ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்., கூட இருந்து, இறந்த மற்ற நால்வருக்கும் அஞ்சலிகள். இறந்த செய்தி வந்த நாளுக்கு அடுத்த நாள் ஹைதை, கோவை, பெங்களூரு, டில்லி என்று பல இடங்களிலிருந்து வந்த எங்கள் அலுவலக மேலதிகாரிகளின் கூட்டம் மும்பையில் இருந்தது. அப்போது தமிழ் நாடு மற்றும் கர்நாடகா (இதை ஏன் கருநாடகம் என்கிறார்கள்? காவிரி தண்ணீர் தர தொடர்ந்து மறுத்தால், இது மறுவி 'கருநாகம்' ஆக்கிவிடலாம் என்று ஒரு யோசனையோ!) அரசுகள் விடுமுறை அளித்தது பற்றி பேச்சு வந்தது. யாரோ ஒருவர் 'பீகாரில் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை' என்றார் (தகவல் சரிதானா என்று தெரியாது). நான் 'இது என்ன துக்கமா அல்லது கொண்டாட்டமா?' என்றேன். உடனே ஹைதராபாத் பாபு 'என்ன விளையாடுறியா? ஒய்.எஸ்.ஆர். யாரு? ஆல் இண்டியா லீடரு' என்று அந்த 'ரூ'வில் அழுத்தம் கொடுத்தார். டில்லி வாலா 'வோ கோன் ஹை? ரெண்டு நாளுக்கு முன்னால் அவர் யாரென்று எனக்குத் தெரியாது' என்றார் வழமைத் திமிரில். எப்போதும் போல உண்மை இந்த இரண்டுக்கு நடுவில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
வாரிசு உடனே முதல்வராக வேண்டும் என்று அடம் பிடித்த ஆந்திர எம்.எல்.ஏக்கள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கூழைக் கும்பிடு போட பழக்கமான இடத்திற்குச் செல்லவே எல்லோரும் விரும்புவார்கள். மேலும், காங்கிரஸ் மேலிடம் துவங்கி வைத்த அவலத்தை, மற்ற எல்லாக் கட்சிகளும் (தி.மு.க, பா.ம.க உட்பட) செய்வதையும் நாம் பார்க்கிறோம். பா.ஜ.க. எப்போதுமே விரைவாகக் கற்றுக்கொள்வதில் சமர்த்தர்கள் இல்லை. அத்துடன் அவர்கள் தற்போது உட்கட்சி ஜனநாயகத்தின் 'உச்சத்தின் அருகில்' இருக்கிறார்கள். முடிந்தவுடன், கட்சி இன்னமும் இருந்தால், அவர்களும் வாரிசு உள்ள தலைவரைத் தேர்ந்தெடுத்து, 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ' வாழ்த்துவோம். தோழர்களில் தான் இந்த மனப்பாங்கு இல்லை. உங்களுக்குத் தோழர்களிடத்தில் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் ஊழல், மற்றும் துதிபாடல் போன்ற விஷயங்களில் பெரிய குறைபாடுகளை அவர்களிடத்தில் காண முடியாது என்பது என் எண்ணம்.
இதற்கு மேல் அரசியல் பேச வேண்டாம் என்று ஏதோ ஒன்று எச்சரிப்பதால்...
எஸ்ராவின் 'இணைய எழுத்து' கட்டுரை படித்தேன். பொதுவாக இணையத்தின் போக்குகளை அவதானித்து எழுதியவர் இதையும் சொல்கிறார்:
"அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது."
வருத்தமாக இருந்தாலும், மறுக்க முடியாமல் இருக்கு. அதே சமயம், நல்ல முயற்சிகளை இப்படி பாராட்டவும் செய்கிறார்: "சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி."
அவர் சொன்ன பலவற்றில், எனக்குப் குறிப்பாகக் கவர்ந்த அம்சம் : "வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை"
பெரும்பாலான பதிவர்கள் தங்கள் வலைப்பூவை ஒரு அச்சு ஊடகத்தின் நவீன மாற்றாக வைத்திருக்கிறோமே தவிர கணினியின் பிரதான வசதிகளான ஒலி, ஒளி அம்சங்களைப் பெரிதும் பயன்படுத்துவதில்லை. எனக்குத் தெரிந்து ஆசிப் அண்ணாச்சி ஓரளவு ஒலி அமைப்பைப் பயன்படுத்தி இருக்கிறார். புனித ரமலான் மாதப் பாடலை அவர் குரலில் இங்கு கேளுங்கள். போலவே, ஆதியும் குறும்படம் என்று (நாம எவ்வளவுதான் கலாய்த்தாலும்) இரு முயற்சிகளை மேற்கொண்டார். குசும்பனும் கார்ட்டூன் வடிவங்களில் நகைச்சுவை தருவதைக் குறிப்பிட வேண்டும். தமிழ்ப்பறவை என்னும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் நண்பர் பரணி, தன் கவிதைகளுக்கு தானே அழகாக ஓவியம் வரைந்து பதிவேற்றம் செய்கிறார். என் கவிதைகளுக்கும் ..என்று கேட்டேன். முதலில் கவிதை எழுதுங்கள். அப்புறம் பார்க்கலாம்னு பதில் வந்தது.
இங்கு நான் சொல்ல வருவது original work. ஜ்யோவ் உங்கள் முன்னால் தன் கவிதைகளை கம்பீரமாக காமிராவைப் பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்? அதற்காக அதீதன் செய்வதை எல்லாம் காணொளியில் தர வேண்டும் என்றெல்லாம் கேட்பது சாரி ரொம்ப ஓவர் :)
நிறைய பேர் ஒலி, மற்றும் காணொளிக் காட்சிகளின் சுட்டி கொடுத்தோ, தரவிறக்கம் செய்தோ இடுகையை சுவாரஸ்யமாக்குவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட காணொளிகள் (உண்மையில் காணிருள்கள்) சில உலுக்கி விட்டன. சுட்டி மட்டும் தருகிறேன். பார்த்து விட்டு என்னைத் திட்டாதீர்கள். இந்த மாதிரி மனதை உலுக்கிவிடும் காணொளிகள் பதிவேற்றம் செய்வது, மற்றும் சுட்டி தருவது எல்லாம் தார்மீக முறையில் சரியானதா என்றும் தெரியவில்லை.
ஒன்று 'யானையின் கோபம்'
இன்னொன்று 'ரயிலின் மேல் மின்கம்பியின் கீழ்'
போலவே பாட் காஸ்ட் என்னும் இணையத்தில் (அச்சு ஊடகங்களில் கைகூடாத) உள்ள வசதி. சமீபத்தில் Dispassionated DJ அவர்களின் தளத்தில் சுட்டி கொடுத்திருந்த லிவிங் ஸ்மைல் வித்யாவின் (ஆஹா எப்ஃ. எம்.) நேர்காணல் கேட்க முடிந்தது. வித்யாவின் குரலில் அவர் வாழ்வு பற்றி அறிய முடிந்தது புதிய, அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம். கிழக்குப் பதிப்பகம் செய்யும் பல நவீன முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். பாராட்டப்படவேண்டிய விஷயம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் புதிதாக சிறு பத்திரிகைகள் வரவிருப்பது. மாலன் ஆசிரியர் பொறுப்பில் ‘புதிய தலைமுறை’, பொன்.வாசுதேவன் முனைப்பில் 'அகநாழிகை'. இர.முருகன் கூட 'மய்யம்' இதழை மீண்டும் தொடங்குவது பற்றி சொல்லியிருக்கிறார். வாசு போன ஞாயிறு அலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி 'கவிதை அனுப்புங்க; எதுக்கும் மூணு கவிதை அனுப்புங்க; ஒன்று பிரசுரிக்க முயல்கிறேன்' என்றார். வடிவேலு சொல்ற மாதிரி அவரோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு.
நான் படித்த, ரசித்த இடுகைகளின் சுட்டி தருகிறேன். நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
திரு.செழியன் எழுதிய "தோற்றோடிப்போன குதிரை வீரன்" (தளவாய் சுந்தரம் வலைப்பூவில்). ஒரு சாமான்ய ஈழத் தமிழன் இலங்கை இராணுவத்தை நிதம் எதிர்கொள்ளும் நிலை பற்றி அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
பைத்தியக்காரன் சென்னை பற்றி எழுதிய இடுகை. நிறைய பேர் படித்திருப்பீர்கள். ..காதவர்கள் இங்கு படிக்கலாம். சில அபாரமான வரிகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
"சேவல் பண்ணைகளின் கழிவறைகளிலும், குளியலறைகளிலும், சாக்கடைகளிலும் பலகோடி உயிர்கள் தினமும் மரணிக்கின்றன."
"இடப்பெயர்ச்சி மூலம் ஆண் குறிகள் கண்களை அடைந்துவிட்டதால், 24 மணி நேரமும் எதிர்படும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்"
எவ்வளவு அனாயாசமாக நகரின் காம வறட்சியை சொல்கிறார்!
"அலறும் செல்ஃபோன்களில் கடன் வாங்கச் சொல்லி கிளிகள் கொஞ்சுவது போலவே கடனட்டைக்கு பணம் கட்டச் சொல்லி காண்டாமிருகங்கள் உறுமவும் செய்கின்றன." என்றும்
"திக்குத் தெரியாத காட்டில் வட்டமென தெரியாமல் மனிதர்கள் ஓடிக்க்க்க்க்கொண்டே இருக்கிறார்கள்" என்றும் அதகளம் செய்யும் சிவாவை என்ன செய்யலாம்! அவர் மொழியில் சொல்வதென்றால் 'முத்தம்' கொடுத்து விடலாம்.
சரி, இப்போதைக்கு இவ்வளவு போதும். என்னதான் எஸ்ரா சொன்னாலும், 'பதிவு ரொம்ப சூப்பர்' என்ற ரீதியில் அனைவரும் பின்னூட்டத்தில் மொய் எழுதி விட்டுச் செல்லவும்.
Wednesday, September 9, 2009
(எதைப்) பற்றியும் பற்றாமலும் ..... YSR, எஸ்ரா மற்றும் சில இடுகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
//வாரிசு உடனே முதல்வராக வேண்டும் என்று அடம் பிடித்த ஆந்திர எம்.எல்.ஏக்கள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கூழைக் கும்பிடு போட பழக்கமான இடத்திற்குச் செல்லவே எல்லோரும் விரும்புவார்கள். //
இது ‘நச்’ வரிகள்... இத மாதிரி ஆட்களை எதுவால் அடிப்பது.
//முதலில் கவிதை எழுதுங்கள். அப்புறம் பார்க்கலாம்னு பதில் வந்தது.//
ஹா....ஹா......
//'பதிவு ரொம்ப சூப்பர்' என்ற ரீதியில் அனைவரும் பின்னூட்டத்தில் மொய் எழுதி விட்டுச் செல்லவும்.//
பதிவு ரொம்ப சூப்பர்.....
நல்ல செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி அன்பரே...
பதிவு ரெம்ப சூப்பர்.
//ஆனால் ஊழல், மற்றும் துதிபாடல் போன்ற விஷயங்களில் பெரிய குறைபாடுகளை அவர்களிடத்தில் காண முடியாது என்பது என் எண்ணம்.//
உயிர்மையில் வெளிவந்த பிரபஞ்சன் கட்டுரையை வாசிக்கவும்.
மற்றபடி நல்ல எழுத்து நடை கைகூடி வந்திருக்கிறது. ஆரம்பித்தால் முடிவு வரை ஒரே சறுக். எங்கும் இடமோ வலமோ பார்க்கவிடாதபடிக்கு.
புதிய தலைமுறை பார்த்தேன். இன்னும் சில இதழ்கள் வந்த பின்புதான் அபிப்ராயம் சொல்ல முடியும். ஆனால் முதல் இதழ் கவரவில்லை.
மாலன், லக்கி, அதிஷா இன்னும் சில பதிவர்கள் இருந்தும் தரமான இதழாக வராதது ஏமாற்றமே. தாளின் தரம் இதழில் இல்லை. மாமே மச்சி தல போன்ற சொல்லாடல்கள் இது யாருக்கான பத்திரிக்கை எனச் சொன்னாலும் நல்ல பத்திரிக்கைக்கு ஏங்கும் தமிழ்ப் பரப்பைப் புரிந்து கொண்டார்களா தெரியவில்லை. அதிலும் விகடன் தற்பொழுது ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப உடனடியாக ஒரு நல்ல பத்திரிக்கை தேவை.
பதிவு ரொம்ப ரொம்ப சூப்பர்
:)
saringka thalaivaree
paakkureen.
//குசும்பனும் கார்ட்டூன் வடிவங்களில் நகைச்சுவை தருவதைக் குறிப்பிட வேண்டும்.//
குசும்பன் ஏதாவது கார்ட்டூன் வரைந்திருக்கிறாரா? அவர் வெறுமனே போட்டோ கமெண்டு போடுபவர். இப்படியெல்லாம் சும்மாவே ஏற்றி விட்டு ஏற்றி விட்டு மொக்கைகளை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிடாதீர்கள் சார்.
YSR விபத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய... costlier lesson :(
எஸ்.ரா. என் பதிவுக்கெல்லாம் வரதே இல்லையே... அப்பறம் எப்பிடி கவிதைகளைப் பத்தி அப்பிடி எழுதினாரு? :)
தயவு செய்து ஷாக்கிங் வீடியோவெல்லாம் போடாதீங்க. சோறு இறங்க மாட்டேங்குது.
அனுஜன்யா,
ரசித்துப் படித்தேன்.
//வாசு போன ஞாயிறு அலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி 'கவிதை அனுப்புங்க; எதுக்கும் மூணு கவிதை அனுப்புங்க; ஒன்று பிரசுரிக்க முயல்கிறேன்' என்றார். வடிவேலு சொல்ற மாதிரி அவரோட நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு//
நேர்மையெல்லாம் கிடையாது.
இடப்பிரச்னை மற்றும் எல்லோரையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வக் கோளாறுதான்.
கவிதைய சீக்கிரம் அனுப்புங்க.
000
‘உன்னதம்‘ இதழில் உங்கள் கவிதை வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
'பதிவு ரொம்ப சூப்பர்'
சீர்யஸா தான் தல.
பதிவு ரொம்ப சூப்பர் :)))))))))))))))))
கணிணியின் பல்வேறு வசதிகளை ஆக இளைய பதிவர் ஒருவர் அதிகம் உபயோகப்படுத்துகிறாரே. எழுத்தின் வண்ணங்கள் கொண்டு வித்தியாசம் காட்டுவது, சில வரிகளை மறைத்து வைத்து விளையாடுவது, படிக்கும்போதே பாடல் கேட்க வழி செய்தது, என சில யுத்திகளை அவரும் கையாண்டிருக்கிறார். நீங்கள் சொன்ன
குறும்படத்திலும் அவருக்கு பங்குண்டு.
தோழர்கள் எப்போதும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பாகள். என்ன அவரது கொள்கைதான் காலத்துக்கேற்ப இல்லை
பிரமாதமாக இருக்கு பதிவு. திட்டாதிங்க தல, உங்க கவிதைகளை விட பத்திகளை நான் அதிகம் ரசிக்கிறேன்..
//இங்கு நான் சொல்ல வருவது original work. ஜ்யோவ் உங்கள் முன்னால் தன் கவிதைகளை கம்பீரமாக காமிராவைப் பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்? அதற்காக அதீதன் செய்வதை எல்லாம் காணொளியில் தர வேண்டும் என்றெல்லாம் கேட்பது சாரி ரொம்ப ஓவர் :)//
அதீதமாக இருக்கும்.
எல்லாப் பத்திகளிலும் நகைச்சுவை ஊடுவது சுவை.
பதிவு ரெம்ப சூப்பர்.
ஏகப்பட்ட லிங்க் இருக்கு. பொறுமையா படிக்கிறேன் அதெல்லாம்.
நாங்கள்ளாம் எங்க சத்துக்கு எதோ எழுதிக் கிட்டு கிடக்கோம் சாமி . இன்னும்தூரம் நெம்பக் கெடக்குன்னு சொல்லுதாக
ராமகிஷ்ண ஐயா . அப்புடியே ஆவட்டும்
உங்கள் பேச்சை தட்ட விரும்பாமல்...
பதிவு சூப்பர்
நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல பதிவு...
(சொல்லிட்டோம்ல...)
இணையத்தில் எழுத வருபவர்கள்,
1. அதிக நேரம் கிடைப்பவர்கள்
2. குறைந்த நேரம் கிடைப்பவர்கள்
இவர்களில் அதிக நேரமும் கிடைத்து, விமர்சனமிடும் திறமை கொண்டவர்களால் மட்டுமே எஸ்ராவின் மதிப்பீடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது... குறைந்த நேரம் கொண்டவர்கள் விமர்சனத் தகுதி பெற்றிருந்தாலும்,... ஏதாவது சொல்ல வேண்டுமே என்று "நல்லாயிருக்குங்க" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்..
ஆக மொத்தம், அசட்டுத்தனமாகவோ, மலிவான சண்டைகளாகவோ, புகழ்ந்து கொள்ளவோ, கவிதையெனும் சுயபுலம்பல்களாகவோ, கிசுகிசுக்களாகவோ, மொக்கையாகவோ தமிழ் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.... இதை நீங்கள் மட்டுமல்ல, எஸ்ராவும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!!
அன்புடன்
ஆதவா
அலோ.. நான் முன்னாடி போட்டதெல்லாம் வெறும் விடியோ பதிவுகள் அவ்வளவுதான்.. இனிமேதான் குறும்படங்களே வரவிருக்கின்றன. ஜாக்கிரதை.! இணையத்தில் இயங்கினால் இதையெல்லாம் தாங்கித்தான் ஆவணும், கண்ணத்தொடச்சுக்கங்க.. இதுக்கெல்லாமா அழுவாங்க.. த்சு..த்சு.!
(பதிவுலகு குறித்த தேர்ந்த கட்டுரை போல இருந்தது.!) (கவனிக்கவும் 'போல'தான். ரொம்பதான் புகழ்ந்துகொண்டிருக்கிறோம் போல.. அதனால குறைச்சுக்கலாம்.. ஹிஹி)
நிஜமாகவே பதிவு சூப்பர்
பதிவு ரெம்ப சூப்பர் :)
நிறைய விசயங்களை ஒன்றாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
புகைப்படங்கள் பற்றிய பதிவுகளை இங்கு சொல்லியே ஆகவேண்டும். அவசியம் பாருங்கள் சார்.. நிறைய பேர் நல்லா எடுக்குறாய்ங்க.. அதிகம் கவனிக்கப்படாமல், அவர்களுக்கான வட்டத்துக்குள்ளேயே இருக்கிறார்கள். அப்புறம் Techபதிவர்கள். சற்றே குழப்பமான, அல்லது கஷ்டமான மேட்டர்களை எல்லாம் சுலபமாக தமிழில் எழுதும் தைரியத்துக்கே அவர்களைப் பாராட்டவேண்டும்.
செய்திகளை சேகரித்து எழுதியிருக்கிறீர்கள்.வழக்கம் போலவே
பதிவு தாறுமாறு..பதிவுலகை பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்க..!!!
ஆஹா.... ஓஹோ....!!
அருமையானா.... பதிவு......!!
வரிக்கு..... வரி..... அழகான கருத்துக்கள்....!!
நல்லாருக்கு கவிதை ...... ஓஓ... சாரி .... கதை.....!!
good post.
MY regret is that I have requested Maalan and aganazikai vaasudevan to publish their magazines in net edition format.
But they are still in 1980 and focus on print edition only
தூள்.
உங்கள் பதிவில் குறிப்பிடப்படும் அளவுக்கு தகுதியா எனத் தெரியாவிட்டாலும்,குறிப்பிட்டு ‘சுட்டி’ காட்டியமைக்கு நன்றி.
//ஜ்யோவ் உங்கள் முன்னால் தன் கவிதைகளை கம்பீரமாக காமிராவைப் பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்?//
ஜ்யோவ்ராமின் குரல் தெரியாது. அதே நேரம் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி, வானொலியில் கேட்பதற்கும், தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் யோசிக்க வேண்டும்.
இன்னுமொரு விஷயம், காணொளிகள், ஒலிவடிவம் ஆகியவை இணையப் பக்கம் திறப்பதின் வேகத்தைக் குறைப்பதால் நிறையப் பேர் விரும்பாமலும் இருக்கலாம். மேலும் தமிழ்ப் பதிவுகளை பதிபவர்கள், எழுதுபவர்களில் பாதிக்கும் மேல் அலுவலகத்தில் செய்பவர்கள் என நினைக்கிறேன்(என் நினைப்புதான்).அவர்கள் பதிவைப் படிப்பதை மட்டுமே விரும்புவார்கள்.
ஓவியங்களைப் பதிவிடும் சதங்கா, கபீரன்பன், கைவேலைப் பாடுகளைப் பதிவிடும் தர்ஷினி,ஃபைஸாகாதர் ஆகிய சிலரும் தமிழ்ப்பதிவுலகில் இருக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பதிவிடும் சிலரையும் பார்த்திருக்கிறேன்.
வெங்கிராஜா அவர்களின் கூற்றையும் ஆமோதிக்கிறேன்.
நிறைய விஷயங்கள் சொன்னாலும், ஒவ்வொன்றும் அருமை..
//.. கார்க்கி said...
கணிணியின் பல்வேறு வசதிகளை ஆக இளைய பதிவர் ஒருவர் அதிகம் உபயோகப்படுத்துகிறாரே. ..//
இது வேறயா..??!!
:-)
miles to go
ஓவியம், புகைப்படம், கார்ட்டூன்கள் எல்லாம் பத்திரிகைகளிலும் வருவதுதான். வீடியோ ஆடியோ வேறு விஷயம். சாருவின் கடைசி நாவலான காமரூபக் கதைகள் அப்படியானதுதான்.
ஹைப்பர் லின்க்களைப் பத்திகளுக்கு உபயோகிப்பவர்கள், புனைவுகளுக்கு அப்படிச் செய்வதில்லை (நான் ஒன்றிரண்டு முறை முயற்சித்திருக்கிறேன்). புனைவுக்குள் புனைவு, புனைவைப் பற்றிய புனைவு மாதிரியான உத்திகளுக்கு இது பயன்படும். காலக்குழப்பங்களையும் ஏற்படுத்தலாம் :)
பத்திரிகைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டுமென்றே பேஜ் அலைன்மெண்ட் செய்ய மாட்டேன் :)
இது மிகப் பெரிய வெளி. யோசித்தால் இன்னும் நிறைய செய்யலாம் என்றே தோன்றுகிறது.
"சரி, இப்போதைக்கு இவ்வளவு போதும். என்னதான் எஸ்ரா சொன்னாலும், 'பதிவு ரொம்ப சூப்பர்' என்ற ரீதியில் அனைவரும் பின்னூட்டத்தில் மொய் எழுதி விட்டுச் செல்லவும்."
இது பிடிச்சிருக்கு.. :)
இது செம டக்கர் பதிவு
:) நிறையா...இருக்கு.
நல்லா இருக்குங்க.
--வித்யா
really nice post.
தல உங்க கவிதைய விட இந்தமாதிரி எழுத்துநடை நல்லாயிருக்கு.
யானையின் கோபம் நான் எங்க ஊருல கோவில் திருவிழாவுல நேரடியாக பாத்திருக்கிறேன். கேரளாவில் இதுமாதிரி ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து நிகழ்வுகள் நடக்கும். கொடுமையான விஷயம். ஒரே ஒரு தடவை மதம்பிடித்த யானைமேல் இருந்த பாகன் ஒருவர் மதில் சுவர் மேல் குதித்து தப்பியதை பார்த்தேன். அந்த பாகனை மேலே வைத்துக்கொண்டு யானை காட்டிய அட்டகாசம், அப்பப்பா..... காணொளி கிடைச்சா பாருங்க.
பதிவு ரொம்ப ரொம்ப சூப்பர்
நல்ல தொகுப்பு.
//வருத்தமாக இருந்தாலும், மறுக்க முடியாமல் இருக்கு. அதே சமயம், நல்ல முயற்சிகளை இப்படி பாராட்டவும் செய்கிறார்: "சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி."//
கடந்த வார உலக திரைப்பட நிகழ்ச்சியின்போதும் இதைப் பற்றி மகிழ்வோடு நண்பர் சிவராம் அவர்களோடு பேசிக்கொண்டோம்.
you write in the most interesting way ... i like this column too :)
i have thought of using mouseover event effect to hide and show a word (probably a bad word) but never actually implemented it :)
>இதற்கு மேல் அரசியல் பேச >வேண்டாம் என்று ஏதோ ஒன்று >எச்சரிப்பதால்...
என்னைப் பொறுத்தவரை அரசியல் பேசுவது மக்களிடையே (பொதுவாக இளைஞர், பெண்களிடையே) ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். அரசியல் சாக்கடை என்று விலகுவதால் தான், சாக்கடையில் தண்ணீர் பெருகிக் கொண்டே இருக்கிறது. கிராம மக்களை விட படித்த (குறிப்பாக மேட்ட்ரிகுலேசன்) இளைஞர்களிடம் சுத்தமாக அரசியல் விழிப்புணர்வு இல்லை. எம்.எல.ஏ, எம்.பி வேறுபாடு பெரும்பாலானோற்கு தெரிவதில்லை.
ரூபாய்க்கு ஓட்டை விற்பவர்களுக்கு வெற்றி பெற்றவர் எடுக்கும் இலாபத்தைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? முதலில் மாற வேண்டியது நாம் தான். மக்களிடம் ஒழுக்கம் இருந்தால் அவர்தம் தலைவர்களிடமும் ஒழுக்கம் இருக்கும்.
-ஆனந்த்.
//சேவல் பண்ணைகளின் கழிவறைகளிலும், குளியலறைகளிலும், சாக்கடைகளிலும் பலகோடி உயிர்கள் தினமும் மரணிக்கின்றன."
"இடப்பெயர்ச்சி மூலம் ஆண் குறிகள் கண்களை அடைந்துவிட்டதால், 24 மணி நேரமும் எதிர்படும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்"
"திக்குத் தெரியாத காட்டில் வட்டமென தெரியாமல் மனிதர்கள் ஓடிக்க்க்க்க்கொண்டே இருக்கிறார்கள்"
ரசித்துப் படித்தேன்.நன்றி அன்பரே...
@ பாலாஜி
நன்றி பாலாஜி.
@ வேலன்
பிரபஞ்சன் கட்டுரை படித்திருந்தேன். வளர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதும் தெரியும். நான் சொல்லவந்தது பெரிய அளவில், அத்தகைய குற்றச் சாட்டுகள் கேள்விப் பட்டதில்லை என்று. மேற்கு வங்காளத்தில் இத்தனை நாட்கள் ஆட்சி செய்தாலும்,மற்ற மாநிலங்கள்/கட்சிகள் ஆட்சியோடு ஒப்பிட்டால் தோழர்கள் பரவாயில்லை.
புதிய தலைமுறை - என்ன வேலன்? ரவிசங்கர் கிழித்து விட்டார். இப்ப நீங்களும் :)
மாலன் வெகுநாட்கள் முன் நடத்திய 'திசைகள்' அந்தக் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது. பார்ப்போம்.
மற்றபடி நன்றி உங்க பாராட்டுக்கு.
@ அப்துல்
டேய், நல்லா இரு. நன்றி அப்துல் :)
@ மண்குதிரை
நன்றி மாடசாமி :)
@ அனானி
சும்மா எழுத்து மட்டும் இல்லாமல் வேறு பாணியிலும் பதிவை பயன்படுத்தும் நோக்கில் பார்க்கையில், குசும்பன் வித்தியாசமாக (மற்றவர்களிலிருந்து) செய்வதைச் சொன்னேன். பல பத்திரிகைகளே நிறைய போட்டோ கமெண்ட் போடுவதையும் நாம் பார்க்கிறோமே.
அது சரி, உங்களுக்கு என்ன குசும்பன் மீது கோவம்? பதிவுலகில் மனச் சோர்வைத் தணிக்கும் வெகு சிலரில் முக்கியமானவர் அவர்.
@ மஹேஷ்
உன் கவிதைகளை (???) எஸ்ரா .....என்ன கொடும இது சரவணா?
சரி சரி, இனிமே அந்த வீடியோக்கள போடல (வேற போடலாம் ) :)
நன்றி மஹேஷ்
@ பொன்.வாசுதேவன்
வாசு, தெரியும் - ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன். கவிதை: கைவசம் ஒண்ணும் இல்லை. கற்பனை வறட்சி. ஏதாவது தோன்றினால், அனுப்புகிறேன்.
நன்றி வாசு. உன்னதம் தகவலுக்கும் நன்றி. நான் இன்னும் பார்க்கவில்லை :(.
@ அசோக்
வாங்க கவிஞர். நெசமாவா? சரி. நன்றி அசோக்.
@ ஸ்ரீமதி
வாங்கம்மா. ஏதோ பெரிய மனசு பண்ணி மூணு வார்த்தைகள் டைப் பண்ணியதற்கு.
நன்றி ஸ்ரீ :)))
@ கார்க்கி
ஆமாம், நீ சொல்றது வாஸ்தவம்தான். ஆனாலும், யூத் மற்றும் கணினி என்ற இரண்டு பலம் இருந்தும், நீ செய்யும் புதுமைகள் எனக்குப் போதவில்லை. இன்னும் நிறைய செய்யலாம் கார்க்கி.
தோழர்கள் : :))). உண்மைதான்.
டேய், கடைசியில் ஒரு சிக்சர் ? :(((
நன்றி கார்க்கி
@ நர்சிம்
நன்றி நர்சிம்
@ சிவா
நன்றி சிவா. பொறுமையாகப் படிக்கலாம் :)
@ நேசமித்ரன்
நேசா, அவர் சொன்னது என்னை மாதிரி ஆட்களை. You are rocking man.
நன்றி நேசா.
@ தண்டோரா
வாங்க கவிஞரே. கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. பின்னூட்டம் போட முடியாததற்கு நேரம் மட்டுமே காரணம்.
நன்றி மணி.
@ உலவு
நன்றி
@ ஆதவா
நீங்க சொல்வதும் சரிதான். ஆனா, எஸ்ரா உங்கள மாதிரி படைப்பாளிகளைப் பாராட்டத் தான் செய்கிறார்.
நன்றி ஆதவா.
@ ஆதி
என்னது வீடியோ பதிவுகளா? சரி சரி. :)
நன்றி ஆதி
@ கேபிள்
நன்றி சங்கர்ஜி.
@ காந்தி
நன்றி காந்தி
@ வால்பையன்
நன்றி குரு
@ வெங்கிராஜா
கரெக்ட் வெங்கி. புகைப்படங்கள், ஓவியங்கள், தொழில் நுட்பம் பற்றி என்று அவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். என்ன! நான் இன்னும் அதிகம் பரிச்சயம் செய்துகொள்ளாத தளங்கள் அவை. நன்றி வெங்கி. You are certainly different. Kudos.
@ செய்யது
நன்றி செய்யது. எல்லாருக்கும் தெரிந்ததுதான். நான் சொன்னேன்.
@ மேடி
டேய், அடுங்குடா (ப்ளீஸ்). நன்றி மேடி.
@ ராம்ஜி
Yeah, even I thought so. But, they may have their constraints. May be they will introduce net version little later. Thx Ramji.
@ பிரியமுடன் வசந்த்
வாங்க வசந்த். First time? நன்றி வசந்த்.
அனுஜன்யா
@ தமிழ்ப்பறவை
பரணி, நீங்க சொல்வது எல்லாம் ரொம்ப சரி. என்ன, நிறைய பேருக்குத் தெரியாமல் போகிறது.
நன்றி பரணி.
@ பட்டிக்காட்டான்
கார்க்கி - அப்படிப் போடுங்க ப.கா.
நன்றி தல
@ சிவக்குமரன்
என்னை சொல்லுறீங்களா பாஸ்?
நன்றி சிவா
@ ஜ்யோவ்
வாங்க குருஜி.
//புனைவுக்குள் புனைவு, புனைவைப் பற்றிய புனைவு மாதிரியான உத்திகளுக்கு இது பயன்படும். காலக்குழப்பங்களையும் ஏற்படுத்தலாம் :)//
நல்ல ஐடியாவா இருக்கே!
நன்றி ஜ்யோவ்.
@ கிருத்திகா
ரொம்ப குறும்புதான் உங்களுக்கு :).
நன்றி கிருத்திகா
@ நையாண்டி நைனா
வாங்க நைனா. நன்றி.
@ விதூஷ்
நன்றி வித்யா
@ நாடோடி இலக்கியன்
நன்றி இலக்கியன்
@ நாஞ்சில் நாதம்
கவிதை எழுதாத என்கிறீங்க :)
அந்த யானை வீடியோ பயங்கரம். என்னமோ போங்க :(
நன்றி நாதம்
@ உழவன்
ம்ம், நடத்துங்க தல. இன்று பட்டறையில் கலந்துக்குறீங்களா?
நன்றி உழவன்
@ நந்தா
Thx for your nice words. Yeah, Nundhaa, you can use all that technik. We could understand your poems better :)
@ பிரபு
செய்கிறோம் சார்.
@ மருதவளி
வாங்க ஆனந்த். விழிப்புணர்வு ஓரளவு அவசியம்தான் - ஆனால் கல்வி கெடாத அளவு.
நன்றி ஆனந்த்.
@ விநாயகமுருகன்
நன்றி வி.மு.
அனுஜன்யா
பதிவு சூப்பர் :) !
@ அமித்து அம்மா
நன்றி AA (ஹி ஹி லேட்டா சொல்றேன்ல? )
அனுஜன்யா
Post a Comment