Tuesday, January 10, 2012

அந்த நாள்



சூல் கொண்ட மேகங்களால்

தொலைந்து போன வானம்
மெல்ல விசும்புகிறது
வீசும் காற்றில்
தூரத்து மரங்கள்
கூச்சம் கொள்வதைக்
கண்ணாடிச் சுவர்கள்
விவரிக்கையிலேயே
வியர்க்கத் துவங்குகின்றன
நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்
நீந்தியோடும் ஆயிரம் திவலைகளுக்கு
நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
தோற்கும் திவலைகள் போலவே
அன்று வெல்லாதவைகள்
முதுகில் சுமந்தது
பெருக்கல் குறியா
அல்லது என்னைப்போல
பிரியும் சாலையா

[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]



5 comments:

சசிகலா said...

நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
நன்றாகவே சொல்லி இருக்கீங்க அருமை

Ashok D said...

வட இந்தியால குளிர்தாங்கமா.. பரலோகம் போய்கிட்டுயிருக்காங்க... இன்னைக்கி 100.. :(

//நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்//
புச்சாதான் கீது... அல்லிய மலர காத்து அசைக்குது.. அசையும் வழியில் குளமும் கூசுது (திவலையில்)...

கவிதை புரிஞ்சிடுச்சு :)

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

ரௌத்ரன் said...

தலைப்பு படம் ரெண்டையும் குடுத்துட்டு அதோட விட்டுருக்கனும்..இல்ல இது ரெண்டும் இல்லாம கவுஜ எழுதிருக்கனும்..சாரே...கவுஜ கூடவே கோனார் நோட்ஸ் கணக்கா..பெருக்கல் குறி..பிரியும் சாலை...கவுஜன்னாலே எல்லாம் பேதியாவறானுவளேன்ற உங்க அக்கறை புரியுது.

கவிதை நல்லாருக்கு :)

இரசிகை said...


[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]

:))