன்றி AA.
@ ராமலக்ஷ்மி
வாங்களேன் மும்பைக்கு. பாலத்தை நேரில் தரிசிக்கலாம். எம்.ஜி.ரோடு - :(((
சேரல் - :))))
நன்றி சகோ
@ ஆப்பு
என்ன சார், இவ்வளவு கோவம்.
@ ரீனா
ரீனா, ரொம்ப நாட்களுக்குப் பின் உங்கள் வருகை. (நானும் அங்க வரலதான் :) )
நன்றி ரீனா.
அனுஜன்யா
//பயணக்கட்டணம் ஐம்பது ரூபாய் ஒரு முறைக்கு.//
இது ரொம்ப அதிகமா தோனுது...
அனைத்தும் அருமை..
எல்லோரும் நிறைய சொல்லிட்டாங்களா, எனக்கு என்ன சொல்லுறது தெரியலைங்க..
@ சிவா
ஆமாம் சிவா. உங்க முதல் வருகைன்னு நினைக்கிறேன். நன்றி.
@ பட்டிக்காட்டான்
அட, நீங்களும் தைரியமா ஏதாவது சொல்லுங்க. உங்களுக்கும் இது முதல் வருகை இல்ல? நன்றி
அனுஜன்யா
முதல் வருகை இல்லை..
அடிக்கடி வருவேன்..
இப்போதான் பின்னூட்டம் இடுகிறேன்..
இனி அடிக்கடி..
வாவ்... சேரலோட பக்கம் அருமையாயிருக்கு... அறிமுகத்திற்கு நன்றி...
@ பட்டிக்காட்டான்
ஓகே ஓகே :)
@ கிருத்திகா
வாங்க. நிச்சயமா உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும் கிருத்திகா. நன்றி.
அனுஜன்யா
Post a Comment