Saturday, July 19, 2008

பாமரோமேனியன்

உன்னதமாய் வாழ்ந்து
அகாலமாய் வீழ்ந்தவன் நான்
துரோகத்தின் வலி இன்னமும் மீதமுள்ளது
எனக்குப்பின் பிறந்தவன் தேவனாகி விட்டான்
முன்பைவிட வேகமான கால்களும்
நீண்ட நாவும் வலுவான பற்களும்
கூர்மையான நாசியும் என்னிடம் இப்போது
முதுகைப் பற்றி ....பிறகு சொல்கிறேன்
இப்போதெல்லாம்
சில வருடங்களிலேயே இறந்து விடுகிறேன்
உடனே பக்கத்துத் தெருவிலோ ஊரிலோ
பிறந்தும் விடுகிறேன்
கொலைகாரர்களையும் கத்தியையும்
கண்டால் உன்மத்தம் ஏறுகிறது
அவர்களை எளிதில்
என்னால் அடைய முடியும்
ஆயினும் சிலர் முதுகில் தடவும்போது
பயமாகத்தான் உள்ளது
என் வரலாறு அப்படி;
பெயர் சொல்லவே
அஞ்சுவர் முன்பெல்லாம்;
இப்போது கூப்பிடுவது என் புது எஜமானன்
நான் தாவியோடிச் சென்றடைய
பூரிப்புடன் சொல்கிறான்
'சீசர் ரொம்ப சூட்டிகை'
வாலை மெல்ல ஆட்டத் துவங்கினேன்

7 comments:

முகுந்தன் said...

ரொம்ப நல்லா இருக்கு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்கு.

தலைப்பு கவிதையோட தளத்தைக் குறுக்கிவிட்டதுபோல் தோன்றுகிறது.

anujanya said...

முகுந்த், தமிழ்மணத்துக்கு முன்னாலேயே பார்த்து விட்டீர்களே. நன்றி.

சுந்தர், ஆம், எனக்கும் பதிவேற்றியபின் அப்படி தோன்றியது. மிக நுட்பமான பார்வை உங்களுடையது. ஊக்கத்துக்கு நன்றி.

Bee'morgan said...

ஆம் அனுஜன்யா.. சுந்தர் சொன்னதுதான்.. தலைப்புக்கு வேறு ஏதாவது முயற்சித்திருக்கலாம்.. உண்மையில் நான், தலைப்பைப் படிக்காமல்தான் முதலில் படித்தேன்.. அதில் கிடைக்கும் அந்த சுவாரஸ்யம் இத்தலைப்பினால் குறைவதாகப் படுகிறது..

MSK / Saravana said...

எப்படீங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க..

கவிதையில் எங்கும் நாயை பாவிக்கவில்லை.. சில நல்ல நன்றியுடன் வாழும் நல்ல மனிதர்களையும் கூட..

கலக்கலான கவிதை..
:)

anujanya said...

பாலா,

நன்றி. சுந்தருக்குச் சொல்லியதுதான் உங்களுக்கும். உங்களுக்கு என்ன தலைப்பு தோன்றுகிறது? Just curious. நன்றி. 'பேசப் பொருள் - 3' எப்போது வரும்.

அனுஜன்யா

anujanya said...

நன்றி சரவணன்.

அனுஜன்யா