Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - சிந்தனைகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்



ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மும்பையில் இவ்வளவு விரைவில் ரிலீஸ் ஆனது ஒரு ஆச்சரியம். மிக விரைவில் திரையரங்குகளை விட்டு ஓடப் போவதில் அவ்வளவு ஆச்சரியம் எதுவுமில்லை. நேற்று இரவுக் காட்சி (இங்கு 7.50 மணிக்கே) சென்றேன். என் மனைவியையும் சேர்த்து, மொத்தம் பத்து பேர் மட்டுமே திரையரங்குக்குள் இருந்தோம். முதல் பாதி நன்றாக, ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட எந்தத் திரைப்படம் போலவும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாம் பாதி மொத்தப் படத்தை முற்றிலும் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. சோழர்கள் என்றாலே பொன்னியின் செல்வன் தாக்கத்திலும், தசாவதார முதல் காட்சிகளின் தாக்கத்திலும் உருவாக்கப்பட்ட பிம்பம் மிக யதார்த்தமாக தவிடு பொடியாகிறது. பாண்டியர்களிடமிருந்தும், மற்ற பகைவர்களிடமிருந்தும் நூற்றாண்டுகளாகப் பதுங்கி வாழும் ஒரு கூட்டம் எப்படி இருக்குமோ, அப்படியே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. காலத்துக்குள் உறைந்து போன மாந்தர்கள் போல் நிகழ் காலத்துக்குள் முற்றிலும் பொருத்தமற்றவர்களாக உலாவுகிறார்கள். ஒரு திரைப்படம் நிறைய சிந்தனைகளைத் தூண்டி விட்டால் அது என்னைப் பொறுத்த வரையில் நல்ல படம். அந்த விதத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு முக்கியமான, நல்ல, திரைப்படம் - தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

எனக்கு இந்தப் படம் சொல்லிய செய்திகள் இவை என்று கொள்ளலாம்:

சிறு வயதில் ஐய்ஸ் பாய் (அதனை Ice Boy என்றே புரிந்து கொண்டிருந்தேன் அப்போது) விளையாடும் போது, யாரும் சுலபத்தில் கண்டு பிடிக்க முடியாத மாய ஒளிவிடத்தில் மறைந்திருந்து, ஒரு இரண்டு மணிநேரம் கழித்து பசி வயிற்றைப் பிடுங்கியதால் வெளியே வந்து பார்த்தால், நண்பர்கள் எல்லோரும் விளையாடி முடித்து, வேறு விளையாட்டுக்குத் தாவி இருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கும் வரை ஆட்டம் அப்படியே இருக்கும் என்றெல்லாம் நினைத்த எனக்கு அவர்களோ, காலமோ என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றது முதலில் வருத்தமாக இருந்தாலும், அது வாழ்வின் முக்கியமான பாடமாக அமைந்தது. Time and Tide wait for none. சோழர்கள் இப்படித் தனிமையில், வெளியுலகுடன் தொடர்பில்லாமல் இருந்ததில் அவர்களுக்கு மட்டுமே நட்டம். இதனை இப்போதைய உலகமயமாக்கல் என்னும் சித்தாந்தத்திலும் பொருத்திப் பார்க்கலாம். குக்கிராமத்திலிருந்து கிராமங்களுக்கும், கிராமங்களிலிருந்து சிறு நகரங்களுக்கும், ‘சிறு’விலிருந்து பெருநகரங்களுக்கும் மக்கள் வருவது காலங்காலமாக அனைவரும் பெருமளவில் எதிர்க்காத, ஓரளவு ஒப்புக்கொண்ட நடைமுறை யதார்த்தம். உலகமயமாக்கல் என்னும் போது மட்டும் மொழி, இன இன்னபிற உணர்வுகள் உந்தப்பட்டு பெருமளவு எதிர்ப்பு வருவதையும் பார்க்கிறோம்.

இரண்டாவது செய்தி இவ்வளவு நூற்றாண்டுகளாக ஒரு ராஜ வம்சம்தில் வந்தவர்கள் வன்மத்தைத் தொடர்ந்து கடை பிடிக்க முடியுமென்பது. அவ்வளவாக நம்பகத் தன்மை இல்லை என்றாலும், நிறைய குடும்பங்களில் நூற்றாண்டுப் பகை நிலவுவதைப் பார்க்கையில் இது மாதிரி நடக்கவே முடியாது என்று சொல்ல முடியவில்லை. ஒருவர் மத்திய அரசு அமைச்சர். ஒருவர் ராணுவ உயர் அதிகாரி. இந்தப் பெண்ணும் நன்றாகப் படித்த, நாகரிக நாரிமணி. இத்தனை இருந்தும், அப்பன் பாட்டன் வழிவழியாகச் சொன்னார்கள் என்று இவ்வளவு கொலைவெறியுடன் துரத்துவார்கள் என்பது ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொண்டால்...இத்தனை நூற்றாண்டின் நாகரீகத்திற்கும், கல்விக்கும் என்ன பயன்? வரலாறு, அது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும், இத்தனை வன்மத்தைக் கக்கும் என்பது கசப்பான உண்மை. இத்தகைய வரலாறுகள் தேவையற்றவை என்பது என் எண்ணம். நாட்டில் நடைபெறும் பெரும்பாலான சர்ச்சைகளும் இத்தகைய முழு உண்மை / அரை உண்மை / அப்பட்டமான பொய் வரலாறுகளால் தோன்றியவை. வராலாறு, தவறன பாடங்களைத் திருத்திக் கொள்ளவும், நல்லவற்றை தொடர்ந்து எடுத்துச் செல்லவும் மட்டும் அவசியமானவை. தொடர்ந்து அது வன்மம், காழ்ப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளைத் தூண்டி, மக்களைத் தொடர் அவலத்தில் ஆழ்த்துமெனில், எவ்வளவு உண்மையாக இருந்தாலும் அந்த வரலாறு அவசியமற்றது.

இன்னொரு செய்தி - அது பத்தாம் நூற்றாண்டில் உறைந்து விட்ட சோழர்களானாலும், நவீன யுகத்து பாண்டியர்களானாலும் ஆளும் வர்க்கம் எப்போதும் தன் நலனில் கவனமாகவே இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் சாதாரணர்கள் படும் துன்பங்களும், அவர்களின் அவல வாழ்வும் தொடர்கதைகள்.

இந்தப் படத்திற்கு கேபிள், கார்க்கி ஆகியோர் சற்று தீவிரமாக விமர்சனம் செய்தது எனக்கு முதலில் ஆச்சரியம். என் அனுமானத்தில், கேபிள் சினிமாவை முதலில் வியாபாரமாகப் பார்க்கிறார். அந்தச் சட்டகத்துள் முடிந்த வரை கலை இருக்க வேண்டும். மக்களைக் கவர வேண்டும். முதன்மையாக இந்தத் தொழில் நசியாமல் இருக்க வேண்டுமெனில் பெரிய நஷ்டம் வராமல் இருக்க வேண்டும் என்னும் தாரக மந்திரம் அவருள் எப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன். கார்க்கியும் கிட்டத் தட்ட அதே அலை வரிசை. இல்லாவிடில், மூன்று வருட தாமதம், முப்பத்தி ஆறு கோடி முதலீடு பற்றி கவலைப் படவேண்டியது பணம் போட்டவர்களின் கவலை மட்டுமே. எல்லாத் துறைகளைப் போலவே, சினிமாவும் இப்போது பல்வேறு தளங்களில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு உதாரணத்திற்கு என்னுடைய Treasury Dealing Room இல் தினமும் இலாபமாகக் கொட்டினால் அந்த அதிகாரிக்கு மகிழ்ச்சி. அவரை மேற்பார்வையிடும் அதிகாரிக்கு அவர் இன்னும் எவ்வளவு செய்திருக்க முடியும் என்ற கணக்கு. இதை real-time கண்காணிக்கும் Risk Department லாபம் எல்லாம் சரி. அதை ஈட்ட எவ்வளவு ரிஸ்க் எடுத்தார்கள். அது அவசியம்தானா என்றெல்லாம் வெறுப்பேற்றும். இதற்கு நடுவில் ஆடிட்டர் 'யோவ், இங்கெல்லாம் உங்க கையெழுத்தே இல்ல' என்று கடுப்பேற்றுவார். இன்னொரு ரகசிய இலாகா, அந்த அதிகாரி தொடர்ந்து இலாபம் மட்டும் ஈட்டுகிறாரா அல்லது அவ்வப்போது நஷ்டமும் வருகிறதா என்று சரி பார்க்கும். தொடர்ந்து இலாபம் மட்டும் என்றால் அடிப்படையில் எதோ பெரிய கோளாறு என்று அர்த்தம். அவர் விடுமுறைகள் எல்லாம் ஒழுங்காக எடுக்கிறாரா என்றெல்லாம் கண்காணிக்கும்.

இந்த உதாரணம் போலவே, சினிமாவை பல்வேறு கோணங்களில் அணுக வேண்டியதும் அவசியமாகிறது. ஒரு end user என்ற அளவில் மட்டும் விமர்சனம் செய்வதற்கும், துறை பற்றிய பல்வேறு புரிதல்கள் இருப்பவர்கள் இதனை அணுகுவதற்கும் உள்ள இடைவெளியே நாம் இவர்கள் விமர்சனத்தில் பார்த்தவைகள்.

என்னுடைய சினிமா புரிதல்கள் சராசரிக்கும் மிக மிக கீழே. அந்த வகையில் இந்தப் படத்தை விமர்சனம் செய்தால் படு கேவலமாக இருக்கும். இருந்தாலும் உங்கள் விதி... கார்த்தி lovable பாட்டாளி. கலக்குகிறார். ஒருமாதிரி ஒரே வார்ப்புருவில் சிக்காமல் இருக்க வேண்டும். ரீமா நல்ல நடிகை என்று எனக்கு முன்பே பட்சி சொல்லியிருக்கிறது. அது நிரூபணம் ஆகிறது. ஆனாலும் 'ஆகச் சிறந்த' பட்டம் கொடுக்கும் அளவில் இல்லை. ஆண்ட்ரியா....என்ன சொல்ல என்ன சொல்ல...

பிரம்மாண்டத்தைப் பொறுத்த வரை இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல். (மயில் கல் அல்ல). ஆமாம், கடலில் ஏதோ ஒரு ஆரஞ்சு நிற வெளிச்ச வஸ்து இவர்களைத் துரத்திப் பிடித்து சின்னாபின்னம் செய்கிறதே! அது ஆக்டபஸா? (மன்னிக்கவும், வழக்கம் போலவே பாப்கார்னில் கவனம் செலுத்தினேன்). இவ்வளவு காட்டுக்குப் பின் உடனே இவ்வளவு பாலை நிலமா? ஓகே ஓகே நோ லாஜிக். எனக்கு அந்த நடராஜர் சிலை நிழலில் அவர்கள் போக வேண்டிய பாதை தெரிவது மிகப் பிடித்தது. அதன் அரசியல்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை. என்னைப் பொறுத்த வரை அது சோழர்களின் வான சாஸ்திர புலமைப் பற்றி சொல்வது போல் தோன்றியது. நிறைய மாய யதார்த்தக் காட்சிகள் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது. ஆனாலும், இடைவேளைக்குப் பின் அவ்வப்போது தோன்றியதை எடுத்து விட்டார்களோ அல்லது எடுத்த பலவற்றை வெட்டி விட்டார்களோ என்று படுகிறது. கோர்வையாகச் சொல்லாதது ஒரு குறை.

படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி. ஒன்று ஆயிரத்தில் ஒருவன். இன்னொன்று கோடி ... ம்ஹும் ... பல்லாயிரம் கோடியில் ஒருவன்.

இன்னொரு முக்கிய குறிப்பு: இந்தப் படம் பற்றிய விமர்சனங்களில் எனக்கு சரவணகுமாரின் பதிவு பிடித்தது. சுகுணாவின் விமர்சனம் மிக மிகப் பிடித்தது (அவர் அரசியல் நிலைகளுடன் ஒத்துப் போவது எனக்கு மிகுந்த சிரமம் தந்தாலும்).

27 comments:

Anonymous said...

அருமையான பார்வை.

பரிசல்காரன் said...

நல்லாவே இருக்கு.

அதுவும் அந்த கடைசி பஞ்ச். நீங்க கோடில (கால் இருக்கு.. கவனிக்கவும்) ஒருத்தர்தான் ஜி!

கே.என்.சிவராமன் said...

நேர்மையா பதிவு செய்திருக்கீங்க அனு...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

iniyavan said...

//படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி//

சார்,

எனக்கு இதான் பிடிச்சுருக்கு.

Ashok D said...

எனக்கும் சுகுனாவுடைய விமர்சனமும் உங்களுடைய பார்வையும் பிடிச்சுருக்கு :)

மண்குதிரை said...

சுவாரஷ்யமான ரெவியூ

கார்க்கிபவா said...

/ தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

இதற்காகத்தான் அப்படி கத்தினோம். இயக்குனரின் தவறுகளால படம் தோல்வியடையும் போது தயாரிப்பாளர்கள் எப்படி கிடைப்பார்கள்?

மேலும் இந்தப் பதிவில் முயற்சியை ஆதரிக்கனும்ன்னு என்ற வரிஅயைத் தவிர்த்து எல்லாமே படத்தின் குறைகளாகவே சொல்லி இருக்கிங்க. சொன்ன தொனி மட்டும்தான் வேறு..

தமிழ் சராசரி மக்களின் பார்வை குறித்து எனக்கு கவலையில்லை. எனக்கு தோன்றுவதை நான் எடுப்பேன்னு சில நெருடலான காட்சிகளை வைக்கும் போது, சில கடுமையான வார்த்தைகளை நான் யூஸ் பண்ணக்கூடாதா? அதுவும் அவை தனிமனித தாக்குதல் அல்ல. பிரதி குறித்த வார்த்தைதான்

:))))

Vidhoosh said...

///வேறு விளையாட்டுக்குத் தாவி இருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கும் வரை ஆட்டம் அப்படியே இருக்கும் என்றெல்லாம் நினைத்த எனக்கு அவர்களோ, காலமோ என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றது முதலில் வருத்தமாக இருந்தாலும், அது வாழ்வின் முக்கியமான பாடமாக அமைந்தது.//

:) இதை மட்டும்(தான்) ரசித்தேன்.

Karthik said...

எனக்கும் சரவணக்குமார் அண்ணா விமர்சனம் பிடிச்சிருந்தது. ஒத்துப்போகவும் முடிஞ்சது. :)

Ganesan said...

சென்னை வடபழனி கமலாவில் படம் பார்த்தேன், மொத்த மக்களும் ஓரே அமைதியாக பார்த்தார்கள். ஒரு சலசலப்பு இல்லை.
படத்தின் பாதிப்பு இந்த 24 மணினேரமும் கடந்து என் மனதை விட்டு அகலவில்லை.
செல்வாவை பார்த்து கைகோர்த்து, கட்டி அணைத்து, வாழ்த்து சொல்லவேண்டும் என்ற பூரிப்பு இன்னும் அடங்கவில்லை. ஒட்டை, உடசல்கள் , தவறுகள் எல்லாவற்றையும் விட்டால் , making என்ற விசயம் ஆச்சரியப்படுத்துகிறது.

இதோ தனுசிடம் செல்வா எண்னை வாங்க முயற்சிக்கிறேன். பேசியவுடன் தெரிவிக்கிறேன்.

இன்னும் 3 தடவை படம் பார்க்க தூண்டுகிறது.

வாழ்த்துக்கள் ஆ.ஒ குழுவிற்கு

பா.ராஜாராம் said...

எனக்கும் சரவணக் குமார்,சுகுணா,அனுஜன்யா விமர்சனங்கள் பிடிச்சிருக்கு.

//ஆமாம், கடலில் ஏதோ ஒரு ஆரஞ்சு நிற வெளிச்ச வஸ்து இவர்களைத் துரத்திப் பிடித்து சின்னாபின்னம் செய்கிறதே! அது ஆக்டபஸா? (மன்னிக்கவும், வழக்கம் போலவே பாப்கார்னில் கவனம் செலுத்தினேன்). //

//படம் முடிந்ததும் ஏதோ நானே செல்வா போல, என் மனைவியைப் பார்த்தேன். கட்டை விரலை உயர்த்தி 'எனக்குப் பிடிச்சிருக்கு' என்றாள். ஒன்று படத்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் பற்றி. ஒன்று ஆயிரத்தில் ஒருவன். இன்னொன்று கோடி ... ம்ஹும் ... பல்லாயிரம் கோடியில் ஒருவன்.//

இந்த உங்க டச்....

:-))

fond size மாத்தலாமே பாஸ்..என்னை மாத்திரி வயசான ஆட்களுக்கு உதவியாக இருக்கும் யூத்.

:-)

செ.சரவணக்குமார் said...

மிக்க நன்றி அனுஜன்யா சார்.

Cable சங்கர் said...

தலைவரே.. நானும் இம்மாதிரியான கதை களன்களை கொட்டை எழுத்தில் பாராட்டியே இருக்கிறேன். நீங்க சொன்ன இரண்டாம் பாகத்தில் அவர்கள் நினைத்ததையெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னதைதான் நானும் திரைக்கதை சரியில்லை என்று சொன்னேன். மற்றவர்களை விட படத்தின் சிறந்த காட்சிகளை வரிசை படுத்தி பாராட்டியவன் என்கிற முறையில் எனக்கும் சந்தோஷமே..

ஒரு திரைப்படம் இமமாதிரியான களன்களில் எடுக்கப்படும் போது.. பெரிய ஹிட் ஆனால்தான் பின் அதைபோல படம் எடுப்பதற்கு ஒரு தயாரிப்பாளர் கிடைப்பார். இப்படம் 7 கோடியில் ஆரம்பித்து, 35 கோடியில் முடிக்கப்பட்டது.

Sathya said...

i read this in tamilish super review thanks -sathya

நந்தாகுமாரன் said...

//

பா.ராஜாராம் said...

fond size மாத்தலாமே பாஸ்..என்னை மாத்திரி வயசான ஆட்களுக்கு உதவியாக இருக்கும் யூத்.

:-)

//

"fond" size அப்படியே இருக்கட்டும் ... font style மாற்றுங்கள் ... it's visually irritating ... அந்தக் காரணத்தாலேயே பதிவைப் படிக்காமல் பின்னூட்டங்களைப மட்டும் படித்துவிட்டு இதை எழுதுகிறேன் ... :)

Gokul said...

இதையும் கொஞ்சம் படிச்சுருங்க....

http://kulambiyagam.blogspot.com/2010/01/blog-post_19.html

http://kulambiyagam.blogspot.com/2010/01/ii.html

கபீஷ் said...

தூள் ice boy தத்துவம்(இனிமேல் அவ்வாறே அன்புடன் அழைக்கப்படும்), கோடியில் ஒருத்தர் :-)

நீங்க ஜே.எஸ். ராகவன் மாதிரி நகைச்சுவையில் பின்றீங்க. (அவரைப் பிடிக்காதுன்னா பிடிச்சவங்க பேரை அந்த இடத்துல போட்டுக்கோங்க.)

ஆ.ஒ விமர்சனம் எல்லாம் படிச்சுட்டு படம் பார்க்கப் போனேன். ரொம்ப ரொம்ப கேவலமா எதிர்பார்த்து போனேன். வன்முறைக் காட்சிகள் எல்லாம் கட் பண்ணிட்டாங்க. பதிவர்கள் சொன்ன எந்த வக்கிரமான காட்சியும் இல்ல(ரீமா, ஆண்ட்ரியா இங்கிலீஷ்ல திட்டிக்கறது புரியல, நிறைய சிரிப்பு சத்தம் கேட்டுச்சு) லாஜிக் எப்பவுமே தமிழ், ஹிந்தி படங்கள்ல பாக்கறது இல்ல.(Exceptions apply here)பாக்கற ஒரே ஒலகப் படம் மலயாளம். அதனால எந்த படத்து சாயலும் தோணல. முக்கியமா காசு கொடுத்து டிக்கெட் எடுக்கல.(தியேட்டர்ல தான் பார்த்தேன்.) பொன்னியின் செல்வன் படிக்கல, சோழர்கள் பக்கமும் இல்ல பாண்டியர்கள் பக்கமும் இல்ல, நாங்க சேர வம்சமுங்கோ.(ஊர்..ரெண்டு..கூத்தாடி பழமொழி ...)அதனால படம் பிடிச்சது.



இந்த படம் பிடிச்சதுன்னு சொல்லணும்னா நிறைய விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு :-)

Anonymous said...

நன்றாக இருக்கிறது அனு.

Unknown said...

//சோழர்கள் என்றாலே பொன்னியின் செல்வன் தாக்கத்திலும், தசாவதார முதல் காட்சிகளின் தாக்கத்திலும் உருவாக்கப்பட்ட பிம்பம் மிக யதார்த்தமாக தவிடு பொடியாகிறது.

Exactly, I think this is really a original idea and loved it, but looks like some people are uncomfortable about this and talk about unnecessary logic.

Good review :)

Kumky said...

கும்பிடுகிறேன் பாண்டிய பேரரசே...

நர்சிம் said...

/சிறு வயதில் ஐய்ஸ் பாய் (அதனை Ice Boy என்றே புரிந்து கொண்டிருந்தேன் அப்போது)/

நான் இப்பவும் அப்படித்தான் நினைச்சுட்டு இருகேன் தல..நல்ல வேளை சொன்னீங்க.

ஆக்ட்சுவலா..வாட் யூ மீன் பை ஆயிரெத்ட்ல் ஓர்வென்???

chandru / RVC said...

பெரும்பாலான இடங்களில் உங்க கூடயும், அய்யனார், சுகுணா விமர்சனத்தோடயும் ஒத்துப்போறேன். good flow with ur touch :)

ஆண்டிரியா பத்தி ஒன்னும் எழுதாம just like that கடந்து போனது வருத்தமளிக்குது அனு. :(

நர்சிம், i saw u boy தான் ice boy ஆய்டுச்சுனு எங்க இங்கிலீஷ் டீச்சர் சொன்னாங்க. :)

Unknown said...

படம் பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட் இப்போ பார்க்க மேலிடத்திலிருந்து அனுமதி வரல. கூடிய சீக்கிரம் பார்த்துடுவேன்னு நம்பறேன். இந்த விமர்சனம்(?!) எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது அண்ணா. ஒரு சாதாரண சினிமா விரும்பியோ, ஒரு சினிமா விமர்சகனோ, ஒருதலைப்பட்சமான ஒரு ரசிகனாகவோ இல்லாம எல்லாருக்கும் பொருந்துவது போல ஒரு அருமையான பார்வை உங்களுடையது எப்பவும். பட்டுக்கோட்டையின் பாடலைப்போல. அருமை. நான் வியப்பது உங்க பத்தி(?!) எழுத்துக்களில் தான். தயவு செய்து தொடரவும்.

damildumil said...

//கார்க்கி said...
/ தமிழுக்கு இந்த மாதிரி புது முயற்சிகள் நிச்சயம் அவசியம்.

இதற்காகத்தான் அப்படி கத்தினோம். இயக்குனரின் தவறுகளால படம் தோல்வியடையும் போது தயாரிப்பாளர்கள் எப்படி கிடைப்பார்கள்?

//

அதாவது எடுத்தா க்ளாடியேட்டர் மாதிரி எடுக்கனும் இல்லைனா மூடிட்டு இருக்கனும் அப்பபடிதானே. எல்லாருடைய முதல் முயற்ச்சியும் எப்படீ சரியாகவே இருக்க முடியும்? நீங்க பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருசம் இருக்குமா, இப்ப போய் அந்த பதிவை பார்த்தா உங்களுக்கு திருப்தி கிடைக்குமா. நீங்க பதிவு எழுத தொடங்கிய பொழுது யாராவது, "உங்க பதிவை படிச்சா வாந்தி வருதுன்னு சொன்னா எப்படி இருக்கும் கார்க்கி"

உங்க மீசையில மண்ணு ஒட்டாதுங்க :))

anujanya said...

@ சின்ன அம்மிணி

நன்றி CA

@ பரிசல்

//கால் இருக்கு// அது உங்க பன்ச் :))
நன்றி கே.கே.

@ பைத்தியக்காரன்

நன்றி சிவா

@ உலகநாதன்

நன்றி பாஸ்

@ அசோக்

வாவ். நன்றி அசோக்.

@ மண்குதிரை

//சுவராஷ்யமான// ? :))

நன்றி நண்பா.

@ கார்க்கி

அப்படி இல்லை கார்க்கி. என்னோட எழுத்தின் குறைதான் அது. எனக்கு நல்ல படம் பார்த்த அனுபவமே கிடைத்தது. அய்ஸ், நேசமித்ரன், நந்தா இவர்கள் கவிதை பலமுறை புரியாவிட்டாலும், வசீகரமாக இருக்குமே - அது மாதிரி :)

@ விதூஷ்

என்ன ஒரு குசும்பு!

நன்றி வித்யா

@ கார்த்திக்

நன்றி கார்த்திக். படம் பார்த்தாச்சா?

@ காவேரி கணேஷ்

அப்படி போடு அருவாள! நன்றி பாசு

@ ராஜாராம்

நன்றி ராஜா. font size அடுத்த முறை மாற்றி விடுகிறேன்.

@ சரவணக்குமார்

வாங்க பாஸ். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் குறிப்பிட்டது சரா என்று நாங்கள் அழைக்கும் MSK என்று அறியப்பெறும் சரவணகுமாரின் விமர்சனம். ஆனால், நீங்கள் சொன்னவுடன் உங்கள் தளத்தில் வந்து படித்தேன். அட்டகாசமாக இருக்கிறது. ஆக, சரவணக்குமார் என்றாலே நல்லா எழுதுவாங்க என்பது புரிகிறது :)
நன்றி பாஸ் உங்கள் முதல் வருகைக்கும், அழகான விமர்சனத்துக்கும்.

@ கேபிள்

சரி சரி. ஆனாலும்... என்னது அடிக்க வருவீங்களா? மி த எஸ்கேப் :)

நன்றி பாஸ்.

@ சத்யா

நன்றி. உங்கள் முதல் வருகை?

@ நந்தா

fond / font ... உமக்கு இருக்கே நக்கல் :)
visually irritating என்பதை usually irritating என்று படிச்சுட்டு bp எகிறியது :)
யோவ், ஆனாலும் கல்நெஞ்சுக்காரன்யா நீரு. ஒரு தபா படிச்சா என்னவாம்?

@ கோகுல்

ஆ.ஒ. இரண்டு போஸ்டும் படித்தேன் கோகுல். கலக்கலாக இருக்கு. உங்கள் வலைப்பூ நல்ல சுவாரஸ்யம். நன்றி உங்கள் வருகைக்கு.

@ கபீஷ்

நீங்க நிறைய எழுதலாம். ஹாஸ்யம், சுவாரஸ்யம் எல்லாம் இருக்கு. நன்றி :)))

@ வேலன்

அப்பாடா, தப்பிச்சேன் :)
நன்றி வேலன்

@ ஜேம்ஸ் அற்புத ராஜ்

உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

@ கும்க்கி

யோவ், நான் ஆண்டியானாலும் சோழன்..ம்க்கும்.

@ நர்சிம்

அய்யா, பாண்டியரே... வணக்கம், வந்தனம், நமஸ்தே..நமோஷ்கார்.. காஷ்மீர்...

@ RVC

ஆண்டிரியா...நம்ம ஆளப் பத்தி பொதுவுல பேசுறது... ஹி ஹி நாங்க ரொம்ப டீசண்டுங்கோ..

நன்றி சந்திரா

@ ஸ்ரீமதி

யாரங்கே! நம் குலக்கொழுந்து ஸ்ரீரங்கம் நாச்சியாருக்கு ஒரு முத்துமாலை பார்சேல்..

நன்றி ஸ்ரீ. (ஆமாம்..மேலிடமா? உனக்கா? ஹலோ, எனக்கு ஏற்கெனவே காது குத்தியாச்சு)

@ டமில் டுமில்

ஹலோ பாசு, ஈஸி ஈஸி ப்ளீஸ். பேருக்கேத்த மாதிரி சுடுறீங்களே பாஸ்.


அனுஜன்யா

@ தமிலிஷில் வாக்களித்த பன்னிரண்டு பேருக்கும் நன்றி.

அனுஜன்யா

Thamira said...

அப்பவே படிச்சுட்டேன்.

anujanya said...

@ ஆதி

நன்றி ஆதி.

அனுஜன்யா