Thursday, August 21, 2008

கவிதையல்லாத பதிவு...(Blogging Friends Forever Award)


வலையுலகில் நெருங்கிய நண்பர் வட்டம் இல்லாதவன் நான். பின்னூட்டங்களில் பங்கேற்பதும், பின்னூட்டங்களுக்கு நன்றி நவில்வது தவிர்த்து வேறு ஒன்றும் அறியாதவன். பிடித்த கவிதை மற்றும் கட்டுரை தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் அளித்தவர்களில் அருணாவும் ஒருவர். அவர் அறிமுகமானது நான் எழுதிய மழைக் கவிதைக்கு அவர் அளித்த பின்னூட்டம் மூலம்.

ஆனால் திடீரென்று இன்ப அதிர்ச்சி என்ற பெயரில் அன்புடன் அருணா "Blogging Friends Forever Award".... என்ற ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்..மிக்க நன்றி அருணா... நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு. நன்றி மழைக்கும்.
அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா.. (copy paste பண்ணியாச்சி)
1) நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..(சத்தியமா இந்த விளையாட்ட நான் தொடங்கல..)
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..(என் தளத்திற்கு எல்லாருமே புதுசுதான்.. ஆரம்பிக்குது விதியின் விளையாட்டு. தொடர்ந்து படிப்பது நான் மற்றும் நான் மட்டுமே. நாலு பேரா? ரூம் போட்டு தான் யோசிக்கணும். தப்பாக நினைக்க வேண்டாம் தோழர்/ழிகளே! பின்னூட்டம் போட வந்தா 'நண்பன்' என்று சொந்தம் கொண்டாடும் இவனை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உங்களுக்கு கோவம் வரும். இருந்தாலும் விதியின் விளையாட்டு ஹ்ம்ம். மன்னிக்கவும் விளையாட்டின் விதிகள் அப்படி)
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்..(அருணா தானே! அது கொடுத்திரலாம்..)
இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்.. இவர்களை நண்பர்கள் என்பதில் எனக்கு மிக்க சந்தோஷமே..
ஸ்பெயின் நாட்டில் இருந்துகொண்டு எனக்கு இட்லி மஞ்சுரியன் செய்முறை பற்றி விளக்கும் நண்பன், எவ்வளவு கேவலமாய் எழுதினாலும் உடன் வந்து 'சூப்பர்' சொல்லும்
முகுந்த். இவன் பையன் கேஷவும் எனக்கு நெருங்கிய நண்பன். இந்த பதிவை எழுதுவற்குள் இந்தியா வந்துவிட்ட முகுந்த் கொஞ்ச நாட்கள் ஓரளவு free என்பதால் பதிவு போட முடியும் என்று நினைக்கிறேன்.

மிக ஆழமான கருத்துக்களை தெளிவாக விளக்கும் பல கட்டுரைகளை எழுதும் விக்கி எனும் விக்னேஷ்வரன் தான் எனது இன்னொரு நண்பன். பதிவு எழுதும் பெரும்பாலானவர்களை சிரமம் பாராது ஊக்குவிப்பதில் சிறந்தவன். மலேசியாவில் வசிக்கும் நண்பன்.

bee.morgan எனும் பாலமுருகன் தான் எனது அடுத்த நண்பன். சிறியவயதில் நுட்பமான கருத்துக்கள் செறிந்த கவிதைகள் மற்றும் கதை எழுதுபவன். தகுந்த guidance (தமிழில் சரியான வார்த்தை என்ன?) கிட்டினால் பெரிய எழுத்தாளன் ஆகும் சாத்தியங்கள் நிறைய உண்டு.

எனது ஹைகூக்களை விரும்பிப் படிக்கும் இனியவள் புனிதா எனது அடுத்த தோழி. இவரது வலைத்தளம் அழகானது. அழகிய பாடல்கள் இசையுடன் தேர்வு செய்து பதிவு செய்யும் நேர்த்தி சொல்லிவிடும், இது நிச்சயம் ஒரு பெண்ணின் வலைத்தளம் என்று.

விதிகளின் படி, புதிதாய் என் பதிவுக்கு வருகை தந்த என் மதிற்பிற்குரிய சகோதரி திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் தான் ஐந்தாவது தோழி. (சகோதரி தோழியாகவும் இருக்கலாம்). இவரது பதிவுலக அனுபவம் பெரிது. பல தளங்களிலும் (புகைப்படம் மற்றும் கவிதைகள் இவரது சிறப்பு) செயலாற்றுபவர். என் போன்ற புதியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாராட்டும் மனப்பாங்கு கொண்டவர்.

அப்புறம் கடைசியாக என்னை நண்பனாகத் தேர்ந்தெடுத்த அருணாவுக்கு நன்றிகள் பல. Really appreciate your gesture.
பின்குறிப்பு: எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சென்ஷீ, வளர்மதி, பெருந்தேவி போன்றோருடன் நெருங்கிய நட்பு மலரவேண்டும் என்ற ஆசை உண்டு. அவர்கள் எல்லாம் வலையுலகின் ரஜினி,கமல்,விஜய்,அஜித், த்ரிஷா போன்றவர்கள். தூரத்திலிருந்து ரசிக்கலாம்.

37 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் அனுஜன்யா.

ராமலக்ஷ்மி said...

நன்றி அனுஜன்யா என்னைப் பற்றிய குறிப்புக்கும் அன்புடன் அளித்த அவார்டுக்கும். பாருங்கள், இப்போதுதான் கவனித்தேன் நீங்களும் நானும் ஒரே சமயத்தில்தான் வலையுலகில் நுழைந்திருக்கிறோம். உங்கள் பதிவுகளுக்கு நான் புது வரவுதான். உங்கள் கவிதையால் கவரப்பட்டு வந்த நான் எப்படி இத்தனை நாட்கள் உங்கள் பதிவுகளைத் தவற விட்டேன் தெரியவில்லையே என யோசிக்கிறேன். அருமையாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்!

இந்த விளையாட்டின் விதிகளின் படி 4,5 பேர் என இன்றி நான் என் பதிவுக்கு வரும் எல்லோருக்குமே அவார்ட் அளித்து மகிழ்கிறேன். என் பதிவுகளைப் படித்துப் பிடித்து ஊக்கம் தருபவர்களுக்கு நன்றியாக நான், எனக்குப் படித்துப் பிடித்துப் போன பதிவுகளுக்குப் பின்னூட்டமிடத் தவறுவதில்லை.

Aruna said...

நெருங்கிய நண்பர் வட்டம் இல்லாதவன்....அது இதுன்னு சொல்லிக்கிட்டே அசத்தீட்டீங்க அனுஜன்யா?!!!!அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து எழுதியதற்கு நன்றிகள் பல.
அன்புடன் அருணா

VIKNESHWARAN ADAKKALAM said...

அவ்வ்வ்வ்வ்.... நண்பரே நான் ரூம் போட்டு அழுதுட்டு வரேன் இருங்க.....

MSK / Saravana said...

கலக்கல்..
:)

முகுந்தன் said...

அனுஜன்யா,

என்னையும் இதில் சேர்த்துகொண்டதற்கு
மிக்க நன்றி.

இன்ப அதிர்ச்சி என்பதை விட நெகிழ்ந்து போனேன் என்று சொல்லவேண்டும்.
ஓரிரு அவசர வேலைகளால் ,
ஒரு நாள் அவகாசம் வேண்டும் கண்டிப்பாக எழுதுகிறேன்.

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா..!! :))

ஆயில்யன் said...

// எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சென்ஷீ, வளர்மதி, பெருந்தேவி போன்றோருடன் நெருங்கிய நட்பு மலரவேண்டும் என்ற ஆசை உண்டு. அவர்கள் எல்லாம் வலையுலகின் ரஜினி,கமல்,விஜய்,அஜித், த்ரிஷா போன்றவர்கள். தூரத்திலிருந்து ரசிக்கலாம்.//

இவர்கள் நீங்கள் குறிப்பிடும் நடிகர்களினை போலவே மென்மையான மனத்துக்கு சொந்தக்காரர்கள்தான்!

என்றுமே இவர்களின் இணைய நட்பின் கதவுகள் திறந்தே இருக்கும்!

ஒரு ஹாய் சொல்லிட்டு எண்ட்ரீ போட்டுக்கோங்க! :)))

ஆயில்யன் said...

அப்புறம் உங்க பேரு அனுஜன்யா
மிகவும் ரசித்தேன்! அருமையான தேர்வு :)) ( விளக்கம் தெரியாவிட்டாலும் கூட நல்லா இருக்குப்பா!)

Anonymous said...

/வலையுலகில் நெருங்கிய நண்பர் வட்டம் இல்லாதவன் நான்.//

ஓ.. அப்போ எங்களையெல்லாம் இன்னும் உங்க நெருங்கிய நண்பர் வட்டத்துல சேக்கலையா :(

புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துகள் அவார்ட்டுக்கு!
நன்றி...என் பதிவையும் மதித்து வந்ததற்கு :))

Ayyanar Viswanath said...

என்ன கொடும அனுஜன்யா ஒரு மடல் தட்டி விடுங்க :)

நன்றி ஆயில்யன்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நாம்தான் ஏற்கனவே தொலைபேசியிலும் மெயிலிலும் அறிமுகமாகி விட்டோமே.! நாம் நண்பர்கள்தாம் :)

முகுந்தன் said...

நான் உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன் ...
வந்து பாருங்கள்..

ஜியா said...

:))

சென்ஷி said...

:))

என்ன அனுஜன்யா இது.. உங்க ஹைக்கூ கவிதைகளுக்கு நான் ரசிகன். என்னை இன்னும் உங்க பிரண்டா கூட ஏத்துக்கலையா...

சென்ஷி said...

என்னோட ஈமெயில் முகவரி -
senshe.indian@gmail.com

உங்க முகவரி தெரியாததால நானிங்கயே கொடுத்திட்டேன். :))

ஆட் செஞ்சுட்டு மெயில் அனுப்பணும். ஓகேவா..

நன்றி ஆயில்யன்....

anujanya said...

@ வேலன்

நன்றி வேலன். குறிப்பிட மறந்த நண்பர் நீங்கள். 'கதம்பம்' கமழ்கிறதே.

@ ராமலக்ஷ்மி

மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கு. உங்கள் நண்பர் வட்டத்திற்கு 4-5 பேர்களுக்குள் சுருக்குவது கடினம். உங்கள் முடிவு சரியானதே.

@ அருணா

மிக்க நன்றி அருணா. உங்கள் 'திமிர்' பிடித்திருக்கிறது. அங்கு வருகிறேன்.

@ விக்கி

நீ ரொம்ப பிசிதான். இருந்தாலும் கொஞ்சம் இதற்கும் நேரம் ஒதுக்குப்பா.

@ சரவணகுமார்

நன்றி சரவணன். எல்லாம் உன்னால்.

@ முகுந்த்

எழுதியாச்சா?

@ ஸ்ரீ

நன்றி ஸ்ரீ. நீ எல்லாம் இதில் சீனியர்.

@ ஆயில்யன்

நன்றி ஆயில்யன். நீங்கள் சொன்னது ஓரளவு எனக்கும் தெரியும். ஆயினும் அவர்கள் வாசிப்பும் எழுத்தும் என்னளவில் அவர்கள் எனக்கு நட்சத்திரங்கள். அதனால் முதலில் தயக்கம். இப்போது சரியாகிவிட்டது.

பெயர் அழகாக இருப்பதாக சிலர் சொல்லுகையில் மகிழ்ச்சி. வழக்கம்போல் குடும்ப அங்கத்தினர் பெயரை 'அவியல்' செய்து உருவாகிய பெயர்தான். நன்றி.

@ சேவியர்

சேவியர், உங்களை இன்னும் சற்று உயர்ந்த தளத்தில் (கற்றுக்கொள்ள வேண்டிய குரு) வைத்ததால், நீங்கள் நண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் கவிதைகளுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி.

@ அப்துல்லா

உங்களிடம் என்னவோ இருக்கு அப்துல்லா. மிக நெருக்கமாக உணர்கிறேன். கபடமில்லா மனது என்று நினைக்கிறேன். நிச்சயம் நீங்கள் என்னுயிர் தோழர்களில் ஒருவர்.

@ அய்யனார்

ஹா, என்ன சொல்ல! சாமியே வந்துருச்சி டோய்! வருத்தப் படுவீங்க மடல் வர ஆரம்பித்தபின்.

@ சுந்தர்

அப்பா தப்பித்தேன். எங்கே சாரு ஸ்டைலில் 'மன உளைச்சல் - இந்த தொலைபேசி/மெயில் ஆசாமிகளால்' என்று சொல்லிவிடுவீர்களோ என்று பயந்தேன். நன்றி சுந்தர் - உங்கள் down to earth அணுகலுக்கு.

@ ஜி

நீங்கள் என் பட்டியலில் இருந்தீர்கள். அப்புறம் உங்கள் நண்பர்கள் வட்டம் எவ்வளவு பெரிது என்று தெரிந்ததால், உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனாலும், எனக்கு பிடித்த நண்பன் நீ என்று நம் இருவருக்கும் தெரியும்.

@ சுபாஷ்

நன்றி சுபாஷ் முதல் வருகைக்கும் நீண்ட புன்சிரிப்புக்கும்.

@ திகழ்மிளிர்

நன்றி திகழ். ஜி போலவே தான் நீங்களும். ஆயில்யன், 'திகழ்மிளிர்' என்ன அழகான பெயர். ஒரு பதிவே போடலாம்.

@ சென்ஷீ

சென்ஷீ, நிச்சயம் நெருங்கிய நண்பர்தான் நீங்கள். ஆனாலும், நான் கொடுக்க ஆசைப்பட்ட இடம் மற்ற நட்சத்திரங்களுடன். உங்கள் படைப்பாற்றலை இன்னும் பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது என் எண்ணம்.

விதி யாரை விட்டது. இனி மடலிலும் தொந்தரவு செய்வேன்.

அனுஜன்யா

Unknown said...

//நீ எல்லாம் இதில் சீனியர்.//

என்ன அண்ணா என்ன போய் சீனியர் னு சோல்லிட்டீங்க?? :(((

anujanya said...

@ ஸ்ரீ

அடப்பைத்தியமே! இந்த Blogging Friends Forever Award விஷயத்தில் நீ சீனியர் தானே. உன் வயதை யாரும் அதிகப் படுத்தவில்லை. இல்லை நீதான் சும்மா விடுவாயா! எவ்வளவுதான் ஆயில்யன் முயன்றாலும், உன் வயது குறைவு தான். ok?

அனுஜன்யா

Unknown said...

//அடப்பைத்தியமே! இந்த Blogging Friends Forever Award விஷயத்தில் நீ சீனியர் தானே. உன் வயதை யாரும் அதிகப் படுத்தவில்லை. இல்லை நீதான் சும்மா விடுவாயா! எவ்வளவுதான் ஆயில்யன் முயன்றாலும், உன் வயது குறைவு தான். ok?//

ம்ம்ம்ம் இப்ப ஓகே..ஓகே.. ஓகே..!! :)
(அண்ணா உங்க ரிப்ளே பார்த்து வெகு நேரம் சிரித்தேன்..!! :))))))

Bee'morgan said...

ஹா.. நானும் வந்துட்டேன்.. என் வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.. :) :)

புதுகை.அப்துல்லா said...

அண்ணே நேரம் கிடைக்கும் பொழுது எனக்கு மின் அஞ்சல் அனுப்புங்க
pudukkottaiabdulla@gmail.com

ஜியா said...

//நீங்கள் என் பட்டியலில் இருந்தீர்கள். அப்புறம் உங்கள் நண்பர்கள் வட்டம் எவ்வளவு பெரிது என்று தெரிந்ததால், உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஆனாலும், எனக்கு பிடித்த நண்பன் நீ என்று நம் இருவருக்கும் தெரியும்.
//

இதுக்கும் ஒரு :))

ராமலக்ஷ்மி said...

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி அனுஜன்யா. நட்புகள் என்றும் தொடரும். என்றென்றும் தொடர்வோம்.

பரிசல்காரன் said...

பல நண்பர்களைச் சம்பாதித்துள்ள நல்ல மனதுக்காரர் நீங்கள்!

வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//அனுஜன்யா said...
@ ஸ்ரீ

அடப்பைத்தியமே! இந்த Blogging Friends Forever Award விஷயத்தில் நீ சீனியர் தானே. உன் வயதை யாரும் அதிகப் படுத்தவில்லை. இல்லை நீதான் சும்மா விடுவாயா! எவ்வளவுதான் ஆயில்யன் முயன்றாலும், உன் வயது குறைவு தான். ok?
//

அப்படியா அக்காவினை விட தம்பிக்கு எப்பொழுதுமே வயது குறைவுதானே! ஸோ நான் அக்கான்னு கூப்பிட்டா தப்பே இல்ல!

:))

ஆயில்யன் said...

//அனுஜன்யா said...
@ ஸ்ரீ

அடப்பைத்தியமே
//


என்னது!!!

என்னோட ஸ்ரீ அக்காவினை பத்தி இப்படி சொல்லிட்டீங்களே??


(உங்களுக்கும் தெரிஞ்சுப்போச்சா :)))))))))))))


எல்லாருக்கும் மெயில் போட்டு சொல்லுறாங்க போல எங்க அக்கா!

anujanya said...

கே.கே.

நீ பெரிய நட்சத்திரம். ஆயினும் நண்பன் முதலில். என்ன, இப்போதெல்லாம் எப்போதாவதுதான் வருகிறாய். அதைப் புரிந்துகொள்வதுதான் நட்பு. இப்படி கவிதை எழுதாமல் இருந்தால் வருவாய் என்றால் அதற்கும் தயார்.

அனுஜன்யா

Unknown said...

//ஆயில்யன் said...

அப்படியா அக்காவினை விட தம்பிக்கு எப்பொழுதுமே வயது குறைவுதானே! ஸோ நான் அக்கான்னு கூப்பிட்டா தப்பே இல்ல!
//

அண்ணா என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க நீங்க எவ்ளோஓஓஓஓ பெரிய்ய்ய்ய்ய்யவங்க..!! :P

Unknown said...

//ஆயில்யன் said...
//அனுஜன்யா said...
@ ஸ்ரீ

அடப்பைத்தியமே
//


என்னது!!!

என்னோட ஸ்ரீ அக்காவினை பத்தி இப்படி சொல்லிட்டீங்களே??


(உங்களுக்கும் தெரிஞ்சுப்போச்சா :)))))))))))))


எல்லாருக்கும் மெயில் போட்டு சொல்லுறாங்க போல எங்க அக்கா!//

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr...!!

anujanya said...

ஆயில்யன்/ஸ்ரீ,

இப்படியே 'சண்டை' தொடர்ந்தால், உங்கள் இருவரையும் 'இரட்டையர்கள்' என்று சொல்லி விடுவார்கள் .

அனுஜன்யா

Unknown said...

அண்ணா நீங்களே சொல்லுங்க அவர் தானே அண்ணா பெரியவர்?? ;))

சுரேகா.. said...

அப்துல்லா வீட்டு வழியா வந்தேன்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!
வாழ்த்துக்கள்

உங்களுக்கு
ஒரு தொடர் வாசகன் ரெடி....!

anujanya said...

சுரேகா,

உங்கள் முதல் வருகை. ஊக்கத்திற்கு நன்றி. அப்துல்லா என் இனிய நண்பன்.

அனுஜன்யா

geevanathy said...

வாழ்த்துக்கள்!
நல்ல முயற்ச்சி, தொடருங்கள்.
பல நண்பர்களைச் சம்பாதித்துள்ளீர்கள்.

anujanya said...

ஜீவராஜ்,

முதல் வருகை. நன்றி உங்கள் வாழ்த்துக்கும்.

அனுஜன்யா