Wednesday, September 16, 2009

நர்சிம் ஜ்யோவ்ராம் சுந்தரைக் கேட்கும் கேள்விகள்


என்னுடைய கதை, ஜ்யோவின் விமர்சனம், அதற்குப் பின்னூட்டம் என்று எல்லாம் வந்திருக்கிறது. இப்போது நர்சிம் ஜ்யோவுக்கு பதில் சொல்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார். ஜீப்பில் ஏறிவிட்ட இன்னொரு 'ரவுடி'யின் நீண்ட பின்னூட்டத்தை புகைப்படத்துடன் இன்னொரு இடுகையாகப் போடுவது தானே நியாயம்? Here we go:
*******
சரி..விசயத்திற்கு வருவோம்..அல்லது இதைத் தனிப்பதிவாக பேஸ்ட் பண்ணி போடுங்க அனுஜன்யா...

*******

திரு சுந்தர்ஜிக்கு.

குரு வந்தனங்கள்.

ஒரு படத்தையோ அல்லது கதையையோ விமர்சனம் செய்வது என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.அதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

ஆனால்...

உங்கள் கருத்து என்று ஒன்றை முதலிலேயே முடிவு செய்து கொண்டு,படைப்பை பார்க்கும் பொழுது அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது..அல்லது ஆரம்பப் புள்ளி அதுதான்.

விமர்சகர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் விமர்சனம் செய்வார்கள் அல்லது செய்ய வேண்டும் எனபது என் கருத்து.

அடிப்படையான இரு விசயங்கள் அல்லது விடயங்கள்(இந்த விடயம்,வழமை போன்ற வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குமெனக்கு)

1.நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளி

2.வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் கடவுளைக் கூட ஒத்துக்கொள்வீர்கள்.ஆனால் சுஜாதாவை ஒத்துக்கொள்ளாத ஆசாமி.

இந்த இரண்டு பாயிண்ட்டுகளும் மிக முக்கியமானவை..இந்த விமர்சனத்தைப் பொறுத்தவரை.

ஏனெனில் உங்கள் விமர்சனத்தின் மொத்த குத்தும் இந்த இரண்டில் தான் என்பது தெளிவாக இருக்கிறது.

நீங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதனாலேயே சரிபாதி ஈஸ்வரன் மேட்டரை பெண்களுக்கு கொடுத்தால் முழுதும் பிடுங்கிவிடுவார்கள் கபர்தார் என்ற தளத்திற்கு மாற்றிவிட்டீர்கள்.தவறாகப் படுகிறது.

அகோரி இந்து மத அல்லது நான் கடவுள் படம் பார்த்தபின் ஒரு இந்து தெரிந்து கொண்ட விசயம்.அதை தன்னளவில் இங்கே மொழிப் படுத்தி இருக்கிறார் படைப்பாளி.

அதுபோலவே சுஜாதா. அவரைப் பிடிக்காமல் போக உங்களுக்கு எப்படி ஆயிரம் காரணம் இருக்கிறதோ அதைவிட பல்லாயிரம் காரணம் படைப்பாளிக்கு அவரைப் பிடிப்பதற்கும் இருக்கலாம்.

ஆதாரத் தவறு என்று முடிவு செய்து கொண்டு நீங்கள் விமர்சித்தது தெளிவாகத் தெரிகிறது.

நுண்ணியப்பார்வை எல்லாம் ஓக்கே.ஆனால் உங்களின் அடிப்படைக் கருத்துகளுக்கு அது ஒத்துப்போகவில்லை என்பதனால் “ஆபத்தானது”போன்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.

நல்ல கதை என்பதை விட சொன்ன விதமும் கையாளப்பட்ட நடையும் நிச்சயமாய் புதிதுதான்(சுஜாதாவைப் பிடிக்காததால் லேசான எரிச்சலின் ஊடே நீங்கள் படித்துக் கொண்டே வந்ததின் விளைவாகவே உங்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்).

கடவுளர் சார்ந்த கதைகளும் சுஜாதாவின் சுட்டு விரலை லேசாகப் பிடித்துக்கொண்டு நடந்ததும் மட்டுமே தவறாக தோன்றுகிறது உங்களுக்கு.

ஏனெனில்,நீங்கள் கொண்டாடும் கட்டுடைப்பு கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதையை நீங்கள் விமர்சித்த முகாந்திரம் நான் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.

அது உங்கள் கருத்து எனும் பட்சத்தில்,உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை அல்லது கரு பிடிக்கவில்லை என்ற அளவே அன்றி ஒதுக்கப்படவேண்டியது எல்லாம் கொஞ்சம் ஓவர் ஸார்.

34 comments:

யுவகிருஷ்ணா said...

அல்லது.. அல்லது.. அல்லது...

கொஞ்சம் பார்த்து அல்லுங்க நர்சிம் சார்! :-)

Raju said...

இவரு சொல்றதும் வாஸ்தவம்தானப்பா...!
அவரு சொன்னதும் ஒரு வகையில சரியாத்தான் பட்டுச்சு.
இருந்தாலும், இவரு சொன்னதக் கேட்டா அவரு சொன்னது சரியப்படல.
இவரு இப்பிடி சொல்லுவார்ன்னு தெரிஞ்சுருந்தா, அவரு ஏன் அப்பிடி சொல்லப்போறாரு...?
அவரு சொன்னதாலயா அவரு அப்பிடி சொன்னாரு..?
இல்ல இவரு சொன்னதாலயா..?

சுகுணாதிவாகர் said...

குரு வந்தனங்களா,

உங்க இம்சை தாங்க முடியலையேப்பா!

அப்புறம் சுந்தருக்கு சுஜாதாவைப் பிடிக்காதா? இது என்ன புதுக்கதையா இருக்கு?

யாத்ரா said...

உள்ளார்ந்த அன்போடு இப்படி மாற்றி மாற்றி விவாதித்துக் கொண்டே செல்வது ரசிக்கும் படியாய் இருக்கிறது.

//இவரு சொல்றதும் வாஸ்தவம்தானப்பா...!
அவரு சொன்னதும் ஒரு வகையில சரியாத்தான் பட்டுச்சு.
இருந்தாலும், இவரு சொன்னதக் கேட்டா அவரு சொன்னது சரியப்படல.
இவரு இப்பிடி சொல்லுவார்ன்னு தெரிஞ்சுருந்தா, அவரு ஏன் அப்பிடி சொல்லப்போறாரு...?
அவரு சொன்னதாலயா அவரு அப்பிடி சொன்னாரு..?
இல்ல இவரு சொன்னதாலயா..?//

சூப்பருங்க

நாஞ்சில் நாதம் said...

அனு சார் ஒரு டீ நெண்டு வடை சொல்லுங்க. அத முடிச்சுட்டு அப்புறம் பேசுவோம்.

ஒரு விசியம். நீங்க கவிதயே எழுதுங்க தல. உங்க இம்சை தாங்க முடியலையே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாஞ்சில் நாதம் said...


ஒரு விசியம். நீங்க கவிதயே எழுதுங்க தல. உங்க இம்சை தாங்க முடியலையே. //



விவாதத்திற்குரிய பின்னூட்டம் :))))))))))))))

மண்குதிரை said...

een thalaivare ennaachchu?

மணிகண்டன் said...

அனுஜன்யா, சுந்தருடைய விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன? நீங்க ஒன்னும் பின்நவீனத்துவ கதையாளர் இல்லையே ! அவங்க தான் பிரதி படைச்சவுடன, பிரதியை டைவர்ஸ் பண்ணிட்டு வேற பிகர் தேடி போவாங்க. உங்களுக்கு என்ன ?

இனி எனது பொன்மொழிகள் :-

அனுஜன்யாவின் பத்தி எழுத்தக்களின் நடை மிகவும் எளிமையானது. கூடவே சுவாரசியாமானது.

அதே சிறுகதைகளில் வரும் நடை சோ ராமசாமி எழுதிய நாவல்களில் வரும் நடையை போன்றது !!!
அதிலிரிந்து விடுபட்டு சுஜாதாவின் நடையுடன் கம்பேர் செய்யும் அளவிற்கு சென்று இருப்பது quantum leap ! பாராட்டப்பட வேண்டியது.

இனி இந்த விவாதங்களுக்கான சில கிரவுன்ட் ரூல்ஸ். (me the moderator u know !)

௧) இது போன்ற பதிவுகளின் தலைப்புக்கள் பதிவரின் பெயரை மட்டும் போட்டுவிட்டு ஆச்சரிய குறிகள் போடவேண்டும்.

௨) பதிவுகளில் ஒரு இடத்திலாவது "உங்களிடம் இருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை" என்று இருக்கவேண்டும். (என்ன எதிர்பார்த்தாங்கன்னு சொல்லக்கூடாது)

௩) அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவேண்டும்.

௪) ஓபன் ஐடி பின்னூட்டங்களில் சுவாரசியமான பெயர்களில் கமெண்ட் போடுபவர்களுக்கு பரிசுத்தொகை அறிவிக்கவேண்டும்.

௪ எ) நாற்பது, ஐம்பத்து பின்னூட்டங்களுக்கு பிறகு கமெண்ட் மாடரேஷன் enable செய்யவேண்டும். (ஐந்து நிமிடத்தில் இவ்வளவு கமெண்ட் வந்துவிடும். பயப்பட தேவையில்லை.)

௫) முக்கியமாக ஒரே பதிவரிடம் இருந்தே பதிவுகள் வரக்கூடாது. அவரது வேண்டியவர்கள் / வேண்டாதவர்கள் பலர் ஒருபக்க சார்புடைய பதிவுகள் எழுதவேண்டும். (wealth distribution)

௬) நாட்டாமை பதிவர்கள் சார்பில்லாமல் இரு சார்புகளின் கருத்தாக்கத்தை அலசவேண்டும்.

௬ எ ) பதிவுகளில் வெளியிடப்படாத பின்னூட்டங்களின் தொகுப்பை ஒரு இடுகையாக்க வேண்டும்.

௬ ப ) கமெண்ட் போடும் ஒருவர் தான் போட்ட கமெண்ட்டை ஒவ்வொரு இடுகையிலும் cut & paste செய்யவேண்டும்.

௭) இவற்றில் கலக்காத வேறுசில பதிவர்கள் "இதை எப்பொழுது நிறுத்துவீர்கள்" என்று பதிவு எழுத வேண்டும்.

௮) சலசலப்பு சற்று ஓய்ந்தவுடன், பதிவுக்கு லீவ் போட்டு சென்ற பதிவர்கள் திடீரென்று புது அவதாரம் எடுக்கவேண்டும்.

௯) Anniversary கொண்டாடப்படவேண்டும்.

இவற்றில் எந்த ரூலும் இந்த விமர்சனங்களில் follow செய்யப்படவில்லை. இது அநியாயம், அக்கிரமம் ! யாராவது வந்து தமிழ் வலைப்பதிவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர் என்று சொல்லும் பழியை தாங்க வேண்டிவரும்.

Beware and act now !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இது ஏன் இந்தப் பிரச்சனை வளர்ந்து கொண்டே போகுது என்று எனக்கு விளங்க வில்லை. சுந்தர் வந்து விளக்கம் தரும் மட்டும் இது நடக்குமோ!
கோபிக்காதேங்கோ அனுஜன்யா ,
எழுத்தாளனுக்கு take it easy policy இருக்க வேண்டாமோ?

வால்பையன் said...

பத்த வச்சிட்டியே பரட்ட!

கார்க்கிபவா said...

பதிவுக்கு எதிர்பதிவு தெரியும்.. இது என்ன விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம்? எப்படியோ தியேட்டர் ஓனருக்கு நல்ல வருமானம்.

இங்க படத் தயாரிப்பளரே தியேட்டர் ஓனர் என்பதால் டபுள் வருமானம். ந்டத்துங்க..

மணிகண்டன், அவரா நீங்க? :)))

கார்க்கிபவா said...

// யுவகிருஷ்ணா said...
அல்லது.. அல்லது.. அல்லது...

கொஞ்சம் பார்த்து அல்லுங்க நர்சிம் சார்! :-)//

கொஞ்சம் பார்த்து அல்லுங்க அல்லது சொல்லுங்க நர்சிம் சார் என்று வர வேண்டும் சகா :)))

Mahesh said...

குத்துங்க எசமான் குத்துங்க.....

Karthikeyan G said...

சுந்தர்ஜிக்கு ஏரோப்ளேனயே பிடிக்காது. ஏரோப்ளேன் சத்தம் வெளியே கேட்டால் கூட ஓடிப்போய் அதை ஆகாயத்தில் வேடிக்கை பார்க்காதவர். அதனால்தான் ஏரோப்ளேனை களமாக கொண்ட இந்த கதை அவர் நிராகரித்து விட்டார் என நான் நினைக்கிறேன்.

Thamira said...

ஹிஹி.. நான் குருஜிக்கு சப்போர்ட்டு.!

பரிசல்காரன் said...

ரெடி ஸ்டார்ட் ம்யூசிக்....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விரிவாக, வரிக்கு வரி நர்சிம் சொல்வதை மறுக்கலாம். அல்லது ஒற்றை வரியில் ‘நான் செய்திருப்பது ஆய்வு ரீதியான விமர்சனம், நர்சிம் செய்திருப்பது யூகங்களின் அடிப்படியிலான பஜனை’ என்று சொல்லி நகரலாம். வேறென்ன செய்யலாம்?

Ashok D said...

நான் யாத்ராவை வழிமொழிகிறேன்.

எப்டியோ எங்களுக்கு நல்லபடியா பொழுதுபோனா சரி ;)

நர்சிம் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
விரிவாக, வரிக்கு வரி நர்சிம் சொல்வதை மறுக்கலாம். அல்லது ஒற்றை வரியில் ‘நான் செய்திருப்பது ஆய்வு ரீதியான விமர்சனம், நர்சிம் செய்திருப்பது யூகங்களின் அடிப்படியிலான பஜனை’ என்று சொல்லி நகரலாம். வேறென்ன செய்யலாம்?
//

மிக மிக மிக ரசித்த பதில் குருவே.

நகர்ந்துவிடுவோம்.

மணிகண்டன் said...

பலசமயங்களில் யூகங்களுக்கு அடிப்படை உண்டு ஜ்யோவ் :)-

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மணிகண்டன், அடிப்படைகள் இருந்தால்தான் அவை யூகங்கள். இல்லாவிட்டால் புரளி :)

Anonymous said...

எப்பவும் ஜகா வாங்குவதே நரசிம்முக்கு பிழைப்பாகி விட்டது

மணிகண்டன் said...

ஜ்யோவ், உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா :)

Vidhoosh said...

எனக்கு mix அவர்களின் பின்னூட்டம் ரொம்ப பிடித்தது. வரிக்கு வரி அப்பிடியே repeatட்டிக் கொள்கிறேன்.
Good Night.
--வித்யா

நர்சிம் said...

//Anonymous said...
எப்பவும் ஜகா வாங்குவதே நரசிம்முக்கு பிழைப்பாகி விட்டது
//

ந‘ர்’ருக்கு பதில் ‘ர’ போட்டதில் இருந்தே யார் என்று தெரிந்து விட்டதால்..சிறு புன்னகைதான் பதில்.

என்றாலும்

ஜகா வாங்குவது வழக்கமா? இதை பெருந்தன்மை என்ற வார்த்தைக்குள்ளும் அடக்கலாம் என்பது தெரியாதது ‘துரதிருஷ்டமே’.

யுவகிருஷ்ணா said...

//ஜகா வாங்குவது வழக்கமா? இதை பெருந்தன்மை என்ற வார்த்தைக்குள்ளும் அடக்கலாம் என்பது தெரியாதது ‘துரதிருஷ்டமே’.
//

ஆஹா. ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

சாட்டில் வந்த நண்பர் ஒருவர் நர்சிம் என்னை திட்டியதாக சொல்லியிருந்தார். இதுதானா அது?

நர்சிம் நான் அந்த ‘துரதிருஷ்டசாலி’ இல்லை என்று மட்டும் விளக்கம் சொல்லிக் கொள்கிறேன். வேலை கழுத்தை நெரிக்கும் வேளையில் எவ்வளவு இடங்களில்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை :-(

நர்சிம் said...

// யுவகிருஷ்ணா said...
//ஜகா வாங்குவது வழக்கமா? இதை பெருந்தன்மை என்ற வார்த்தைக்குள்ளும் அடக்கலாம் என்பது தெரியாதது ‘துரதிருஷ்டமே’.
//

ஆஹா. ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

சாட்டில் வந்த நண்பர் ஒருவர் நர்சிம் என்னை திட்டியதாக சொல்லியிருந்தார். இதுதானா அது?

நர்சிம் நான் அந்த ‘துரதிருஷ்டசாலி’ இல்லை என்று மட்டும் விளக்கம் சொல்லிக் கொள்கிறேன். வேலை கழுத்தை நெரிக்கும் வேளையில் எவ்வளவு இடங்களில்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை :-(
//

யார் லக்கி அந்த நண்பர்????

12 மணி சுடுகாடு மேட்டர் மாதிரி,நான் உங்கள ஏன் சொல்லப்போறேன்.

நண்பரை நம்பாதீங்க

iniyavan said...

//நர்சிம் செய்திருப்பது யூகங்களின் அடிப்படியிலான பஜனை’ //

நர்சிமின் விமர்சனத்தை எங்கு படிப்பது?

Anonymous said...

உலகநாதன் எழுதியிருக்கும் பின்னூட்டம் நர்ஸிம்மிற்கு (நோட் பண்றாருப்பா, அதான் மாத்தி எழுதறேன்!) பெரிய இழுக்கு :-)

anujanya said...

@ யுவகிருஷ்ணா

:)

@ ராஜு

ஹா ஹா ஹா.

@ சுகுணாதிவாகர்

:)

@ யாத்ரா

எப்பவும் சொல்றதுதான். நீ ரொம்ப .....

நன்றி யாத்ரா.

@ நாஞ்சில் நாதம்

//நீங்க கவிதயே எழுதுங்க தல. உங்க இம்சை தாங்க முடியலையே//

சரி சரி. இருக்கு உங்களுக்கு.

நன்றி நாதம் :)

@ மண்குதிரை

ஒண்ணும் ஆகவில்லையே!

@ மணிகண்டன்

சொல்றேன். சொல்றேன்.

பொன்மொழிகள் : நன்றி

கிரௌண்டு ரூல்ஸ் : முடியல

நன்றி மணி :))))

@ ஜெஸ்வந்தி

பயப்படாதீங்க சகோ. முடிஞ்சுடும் சீக்கிரம் :)))

@ வால்பையன்

குரு....

@ கார்க்கி

கொம்பெனி ரகசியங்களை இப்படியா அம்பலம் ஆக்குவது? நீ லக்கிகே டியூஷனா?

@ மஹேஷ்

:)

@ கார்த்திகேயன் ஜி

பகடி? சரி சரி. இருக்கட்டும்.

@ ஆதி

வேணாம்...ஓடிப் போயிடு...

நன்றி ஆதி.

@ பரிசல்காரன்

இதற்குத்தானே நீ ஆசைப்பட்டாய் பால மைந்தா?

@ ஜ்யோவ்

அப்படிப் போடு. சரி சரி நானும் யூஸ் பண்ணிக்கிறேன் :)

@ அசோக்

நீங்களும் கவிஞர்தான். அதுக்காக யாத்ரா சொல்றது எல்லாத்துக்கும்..... :)

நன்றி அசோக்

@ நர்சிம்

மாற்றான் தோட்டத்தை ரசிக்கும் உங்க ரசனை.... Stoop to conquer.

நன்றி நர்சிம் யாவற்றுக்கும்.

@ மணிகண்டன்

ஹா ஹா ஹா. அது.

@ ஜ்யோவ்

ஐயோ. எப்படி பாஸ் இப்பூடி...

@ ஒரு அனானி, யுவகிருஷ்ணா, மற்றும் நர்சிம்

சும்மா நட்புக்காக ஷோ காட்டுங்க. Please no serious fights.

@ mix

வாங்க. இதுல உங்களுக்கு ஒரு விசிறி வேற.

நன்றி பாஸ்.

@ விதூஷ்

குறும்பு... நன்றி வித்யா.

@ உலகநாதன்

வாங்க பாஸ். என்னது? அவர் விமர்சனம் (ஜ்யோவின் விமர்சனம் பற்றி) தானே பதிவே? பாஸ் நீங்க பகடி செய்கிறீர்களோ :))

நன்றி உலகநாதன்.

அனுஜன்யா

anujanya said...

நண்பன் அ.மு.செய்யது இந்த பின்னூட்டத்தை முதலில் அனுப்பி இருந்தார்.

"சோத்துல கல்லு...சண்டைக்கு வாடா"ன்னு கவுண்டமணி ஒரு படத்துல‌ இலையில‌
ஒரு செங்கல்ல எடுத்து வச்சி அலப்பற பண்ணுவாரே !!!

அந்த மாதிரியா இது ????? "

முதல் பின்னூட்டமே நகைச்சுவையாக இருந்தால், தீவிர விவாதம் திசை திரும்பும் என்று தோன்றியதால், அதை வெளியிடவில்லை. அவரும் பெருந்தன்மையாக ஓகே சொன்னார். இப்ப தான், இறுதி நிகழ்ச்சிக்கு வந்துட்டோமே. அதனால அதை இங்கு போட்டு விட்டேன்.

மீண்டும் புரிதலுக்கு நன்றி செய்யது.

anujanya said...

விமர்சனத்திற்கு என் பதில்: நீங்கள் நர்சிமுக்குச் சொன்னது போலவே எனக்கும் உங்கள் விமர்சனத்திற்கு வரிக்கு வரி விலாவாரியாக சொல்வதற்கு பதில் இருக்கிறது. ஆனால், அப்படியொரு செய்கையில் முடிவில் மிஞ்சுவது ஆயாசம் என்பதும் நிதர்சனம்.

கதையின் மொழி நடை, சுஜாதா ஸ்டைல் பற்றிய உங்கள் கருத்துகள் வீம்புப் பிடிவாதம் பிடிக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். மற்றவை சீரியசான குற்றச் சாட்டுகள் என்பதால் சிறிது கூட ஒப்புக் கொள்ள இயலவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :)

உங்கள் விமர்சனம் மிக நன்றாக இருந்தது. மிக்க நன்றி சுந்தர் மற்றும் எல்லா நண்பர்களுக்கும்.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன நடக்குது இங்க அப்பப லீவு போட்டாலும் பிக்கப் பண்ண முயற்சி பண்ணா ஒன்னும் புரியலை...சரி வேற எங்கயாவது புரியாதுன்னு பாக்கறேன்....

anujanya said...

@ அனானி

:((

@ கிருத்திகா

இவ்வளவு காத்து வாங்குற கடையில் நடப்பதே புரியவில்லையா?

Dont worry, you haven't missed anything :)

நன்றி கிருத்திகா

அனுஜன்யா