ஒரு வழியாக மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. காங்கிரசுக்கு இப்போது சுக்கிர தசை. செல்லுமிடமெல்லாம் வெல்லுகிறது. பூவோடு நாராக பவாரின் கட்சியும் மணக்கிறது. சிவசேனைக்கு பெருத்த பின்னடைவு. பி.ஜெ.பி. கேட்கவே வேண்டாம். சிவசேனை/பி.ஜெ.பி. கூட்டணியின் வாய்ப்புகளை (சுமார் 44 தொகுதிகளில்) ராஜ் தாக்கரேயின் MNS கட்சி பாதித்து இருக்கிறது. முதல் முறை பங்கேற்ற இந்தத் தேர்தலில் 13 இடங்கள்; அதிலும் மும்பையில் ஆறு இடங்கள் என்று அமர்க்கள அறிமுகம் அந்தக் கட்சிக்கு. பொதுவாக வேறு மாநில மக்களுக்கும், குறிப்பாக உ.பி./பீகார் மக்களுக்கும் இது சற்று பீதி தரும் செய்தி. அறுபதுகளில் திராவிட இயக்கங்களின் தீவிரம் ராஜ் தாக்கரேவிடம் காணலாம். போலவே, பதவி சுகம் கிடைத்ததும் நீர்த்துப் போய்விடும் என்றும் நம்பலாம். ஆந்திராவிலிருந்து இருபது வருடங்கள் முன்பு வந்து மும்பையில் வாழ்க்கை அமைத்துக் கொண்ட மூர்த்தி என்னும் நண்பர் "இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி ஒரு குறுகலான சிந்தனையா" என்று ராஜ் தாக்கரே பற்றி கவலைப்பட்டார். நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingoism பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் அவர் இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறது.
“சார், எத்தனை தடவ சொல்லுறது - அரசியல் பேசாதீங்கன்னு” என்று டீக்கடைக்காரர் விரட்டுவதால்....
******************************************************
SAP என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தின் தலைவரான ரன்ஜன் தாஸ் என்னும் 42 வயது இளைஞர், உடற்பயிற்சி செய்து முடிந்ததும், பலமான மாரடைப்பால் உடனே மரணமடைந்த செய்தி, தினம் அலுவலகம்-வீடு-அலுவலகம் என்று சுழலும் பலரை கொஞ்ச நேரமாவது கவலைப்பட வைத்தது. குவஹாத்தியில் பிறந்து, அமெரிக்காவில் MIT/Horward என்று அமர்க்களம் செய்த அவருக்கு குடி/புகைப்பிடித்தல் போன்ற எந்தப் பழக்கங்களும் இல்லை என்பது ஆச்சரியத் தகவல். இந்திய மென்பொருள் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான Nasscom ன் தலைவராக இருந்த தேவாங் மேத்தா தன் 40 வயதுக்குச் சில மாதங்கள் முன் சிட்னி மருத்துவமனையில் இறந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். கொஞ்ச நாட்களாகவே 'இந்தியர்களுக்கு மற்ற இன மக்களைக் காட்டிலும் இதய நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று பல அறிக்கைகள் வருவது நினைவுக்கு வந்தது. இந்த பயங்களாலேயே நம்ம நண்பர் தேவன்மாயம் உடல் நலம்/நோய் அறிகுறிகள் பற்றி எழுதி வரும் பல இடுகைகளை படிக்காமலே நகர்ந்து விட்டேன். கொஞ்ச நாட்கள் முன்பு துவங்கியிருந்த காலை மென்-ஓட்டத்தை சோம்பல் நிமித்தம் நிறுத்தி இருந்தவனைக் கடிந்துகொண்ட (ச்சும்மா) மனைவியிடம் 'ரொம்ப எக்சசைஸ் செய்தாலும் ஆபத்து' என்று செய்தித்தாளைக் காண்பித்தேன். மொக்கை எழுதி பரஸ்பரம் சொறிந்துகொள்ளும் பிரபலங்களை ஈனமாகப் பார்க்கும் அறிவுஜீவி போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இது தேறாத கேஸ்' என்று நகர்ந்து விட்டாள்.
******************************************************
நீங்கள் எல்லாம் எப்படியோ தெரியாது. எனக்கு அறிவியல் என்றாலே .....உங்களுக்கு நான் எழுதும் கவிதை போல. கன்னா பின்னா அலர்ஜி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, இரண்டு வருட இயல்பியல் வகுப்பில் நான் ஊன்றி கவனித்த ஒரே விடயம் எங்கள் ஆசிரியைக்கு இருந்த இலேசான மீசை தான். அப்படிப் பட்ட ஆசாமிக்கு கணினி, அலைபேசி, அட சாதரண தொலைக்காட்சிப்பெட்டி போன்ற வஸ்துகள் தரும் தினசரி தொழில்நுட்பத் தொந்தரவுகள் சொல்லி மாளாது.
ஒரு முறை கார்க்கியிடம் 'டேய், என்னோட ப்ளாகை யாராவது ஹேக் பண்ணிவிட்டால், நீ தான் சரி செய்யணும்' என்றேன். அரை நிமிடம் மௌனம். பிறகு முழுதாக மூன்று நிமிடங்கள் வெடிச்சிரிப்பு சிரித்தான். 'தல...உங்க ப்ளாக...ஹேக் ....சரி சரி அப்படி ஒரு நல்லது நடந்தால், செய்தவருக்கு என் செலவில் பார்ட்டி தருவேன்' என்கிறான். எவ்வளவு பொறாமை பிடித்த மனிதர்கள்!
ரொம்ப நாட்களாகவே காயசண்டிகை வயிறு போல என் அலைபேசியின் பாட்டரி மின்சாரத்தை எந்நேரமும் உண்டபடி இருந்தது. ஆபீஸில் ஒரு geek, 'ஹலோ, ப்ளூ டூத் ஆன்லியே இருக்கு சார். யூஸ் செய்யாத போது ஆஃப் செய்துவிடுங்கள்; வைரஸ் வேறு தாக்கும்' என்றான். கேவலமாக உணர்ந்தாலும், அவனையே ஆஃப் செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களுக்கு மட்டுமில்லாது, கார்க்கி போன்ற 'up the curve' இளைஞர்களுக்கும் சுவாரஸ்யமான வலைப்பூ PKP அவர்களின் தளம். One of my most favourite bloggers and strongly recommended for all. சத்தமில்லாமல், சச்சரவுகள் இல்லாமல், அனாயாசமாக (450 Followers) சாதனை புரிந்துவரும் அவருக்கு என் வாழ்த்துகள்.
******************************************************
சமீப காலங்களில் என்னைக் கவர்ந்த பதிவர் வானவில் கார்த்திக். வசந்த் குமார் மூலம் இவர் பற்றி அறிந்தேன். கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவர் (தகவல் சரிதானே?) இவ்வளவு ஆர்வத்துடன், அதுவும் கச்சிதமாக, எழுதுவது மகிழ்ச்சியான ஆச்சரியம். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் ஸ்டைல். வெங்கிராஜா, கார்த்திக் போன்றவர்கள் இன்னும் ஐந்து வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. செய்வார்களா?
******************************************************
ஆத்மாநாமின் கவிதைகள் சில:
எழுதுங்கள்
எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை
உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்
உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை
வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்
திரும்புதல்
சரக்கென்று
உடல்விரித்துக்
காட்டும்
கற்றாழையின்
நுனியிலிருந்து
துவங்கிற்று வானம்
எங்கெங்கோ
அலைந்து திரிந்து
திரும்பிற்று மனம்
வழக்கம் போல்
கடல் மணல் புல்தரை
சாலை வாகனங்கள்
கோணல் மாணல் மனிதர்கள்
திரும்பிக்கொண்டு
எங்கிருந்து
கப்பல்கள் காத்திருக்கின்றன
திருபிச் செல்ல
நானும் திரும்ப வேண்டும்
தினசரியைப் போல
ஒவ்வொரு நொடியாக
அடுத்த நாள் காலைவரை
******************************************************
37 comments:
ராஜ் தாக்கரேவின் வெற்றி பயம் தரும் ஒன்றுதான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் பிரிவினையை வைத்து மட்டுமே ஓட்ட முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு வலுவான அரசியல் அடித்தளம் அமைக்க அது உதவும் என்பதே உண்மை.
******
//
'இது தேறாத கேஸ்' என்று நகர்ந்து விட்டாள்.
//
ம்ம்ம்... அங்கியும் அதுதானா?? :(
******
பி.கே.பி... ரீடர்ல சேத்தாச்சு.. நன்றி
****
கவிதைகள்.. சாரி.. அவுட் ஆஃப் சிலபஸ்.. ஹி..ஹி..
அன்பின் அனு,
தொழில்நுட்பப் புலமையில் நீங்கள் நம் சூர்யா அளவிற்கு இணையானவர். மேலும் உங்கள் தங்கமணி உங்களை எப்படிப் பார்த்திருப்பார் என என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ரசித்தேன்.
மிக நிறைவாக உணர்ந்த இடுகை இது
அனு... மிக அழகாகசொல்ல முடிகிறது எல்லாமும்
தெரிவுக்கு உரியவர்கள்தான் உங்களின் அறிமுகங்கள் .நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
அப்புறம் உங்கள் கவிதை அலர்ஜி என்று நீங்களே சொல்லிக் கொண்டால் எப்படி ம்ம்ம் :)
ஜென்யாஜி.,
கதைக்க ஏராளமிருக்கிறது.
இருந்தாலும்.,
கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்.
இந்த உள்குத்தை ரசித்தேன்.
'தல...உங்க ப்ளாக...ஹேக் ....சரி சரி அப்படி ஒரு நல்லது நடந்தால், செய்தவருக்கு என் செலவில் பார்ட்டி தருவேன்' என்கிறான்.
இந்த பார்ட்டி வைக்க ஏராளமான போட்டி நிலவும் என தோன்றுகிறது..
ரொம்பநா.. கழிச்சு interestinga இருந்தது :)
நச்: பதவி சுகம் கிடைத்ததும் நீர்த்துப் போய்விடும் என்றும் நம்பலாம்
ஆளுமை: ஊன்றி கவனித்த ஒரே விடயம் எங்கள் ஆசிரியைக்கு இருந்த இலேசான மீசை தான் (நமக்கு கணக்கு வராதுங்கன்னா)
உள்குத்து 1.மொக்கை எழுதி பரஸ்பரம் சொறிந்துகொள்ளும் பிரபலங்களை ஈனமாகப் பார்க்கும் அறிவுஜீவி போல் ஹிஹி..
உ.கு. 2. கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்.
வழக்கம் போல அருமை.... உங்க கிட்ட கவிதை எழுதத்தான் கத்துக்கணும்னு நினைச்சேன்.... இப்ப பத்தி எழுத்துகூட..... நெக்ஸ்ட் மீட் பண்றேன் !!!
முழு பதிவும் படிக்கும் படி இருந்தது.
:)))
/
கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்
/
எப்பிடி இப்பிடி எல்லாம்
:))))))))))
அந்த சயின்ஸ் மீசை வெகுவாக ரசித்தேன் தல...
1,சிவ்சேனா,பிஜேபி போன்ற மதவாத கட்சிகள் மஹாராஷ்டிராவில் மட்டுமல்ல.அருணாசல பிரதேசத்திலும்
ஹரியானாவிலும் மண்ணைக் கவ்வியது சற்று பாதுகாப்பாக உணர வைத்தது.
2. திராவிட கொள்கைகளுக்கு இணையாக இன்னும் எம்.என்.எஸ் கொள்கை ஈடுகொடுக்க வில்லை
என்பது என் அனுமானம்.சுருங்கச் சொன்னால் பூட்ட கேஸ்.அவர்களால் ஓட்டுகளை ஸ்பிலிட் பண்ண மட்டுமே
முடியும்.
pkp = pattukottaiprabhakar ???
ஹிஹி
நம்புங்க சீரியஸாதான் கேக்குறேன்..
பதிந்திருக்கும் சில வரிகளை கட் அண்ட் பேஸ்ட் செய்ய விருப்பமில்லை ஆனால் சத்தமாய் சிரித்துவிட்டேன் என்பது உண்மை.SAP பயன்படுத்திக் கொண்டிருக்கும் எனக்கு இது தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது.தொழில்நுட்ப புலமையில் நானும் உங்களுக்கு சளைத்தவனல்ல.பால்யம் முதல் இதுவரை எனக்கும் அறிவியல் வேம்பாகத்தானிருக்கிறது.
வார்த்தைகளில் இழையோடும் புன்முறுவல் :)
எழுதுங்கள்பேனா முனையின்
உரசலாவது கேட்கட்டும் //
அட்டகாசம் நண்பரே .......
ராஜ் தாக்ரேயை நம் திராவிட அரசியலோடு சேர்த்து இருந்தீர்களே நல்ல சிந்தனை
வெங்கியின் எழுத்துக்கள் எனக்கும் பிடித்திருக்கின்றன.உலக சினிமாவில் மினி என்சைக்கிளோபீடியாவாக இருக்கிறார்.இப்போதே மிளிர்கிறார்.
//நம் தமிழ் இணையத்தில் காணக்கிடைக்கும் தமிழ் jingoism பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாததால் அவர் இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறது.//
ஒன்னியும் சொல்றதுக்கில்ல..
வானவில் கார்த்தி பற்றி சொல்றது சரி.. அவன் எழுத்தின் வசியம் வைத்திருப்பான்.. மாணவன் தான்..
நல்லா தானே போய்ட்டிருக்கு.. எதுக்கு கடைசி 2 கொலைவெறி? :))
I also expect that Venkiraja in another 5 years will definitely mature enough and make it big. I regularly read his blog and he is one of my favourites.
ரசனையான, சுவாரசியமான பகுதிகள். அதுவும் மூன்றாவது பகுதியில் நானும் உங்களை மாதிரிதான் வயதில் கார்க்கி செட்தான் என்றாலும்.!
அப்புறம் கார்த்திக், வெங்கிராஜா லிஸ்டில் என் பெயரை விட்டுவிட்டீர்கள் பாருங்கள், திருத்திவிடுங்கள்.!
இப்போல்லாம் நான் கொஞ்ச தூரம் நடப்பது கூட இல்லை..... நானெல்லாம் வாழைப்பழ சோம்பேறி....
கார்கியை இப்புடி கிண்டல் பண்ணியதற்கு நான் இந்த பதிவை விட்டு வெளி நடப்பு செய்கிறேன்.
தலைவர்
திருச்சி கார்கி ரசிகர் மன்றம்
//கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்//
அப்படியா?????
By the way the post is informative.
:-)) rasiththen, siriththen
//டம்பி மேவீ said...
கார்கியை இப்புடி கிண்டல் பண்ணியதற்கு நான் இந்த பதிவை விட்டு வெளி நடப்பு செய்கிறேன்.
தலைவர்
திருச்சி கார்கி ரசிகர் மன்றம்//
ரசிக கண்மணிகள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..
// கார்க்கியின் நண்பராக இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்.//
கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்..
தல.. கொஞ்சம் பயமா கூட இருக்கு. ரொம்ம்ம்ப நன்றி. :)
ரசித்துப் படித்தேன். நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடஜன்யா...என்ற வியப்பு..அருமையான இடுகை.
ஆம்.விஸ்வரூபம் எடுப்பார்கள்.5 வர்டங்களில் அல்ல..அதற்கு முன்னரே.
அடப்பாவமே! ஒரு மாசமா எழுதாமப் போனாலும், இப்படி பாராட்டுகளா? (ஒருவேளை, அதனால தான் பாராட்டா?) எதிர்பார்க்காத ஒன்று.
உங்களுக்காகவே, இதோ எழுதிக்கிட்டிருக்கேன் சார் ஒரு பதிவு!!
நன்றி அனுஜன்யா சார், நந்தா, நேசன், ஆ.மு.கி, அய்யனார் அண்ட் அப் கோர்ஸ், நர்சிம்!
வானவில் வீதி கார்த்திக்கை எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. சேம் வேவ்லென்த்!
/கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்../
விடுங்க கார்க்கி, இப்படி ஏதாவது சொல்லித்தான் மனசைத் தேத்திக்கணும் :)
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்../
விடுங்க கார்க்கி, இப்படி ஏதாவது சொல்லித்தான் மனசைத் தேத்திக்கணும் ://
ஹலோ, மல்லிப்பூ கணேஷா? ஆமாம்.. இந்த வாட்டி டூர் போலாம்..
//
ஹலோ, மல்லிப்பூ கணேஷா?
//
சான்ஸே இல்லை கார்க்கி... வாய்விட்டு சிரிச்சிட்டேன்..
//மல்லிப்பூ கணேஷா?//
ROFL... இது ரத்த பூமி!
@ வெண்பூ
ராஜ் பிரிவினையை கோரவில்லை. மண்மகன் மதிக்கப்பட வேண்டும். அசலூர்க்காரர்கள் தங்கள் வாழ்வில் கை வைக்கக் கூடாது என்கிறார். என்ன ரொம்ப மிரட்டலாக!
கவிதைகள் - சரி என்னோடதான் உனக்கு சண்டை/சச்சரவு எல்லாம் :)
யாத்ரா, மண்குதிரை, நந்தா, முத்துவேல், நேசமித்ரன், ராஜாராம் என்று படித்துப் பார்க்கவும். ரொம்ப அழகாக, புரியும்படி எழுதுறாங்க :)
நன்றி வெண்பூ
@ வேலன்
வாங்க. ரொம்ப நாட்களாக ஆளைக் காணவில்லையே என்று நினைத்தேன். ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு :)
நன்றி வேலன்
@ நேசமித்ரன்
நாமளாவே ஒப்புக்கொண்டால் அடியின் வீரியம் குறைவு :)
நன்றி நேசன்
@ கிருபா என்னும் கும்க்கி
வேற யாருக்காவது உள்குத்து என்றால் உங்களுக்கு ரசிக்கத்தான் செய்யும்.
நன்றி கும்க்கி
@ அசோக்
கணக்கு, அறிவியல் அளவு மோசமில்ல :)
நன்றி அசோக்
@ மஹேஷ்
ஆஹா, இத்தகைய பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. சாருக்கு ஒரு டீ!
நன்றி மஹேஷ்
@ சிவா
//முழு பதிவும் படிக்கும் படி இருந்தது.
:)))//
என்ன ஒரு உள்குத்து இது. நல்லா இரு சிவா.
நன்றி
@ செய்யது
ஆமாம் நிம்மதிதான்.
திராவிட இயக்கங்களின் தீவிரம் என்று சொன்னேனே தவிர, கொள்கைகளில் திராவிடம் கண்ட (கொண்டிருந்த) உச்சங்கள் முன் ராஜ் வெறும் பித்தலாட்டம் தான்.
நன்றி செய்யது
@ அசோக்
செம்ம குறும்புய்யா உமக்கு. (நானும் முதலில் அப்படித்தான் நினச்சேன்)
@ அய்யனார்
நன்றி அய்ஸ். SAP specialist ஆ நீங்க? ஓஹோ.
வெங்கி - நீங்களே சொல்லியாச்சுல்ல. இனிமேல் வெங்கியிடம் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகும். ஆனாலும், செய்வார்.
நன்றி அய்ஸ்
@ வெண்ணிற இரவுகள்
வாங்க பாஸ். மொழி, மாநில உணர்வுகளில் ஒரு புதுப் புள்ளி இருந்தாலும், திராவிட இயக்கங்களின் துவக்க உச்சங்கள் ராஜ்ஜிடம் இல்லை.
நன்றி
@ சஞ்சய்
வா மாப்ள. மூன்று இடங்களிலும் பெருவெற்றி. எப்ப பார்ட்டி?
கார்த்தி உனக்கு முன்னமே தெரியுமா?. ஹலோ, ஆத்மாநாம் கூட படிக்க மாட்டேன்னா....
நன்றி சஞ்சய்
@ கும்க்கி
ஹ்ம்ம், சரி சரி :)
@ நந்தா
ஆஹா, மொதல்ல அய்ஸ். இப்ப நீங்க. ஓகே ஓகே அப்ப Venky has arrived - already.
நன்றி நந்தா
@ ஆதி
வயதில் கார்க்கி செட்டா? ஆதிமூலமேன்னு கத்தணும் போல இருக்கு :(((
கார்த்திக், வெங்கி லிஸ்டில் நீங்களுமா? அவங்க தலா பத்தாயிரம் தராங்க. எப்படி வசதி?
போய்யா, போயி .......
நன்றி ஆதி :))))
@ பித்தன்
ஹையா, நமக்கும் கம்பெனி இருக்கு :)
நன்றி பித்தன்
@ மேவி
திருச்சிக்காரர்கள் புத்திசாலிகள் என்று எண்ணியிருந்தேன். ஹ்ம்ம்.
நன்றி மேவி :)
அனுஜன்யா
@ தராசு
உள்குத்திலேயே உள்குத்துப் பின்னூட்டம் போடுறீங்க பாஸ்.
நன்றி தல
@ மண்குதிரை
கவிதை மட்டும் அழகு தமிழில். பின்னூட்டம் தங்கிலிஷில் :)
நன்றி மண்குதிரை.
@ கார்க்கி
டேய், அடங்குடா.
//கார்க்கியின் நண்பர் என்றால் மிக நன்றாக எழுத வேண்டும் எதிர்பார்க்கிறார் போலும்..//
இடுக்கண் வருங்கால் நகுக.... நல்லா காமெடி பண்ணற.
But, on a serious note, appreciate your sporting gesture.
நன்றி கார்க்கி.
@ கார்த்திக்
அந்த பயம் இருக்கட்டும் :). You will do well man. Keep going.
நன்றிக்கு நன்றி.
@ ஜ்யோவ்
//நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்//
அப்பதானே இன்னும் நிறைய மொத்தலாம்னு ஒரு கொலைவெறிக் கொள்கையா? :)
நன்றி ஜ்யோவ். முயல்கிறேன்.
@ நர்சிம்
நன்றி பாஸ். அய்ஸ், நந்தா, இப்ப நர்சிம்
- ஆஹா, கார்த்திக்/வெங்கி பார்த்து செய்யுங்கப்பா.
@ வெங்கிராஜா
வாப்பா ஹீரோ. இவ்வளவு வேகமா pulp fiction எழுதியதற்கு ஒரு 'வாவ்'.
கார்த்திக் - செம் ப்லட்; செம் வேவ் லெங்க்த் :)
நன்றி வெங்கி
@ ஜ்யோவ் / கார்க்கி / வெண்பூ / வெங்கி
போதும்..வேணாம். . பயமா இருக்கு... அழுதுடுவேன்...
ஆனாலும், கார்க்கி உனக்கு ரொம்பவே குசும்பு :)
அனுஜன்யா
@ கிருபா என்னும் கும்க்கி
வேற யாருக்காவது உள்குத்து என்றால் உங்களுக்கு ரசிக்கத்தான் செய்யும்....
தல.,
உள்குத்து வைத்தது தாங்கள்தான்...ஆஹா அதை சொன்னதுக்கு இப்படியா....கார்க்கி என்பதால்தான் அதுகூட....
உங்க கவிதையெல்லாம் தொடர்ந்து படிச்சு தலய பிச்சுகிட்டதுல மெடிக்கல் பில் எகிறிப்போச்சு...ஒழுங்கா செக் அனுப்பிவைங்க...
@ கும்க்கி
//உங்க கவிதையெல்லாம் தொடர்ந்து படிச்சு தலய பிச்சுகிட்டதுல மெடிக்கல் பில் எகிறிப்போச்சு...ஒழுங்கா செக் அனுப்பிவைங்க...//
இது உள்குத்து இல்ல. நேரிடையான தாக்குதல். சரி சரி, பிரச்னையை பேசி தீர்த்துக்குவோம். :)
நன்றி கும்க்கி.
அனுஜன்யா
Post a Comment