Tuesday, December 22, 2009
இதயத்தில்
என்னுடைய நிறம்
கருப்புமில்லாத
வெளுப்புமில்லாத
சாம்பல் நிறம்
என் இதயப் பகுதியில்
பச்சை நிறத்தில்
ஒரு முதலை இருக்கிறது
வெகுநாட்களாக நானும்
இந்த முதலையும்
காத்துக் கிடந்தோம்
இருபத்தைந்து வயது யுவதி
என்னை ஸ்பரிசித்தாள்;
இப்போது அவள் வீட்டில் நான்;
வயது முதிர்ந்த அவரை
என்னுடன் அனுப்புகிறாள்
வெளியே செல்லும் எங்களுக்கு
கையசைத்து விடையளிக்கிறாள்
விரைந்த வாகனத்தின்
தகரத்தில் மாட்டிய என் கை
இரத்த வெள்ளத்தில்
நினைவிழந்த பெரியவருக்குக்
குழாய் மூலம் சொட்டும் இரத்தம்
எல்லோரும் பார்த்துக்
கொண்டே இருக்கிறோம்
தொங்கியபடி நானும்
நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்
வந்தவனுடன் அவளும்
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
nice one
"நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்"
நல்லா இருக்கு
nice - three!
(முரளி கண்ணன் nice twoன்னு தானே போடணும்? தப்பா போட்டிருக்காரு பாருங்க...)
நல்லா இருக்குங்க.
//இப்போது அவள் வீட்டில் நான்;
வயது முதிர்ந்த அவரை
என்னுடன் அனுப்புகிறாள் //
நியாயம்தானுங்களே..
ஐ கொசுவ சட்டை..! (டி சர்ட்)
//நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்
வந்தவனுடன் அவளும்//
Very Nice Wordings...........
கொஞ்ச நாளா கவிதை எழுதறது இல்லையேன்னு அசால்ட்டா இருந்துட்டேன்.. உடனே வெளிநடப்பு செய்கிறேன்
//என் இதயப் பகுதியில்
பச்சை நிறத்தில்
ஒரு முதலை இருக்கிறது //
கவிதையே ஒரு வித்யாசமான பாதையில் பயணிக்கிறது. மிக அருமை !!!
கொஞ்சம் புரிஞ்சிக்கறது கஷ்டமா இருக்குங்க...
nice four. (கணக்கு கரெக்ட்டா இருக்கா அண்ணா?)
யப்பா.. பிராண்டிங்க வைச்சு எல்லாம் கலக்கல் கவிதை... சூப்பர்...
அப்புறம், கேபிளோட லேட்டஸ்ட் கவிதைக்கும் இதுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா சார்?? இல்லை நான் தவறாகப் புரிந்து கொண்டேனா?? (பயபுள்ள எப்படியெல்லாம் யோசிக்குது பாருன்னு திட்டாதீங்க...)
:)
ஏண்ணே! சிங்கபூர்ல பொண்ணுங்க MANGO-னு எழுதுன T-Shirt தான் ரொம்ப போடுறாங்க. எங்க அதுக்கு ஒன்னு எழுதுங்க பார்ப்போம். :-))
தலைவரே
நல்லா இருக்கு
இதை இப்படி எழுதாம அப்படிththaan எழுதனும்னு ரூம் போட்டு யோசிச்சிக்கிட்டே இருப்பீங்களோ?? :-))
விரிசலும் கண்டோம். மகிழ்ச்சி :-)
ரொம்ப பிடிச்சிருக்கு அனு.
இந்த நர்சிம்மை என்ன செய்யலாம் அனு?
:-)))
என் புரிதல் படி நல்லா இருக்கு...
நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்...
ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..
ஆகா அருமை
//ஏண்ணே! சிங்கபூர்ல பொண்ணுங்க MANGO-னு எழுதுன T-Shirt தான் ரொம்ப போடுறாங்க. எங்க அதுக்கு ஒன்னு எழுதுங்க //
போடறது பொண்ணுங்களா, பசஙக்ளான்னு சொன்னாதானே கவிதை எழுத முடியும் பாஸ்.. ஐ மீன் டீஷர்ட்ட
பலமுறை படிச்சி பார்த்துட்டேன் அனுஜன்யா. புரியலை. ஒரு சின்ன விளக்கம் மெயில் மூலமா தந்தாலும் ஒகே. கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்.
புரியலை.
ஆனா....
லாகோஸ்ட் எல்லாம் யூத்துங்கறீங்களா..?
(க)(வி)(டு)(க)(தை) எனக்கு புரிஞ்சவரை நல்லாயிருக்கு
:))
(அவர்) இப்போ எப்படி இருக்(கார்)(கீங்க).?
:)
கவிதைக்கு இப்படி விளக்கம் கேட்பது அநாகரிகமாகத்தான் படுகிறது.
வயதில் முதிர்ந்த ஒருவரின் இளம் மனைவி மற்றும் அவளது கள்ளக் காதல் பற்றியது கவிதை என நினைக்கிறேன். நான் நினைத்தது சரியாக இருப்பின் Crocodile T-shirt அணிபவர்கள் வயதானவர்களாகவும் Polo T-shirt அணிபவர்கள் இளம்வாலிபர்களாகவும் இருப்பார்களா?
எப்படியிருக்கீங்க...
ரொம்ப நாள் கழிச்சு, வலைப்பக்கங்கள் பக்கம் திரும்பி வந்தேன். உங்களது இந்தக் கவிதை எனக்கு ஏமாற்றமே. பூடகம் விலகியபோது, சுவராசியம் இல்லை. கவிதையின் அனுபவம் வாய்க்கப் பெறவில்லை. மிக இயல்பாக நம்மைச் சுற்றிலும் கவிதைகள் இறைந்து கிடக்கின்றனவே....!
புரியவில்லை.
@ Deepa
ரொம்ப நன்றி தீபா.
@ முரளிகண்ணன்
பேசி வெச்ச மாதிரி நீங்களும் அதே கமெண்ட் சொல்றீங்க்!
நன்றி முரளி
@ ஜோதி
நன்றி ஜோதி
@ பரிசல்காரன்
குறும்பு :)))
நன்றி K.K.
@ நர்சிம்
//நியாயம்தானுங்களே..//
அடப்பாவி. நான் யூத்து தான். நன்றி நர்சிம்
@ பிரியமுடன் வசந்த்
நன்றி வசந்த்
@ சங்கவி
நன்றி பாஸ்
@ அசோக்
:))
@ கார்க்கி
சரி சரி. அப்பப்ப நாம யாருன்னு காட்டணும்ல
@ பூங்குன்றன்
உங்கள் முதல் வருகை இல்லையா? நன்றி பாஸ்
@ சிவக்குமாரன்
அப்படியா! விடுங்க பாஸ். புரியாட்டா பெரிய பிரச்சனை இல்லை. நன்றி
@ ஸ்ரீமதி
உன்ன....சரி சரி ‘நன்றி’ சொல்லி விடுகிறேன்.
@ அன்புடன் மணிகண்டன்
தேங்ஸ் மணி. கேபிள் கவிதை இன்னும் படிக்கவில்லை :)
@ ரோஸ்விக்
ரொம்ப விவெகாரமான கட்டளையா இருக்கே பாசு....
நன்றி ரோஸ்விக்
@ நேசமித்ரன்
நன்றி நேசா.
@ உழவன்
அப்படி எல்லாம் இல்ல.
ஓ, நவீன விருட்சம் பார்த்தீங்களா? நன்றி பாஸ்.
@ பா.ரா.
ஒரு குரூப்பாத்தான் அலையுராங்க !
நன்றி ராஜா.
@ தமிழ்ப்பறவை
நன்றி பரணி
அனுஜன்யா
@ கமலேஷ்
பிடிச்சிருக்கா? நன்றி கமலேஷ்.
@ தியாவின் பேனா
வித்தியாசமான பெயர். உங்கள் முதல் வருகை. நன்றி பாஸ்.
@ கார்க்கி (மீண்டும்)
டேய் போறும்டா...
@ மணிகண்டன்
வாங்க மணி. உஙகளுக்கும் கிறஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்த்துகள்.
நான் மெயில் அனுப்பி உங்க பதிலும் கிடைத்து விட்டது. நன்றி மணி.
@ உயிரோடை
அப்படியா! மேலே சிவக்குமாரனுக்குச் சொன்னது தான். விடுங்க.
நன்றி லாவண்யா.
@ கும்க்கி
யோவ்... உம்ம குசும்பு இருக்கே..
நன்றி கும்க்கி
@ ரெளத்ரன்
ஹா ஹா ஹா. நன்றி பாஸ். நல்லாத் தான் இருக்காரு.
@ தர்ஷன்
வாங்க உங்க முதல் வருகை!
உங்க புரிதல் சுவாரஸ்யமா இருக்கு. நீங்க சொல்ற மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி தர்ஷன்.
@ மாதவராஜ்
சில சமயம் அப்படித்தான் ஆகி விடுகிறது மாதவ். நாங்கள் எல்லோரும் நலம். நீங்க?
நன்றி மாதவ்
@ ஆதி
சிவக்குமாரன், உயிரோடை, ஆதி... சரி சரி பரவாயில்ல.
சம்பிரதாய விஷயங்களிலிருந்து கவிதையை புது விஷயங்கள் சொல்ல நகர்த்தினால் வரும் சிக்கல். எல்லாக் கவிதைகளும் எல்லோருக்கும் புரியணும்னு அவசியம் இல்லை என்பது ....’சான்றோர் வாக்கு’..:)))))
அனுஜன்யா
பூடகம் நன்றாக வந்துள்ளது... வாழ்த்துக்கள்.
@ கிருத்திகா
வாங்க கிருத்திகா. தாமதமான நன்றிகள் :)
அனுஜன்யா
Post a Comment