கால இயந்திரத்தின்
தவறான பொத்தான்களை
அழுத்தி விட்டேன்
முன்னாலும் இல்லாமல்
பின்னாலும் செல்லாமல்
பக்கவாட்டில் நகர்வதால்
எங்கும் அசைவில்லை
அவளின் மூடிய
இமைகள் திறக்கவேயில்லை
இவனின் திறந்த
வாய் மூடவேயில்லை
இந்த ஊர் சூரியன்
45 பாகையிலேயே நிற்கிறான்
தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் மழைநீரென
பிரம்மாண்ட வினாடியொன்றுள்
சிக்கிக்கொண்டேன்
தாழம்பூ மணம் கமழ
முளைக்கத் துவங்கிய
நான்காம் சிரத்திலிருந்து
ஆணைகள் பிறப்பிக்கப்பட
கையிலிருந்த களிமண்ணால்
படைக்கத் தொடங்கினேன்
முன் செய்த பிழைகளையும்
விடுபட்ட இன்னபிறவையும்
இம்முறையாவது ஈடுகட்டி
இருவரும் மனிதராக
(வெகு நாள்கள் முன் அகநாழிகையில் பிரசுரமானது)
9 comments:
வாசிச்சுட்டேன்
வெல்கம் பேக் :)
கவிதை நன்று.
//தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் மழைநீர்//
//முன் செய்த பிழைகளையும்விடுபட்ட இன்னபிறவையும்இம்முறையாவது ஈடுகட்டி//
மிக அருமை.
//நன்றி இந்த பதிவுக்கும் மீண்டும் வந்தமைக்கும். //
இது அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி நீங்க பதிவு போட்டப்ப நான் எழுதியது. அதே வரி தான் இப்போ மறுபடி சொல்ல வேண்டியிருக்கு. அந்த வரியில் பதிவு என்பதற்கு பதில் கவிதைன்னு வச்சிக்குங்க. :))
கவிதை புரியிற மாதிரி இருக்கு...இன்னும் கொஞ்சம் யோசிச்சா புரிஞ்சிடும். நம்ம புரிதல் அவ்ளோ தான். கவிதை மேல் குறையிருக்காது என நினைக்கிறேன்.
அவ்வபோதாவது எழுதுங்க யூத் சார்
//இந்த ஊர் சூரியன்
45 பாகையிலேயே நிற்கிறான்//
யப்பா எவ்ளோ அருமையான லைன்.. செம செம அண்ணா... க்ரேட்....
அருமை அனுஜன்யா
//தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் மழைநீரென
பிரம்மாண்ட வினாடியொன்றுள்//
பிரமாதம் அனு அண்ணா ..!
அழகு.. :-))
@ கபீஷ்: சரி. புரிஞ்சுதா? :)) [புரிந்தால் எனக்கும் சொல்லவும்]
@ நேசன்: ஹ்ம்ம், நன்றி.
@ ராமலக்ஷ்மி: நன்றி சகோ. எப்படி இருக்கீங்க?
@ மோகன் குமார்: உங்க அன்புக்கு ரொம்ப நன்றி பாஸ். ட்ரை பண்றேன்.
@ ஷர்புதீன்: எப்படி இருக்கீங்க பாஸ்?
@ ஸ்ரீமதி: ஹாய் தங்கச்சி! குட்டிப் பாப்பா எப்படி இருக்கான்?
@ முரளி : வாவ், தல எப்படி இருக்கீங்க? மதுரை?
@ வசந்த்: நன்றி வசந்த். அப்புறம் புதுசா கவிதை எழுதலியா?
@ ராகவ்: ஹாய்! நன்றி பாஸ்.
தமிழ்மணத்தில் வாக்களித்த இரண்டு புண்ணியவான்களுக்கும், பார்த்து, படித்துவிட்டு, புன்னகை அல்லது நெற்றிச் சுருக்கங்களுடன் சென்ற அனைவருக்கும் நன்றி.
அனுஜன்யா
Post a Comment