Thursday, December 17, 2009

தெலுங்கானா குழப்பம் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்



இப்போதெல்லாம் தனிக் குடித்தனம் என்பது சாதாரண, ஒப்புக்கொள்ளப் பட்ட விதயமாகிவிட்டது. இதற்கு முந்தைய தலைமுறை இந்த சித்தாந்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டது. Pangs of separation எனப்படும் பிரிவின் வலி எல்லா நிரந்தர பிரிவுகளிலும் இருக்கிறது. புது இந்தியா பிறக்கும் போதே பிரிவுடனே பிறந்தது. பாகிஸ்தான் தனியே பிரிந்து போன வலியை இந்தியாவால் இன்னமும் மறக்க முடியவில்லை. கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து வங்காள தேசம் ஆன போது பாகிஸ்தானும் பிரிவின் வலி பற்றிப் புரிந்து கொண்டது.



தெலுங்கானா விவகாரம் இப்படி திடீரென்று பெரிதாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. தனியே பிரிந்து செல்லும் நாடும், மாநிலமும் வெவ்வேறு நிலைகள் என்றாலும், பிரிவு என்பது 'உன்னுடன் இருப்பதில் பிரியமில்லை. ஆதலால் பிரிகிறேன்' என்பதைப் பொறுத்த வரையில் ஒரே நிலைப்பாடுதான். வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்த போது இந்தியர்களுக்கு 'நல்லா வேணும்; எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்' என்ற உணர்வே பரவலாக இருந்திருக்கும். ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த போது இருந்த சென்னைவாசிகள் மனநிலை இப்போது அப்படித்தான் இருக்குமோ. நாம் ‘திருப்பதி நமது’ என்று கேட்டபோது 'மெட்ராஸ் மனதே' என்று அவர்கள் கோஷம் போட்டு, கடைசியில் திருத்தணியை தக்க வைப்பதே பெரும் பாடாக போயிற்று என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுவதைக் கேட்டதுண்டு.


ஆனால், பிரிவினை மனப்பான்மை எதனால் வருகிறது? சுதந்திர உணர்ச்சி மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட உணர்வுகளுக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பாகவே அது பெரும்பாலும் திகழ்கிறது.


இப்போது தெலுங்கானாவை எடுத்துக் கொண்டால், அது பழைய ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம். மிக மேடான, வறண்ட, பின் தங்கிய நிலப்பரப்பு. சுதந்திரத்திற்குப் பின், தாமதமாக இந்தியாவுடன் இணைந்த பகுதி. இந்த அறுபது ஆண்டுகளில் ஆட்சியாளர்களின் தொடர் அவமதிப்பிலும், அசிரத்தையிலும் தொடர்ந்து பின்தங்கியிருக்கும் பிரதேசம். கர்நாடகா மாநிலத்தின் வட மாவட்டங்களான பிதர், குல்பர்கா, ராய்ச்சூர் இவைகளும் கூட இந்த பட்டியலில் சேர்க்கலாம். இந்தப் பிராந்தியத்தை அந்தப் பகுதிகளில் 'ஹைதராபாத்-கர்நாடகா' என்றே சொல்லும் வழக்கமும் உண்டு. (நான் அங்கு சித்தாபூர் என்னும் ஊரில் ஒரு இரண்டு மாதம் பயிற்சி அடிப்படையில் வேலை செய்திருக்கிறேன்). கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என்று எல்லா துறைகளிலும் ஒதுக்கப்பட்ட பகுதி. ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்த வரை தெலுங்கானா மிகவும் பின்தங்கிய பிரதேசம். கடப்பா, கர்னூல், அனத்தப்பூர், சித்தூர் (நம் தமிழக எல்லைக்கு அருகில் உள்ளவை) போன்ற மாவட்டங்கள் அடங்கிய ராயலசீமா ஓரளவு பின்தங்கிய பகுதி. கிருஷ்ணா, கோதாவிரி போன்ற ஜீவ நதிகள் பாயும் டெல்டா பிரதேசமான ஆந்திரா (ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி) செழிப்பான, வளம் கொழிக்கும் பூமி. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை வசதிகள் என்று எல்லா விதங்களிலும் முன்னேற்றம் கண்டதுடன் துறைமுக நகரான விசாகப்பட்டினம், வணிக நகரான விஜயவாடா போன்ற இடங்களைக் கொண்ட நிலப்பரப்பு. ஹைதராபாத் மாநகரம் தெலுங்கானா பிரதேசத்தில் இருந்தாலும், மாநில தலைநகர் என்பதாலும், நிஜாம் கால பாரம்பரியம் என்பதாலும் வெகுவாக முன்னேறிய, வளர்ச்சியில் கொழிக்கும் நகரம்.


இப்படி தலைநகர் தம் பிரதேசத்தில் இருந்தும், அடிப்படை வசதிகளில் கூட மிகவும் பின்தங்கிய பகுதியாக எத்தனை நாட்கள் தாம் இருப்பது? இதற்கு ஒரே தீர்வு தனியே செல்வதுதான். கூழோ கஞ்சியோ, அதை நாங்களே குடித்துக் கொள்கிறோம். இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்னும் விரக்தி மனோபாவம் அணையாத் தணல் போல அம்மக்களிடம் எரிந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த உணர்வை ஊதி, பெரிதாக்கி, தனி மாநிலக் கோரிக்கையை வைக்கும் வரை, அதற்காக தனிக் கட்சி துவங்கும் வரை சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இது போன்ற பிரச்சனைகளுக்கு இது சரி, இது தவறு என்று கருப்பு-வெள்ளை தீர்வுகள் கிடையாது. இவ்வளவு நாட்கள் கிடப்பில் இருந்த அல்லது தழல் போல் அணையாதிருந்த பிரச்சனை திடீரென்று எவ்வாறு இவ்வளவு பெரிதாயிற்று என்று வேண்டுமானால் அலசலாம்.


தெலுங்கானா பகுதி, நக்சலைட்டுகள் அதிகம் புழங்கும் பகுதியும் கூட. பக்கத்திலிருக்கும் சட்டிஸ்கர் மற்றும் விதர்பா (மகாராஷ்டிரா) அடர்ந்த வனங்கள் நிரம்பிய பகுதிகள். நிரம்ப ஏழ்மையும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கமும் - நீட்சியாக ஏழை-பணக்கார இடைவெளி மிக அதிகம் - நிறைந்த பகுதி. ஆட்சியாளர்களை பணத்தாசை பிடித்து ஆட்டுவதால், ஏழை மக்களுக்கு ஒரு இயற்கையான பிடிப்பு இந்த நக்சலைட்டுகளிடம் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. உண்மையில், இந்த ஏழை மக்களே நக்சலைட்டுகளாக உருவாகுகிறார்கள்.


இந்தியாவில் நக்சலைட்டுகள் எனப்படும் போராளிகள் (இவர்களை நான் புனிதப் படுத்தா விட்டாலும், புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் - இவர்கள் தரப்பு நியாயங்களும் நிறைய இருக்கிறது என்ற அடிப்படையில்) பொதுவாக பின்தங்கிய பிரதேசங்களில், வனப்புறங்களில் பெருமளவில் போராடி வருகிறார்கள். இவர்களை விட்டால் அங்கிருக்கும் அப்பாவி மக்களுக்கு வேறு யாரும் குரல் கொடுப்பதில்லை. நிச்சயம் இந்தப் போராட்டங்களிலும் நிறைய அணுகுமுறைத் தவறுகள், அத்துமீறல்கள் நடப்பதில் சந்தேகமே இல்லை. அன்றாடங் காய்ச்சிகளான மக்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத போது இந்தப் போராட்டக்காரர்களுடன் சேர்வதோ அல்லது அவர்களுக்கு எதிராகவாவது செயல் படாது இருப்பதோ தான் நடைமுறை யதார்த்தம்.


சமீப காலங்களில் பீகார், சத்தீஸ்கர், விதர்பா பகுதிகளில் நக்சலைட்டுகள் குறிப்பிடத்தக்க சிறு வெற்றிகள் அடையத் துவங்கி, நாடு தழுவிய கவனிப்பைப் பெற ஆரம்பித்திருக்கிறார்கள். தீவிர வாதிகள் போல், இவர்கள் விதயத்தில் அரசு அடக்குமுறைக்கு ஏகோபித்த ஆதரவு இருக்காது. இதை வேறு மாதிரி அணுக வேண்டியதின் அவசியத்தை தாமதமாகவாவது அரசு புரிந்து கொண்டிருக்க வேண்டும். தெலுங்கானா பிரதேசம் மெல்ல மெல்ல நக்சலைட்டுகள் கையில் முழுதும் சிக்கிவிடும் சாத்தியங்கள் உள்ளன. இதைத் தவிர்க்க வேண்டுமெனில், அப்பகுதி மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும். அறுபது ஆண்டு ஒடுக்கப்பட்ட உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் YSR ரெட்டி தன்னுடைய இரும்புக் கரங்களால் சில்லறை இலவசங்கள் தந்து இந்தப் பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டதால், சந்திர சேகர் ராவ் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. YSR இன் திடீர் மறைவு கொடுத்த வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்தியதில் ராவின் சாதூரியம் வெளிப்படுகிறது. இருக்கவே இருக்கிறது நம் நாட்டில் பெரிதும் செல்லுபடியாகும் உண்ணாவிரதம் என்னும் ப்ளாக்மெயில். காந்தி துவக்கி வைத்தது. அதனால் யாரும் கேள்வி கேட்கவோ, கேலி செய்யவோ முடியாதது. ஒரு பேச்சுக்கு ரோசைய்யா (ஆந்திர முதல்வர்) நாளை முதல் பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உடல் நிலை சீரழிந்து, அபாய கட்டத்தைத் தொட்டால், அப்போது அவர் 'ஆந்திரத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவு மாற்றப் படவேண்டும்' என்றால் மத்திய அரசு சரி சொல்லிவிடுமா? சோனியாவுக்குக் கூட இதற்கு உடனே பதில் சொல்ல இயலாது.


இந்த பின்புலத்தில் காங்கிரஸ் மேலிடம் ஒரு உடனடி நிவாரணி என்று எண்ணி இந்த முடிவை தடாலடியாக அறிவித்தது. இதன் மூலம் அது ராவ் உயிரைக் காப்பாற்றி (இல்லாவிட்டால் சிக்கல் ஏற்பட்டிருக்கும்), தெலுங்கானாவின் பின்தங்கிய நிலைக்கு ஒரு அரசியல் ரீதியான தீர்வை ஏற்படுத்தி விட்டதாக நினைக்கிறது. இல்லாவிட்டால், நக்சலைட்டுகள் போராட்டத்தில் நிறைய மாணவர்கள் உட்பட பலர் சேர்ந்திருக்கும் சாத்தியங்கள் இருந்தன. யாரும் எதிர்பாராத அளவில் இதற்கு இவ்வளவு எதிர்ப்பு வந்தது இப்போது மத்திய அரசுக்கு புது திருகுவலி.


தெலுங்கானா தவிர்த்த பிற ஆந்திர மக்கள் கொந்தளித்து, எதிப்பைக் காட்டி வருவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. பிரிவில் ஒரு நிராகரிப்பு இருப்பதும், அது தரும் வலியும் அனைவரும் அறிவோம். நிற்க. இதைத் தொடர்ந்து, புற்றீசல்கலாக மேற்கு வங்கத்தில் கோர்காலேன்ட் , மகாராஷ்டிராவில் விதர்பா, உ.பி.யில் மட்டும் மூன்று பகுதிகள், கர்நாடகாவில் கொடகு நாடு என்று தனி மாநிலம் என்பது கிட்டத் தட்ட இலவச டிவி போல் ஆகிவிட்டது ஒரு கேலிக் கூத்து.


தமிழ் நாட்டிலும் ராமதாஸ் போன்றவர்கள் வட, தென் தமிழகம் என்று இரண்டாகப் பிரிப்பது பற்றி ஆசைப்படுவது இப்போதைக்கு நமக்கு மட்டுமே தெரியும். இதை முளையிலேயே கிள்ளுவது நல்லது. கிள்ளுவது என்பது ராமதாசை அடக்குவது என்று பொருளல்ல. தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். கலைஞரால் அது நிச்சயம் முடியும். எனக்கிருக்கும் ஒரே அச்சம், சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ என்பதே.

38 comments:

Cable சங்கர் said...

thalaivare..நீங்க அரசியல் கூட எழுதுவீங்களா.. அதே போன்ற வழக்கமான நடையில்:)

கே.என்.சிவராமன் said...

அன்பின் அனு,

இடுகை தொடர்பாக விமர்சனங்கள் உண்டு. அது அரசியல் சார்ந்தது. மார்க்சிய - லெனினியம் சார்ந்து இருவரும் பார்க்கும் பார்வையும், விலகும் புள்ளியும் வெவ்வேறானவை. எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆனால், எப்போதும் '(எதைப்) பற்றியும் பற்றாமலும்' உங்கள் துள்ளல் நடையில் வசீகரிக்கும். மொழி உங்கள் விரல்நுனியில் மண்டியிட்டு வெகுஜன இதழுக்கான சுவாரஸ்யத்துடன் மிளிரும். இந்த இடுகையில் அது மிஸ்ஸிங். இது என் அனுபவம் மட்டுமே. ஒருவேளை அரசியல் சார்ந்த இடுகை என்பதால் எச்சரிக்கையுடன் துள்ளலை குறைத்துவிட்டீர்களா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நையாண்டி நைனா said...

எச்சூஸ் மீ... இது நம்ம அனுஜன்யா அண்ணாத்தே பதிவு தானே... இல்லே நான் வழி மாறி வந்துட்டேனா?

நர்சிம் said...

நிறைய விசயங்களை மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்கிறீர்கள்

தலையங்கக் கட்டுரை பாஸ் இது..சுவாரஸ்யக் கட்டுரை.

நர்சிம் said...

//ஆனால், எப்போதும் '(எதைப்) பற்றியும் பற்றாமலும்' உங்கள் துள்ளல் நடையில் வசீகரிக்கும். மொழி உங்கள் விரல்நுனியில் மண்டியிட்டு வெகுஜன இதழுக்கான சுவாரஸ்யத்துடன் மிளிரும். //

வெகுஜனம்னா அங்க அடிக்கிறாரு,அப்பிடி இல்லைன்னா நீங்க .. நல்லா கேட்குறீங்கய்யா டீட்டெய்லு ஹஹஹா.

ஜோக்ஸ் அப்பார்ட்,

அன்பின் சிவராமன்ண்ணா, இது போன்ற கட்டுரையை இப்படித்தானே எழுதமுடியும் என்பது என் கருத்து, சுவாரஸ்யமாகவும் இருந்தது.

அதைவிட அதிக தோழமையுடன்
நர்சிம்

Unknown said...

சொல்லவந்த விஷ்யத்த ரொம்ப அழகா, பொறுப்பா சொல்லிருக்கீங்க அண்ணா.. (எனக்கே புரிஞ்சிடிச்சே.. :)))))))

Ashok D said...

//பிரிவினை மனப்பான்மை எதனால் வருகிறது? சுதந்திர உணர்ச்சி மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட உணர்வுகளுக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பாகவே//

துக்கமும் வலியும் என்றுகூட தலைப்பிட்டுயிருக்கலாம். உங்களுக்கு கணமான விஷயங்களை இறுக்கமான நடையில்லாமல் ஈசியாக சொல்லமுடிகிறது. அதே சமயத்தில் சொல்ல வந்து விஷயத்திற்கான கணம் சிறிதும் குறையாமல். தொடர்ந்து இது மாதிரியும் எழுதுங்கள்.

அ.மு.செய்யது said...

பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்க.!!!

இவ்வளவு விஷயம் அலசி ஆராய்ஞ்சி சொல்லியிருக்கீங்க..!!

உங்களிடம் ஒரு கேள்வி:‍

சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாடு தனிநாடாக பிரிக்கப்பட்டிருந்தால் நம்முடைய வளர்ச்சி எப்படியிருந்திருக்கும் ??

Resourcing பற்றி விடுங்கள்.காரணம் எந்த வளங்களும் இல்லாமல் வெறும் துறைமுக ஏற்றுமதி இறக்குமதிகளையும் உழைப்பையும் வைத்து முன்னேறிய சிங்கப்பூரை போன்று தமிழ்நாடு உருமாறியிருக்குமா ??

If this question looks pretty amateur, just pass on !!

Ashok D said...

//மார்க்சிய - லெனினியம் சார்ந்து இருவரும் பார்க்கும் பார்வையும், விலகும் புள்ளியும் வெவ்வேறானவை. எனவே அதை விட்டுவிடுவோம்.//

அன்பின் சிவராம்
இவ்வரிகளை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.

கார்க்கிபவா said...

//ஒருவேளை அரசியல் சார்ந்த இடுகை என்பதால் எச்சரிக்கையுடன் துள்ளலை குறைத்துவிட்டீர்களா//

அண்ணா, எனக்கு தோன்றத சொல்லிடறேன். மிகவும் சென்சிட்டிவான விஷயங்களை எழுதும் போது அந்த நக்கல்களை எழுதிவிட்டு, எடுக்கலாமா வேண்டாமான்னு யோசிப்பேன். அப்புறம் நம்மள படிக்கிரவங்க இதைத்தான் விரும்புவாஙன்னு விட்டுடுவேன். ஆனா இந்த பதிவுல எவ்ளோ விஷயம் இருக்கு? அப்போ அந்த துள்ளல் நடை ஒட்டுமா? தல தெரிஞ்சுதான் விட்டாருன்னு நினைக்கிறேன்.

நான் கேட்கலாம்? நீங்க போய் இப்படி கேட்கலாமா சிவாண்ணா? :)))(அவர் எங்க போய் கேட்டார். இங்க இருந்துதானே கேட்டாருன்னு சொல்லாதிங்கப்பா)

எப்படியோ பதிவுல அரசியல் இருப்பதால் பின்னூட்டத்தில் நானும் ஹிஹிஹி

Prabhu said...

உமா மகேஸ்வர ராவ்னு ஒருத்தர் பிரிக்கக் கூடாது என உண்ணாவிரதம் இருந்து மயக்கம் போட்டதா கேள்வி. நீங்க கேள்வி பட்டீங்களா?

எம்.எம்.அப்துல்லா said...

// கலைஞரால் அது நிச்சயம் முடியும். எனக்கிருக்கும் ஒரே அச்சம், சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ என்பதே. //

கண்டிப்பாக பிரிக்கும் மனநிலை திமுகவின் எந்த மட்டத்திலும் இல்லை.

எம்.எம்.அப்துல்லா said...

//சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாடு தனிநாடாக பிரிக்கப்பட்டிருந்தால் நம்முடைய வளர்ச்சி எப்படியிருந்திருக்கும் ??

//

இப்போது எப்படி இருக்கின்றோமோ அதேபோல்தான் தனிநாடாக இருந்தாலும் இருந்திருப்போம். பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் கணிப்பு.

அப்புறம் நாம் இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்க நாம் கேட்ட பிரிவினைவாதமும் ஒரு முக்கிய காரணம். ”வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது” என்று தனி திராவிடநாடு கேட்டதால்தான் மத்திய அரசு கொஞ்சமேனும் நம் பக்கம் திரும்பிப் பார்த்து சில வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது. இல்லாவிட்டால் வடகிழக்கு மாநிலங்களைப்போல இருந்து இருப்போம்.

Unknown said...

நல்லா எழுதி இருக்கீங்க..

//.. தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். ..//

அதுதான் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் இலவச டிவி கொடுக்குறாங்கல்ல, அதுதான் ஆரம்பம், இன்னும் நிறைய திட்டம் இருக்கு..??!!

Venkatesh Kumaravel said...

KSR மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கென்னவோ தெலுங்கானாவை தனி மாநிலமாக அங்கீகரிப்பதே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது. போலவே உபி, வங்காளம் போன்ற பெரும் மாநிலங்களையும். நிர்வாக நெருக்கடி, வாக்குப்பதிவு பற்றாக்குறை, கல்வியின்மை, ஏலைவாய்ப்பின்மை முதலிய பல பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது. அதற்கென ஜிக்சா உடைத்துப் போடவேண்டாம், பரிசீலனை, குழு கமிட்டி எல்லாம் வைத்து ஒரு பத்து வருஷத்துக்குள் ரிவைஸ் செய்தால் நல்லது.

மண்குதிரை said...

பகிர்வுக்கு நன்றி.
எனக்கும் சரி என்றுதான் தோன்றுகிறது.

அத்திரி said...

அண்ணே தமிழ்நாட்டுல சென்னை மற்றும் அதன் சுற்றுபுறமுள்ள பகுதிகள் தவிர முக்கியமா தென் தமிழகம் ரொம்பவே பின்னால தான் இருக்கு........ எவன் ஆட்சிக்கு வந்தாலும் கண்டுக்க மாட்டாங்க....... நான்குநேரி தொழில்நுட்ப பூங்கா முரசொலி மாறம் அடிக்கல் நாட்டி வைத்தது... அவர் இறந்து 6வருசமாச்சு...... ஆனா அது எந்த லெவல்ல இருக்குனு யாருக்கும் தெரியாது....... யாராவது நெல்லை மாவட்டத்துல தொழில் வளர்ச்சியே இல்லைனு சொன்னா உடனே கலைஞர் நாங்கதான் நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம் அப்படிம்பார்......இதுக்கு மட்டும்தான் அந்த பூங்கா பயன்படுது.

Vidhoosh said...

குமுறல் கொஞ்சம் ஜாஸ்தியாப் போச்சு. இந்த மாதிரி பிரிவினைகளால் யாருக்கும் லாபமில்லை என்று தெரிந்தே நடக்கிறது.

நான் வேணும்னா நம்ம நங்கநல்லூர தனி நாடா கேட்டு உண்ணா விரதம் இருக்கட்டுமா, உங்க தலைமைல. குறைஞ்சது, ஒரு பத்து கிலோவாவது குறையணும். சரியா..

-------------
இதையும் அதையும் எதையும் விட அதிக தோழமையுடன் :))

-வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

pl visit
http://tvrk.blogspot.com/2008/10/blog-post_2205.html

Karthik said...

don't have much to say except the post is really a good one. a sensible one.

hope they will do what they promise to telangana.

creativemani said...

வாவ்.. இந்த பிரச்சனையில், எத்தனையோ தெரிந்திராத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அனுஜன்யா.. நன்றிகள்..

அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராடாமல், இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, அடிப்படை ஓட்டுரிமையை வீணாக்கி, அறுபது வருடங்களாய் பின்தங்கியிருக்கிறோம், பின்தங்கியிருக்கிறோம் என்ற ஒரே பாட்டை பாடி, இப்போது கூழோ கஞ்சியோ தனியே போய் குடித்துக் கொள்கிறோம் என்று விதண்டாவாதம் செய்வது, நாட்டின் கொஞ்சநஞ்ச ஒருமைப்பாட்டையும் கேலிக்கூத்து ஆக்குகிறது.. இதை சாக்காக வைத்து ஆங்காங்கே எனக்குப் பிரித்துக் கொடுங்கள், எனக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று பிரியாணி பொட்டலம் ரேஞ்சுக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்..

மொழி, ஜாதி என்று மக்களைத் தனிமைப் படுத்தி லஞ்ச-லாவண்யம் மூலம் ஓட்டுகளை விலைக்கு வாங்கும் அரசியல்"வியாதி"களையும் அரசாங்கத்தையும் விட, அன்றுதொட்டு இன்றுவரை சுயபுத்தியுடன் யோசிக்காமல் அதற்கு விலைபோகும் மக்களைத் தான் குற்றம் சொல்லவேண்டும் நாம்...

கமலேஷ் said...

எந்த பிரச்சனைகளையும் நடு நிலையில் இருந்து யோசிக்கும் ஒரு தொலை நோக்கு பார்வை...
எந்த ஒரு பாமரனுக்கும் தன் சொல்ல வந்த கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கும் அழகான எழுத்து நடை...
எல்லா விசயங்களிலும் ரொம்ப சர்வ சாதாரணமாக பயணிக்றீர்கள்...உங்களோட இந்த பதிவு நிறைய விசயங்களை எனக்கு சொல்லி கொடுத்தது உங்களுடைய பகிர்வுக்கு மிக்க நன்றி...

தராசு said...

கலக்கல் ஃப்ளோ தல.

வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

அரசியல் இடுகையிலும் அதே சுவாரஸ்யம்.

சில விஷயங்கள் குறிப்பா நக்சலைட்டுகள் உருவாவது குறித்தான இடங்கள் தெளிவான பார்வை.


//கிள்ளுவது என்பது ராமதாசை அடக்குவது என்று பொருளல்ல. தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும்//

இது கலக்கல்.

"உழவன்" "Uzhavan" said...

பல விடயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
 
//
சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ என்பதே.//
 
இநத அச்சம் இப்போது கிட்டத்தட்ட எல்லோருக்குமே வந்துவிட்டது கவலையான ஒன்றே

உண்மைத்தமிழன் said...

///பைத்தியக்காரன் said...

அன்பின் அனு,

இடுகை தொடர்பாக விமர்சனங்கள் உண்டு. அது அரசியல் சார்ந்தது. மார்க்சிய - லெனினியம் சார்ந்து இருவரும் பார்க்கும் பார்வையும், விலகும் புள்ளியும் வெவ்வேறானவை. எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆனால், எப்போதும் '(எதைப்) பற்றியும் பற்றாமலும்' உங்கள் துள்ளல் நடையில் வசீகரிக்கும். மொழி உங்கள் விரல்நுனியில் மண்டியிட்டு வெகுஜன இதழுக்கான சுவாரஸ்யத்துடன் மிளிரும். இந்த இடுகையில் அது மிஸ்ஸிங். இது என் அனுபவம் மட்டுமே. ஒருவேளை அரசியல் சார்ந்த இடுகை என்பதால் எச்சரிக்கையுடன் துள்ளலை குறைத்துவிட்டீர்களா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்///

இந்தத் தோழர் திருந்த மாட்டாரா..? பதிவு எழுதுவதில்தான் கோளாறு என்றால் பின்னூட்டத்தில்கூடவா..?

முருகா..!!!

உண்மைத்தமிழன் said...

அன்பின் அனுஜன்யா..

கடைசிவரிகளை ரசித்துப் படித்தேன்..! ஒருவேளை உண்மையாக ஆனாலும் ஆகலாம்..!

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கிருக்கும் ஒரே அச்சம், சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ //

மும்பைவாசியான நீங்களே அச்சப்படும்போது சென்னைவாசியான நாங்கள் யோசிக்காமல் இருப்போமா, கிண்டலுக்காவது பேசி சிரித்தோம், நிஜம் ஆகாமல் இருந்தால் சரி.

எதை எழுதினாலும் எனக்கு சிறப்பாய் இருக்கு. (கவிதையைத் தவிர :)

thamizhparavai said...

இந்த மாதிரி தீவிர அரசியல் நிகழ்வுகளைச் செய்தியில் பார்த்தால் கவனிக்க மறுக்கும் மனத்துக்கு நல்ல அறிவுத்தீனி...
நன்றி அனுஜன்யா...(உங்க கட்டுரைகளை விமர்சனம் செய்யத் தேவையில்லை. ஒரு பதிவில் வாழ்த்தலாம். இரண்டாவது பதிவில் வாழ்த்தலாம்.நன்றாக எழுதுவது உங்கள் இயல்பு எனும்போது எதற்கு வாழ்த்து.. நன்றியே போதும்.இது எனக்கு மட்டுமல்ல. வழக்கம்போல வாழ்த்த வரும் அனைவருக்கும் சேர்த்துத்தான்)

தீபா said...

நல்ல அலசல்.

//தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். கலைஞரால் அது நிச்சயம் முடியும்.//
:-):-)

chandru / RVC said...

நல்ல அலசல்/ஆய்வு கட்டுரை அனு. நக்சல்பாரி இயக்கங்களோட வரலாறு, வளர்ச்சி- அது ஏற்பட்டதுக்கான காரணம் என்ன அப்படின்றது எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாட்டுல கூட தமிழ் தீவிரவாதி(?)களுக்கான வேட்டைல முந்திரிக்காடுகள் உலுக்கப்பட்டதும் வரலாறு. எல்லாவற்றுக்கும் அடிப்படை - அதிகார வர்க்கம், மலிவு அரசியல், ஏகாதிபத்தியம் அப்படினு மட்டும் சொல்லிட முடியாது, மக்களுக்கும் கொஞ்சம் அடிப்படை சொரணையும் சமூக விழிப்புணர்ச்சியும் வேணும். அதுக்கு ஏற்றத்தாழ்வில்லாத கல்வி தேவை, அதுக்கு... இப்படி சொல்லிட்டே போலாம்.ஆனா இதையெல்லாம் அடையணும்னா still a long way to go. தெலுங்கானா, கூர்காலேண்ட், குடகு- இது இன்னும் நீளும்னுதான் தோணுது. ஆந்திராவிலயே தெலுங்கானா பிரச்சினை உணர்வு, உரிமை, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கானது அப்படிங்கறதத் தாண்டி எல்லா கட்சியினரும் சேர்ந்து அரசியல் ஆக்கிட்டாங்க. இனி இதுக்கு தீர்வு கிடைக்காது -. கமிசன்தான், பரிந்துரைதான்...சவ்வுதான் :-)

தமிழ்நாட்டுல சென்னை பிதுங்குது. மூச்சுக் கூட விடமுடியாத அளவுக்கு கிராமம், மற்றும் சிறு நகரங்களில் இருந்து பிழைப்புக்காக வரும் மக்கள் குவிஞ்சுட்ருக்காங்க. திட்டமிடாத ஒரு வளர்ச்சி எப்படி இருக்கும்ன்றதுக்கு சென்னை மாநகரம் சரியான உதாரணம். உடனடித் தேவை வடதிசை மாதண்டநாயகர், தென் திசை மாதண்டநாயகர்களுக்கான பட்டாபிஷேகம் இல்லை...தென் தமிழகத்துல குறிப்பா மதுரை, நெல்லை, திருச்சி, சேலம்(கோவை,திருப்பூர் மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்துடுச்சு - தமிழ்நாட்டின் மான்செஸ்டர்!) போன்ற நகரங்களில் தொழிற்சாலைகள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் விவசாய மீட்டெடுப்பு விழிப்புணர்ச்சி. தொலைநோக்குப்பார்வையோடு அரசாங்கம் இதை போர்க்கால அவசரத்தில் செய்யணும். பெயரளவுக்கு, அடிக்கல் நாட்டுனதோட போயிடக்கூடாது. சென்னையை வர்த்தக தலைநகராகவும், திருச்சியை அரசாங்க தலைநகராகவும் மாத்தினா இன்னும் நல்லது.

U F O said...

http://onlinepj.com/katturaikal/muslimkal_parvaiyil_thelingana/

இந்த சுட்டியில் இந்த தெலுங்கானா பிரச்சினை பற்றி ஆதியில் இருந்து அறிந்து கொள்ள - முற்றிலும் வித்தியாசமான கோணத்திலிருந்து அணுக அங்கு சென்று வாருங்களேன்.

anujanya said...

@ கேபிள்

இது அரசியலா? தெரியாம போச்சே! :)))

நன்றி கேபிள்

@ பைத்தியக்காரன்

உங்கள் அவதானிப்பு சரிதான். வேண்டுமென்று தான் இந்த 'நடை'. காரணம் ஓரளவு நர்சிம் மற்றும் கார்க்கி சொன்னதுதான். மேலும் ஜ்யோவ் எப்போதுமே வெவ்வேறு மொழி, நடை, கரு என்று முயல்வதையும் பார்த்து இந்த வான்கோழி....

சரி, நான் எல்லாம் ஒன்னும் தெரியாத சின்னப்பையன் என்று என்னிடம் அரசியல் பேசாமல், என்னை விட்டுவிடுவதற்கு .....ரொம்ப நன்றி பாஸ்.

@ நையாண்டி நைனா

உனக்கு இருக்கு பாரு. நைனா, உன் தொலைபேசி எண்ணைத் தொலைத்து விட்டேன். ஒரு மிஸ்டு கால் கொடுப்பா.

@ நர்சிம்

நன்றி தல. சப்போர்ட்டுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்.

@ ஸ்ரீமதி

ஆஹா, நன்றி ஸ்ரீ.

@ அசோக்

நன்றி அசோக். ட்ரை பண்ணுகிறேன்

@ செய்யது

சரி 'நன்றி' சொல்லி விட்டு நகரலாம்னு பார்த்தா, அணு குண்டு கேள்வி கேக்குறியே? அந்த டாபிக் ரொம்ப பெருசு. நிறைய சென்சிடிவ் கூட. நிச்சயம் பேசலாம். ஆனால் பிறிதொரு சந்தர்ப்பத்தில். ஆனால், அப்துல் உனக்கு ஓரளவு பதில் சொல்லி இருக்காரு. ஆனா, உனக்கு என் இப்படி விபரீத எண்ணங்கள்?

நன்றி செய்யது.

@ அசோக்

பைத்தியக்காரன் என்னோட பேச முடியாது என்பாராம். அதுக்கு இவரு ரசித்து கை தட்டுவாராம். நல்லா இருக்குயா உங்க நியாயம் :))

@ கார்க்கி

அப்படி போடுறா சிங்கக் குட்டி. பரவாயில்லா, நீ கூட ......

நன்றி கார்க்கி

@ பப்பு

கேள்விப்பட்டேன். என்ன சொல்வது என்று தெளிவாகத் தெரியவில்லை.

நன்றி பப்பு

@ அப்துல்லா

நீங்க சொன்னா அது சரிதான். செய்யது கேள்விக்கு, நல்ல பதில், எனக்குக் கொஞ்சம் வேறு கருத்து இருந்தாலும் (எப்படி, நாமளும் சிவா ரேஞ்சுக்கு பதில் சொல்வோம்ல)

நன்றி அப்துல்

@ பட்டிக்காட்டான்

நன்றி தல

@ வெங்கிராஜா

தெளிவான கருத்து வெங்கி. But cant say fully agree with you either. ஆமா, இப்பவெல்லாம் ரொம்ப ட்விட்டர் தானாமே? கொஞ்சம் பதிவும் எழுதறது! நன்றி வெங்கி

@ மண்குதிரை

நீதாம்பா உண்மையான நண்பன். நன்றி.

@ அத்திரி

என்ன பாஸ், இவ்வளவு கோவம்/வருத்தம்! இந்த ரேஞ்சில் நீங்களே தனி மாநிலம் கேட்டு முதல்வர் ஆகிடுவீங்க போல இருக்கே!

நன்றி அத்திரி

@ விதூஷ்

என்னது உண்ணாவிரதமா? இன்னும் பாத்து கிலோவா? சரிதான், அப்புறம் பச்சக் குழந்தையா மாறிடுவேன். இந்த (பதி) உலகம் தாங்காது :))

நன்றி வித்யா

@ T V Radhakrishnan

நீங்க உண்மையிலேயே தீர்க்கதரிசிதான் TVR. அட்டகாசம். நன்றி சார்.

@ கார்த்திக்

நன்றி கார்த்திக்

அனுஜன்யா

கே.என்.சிவராமன் said...

அன்பின் அனு,

எனது பின்னூட்டம் உங்களை காயப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். நண்பர் அசோக்கின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும்போதும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

நான் சுட்டிக் காட்ட வந்தது வேறு அனு. மா-லெ அரசியல் மீது நான் கொண்டிருக்கும் ஈர்ப்பு என்பது, நீங்கள் ஜனநாயகம் மீது கொண்டிருக்கும் ஈர்ப்புக்கு சமமானது. எந்தவொரு நிகழ்வை குறித்து உரையாட ஆரம்பித்தாலும் அவரவர் கொள்கையின் பக்கமே நிற்போம். அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன். மற்றபடி சின்னப் பையன் என்பதெல்லாம் ஓவர் அங்கிள் :) அனுபவத்திலும், வாசிப்பிலும் நீங்கள் மேலேதான் நிற்கிறீர்கள்.

உங்களை காயப்படுத்தியிருந்தால் ஐ'ம் சாரி அனும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

anujanya said...

@ அன்புடன் மணிகண்டன்

அப்பாடி, இவ்வளவு கொதிப்பா மணி? :))

நன்றி மணி

@ கமலேஷ்

'நடுநிலை' என்பதே ஒரு தவறான அணுகுமுறை என்பது முற்போக்குவாதிகளின் கருத்து என்பது உங்களுக்கு தெரியுமா கமலேஷ்? :))) சரி சரி, நாம்ப எங்க முற்போக்கா இருக்கோம் என்கிறீர்கள்! அதுவும் சரிதான்.

ரொம்ப நன்றி கமலேஷ் உங்கள் பாராட்டுக்கு.

@ தராசு

நன்றி பாஸ்

@ நாடோடி இலக்கியன்

நன்றி பாஸ்.

@ உழவன்

நன்றி தல.

@ உண்மைத்தமிழன்

வாங்க அண்ணாச்சி. நீகதான் சரியா சிவாவைப் புரிந்து வெச்சுருக்கீங்க :)

நன்றி தல

@ அமித்து.அம்மா

//எதை எழுதினாலும் எனக்கு சிறப்பாய் இருக்கு. (கவிதையைத் தவிர :)//

பாராட்டுற மாதிரி துவங்கி...கடசில ஏன் இந்த கொலவெறி?

நன்றி AA

@ தமிழ்ப்பறவை

ஆஹா...இது பின்னூட்டம். நன்றி பரணி.

@ தீபா

நன்றி தீபா. மர்மமாவே இருக்கு இன்னமும் :)))

@ RVC

வாவ், என்ன ஒரு சிந்தனை ஓட்டம். நீங்கள் ஒரு தனிப் பதிவே போடலாம் சந்திரா.
நன்றி

@ U F O

சென்று பார்த்தேன் பாஸ். நிறைய தகவல்களுடன் ஓரளவு ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்தும் கூட. நன்றி

அனுஜன்யா

anujanya said...

@ பைத்தியக்காரன்

அன்பின் சிவா. என்னப்பா இது ஜாலியா தான் சொன்னேன். உண்மையிலேயே எனக்கு ஒண்ணும் வருத்தம் எல்லாம் கிடையாது. நிம்மதிதான். ஏன் என்று சொல்றேன்

நிச்சயமா நீங்க சொல்வதைப் போல் நாம் சந்திக்கும் புள்ளியை விட விலகும் புள்ளிகள் அதிகம். இன்றைய தேதியில் உங்களுடன் வாதிப்பது அல்லது வாதத்திற்கு அழைப்பது, எனது இன்றைய குறைந்த வாசிப்பில் நிச்சயம் எனக்கு தோல்வியில் முடியும். அது, நான் சரி என்று நம்பும் சித்தாந்தங்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் ஆகும். ஒன்று என் வாசிப்பு விரிவடைந்து உங்களுடன் சரிசமமாக வாதிடும் அளவு திறன் வரவேண்டும். அல்லது, அதே வாசிப்பில் நான் தற்போது நம்பிக்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள் தவறு; மாறாக நீங்கள் வைப்பவை சரி என்று தோன்றி, அவற்றை ஏற்கும் மனப்பக்குவம் வரவேண்டும்.

இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்போதும் போல் பெருந்தன்மையாக 'பொதுப் புள்ளிகள் இல்லாததால் அவற்றைப் பற்றி பேச வேண்டாமே' என்று விலகுவதை ஒரு லோக்கல் ரவுடி போல் 'தோ பாருடா..அண்ணாதே பயந்துகினு ஓடுறாரு; என்கிட்டே சண்டைக்கு வர மாட்டாராம்'னு நான் உதார் விடுவதும் தொடரும் :)

சும்மா லூஸ்ல விடு சிவா. Honestly, if I felt strongly, I would have called you over phone and asked for the reasons.

அனுஜன்யா

கே.என்.சிவராமன் said...

//Honestly, if I felt strongly, I would have called you over phone and asked for the reasons. //

நன்றி அனு. நிச்சயம் காரணம் கேட்டு நீங்க ஃபோன் பண்றா மாதிரி நடக்காது. வேற காரணத்துக்காக ஃபோன் பண்ணி பேசறதுதான் நடக்கும் :)

அப்புறம், என்னோட வாசிப்பு ரொம்ப குறைச்சல்.

அதிகமா ஸீன் போடறேன். அதான் இன்னமும் ஊர் நம்பிட்டு இருக்கு :(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

anujanya said...

@ பைத்தியக்காரன்

லா ல லா;
லா ல லா;
லா ல லா;

அனுஜன்யா