சுதந்திர நாள்
இன்று முக்கியமான நாள்
இதற்காகக் காத்திருத்தலுடன்
நிறைய திட்டமிடலும்
அவசியமாயிருந்தது;
விடுமுறை என்பதால்
நண்பர்களுக்கு அழைப்பு
பிடித்த திரவங்கள்
பட்டியலிட்டு முன்தினமே
வாங்கிவைத்த முன்யோசனை
ஐந்து சானல்களில் பத்து
'திரைக்கு வந்து
சில வாரங்களே ஆன'
திரைப்படங்கள்.
அத்தனையும் இருந்த
இரண்டே தொ.கா.பெட்டிகளில்
பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்
மாலையில் சீட்டுகட்டுடன்
பிடித்த நடிகையின்
அறிவார்ந்த நேர்காணல்
இனிதே கழிந்த இத்திருநாளை
காலைக்கடன்களுடன்
கொடியேற்றி, தேசியகீதம் பாடி
மிட்டாய் விநியோகித்துக்
கொண்டாடிவிட்டோம்
அறுபத்திரண்டாம் முறையாக
9 comments:
சுதந்திரம்..
உண்மை கசக்குது அண்ணா..!! :(
:(
உண்மையில் வருத்தம் வருகிறது
நானும் நினைப்பதுண்டு இப்படி. இந்த நாளின் முக்கியத்துவம் நீங்கள் சொல்லும் அத்தனை விடுமுறை கொண்டாட்டங்களினாலும் அர்த்தமிழந்து போகிறது.
@ MSK
நன்றி
@ Sri
குடிப்பவர்களும் கசப்பதாகத்தான் சொல்கிறார்கள்.
@ சென்ஷீ
எனக்கும் தான் சென்ஷீ. நேரில் கண்டதால் மன உளைச்சல் அதிகமானது.
@ ராமலக்ஷ்மி
அடுத்த தலைமுறை தவறான முன்னுதாரணங்களைப் பார்த்து தடம் மாறும் அபாயம் நமக்கு இன்னும் புரியவில்லை. அந்த நாட்களில் குறைந்த பட்சம் தொலைகாட்சி தவிர்க்க வேண்டும்.
\\மாலையில் சீட்டுகட்டுடன்
பிடித்த நடிகையின்
அறிவார்ந்த நேர்காணல்
இனிதே கழிந்த இத்திருநாளை
காலைக்கடன்களுடன்
கொடியேற்றி, தேசியகீதம் பாடி
மிட்டாய் விநியோகித்துக்
கொண்டாடிவிட்டோம்
அறுபத்திரண்டாம் முறையாக\\
:)
மனதைக் கஷ்டப் படுத்தும் யதார்த்தம்.....
அன்புடன் அருணா
:((
//பிடித்த நடிகையின்
அறிவார்ந்த நேர்காணல்//
:)))
@ ரம்யா ரமணி
வருகைக்கு நன்றி.
@ அருணா
உண்மைதான். உண்மைகள் சுடும்.
@ ஜி
அழுதுகொண்டே சிரிக்கலாம்.
Post a Comment