Thursday, December 10, 2009

சென்னை - சில தினங்கள் சில குறிப்புகள் – Part 2


இரண்டு நாட்கள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சென்னை. இந்த முறை மின்சார ரயிலில் பழவந்தாங்கல் ஸ்டேஷனில் ஏறினேன். பல வருடங்களுக்குப் பின் மின்சார ரயில் பயணம். அப்போது மீட்டர் கேஜ். தற்போது பிராட் கேஜ் ஆகியிருக்கிறது. ஆனால் இருவர் அமரும்படியான இருக்கைகள் தான். (மும்பையில் மூவர் அமரலாம்). சில காலேஜ் இளைஞர்கள் / யுவதிகள் செல் போனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான முதியவருக்கு (நான் இல்லை), உட்கார தன் இடத்தை ஒருவர் (இதுவும் நான் இல்லை) கொடுத்தார். ஆலந்தூர் மதி தியேட்டர் கட்டிடம் இன்னமும் இருக்கிறது. படங்கள் திரையிடுவதில்லை என்று நினைக்கிறேன். ஆதம்பாக்கம் ஜனோபகார சாஸ்வத நிதி உயர்நிலைப் பள்ளி அவசரத்தில் ஓடி மறைந்தது. நீலக்கலர் ரிப்பனுடன் பள்ளி செல்லும் அக்காவின் தோழிகளும் நினைவில் வந்து சென்றார்கள்.



கிண்டி வந்தபோது குதிரை பந்தயத்தில் மூழ்கிக் களித்து, சிறிது வென்று, பெரிதாகத் தோற்று, மொத்த வாழ்வையும் அதில் செலவிட்ட சிலர் நினைவுக்கு வந்தார்கள். அடையாற்றில் மழைத் தண்ணீர் வடிந்து, பழையபடி சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. சைதாப்பேட்டை கோவில் கோபுரம் தற்போது உயரம், அகலம் எல்லாமே குறைந்து குறுகிவிட்டது போல் தோன்றியது. மற்றபடி பெரிய மாற்றமில்லாத கடைகள். ஏகப்பட்ட சப்-வேக்கள். எல்லா சுவர்களிலும் முன்பு பிரதானமாக இருந்த 'படை, சொறி, சிரங்குக்கு ...ஜாலிம் லோஷன் ஜாலிம் லோஷன்' என்று வாக்கியங்களைக் காணோம். போத்திஸ் மற்றும் ஜெயச்சந்திரன்கள் எல்லாச் சுவற்றையும் ஆக்கிரமித்து இருந்ததில் இந்தியா (ஓரளவாவது) மிளிர்கிறது என்று புரிந்தது.


முன்பெல்லாம் பெரிதாகத் தெரிந்த மேம்பாலங்கள் சிறிதாகி விட்டன. பூங்காவில் இறங்கினேன். பூங்கா என்றதும் பிக்னிக் ஸ்பாட் என்று எண்ண வேண்டாம். பூங்கா ரயில் நிலையம். எதேற்சையாகக் கண்ணில் வி.எல்.ஆர். கான்டீன் தென்பட்டது. நிச்சயமாக ஹைஜீனிக் இல்லை என்று தெரிந்தாலும், யாருக்குத் தான் பழைய நினைவுகளுக்குள் செல்ல ஆசை இருக்காது? ஒரு கிச்சடி, ஒரு தோசை என்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் போட்டு கொடுத்தார்கள். முன்பு அலுமினியத் தட்டின் மீது மந்தார இலையில் வரும். இன்னமும் மாறாத அலுமினிய டோக்கன். காலேஜ் தினங்களில் பழைய பேப்பர் போட்டு, காய்கறி/மளிகை சாமான்கள் வாங்கி, என்று சகல விதங்களிலும் கமிஷன் அடித்த பணம் இந்த அலுமினிய டோக்கன் தரும் கிச்சடி, போண்டா, பஜ்ஜி வகையறாக்களில் செலவழிந்த அற்புத நாட்கள் ஞாபகம் வந்தன.


திரும்பி வருகையில், இரவு பத்து மணிக்கு மேல் நண்பனுடன் மோட்டார் பைக்கில் சவாரி. எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை என்று மெல்லிய காற்றில் வளைய வந்த சவாரியில், நண்பனுக்கு பதில் நண்பி இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்னும் துர் எண்ணமும் வந்தது.

சகோதரி வீட்டருகில் புது கட்டிடம் ஒன்று கட்டப்படுகிறது. அங்கு ஒரு சைக்கிள். வாடகை சைக்கிள். 'மாலதி மிதிவண்டி நிலையம்' என்று செயின் பாக்ஸ் மேல் எழுதியிருந்தது. பின்புறம் மூன்று என்று நம்பர் பெரிதாகத் தெரிந்தது. யாரோ ஒரு உப மேஸ்திரியின் வண்டியாக இருக்க வேண்டும். இப்போதைய ரேஸ் பாசாங்குகள் இல்லாமல் சமர்த்தாக, ஒரு அமைதியான குதிரை போல நின்று கொண்டிருந்தது. முன், பின் பக்க சக்கரங்களில் பல வண்ண குஞ்சலங்கள். மணியில் விரல் அழுத்தும் இடத்திற்கு பிளாஸ்டிக் உறை. கேட்டிருந்தால் ஒரு ரவுண்டு சவாரி அனுமதித்திருப்பார்கள். என்னவோ ஒன்று தயக்கம் காட்டி, ஸ்டாண்ட் போட்ட வாகிலேயே பெடலைச் சுற்றினேன். அதிலேயே தெரிந்தது ஐம்பது கி.மீ. ஓட்டலாம் - பள்ளித் தேர்வின் நிச்சய ஃபெயிலை ஜஸ்டு பாசாகவாவது மாற்றும் சக்தி வாய்ந்த திருவேற்காடு அம்மனை அப்படி எத்தனை முறை தரிசனம் செஞ்சிருக்கேன்.




அடுத்த மால் நாளை ச்சே இப்பவே குழறுகிறது இல்ல. அடுத்த நாள் மாலை அசோக் நகர் செல்ல வேண்டியிருந்தது. இந்த 'ஏன்? எதற்கு?' எல்லாம் சுஜாதாவிடம் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். 'எப்படி?' என்று வேண்டுமானால் கேட்கலாம். இந்த முறை, பேருந்தில் பயணம். அது என்னவோ தெரியவில்லை. இந்த முறை சென்னையில் என் மூளை விபரீதக் கோட்பாடுகளில் இயங்கிக் கொண்டிருந்தது. முதலில் நங்கநல்லூர் மார்க்கெட் சென்று பேருந்தில் ஏறினேன். நிற்க இடம் கிடைத்தது. ஒரு நெருக்கமான திருப்பத்தில் திடீரென்று வந்த ஸ்கூட்டி பேருந்தின் பின் சக்கரத்தில் உராய்ந்து விழுந்தாலும், அந்தப் பெண் இலாவகமாக குதித்து விட்டாள். பேருந்து ஓட்டுனரின் சடன் ப்ரேக் பெரிதும் காப்பாற்றியது. ஒருவர் சீட்டை காலி செய்தால், மூவர் பாய்ந்து வந்து இடம் பிடிக்கும் வழக்கம் இன்னும் மாறவில்லை என்பது திருப்தி அளித்தது. ஆஷர்கானா (என்ன பெயர் இது? தலப் புராணம் யாருக்குத் தெரியும்?) நிறுத்தத்தில் (கூகிளில் டைப் செய்யும்போது எத்தனை ththth டைப் செய்ய வேண்டியிருக்கிறது!) இறங்கி அசோக் நகர் நோக்கி செல்லும் பேருந்துக்குக் காத்திருந்தேன்.


கொஞ்சம் குழப்பமாக இருந்ததால், பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன். அவர் 'நான் ஏறும் பஸ்ஸில் ஏறுங்க. கவலை வேண்டாம்' என்றார். கூட்டமாக வந்த பேருந்தில் முண்டியடித்து ஏறினோம். முன்பக்கம் ஏறி விட்டதால், நடத்துனர் தூரத்தில் பின்பக்கம் இருப்பது இலேசாகக் கூட தெரியவில்லை. அவர் வருவார். டிக்கெட் வாங்கலாம் என்று நானும் சும்மா இருந்தேன். கொஞ்ச நேரம் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு, பக்கத்தில் இருந்தவர், 'சார், கண்டக்டர் இங்க வரமாட்டாரு. பணத்த கொடுத்து விடுங்க. டிக்கெட் வந்து சேரும்' என்று அறிவுரை தர, நான் பக்கத்து பையன் கிட்ட கொடுத்து, அது ஆளாளுக்கு கை மாறிச் சென்று, மீண்டும் மூன்று நிமிடங்களில் பயணப்பட்டு என் கைகளில் டிக்கட்டாக மாறியிருந்தது. நல்ல சிஸ்டம். மீண்டும் அந்தக் காலத்தில் பெண்கள் மூலம் டிக்கெட் வாங்கியது, வாங்கிக் கட்டிக் கொண்டது, பிறகு கட்டிக்கொண்டு வாங்கியது என்று சகலமும் flash back ஆகியது.


ஒரு வழியாக அசோக் பில்லரில் இறங்கி, நண்பருடன் செலவழித்த மூன்று மணி நேரங்கள் அருமை. அவர் ஒரு எழுத்தாளர். ஏறக்குறைய என்னளவு பர்சனாலிடி கூட. அவர் புது புத்தகம் ஒன்று வெளி வருவதாகச் சொன்னார். மகிழ்ச்சி. ரொம்ப நாட்களாக நாலு தட்டு தட்ட வேண்டும் என்று குறி வைத்திருந்த பட்சியைக் கூப்பிட்டேன். அது 'சாரி சகா' என்று இலாவகமாக பறந்து விட்டது. திரும்ப வருகையில் ராயல் சவாரி. ஏ.சி. குளுமையில், ஜேசுதாஸ் குரலில், ஹோண்டா சிட்டி முன் இருக்கையில் சுகமான பிரயாணம். அந்த நேரத்தில் யாராவது கம்ப இராமாயணம் பற்றிப் பேசினால் கொட்டாவி வந்தால் தப்பா பாஸ்?


****************************************************************************

டெயில் பீஸ்:


நர்சிம்முடன் பேசிக் கொண்டிருக்கையில் ஆட்டோ விஷயத்தில் இரண்டு சுவாரஸ்யமான நிகிழ்வுகளைப் பற்றி கூறினார்.


நர்சிம் சென்ட்ரல் ரயில் நிலையம் வாயிலில்: 'ஆட்டோ, எக்மோர் போகணும்'


ஆட்டோ ஓட்டுனர் : 'ஆங், போவலாம்; அறுவது ரூவா ஆகும்'


நர்சிம்: 'அறுவதா? ரொம்ப அதிகமா இருக்கே. மீட்டர் போடுவியா?'


ஆ.ஓ: 'மீட்டரா? சரி போடுறேன்'


எக்மோர் வருகிறது. மீட்டர் இருபது என்கிறது. நர்சிம் இருபது ரூபாயை நீட்டுகிறார்.


ஆ.ஓ: 'இன்னாதிது?'


நர்சிம் : 'ஆட்டோ சார்ஜ் பா'


ஆ.ஓ: 'ஹலோ,நீ மீட்டர் போட சொன்ன. நீ பாத்ததில்லங்காட்டியும்னு நா போட்டேன்ல. நா அறுவது சொன்னேன். அப்ப நீயும் அதக் கேளு. மருவாதையா..அறுவது எடு'


இன்னொரு தருணம்.


நர்சிம் : 'ஆட்டோ, உத்தமர் காந்தி ரோடு போகணும்'


ஆ.ஓ. : 'காந்தி உத்தமர்னு உனிக்கி எப்பிடி தெர்யும்? சவாரி வராதுபா.'


அடுத்த ஆட்டோ.


நர்சிம் : 'ஹலோ, காந்தி ரோடு போகணும்'


ஆ.ஓ. : 'ஏன்யா, படிச்சா ஆளுதான. வெறும காந்தினா? உத்தமர் காந்தி ரோடா, மகாத்மா காந்தி ரோடானு கிலியரா சொல்தேவல?'


****************************************************************************

மகிழ்ச்சியான செய்தி: இதுக்கு மேல 'சென்னை தினங்கள்' பற்றி ஒன்றும் இல்லை. ரிலாக்ஸ்.

52 comments:

மகேஷ் : ரசிகன் said...

என்ஜாய் பண்ணீங்களா?

அந்த எக்மோர் ஆட்டோ. பாவம் நர்சிம். :(

Ashok D said...

அதுக்குள்ள செக்ண்ட் பார்டா? அலுவலத்தில் வேலை பளு அதிகம் என்பது தெரிகிறது. படிச்சுட்டு வர்றேன் குருவே.

Anonymous said...

//பணத்த கொடுத்து விடுங்க. டிக்கெட் வந்து சேரும்//

சென்னைல முதல்முதல்ல பஸ்ல பிரயாணம் பண்ணினப்போ இப்படித்தான் என் தோழி சொன்னள். டிக்கெட் கைக்கு வந்து சேர்ற வரை பக்பக்னு இருக்கும். காசை யாராச்சும் அபேஸ் பண்ணீட்டா??

ஆயில்யன் said...

//வி.எல்.ஆர். கான்டீன் தென்பட்டது. நிச்சயமாக ஹைஜீனிக் இல்லை என்று தெரிந்தாலும், யாருக்குத் தான் பழைய நினைவுகளுக்குள் செல்ல ஆசை இருக்காது? ///


காபி குடிச்சீங்களா இல்லியா ! :)

என்னோட ஃபேவரைட் காபிதான்!

ஆயில்யன் said...

//நண்பனுக்கு பதில் நண்பி இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்னும் துர் எண்ணமும் வந்தது.//


நண்பன் படித்தால் அவருக்கு கண்டிப்பாய் கிர்ர்ர்ர்ர் எண்ணம் வரும்! :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வேற வழியில்லை, டூ வீலரில் உங்களைக் கூட்டிச் சென்ற அந்த நண்பரைக் கொலை செய்யச் சொல்ல வேண்டியதுதான் :)

அப்புறம், மும்பையில் மட்டுமல்ல, இங்கேயும் மூன்று மூன்று பேர்கள் உட்காரலாம் பாஸ்.

sathishsangkavi.blogspot.com said...

சென்னைய நல்லா என்ஜாய் பண்ணிஇருப்பீங்க போல...........

ஆட்டோ சம்பவம் நன்றாக இருந்தது................

Ashok D said...

கூர்ந்த அவதானிப்பு,
சுவாரஸ்யம், சுவை.

//ஒரு வயதான முதியவருக்கு (நான் இல்லை), உட்கார தன் இடத்தை ஒருவர் (இதுவும் நான் இல்லை)//

//மூழ்கிக் களித்து, சிறிது வென்று, பெரிதாகத் தோற்று, மொத்த வாழ்வையும்//

//துர் எண்ணமும் //
அது துர் எண்ணமா???
//ththth டைப் செய்ய// :)

//பெண்கள் மூலம் டிக்கெட் வாங்கியது, வாங்கிக் கட்டிக் கொண்டது, பிறகு கட்டிக்கொண்டு வாங்கியது //:)

//கம்ப இராமாயணம் பற்றிப் பேசினால் கொட்டாவி வந்தால் தப்பா பாஸ்?// :))
பதிவு நெடுக சுவாரஸ்யங்களை தூவி சென்றுள்ளீர்.


(கவுனிச்சிங்கல இந்த பதிவுளையும் என் பேரு 2இடத்தல... :)

பெசொவி said...

//நண்பனுக்கு பதில் நண்பி இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்னும் துர் எண்ணமும் வந்தது.//

இந்த எண்ணம் அந்த நண்பருக்கும் இருந்துதாமே?

கார்க்கிபவா said...

அப்ப என் கணிப்பு சரிதான். நல்ல வேளை எஸ்கேப் ஆயாச்சு :)))

செம போஸ்ட்டுன்னா.. சுஜாதா, டிக்கெட், flashback...


வேட்டைக்காரான் டிரெயிலர் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு பதிவு :))))

Unknown said...

கமெண்ட் போட முடியாது. கோவம் அண்ணா உங்க மேல.

butterfly Surya said...

அருமையான பயண பதிவு.

நகைச்சுவை துள்ளலுடன் சூப்பர் நடை. ரசித்தேன்.

நண்பா. நாங்களும் சென்னையில தான் இருக்கோம்.

Cable சங்கர் said...

வழக்கம் போல அருமையான வழுக்கும் நடையில்.

எறும்பு said...

//வேட்டைக்காரான் டிரெயிலர் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு பதிவு :))))///

கார்கி, இதுக்கு பேசாம சிரிப்பான் மட்டும் போட்ருகலாம்...
;-))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பெண்கள் மூலம் டிக்கெட் வாங்கியது, வாங்கிக் கட்டிக் கொண்டது, பிறகு கட்டிக்கொண்டு வாங்கியது என்று சகலமும் flash back ஆகியது.

நிறைய flash back இருக்கும் போல :))

பதிவு சுவாரஸ்யம்

தீபா said...

நல்லாருக்கு வழக்கம் போல :-):-)
அடுத்தக் கட்டுரைக்கு வெயிட்டீஸ்

உண்மைத்தமிழன் said...

பில்லர்வரைக்கும் வந்திட்டு என்னை பார்க்காம போனா எப்படி?

போன் பண்ணியிருந்தா வந்திருப்பனே..?

உண்மைத்தமிழன் said...

சுந்தர் சொல்ற மாதிரி கொலையெல்லாம் செஞ்சிராதீங்க..

இப்பல்லாம் அவர் அடிக்கடி இப்படித்தான் யாரை பார்த்தாலும் "அடி", "கொல்லு"ன்னுதான் சொல்லிக்கிட்டிருக்காரு.. பார்த்துக்குங்க..!

கே.என்.சிவராமன் said...

//திரும்பி வருகையில், இரவு பத்து மணிக்கு மேல் நண்பனுடன் மோட்டார் பைக்கில் சவாரி. எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை என்று மெல்லிய காற்றில் வளைய வந்த சவாரியில், நண்பனுக்கு பதில் நண்பி இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என்னும் துர் எண்ணமும் வந்தது.//

:( :( :(

உம்ம பேச்சு கா.

தோழமையுடன்
(தோழியுடன் இல்ல)
பைத்தியக்காரன்

கார்க்கிபவா said...

//போன் பண்ணியிருந்தா வந்திருப்பனே.//

அதனாலத்தான் பண்ண்லையோ என்னவோ சார்

// எறும்பு said...
//வேட்டைக்காரான் டிரெயிலர் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு பதிவு :))))///

கார்கி, இதுக்கு பேசாம சிரிப்பான் மட்டும் போட்ருகலாம்...
;-))))//

அந்த மருந்த போட்டு இந்த எறும்ப கொல்லுங்கப்பா :)))). எங்க ஆளு படம்னாலே ஹிட். அதான் எறும்பு பயப்படுது போல

// ஸ்ரீமதி said...
கமெண்ட் போட முடியாது. கோவம் அண்ணா உங்க மே//

ஏம்மா? என்னை பார்க்காம எனக்கு நல்லது செஞ்சத போல உனக்கு பண்ணலையேன்னு கோவமா?

ஆவ்வ்.. நெக்ஸ்ட்.. யாரு யாரு? வாங்க

தராசு said...

ஜூப்பர்

Vijayashankar said...

சென்னையில் சிறிது காலம் தான் நான் இருந்திருந்தாலும் ( நாலு வருஷம் ), என்னை மீண்டும் அழைத்து சென்ற எழுத்து உங்களது.

:-)

மெயில் போட்டால், ரிப்ளை எல்லாம் இல்லையா?

நேசமித்ரன் said...

கலக்கல் அனு

என்ன ஒரு நடை சாமி !!!!!

மாதேவி said...

சென்னையைப் பார்த்து விட்டேன். ஆட்டோ சுவாரஸ்யம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சுவாரசியமான பதிவு. சூப்பர்.

RaGhaV said...

பயணக்குறிப்புகள் அருமை.. :-)

டெயில் பீஸ் அட்டகாசம்.. :-)

thamizhparavai said...

விறுவிறுப்பான பயணம்...
கார்க்கியைச் சந்திக்கவில்லையா...?
இன்னும் பதிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்...

@கார்க்கி...
வரவர பதிவுகளை விட பின்னூட்டங்களில் பளிச்...(உதா: ஹிட் மேட்டர்)

அத்திரி said...

மலரும் நினைவுகள்???

வாசகன் said...

{து 'சாரி சகா' என்று இலாவகமாக பறந்து விட்டது}

அது இலாவகம் இல்லை,இலாகவம் அப்படின்னு பல தமிழ் வாத்தியார்கள் சொல்லிகிட்டு இருக்காங்கண்ணா...

Unknown said...

நல்லா விறுவிறுப்பா இருக்குதுங்க.

மணிஜி said...

ஒரு பிரபல பதிவர் உம்முடன் தொலைபேசியதை குறிப்பிடவில்லை. அப்புறம் தோழி முன்னா..பின்னா என்பதையும் நயவஞ்சகமாக மறைத்துவிட்டீர்கள்..

குப்பன்.யாஹூ said...

chennai has imporved and grown a lot. You should have gone to OMR, (accenture, eserv, aviva), perunkudi, Taramanai, Porur road (DLF), Olympiya

ஜெட்லி... said...

கடைசி ஆட்டோ மேட்டர் செம...

K.R.அதியமான் said...

////அவர் ஒரு எழுத்தாளர். ஏறக்குறைய என்னளவு பர்சனாலிடி கூட. ////

இருக்கும் இருக்கும்.

:)))))

Unknown said...

//.. பெண்கள் மூலம் டிக்கெட் வாங்கியது, வாங்கிக் கட்டிக் கொண்டது, பிறகு கட்டிக்கொண்டு வாங்கியது என்று சகலமும் flash back ஆகியது. ..//

அருமை..

//.. அந்த நேரத்தில் யாராவது கம்ப இராமாயணம் பற்றிப் பேசினால் கொட்டாவி வந்தால் தப்பா ..//

அங்கேயுமா..??

//.. //வேட்டைக்காரான் டிரெயிலர் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு பதிவு :))))///

கார்கி, இதுக்கு பேசாம சிரிப்பான் மட்டும் போட்ருகலாம்...//

:-))))

கார்க்கிபவா said...

//தமிழ்ப்பறவை said...
விறுவிறுப்பான பயணம்...
கார்க்கியைச் சந்திக்கவில்லையா...?
இன்னும் பதிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.//

யாரங்கே? யாரங்கே? யாரடா அங்கே?? உடனே இரண்டு ஷாட் டக்கீலா கொண்டு வரவும்

//@கார்க்கி...
வரவர பதிவுகளை விட பின்னூட்டங்களில் பளிச்...(உதா: ஹிட் மேட்ட//

அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!!!!

நர்சிம் said...

மிக அற்புதமான பயணக் கட்டுரை..வாங்கிக் கட்டிக் கொண்டது டாப்..

//திரும்ப வருகையில் ராயல் சவாரி. ஏ.சி. குளுமையில், ஜேசுதாஸ் குரலில், ஹோண்டா சிட்டி முன் இருக்கையில் சுகமான பிரயாணம். அந்த நேரத்தில் யாராவது கம்ப இராமாயணம் பற்றிப் பேசினால் கொட்டாவி வந்தால் தப்பா பாஸ்?//

யாருங்க அந்தாளு லூசுப்பயலா..

மிக மிக மிக மிக ரசித்தப் பதிவு

உங்கள் கவிதை பதிவுகளைப் போலவே...

என்று எழுதினால் இங்கே உங்களுக்கு மகிழ்ச்சி வருமா, கோபம் வருமா?


கலக்கல் பதிவு..

creativemani said...

வழக்கம் போல அருமையான பதிவு...
பின்னறீங்க அனுஜன்யா..

"உழவன்" "Uzhavan" said...

 //ஒரு கிச்சடி, ஒரு தோசை என்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் போட்டு கொடுத்தார்கள். முன்பு அலுமினியத் தட்டின் மீது மந்தார இலையில் வரும்//
 
ஒன்னு விடல போல; So enjoyed well.

Anonymous said...

:-) - enjoyed reading this

Srini

Thamira said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
நிறைய flash back இருக்கும் போல //

வயசானாலே இந்த மாதிரி நிறைய இருக்கும்னு தெரியாதா மேடம்.?

Anonymous said...

கவிதைகள் எழுதறதை விட இதுமாதிரி இடுகைகள் எழுதினா உங்களுக்கு என்னவாம் ?

என் பேரு மட்டும் சொல்ல மாட்டேன் , சொன்ன ரொம்ப திட்டுறாங்க.
நீங்கள் செய்யும் சுய விமர்சனம் எல்லாம் அற்புதமானது அதில் எதுவும் சுய எள்ளல் இல்லை. மணி அண்ணா சும்மா ஏத்தி விடுறார்
நல்ல அனானி

கமலேஷ் said...

சென்னைய நல்லா என்ஜாய் பண்ணிஇருப்பீங்க போல...........

ஆட்டோ சம்பவம் நன்றாக இருந்தது...............

anujanya said...

@ மஹேஷ்

நிச்சயமா மஹேஷ்.

நர்சிம் :))

நன்றி மஹேஷ்.


@ அசோக்

யோவ், சுறுசுறுப்பா எழுதினா இப்படி ஒரு நக்கலா :))

நன்றி அசோக்

@ சின்ன அம்மிணி

:))) சரிதான்.

நன்றி CA

@ ஆயில்யன்

காபி குடிக்கவில்லை. ஆனால் நீங்க சொல்றது சரிதான்.

நண்பர் - கிர்ர்ர் வந்துவிட்டதே :))

ரொம்ப நன்றி ஆயில்ஸ்.

@ ஜ்யோவ்

ஏன் இந்தக் கொலவெறி :)

தாம்பரம்-கடற்கரை அப்படி இருக்கிரதோ? அல்லது அன்று நான் சென்ற பெட்டி அப்படி இருந்ததோ என்னமோ!

நன்றி ஜ்யோவ்.

@ சங்கவி

ஆமாம் பாஸ்.

நன்றி.

@ அசோக் (மீண்டும்)

உனக்கும் நல்ல அவதானிப்பு தான் பிரதர் :)

’அசோக்’ இல்லாமல் ஹிட்ஸ் வர மாட்டேங்குது :)

நன்றி அசோக்

@ பெ.சொ.வி.

கிர்ர்ர்ர்.

நன்றி பாஸ்.

@ கார்க்கி

தப்பிச்சுட்ட களிப்பில் பேசுற. இருக்கட்டும்.

வேட்டைக்காரன் - :))) All the best.

@ ஸ்ரீமதி

ஏன்? எதற்கு? Why? யாக்கே (கன்னடம்)? யெந்துகு (தெலுங்கு)? க்யூன்?

@ சூர்யா

வாவ், ரொம்ப நாட்கள் கழித்து வரீங்க பாஸ். சொல்லிட்டீங்க இல்ல. அடுத்த முறை உங்களுடன் நிச்சயம் விளையாட வேண்டியது தான் :)

நன்றி சூர்யா.

@ கேபிள்

நன்றி தல

@ எறும்பு

உங்கள் முதல் வருகை. நன்றி பாஸ்.

@ அமித்து.அம்மா

ஹ்ம்ம். சரி சரி.

நன்றி AA

@ தீபா

நன்றி தீபா. போன முறை கேட்ட கேள்விக்கு பதில்? :)))

நன்றி தீபா.

@ உண்மைத் தமிழன்

ஓ, நீங்க பில்லர் கிட்டதான் இருக்கீங்களா தல. நெக்ஸ்ட் டைம் நிச்சயம் சந்திக்கலாம்.

சுந்தர் - அவர் சொல்றதை கேட்டால் உருப்படியா எழுதலாமே :)

பயப்படாதீங்க பாஸ். அவர் சும்மா சொல்கிறார்.

நன்றி தல.

அனுஜன்யா

anujanya said...

@ பைத்தியக்காரன்

சிவா, ச்சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்கு :)

நன்றி சிவா - சவாரிக்கும்.

@ கார்க்கி (மீண்டும்)

விடுறா விடுறா.

@ தராசு

நன்றி தல

@ விஜயசங்கர்

நன்றி பாஸ்.

மெயில் பதில் போட்டுவிட்டேன் :)

@ நேசமித்ரன்

ரொம்ப நன்றி நேசா. உங்களிடம் இவ்வளவு பாராட்டு ....

@ மாதேவி

வாங்க சிஸ்டர். ரொம்ப நாட்கள் கழித்து வருகை.

நன்றி சகோ.

@ ஜெஸ்வந்தி

மாதேவிக்கு சொன்னது தான் உங்களுக்கும் சகோதரி.

மிக்க நன்றி.

@ ராகவ்

நல்ல பெயர். நன்றி நண்பா.

@ தமிழ்ப்பறவை

கார்க்கி ரொம்ப இலாகவமாக (சரியா குரு?) தப்பித்து விட்டான். எங்க போகப் போறான். ஒரு நாள் மாட்டுவான் :)

நன்றி பரணி.

@ அத்திரி

நன்றி பாஸ்

@ வாசகன்

வாங்க குரு. இப்படி பிழைகளுடன் எழுதுவது தப்புதான். இந்த வார்த்தையில் எப்போதுமே சந்தேகம் இருந்தது. இப்போது நீங்கி விட்டது.

மேலே உள்ள பின்னூட்டம் முதல் சரியாக எழுதத் துவங்கி விட்டேன்.

அண்ணனா? ரொம்ப குறும்பு சார் உங்களுக்கு.

நன்றி. என்னிக்கு உங்க கிட்ட பாராட்டு வாங்கப் போகிறேனோ :))

@ ரவிசங்கர்

நன்றி பாஸ்.

@ தண்டோரா

யோவ்.. சரி சரி.

நன்றி மணிஜி.

@ குப்பன் யாஹு

Yeah, Had seen them during earlier visits. Particularly ECR, Tharamani etc. But compared to other cities, Chennai still has some distance to go. But, what is of interest to me is the good old Chennai. A middle class man's paradise.

Thanks buddy.

@ ஜெட்லி

நன்றி தோஸ்த். உங்க தளத்துக்கு வந்தேன். பின்னூட்டம் போட சிரமப் பட்டேன் (வழி சொல்வதில் வலி)

@ அதியமான்

நன்றி பாஸ்.

@ பட்டிக்காட்டான்

ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வருகை.

நன்றி நண்பா.

அனுஜன்யா

anujanya said...

@ கார்க்கி (மீண்டும் மீண்டும்)

சரி சரி.

@ நர்சிம்

லூசுப்பயலா? வெளிய சொன்னீங்கன்னா நம்மளத்தான் அடிப்பாய்ங்க. அவரு ரொம்ப பிரபல பதிவ...சாரி, எழுத்தாளருங்கோ :)

//மிக மிக மிக மிக ரசித்தப் பதிவு

உங்கள் கவிதை பதிவுகளைப் போலவே...

என்று எழுதினால் இங்கே உங்களுக்கு மகிழ்ச்சி வருமா, கோபம் வருமா?//

எனக்கு என்ன வேணுமின்னாலும் வரும். ஆனா, வா.மணிகண்டனுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தான் வரும் :)

நன்றி நர்சிம் - பொன்னான தினங்களுக்கும்.

@ அன்புடன் மணி

ரொம்ப நன்றி மணி. எல்லா புகைப்படங்களிலும் கலக்குறீங்க :)

@ உழவன்

நிச்சயமா. நன்றி தல

@ அனானி

Thanks

@ ஆதி

இப்படி ஒரு பின்னூட்டம் தேவை என்று யார் அழுதது?

@ அனானி

இப்படியும் எழுதுன்னு சொல்லுங்க பாஸ். அதுக்காக கவிதையை குறைத்து மதிப்பிடுவதில் கவிஞ்ர்களுக்கு நியாயமான வருத்தம் வரத்தானே செய்யும்.

ஆரோக்கியமான கருத்தைச் சொல்ல சொந்தப் பெயரில் வரலாம் நண்பா. அப்புற்ம் உங்க இஷ்டம்.

நன்றி

அனுஜன்யா

தீபா said...

போன முறை கேட்ட கேள்விக்கு பதில் -- ஆமாம் :-)

Extremely sorry for the delayed reply :-(

பா.ராஜாராம் said...

மிக அருமையான பகிர்வு அனு.கொத்தமல்லி செடியில் பூத்திருக்கிற மூக்குத்தி பூமாதிரி நாலைந்து இடங்கள் மிக நெகிழ்வு..

//நீலக்கலர் ரிப்பனுடன் பள்ளி செல்லும் அக்காவின் தோழிகளும் நினைவில் வந்து சென்றார்கள்.//

// முன்பெல்லாம் பெரிதாகத் தெரிந்த மேம்பாலங்கள் சிறிதாகி விட்டன.//

//காலேஜ் தினங்களில் பழைய பேப்பர் போட்டு, காய்கறி/மளிகை சாமான்கள் வாங்கி, என்று சகல விதங்களிலும் கமிஷன் அடித்த பணம் இந்த அலுமினிய டோக்கன் தரும் கிச்சடி, போண்டா, பஜ்ஜி வகையறாக்களில் செலவழிந்த அற்புத நாட்கள் ஞாபகம் வந்தன.//

// சகோதரி வீட்டருகில் புது கட்டிடம் ஒன்று கட்டப்படுகிறது. அங்கு ஒரு சைக்கிள். வாடகை சைக்கிள். 'மாலதி மிதிவண்டி நிலையம்' என்று செயின் பாக்ஸ் மேல் எழுதியிருந்தது. பின்புறம் மூன்று என்று நம்பர் பெரிதாகத் தெரிந்தது. யாரோ ஒரு உப மேஸ்திரியின் வண்டியாக இருக்க வேண்டும். இப்போதைய ரேஸ் பாசாங்குகள் இல்லாமல் சமர்த்தாக, ஒரு அமைதியான குதிரை போல நின்று கொண்டிருந்தது. முன், பின் பக்க சக்கரங்களில் பல வண்ண குஞ்சலங்கள். மணியில் விரல் அழுத்தும் இடத்திற்கு பிளாஸ்டிக் உறை. கேட்டிருந்தால் ஒரு ரவுண்டு சவாரி அனுமதித்திருப்பார்கள். என்னவோ ஒன்று தயக்கம் காட்டி, ஸ்டாண்ட் போட்ட வாகிலேயே பெடலைச் சுற்றினேன். அதிலேயே தெரிந்தது ஐம்பது கி.மீ. ஓட்டலாம் - பள்ளித் தேர்வின் நிச்சய ஃபெயிலை ஜஸ்டு பாசாகவாவது மாற்றும் சக்தி வாய்ந்த திருவேற்காடு அம்மனை அப்படி எத்தனை முறை தரிசனம் செஞ்சிருக்கேன்.//

ஜாலியாக பேசிக்கொண்டே வந்தாலும்,இந்த இடங்களில் மனசை என்னவோ செய்கிறது அனு...

"ரெண்டு குழந்தைகளா?என்று கோயில் வாசலில் வைத்து கேட்க்கிற மனுஷியின் விழியோர கசிவை நாம் மட்டும் உணர்வோமே,அல்லது உணர தருவார்களே அது போல...

அடச்சே..என்று வந்தது.

காலம் ஓடிப்போச்சு அனு.எழுதி தீர்த்துக்கிற வேண்டியதுதான்...

☼ வெயிலான் said...

சென்னையோட திரும்பிட்டே இருக்கீங்களே? இந்தப் பக்கம் எப்போ?

anujanya said...

@ தீபா

ஆமாம். சரி. எப்ப பதிவு எழுதப் போறீங்க?

@ ராஜாராம்

எனக்கே தெரியாததைச் சுட்டிக் காட்டும் ராஜா.. நன்றி

@ வெயிலான்

இப்பிடி கூப்புட வேண்டயது. அப்புறம் அலுத்துக் கொள்ளக் கூடாது. சென்னை வாசிகளை கேட்டுப் பாருங்க பாஸ் :)

நன்றி வெயிலான்.

அனுஜன்யா

தீபா said...

//@ தீபா

ஆமாம். சரி. எப்ப பதிவு எழுதப் போறீங்க? //

ஏற்கனவே எழுதிட்டுருக்கேன் :-):-)

நீங்க பதிவு எழுத வந்ததிலிருந்து ( ie 4 வது இடுகையிலிருந்து) வாசித்து வருகிறேன். இது ச்சும்மா தகவலுக்கு :-):-)

anujanya said...

@ தீபா

என்னது ஏற்கெனவே எழுதிட்டு இருக்கீங்களா? ஓஹோ, வேற பெயரிலா? இப்படி எல்லாம் வேற நடக்குதா? இன்னும் கொஞ்சம் clue?


அனுஜன்யா