Thursday, March 4, 2010
நித்யானந்த நினைவுகள் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்
நித்யானந்தர் விவகாரம் புதன் காலையில் அலுவலக நண்பர் ஒருவர் சொல்லித் தெரிய வந்தது. முந்தைய நாள் இரவு தமிழகத்தின் குட்டி சூப்பர் சிங்கர் தேடலுக்கும், ஜப்பானிய சிறார்கள் உலாவும் ஹங்காமா சானலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதில், நலிவுற்றவர் கட்சியான எனக்கு செய்திகளைப் பார்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை. குழும அஞ்சல்களில் 'கதவைத் திற - காண்டம் (நெடில்) வரட்டும்' என்ற தலைப்பில் நண்பர்கள் அதகளம். நித்தியுடன் சேர்ந்து அவரைக் கடவுளாகக் கொண்டாடிய ஆகப் பெரும் எழுத்தாளரையும் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். So much pent up energy! சாரு இவர்களை இவ்வளவு தூரம் (பல்வேறு காரணங்களுக்காக) வெறுப்பேற்றி இருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஆச்சரியமாக இருந்தது.
சாருவுக்கு அவரது தனிப்பட்ட அனுபவங்கள் நித்யானந்தர் மேல் நம்பிக்கை தரும்படி இருந்திருக்கலாம். அதனால் அவரைக் கொண்டாடி இருக்கலாம். தவறு இல்லை. ஆனால், scandal வெளியான பின்பு 'ஆமாம்பா, ஏமாந்துட்டேன். என் பேச்சைக் கேட்டு ஏமாந்த இன்னும் சிலருக்கும் என் வருத்தங்கள்' என்று சுருக்கமாக சொல்லி இருக்கலாம். இந்த மாதிரிதான் இதற்கு முன்பு ஏமாந்த இஸ்லாமிய சாமியார் பற்றி சொல்லிக் கொண்டார். ஆனால், இப்போது என்னவோ சால்ஜாப்புகள். இப்போதுதான் சாரு மேல் மரியாதை குறைந்து, பரிதாபம் அதிகமாகிறது. ஒரு பக்கம் பொதுப்புத்திகள் சாடத் தயங்கும் மொழியில் நித்யானந்தரைத் திட்டிக் கொண்டே, இவர் ஆட்டு மந்தைகள் என்று எள்ளி நகையாடும் ஆசிரமப் பெண்கள் ரேஞ்சுக்கு 'புற்று நோயைக் குணப்படுத்தினார்' என்று இன்னும் கூட புருடாக்களை நம்புவதை என்ன சொல்ல! கல்வெட்டு அவர்கள் சொல்வது போல் இவர்கள் எல்லோரும் 'வெறும் கதை எழுதிகள்' மட்டுமே போலும்!
தமிழர்களின் ஐந்தாண்டுத் திட்டங்களில் ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு ஏமாறிக் குமுறுவதும், சாமியார்கள் பின்னே ஓடி, பிறகு முட்டாள்கள் போல உணருவதும் பிரதானமாக இருக்கும் அவலம் எப்போது மாறும் என்று தெரியவில்லை.
சன் டிவி நீலப் பட ரேஞ்சுக்கு இருந்த காட்சிகளை தொடர்ந்து மீள் ஒளிபரப்பு செய்ததை சொரணையுள்ள தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். அவர்கள் மேல் உயர்ந்த அபிப்பிராயம் எப்போதுமே இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் புதுப் புதுப் பாதாளங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். Creatures without any journalistic ethics!
கொஞ்சம் தாமதமாகத்தான் என்னுடைய பொதுப் புத்தி கழன்று, முற்போக்கு எண்ணம் தலை தூக்கியது. இது என்ன நடிகைகள் ஏன் இப்படி உழல்கிறார்கள்? ஒரு முறை இந்த சினிமாத் துறையில் நுழைந்து விட்டால், இயல்பு வாழ்க்கை வாழவே முடியாதா? சமூகம் ஏன் இவர்களை இப்படித் துரத்துகிறது என்ற சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. நடிகைகள் 'நேற்று ஒரு மாண்பு மிகு. அதற்கு முன் தினம் பிரபல தொழிலதிபர்; இன்று மனிதக் கடவுள்; நாளை ஒரு உயர் அதிகாரி' என்று பணம், அதிகாரம் இருக்குமிடத்திலேயே ஐக்கியமாகி விடுகிறார்கள். இது ஒரு தொழில் என்றான பின்பு இந்த விஷயத்தில் நடிகையை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்ததை தொலைக் காட்சியில் தொடர்ந்து காட்டி, அவரைக் கேவலப் படுத்தியதற்கு அவர் தொலைகாட்சி மேல் வழக்குப் போட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன்.
சன் நியூசில் கல்கி என்னும் மற்றொரு சாமியாரின் ஆசிரமத்தைக் காட்டினார்கள். எவ்வளவு பெரிய மாளிகை - ஆசிரமம் என்ற பெயரில்! நித்யானந்தா கூட இவ்வளவு இடங்களில் பெரிய 'ஆசிரமங்கள்' கட்டி இருப்பது - நம் மக்களின் மேல் அவ்வளவு கோபமும், எரிச்சலும் வருகிறது. இவர்களுக்கெல்லாம் தெருவில் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால், கோவில் வாயிலில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோக ஜீவன்களைக் கண்டால், சாலைப் பணியாளர்களிடம், துப்புரவுப் பணியாளர்களிடம், காலணி தைப்பவரிடம், மாலைத் தொடுப்பவரிடம் என்று விளிம்பில் இருப்பவர்களைக் காணும் பொழுது மனதை ஒன்றுமே செய்யாதா? ஆசிரமத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொட்டுவதற்குப் பதில் இவர்களுக்கு எல்லாம் உதவலாம். இதற்காகவாவது பதிவுகளைப் படித்தால் நிச்சயம் எரிச்சல் வரும் கலகக்காரர்கள் ஆசைப்படும் புரட்சி வந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. புரச்சி வீரர்களின் இந்த சீசனின் கோடை வாசஸ்தலம் இஸ்லாம் என்று தெரிகிறது. அல்லாஹ் பிழைகளை மன்னித்து அனைவரையும் காப்பாற்றட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
சரிதான் தல
புரச்சி வீரர்களின் இந்த சீசனின் கோடை வாசஸ்தலம் இஸ்லாம் என்று தெரிகிறது]]
நிஜமாய் புரியலை, தெளிவா பின்னூட்டத்தில் சொல்லுங்க அல்லது என் மடலுக்கு அனுப்புங்க
---------------
பல இடங்களில் பலர் எழுதினாலும் நான் போய் கேட்பதில்லை - நீங்கள் என்பதால் கேட்கிறேன்.
(இப்பின்னூட்டத்தை வெளியிடாமலும் இருக்கலாம்)
well said Anujanya
pl.also visit
http://tvrk.blogspot.com/2010/03/blog-post_03.html
நித்தியாணந்தம்
//.. இதற்காகவாவது பதிவுகளைப் படித்தால் நிச்சயம் எரிச்சல் வரும் கலகக்காரர்கள் ஆசைப்படும் புரட்சி வந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. புரச்சி வீரர்களின் இந்த சீசனின் கோடை வாசஸ்தலம் இஸ்லாம் என்று தெரிகிறது. ..//
புரியலை தல..
புரட்சி, புண்ணாக்கு எது வந்தாலும், அப்போதும் இது வேறு வடிவங்களில் வரக்கூடும்
//Creatures without any journalistic ethics!//
இந்த கேவலமான பிறவிகள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.
O Lord, don't forgive them, because thay know what they are doing.
அப்புறம் அந்த கோடை வாசஸ்தலம் புரியல தல, கொஞ்சம் விளக்குங்களேன்.
அன்புடையீர்,
நீங்கள் அனைவரும் ஸ்வாமி நித்யானந்தாவை கிழி கிழி என்று இன்று கிழிக்கிறீர்கள் ஆனால் நான் 15/09/2007 அன்றே சாமியாரையும் குமுதம்,ஆவி,ஜூவி இதழ்களையும் சந்தேகித்து பதிவு போட்டிருக்கிறேன். அதற்கான லிங்க் இதோ
http://kavithai07.blogspot.com/2007/09/blog-post_4622.html
ஜமால்.,
சாரு.. தான் இஸ்லாமிய கலாச்சாரத்தில் வந்தவன் என்றும் அதனால் ஆரம்பத்திலிருந்தே தனக்கு குறைநம்பிக்கை என்றும் அவரின் தளத்தில் சொல்லியிருப்பதால்....
சரியாச்சொன்னீங்க...
//இவர்களுக்கெல்லாம் தெருவில் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால், கோவில் வாயிலில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோக ஜீவன்களைக் கண்டால், சாலைப் பணியாளர்களிடம், துப்புரவுப் பணியாளர்களிடம், காலணி தைப்பவரிடம், மாலைத் தொடுப்பவரிடம் என்று விளிம்பில் இருப்பவர்களைக் காணும் பொழுது மனதை ஒன்றுமே செய்யாதா? ஆசிரமத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொட்டுவதற்குப் பதில் இவர்களுக்கு எல்லாம் உதவலாம்.//
நியாயமான கேள்வி.. நம்ம மக்களுக்கு தலையில கிட்னி கிடையாதே அதுதான்.. :(
@@@இது ஒரு தொழில் என்றான பின்பு இந்த விஷயத்தில் நடிகையை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை.///
இதே வரிய நடிகர் விவேக்கிட்ட போய் சொல்லுங்க சார்...சாருக்கு நடிகைகள பத்தி உண்மைய பச்சையா எழுதுனா கோவம் வரும்..இப்டி நாசூக்கா சொன்னா விட்ருவாரு...!!
//இவர்களுக்கெல்லாம் தெருவில் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்தால், கோவில் வாயிலில் பிச்சை எடுக்கும் குஷ்ட ரோக ஜீவன்களைக் கண்டால், சாலைப் பணியாளர்களிடம், துப்புரவுப் பணியாளர்களிடம், காலணி தைப்பவரிடம், மாலைத் தொடுப்பவரிடம் என்று விளிம்பில் இருப்பவர்களைக் காணும் பொழுது மனதை ஒன்றுமே செய்யாதா? ஆசிரமத்தில் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொட்டுவதற்குப் பதில் இவர்களுக்கு எல்லாம் உதவலாம். //
நன்றாகச் சொன்னீர்கள்!
தெளிவாய் விளங்கிற்று
மிக்க நன்றி நண்பரே.
சாரு - இந்த பெயரை மற்ற பதிவுகளில் பார்த்ததோடு சரி - படிச்சதெல்லாம் இல்லை.
சர்ச்சைகளிலிருந்து தூரமாகவே இருக்கின்றேன் அதையே விரும்புகின்றேன்.
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர் யாராகிலும் பெரும் குற்றவாளியே -
இப்படிப்பட்டவர்கள் அனைவரும்
ஒரு ஜாதியே - மனிதமற்ற ஜாதி.
தன் மீது சேற்றை வாரி இறைத்து கொள்வது மட்டுமல்லாமல் சரியாக கடைப்பிடிப்பவர்களையும் சேற்றில் விழுந்து விட்டது போல் நெளிய வைக்கிறார்கள்.
பொதுமக்களிடையே இவ்வளவு துவேஷத்தை ஏற்படுத்தி விட்டு இஸ்லாம் எனும் போர்வையை பூசிக்கொ(ல்)ள்பவர்களை வல்ல அல்லாஹ்வே பார்த்து கொள்ளட்டும்.
மனிதனாக வாழ்வோம் மனிதத்தோடு.
----------------
நண்பர் கும்க்கி அவர்களுக்கும் நன்றி.
----------------
--- முழு இஸ்லாமியனாக வாழ்ந்து மறிக்க பிரார்த்தனையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கும் என்றென்றும் நட்புடன் ஜமால்.
கேன்சர் மட்டுமா? பெங்களூரில் இருந்த் நித்யா விழுப்புரத்தில் இவருக்கென எக்ஸ்க்ளூசின் காட்சி தந்தாராம்.
Writer can influence his readers.அதுவும் சாருவுக்கு அது கைவந்த கலை. அப்படியிருக்க காசு வாங்க் கொண்டு வாசகரக்ளை தவறான கைட்னஸ் தந்துவிட்டு மற்றவர்களை மாமா என விளிப்பதை என்ன சொல்ல?
இந்த விஷயத்திலும் சாருவை சப்போர்ட் செய்துதான் ஆவேன் என்பவர்களை என்ன சொல்வது?
அவரின் இலக்கிய அறிவை என்றுமே விவாதமாக்கவில்லை. இது போன்ற கிறுக்குத்தனங்கள்தான் எரிச்சல் பட வைக்கின்றன.
நெ(நி)த்தி அடி தலீவா..
சாதரண ஒரு ஆளு,சாரு கண்களுக்கு கடவுளாகத் தெரியும்போது,அவர் பேரழகின்னு சொல்கின்ற பெண்களெல்லாம் உண்மையில் எப்படி இருப்பார்கள்?
இப்போதெல்லாம் சிரிக்கணும்னா ஆதித்யா சேனல் பக்கம் போவதில்லை.அதற்குப் பதிலாக சாருவின் தளம்தான்.
சாரு பத்தி கார்க்கி சொன்னதுதான் என் கருத்தும். மற்றபடி மக்கள்ஸ் சாமியார்கள் பின்னால் அலைவதை என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. :(
//புரச்சி வீரர்களின் இந்த சீசனின் கோடை வாசஸ்தலம் இஸ்லாம் என்று தெரிகிறது. அல்லாஹ் பிழைகளை மன்னித்து அனைவரையும் காப்பாற்றட்டும் //
இஃகிஃகிஃகிஃ :)
ரொம்ப பிடிச்ச மூன்று விஷயங்கள் அனு.
உங்கள் கட்டுரைக்கு மிக நாகரீகமாய் விளக்கம் கேட்ட ஜமால்.
அதற்க்கு பதில் அளித்த கும்க்கி.
மீண்டும் நன்றி அறிவிப்பதில் தன் நாகரீகத்தையும்,தான் சார்ந்த மத புனிதத்தையும் பதியும் ஜமால்.
பிடிச்ச நாலாவது விஷயம்,
இதை பார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி தந்த "எம்பெருமானுக்கு"கும் நன்றி! :-)
ஜமால் மக்கா,
//மனிதனாக வாழ்வோம் மனிதத்தோடு.//
hats off!
நான் பல பின்னூட்டங்களில் சொன்ன மாதிரி , உரைநடையில் நீங்கள் கலக்குகிறீர்கள். படிப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. சிந்தனயும் தெளிவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. கட்டுரைகள் அதிகம் எழுதினால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நல்லதொரு பங்களிப்பாக இருக்கும்.
//ரொம்ப பிடிச்ச மூன்று விஷயங்கள் அனு.
உங்கள் கட்டுரைக்கு மிக நாகரீகமாய் விளக்கம் கேட்ட ஜமால்.//
இந்த கொசுத் தொல்லை தான் தாங்க முடியல.
சம்மந்த சம்ந்தமேயல்லாமல் வெறும் வெற்று புகழுரையால் நிறைக்கும் இவர் என்னைக்கும் திருந்தவே மாட்டாரா ?
அடிப்படையே இல்லமால் பாரட்டினா அதை ஏற்று கொள்பவர் கூச்சம் அடைவாரே என்று கூட நினைக்க மாட்டாரா ?
இஸ்லாம் -ன்னு சொன்னா எல்லாரும் கத்தியோட வரணுமா ? என்ன இது பச்சப் புள்ளைத்தனமா இருக்கு.
இவர் கிட்ட இருந்து எட்டயே இருங்கப்பா ...................................
உங்கள் அனுமதியுடன் என் தளத்திற்கு இந்த கட்டுரைய கடத்திட்டு போகட்டுமான்னு கேட்பாரே? இப்பெல்லாம் மறந்துவிட்டாரா ?
நல்ல அனானி .
inee evan oruvan kadavulin perai solli thappu pannalum avanai suruppala adithu.......... arukkanum
//நான் பல பின்னூட்டங்களில் சொன்ன மாதிரி , உரைநடையில் நீங்கள் கலக்குகிறீர்கள். படிப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. சிந்தனயும் தெளிவாக இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. கட்டுரைகள் அதிகம் எழுதினால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நல்லதொரு பங்களிப்பாக இருக்கும்.//
நண்பரே ,
பெருமையாக இருக்கிறது !!!
boss...
just wanna to speak vth u. plz send me ur cell no 2 ma mail.
vasanthfriend.raju@gmail.com
Tnx.
:)
@ ராஜ பிரியன்
நன்றி பாஸ்.
@ ஜமால்
உரிமையுடன் கேட்டதற்கு, பிறகு அடுத்த பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஜமால்.
@ T.V.ராதாகிருஷ்ணன்
சார், ரொம்ப நன்றி. ரொம்ப கெடுபிடி ஆபிசில். நிச்சயம் படிக்கிறேன்.
@ அசோக்
ஹ்ம்ம்.
@ திருஞானசம்பத்
என்ன பாசு, பேர மாத்திட்டீங்களா? அதுவும் ஸ்வாமிகள் பேரு மாதிரி இருக்கு?
புரியல என்றால்...நீங்க ரொம்ப நல்லவருன்னு அர்த்தம். கொஞ்சம் எல்லாப் பதிவுகளையும் படித்தால் உங்களுக்கே புரியும் சுவாமி :)
@ ராம்ஜி யாஹூ
நன்றி ராம்ஜி. குப்பன் யாஹூ மற்றும் நீங்கள் ஒருவரேவா?
@ சங்கர்
ஏன் பாசு இவ்வளவு கோவம், விரக்தி?
@ தராசு
//O Lord, don't forgive them, because thay know what they are doing.//
அழகாக, பொருத்தமாக மாற்றி சொன்னாலும், என்னுடைய பள்ளி நாட்களுக்குக் கொண்டு சென்றது இந்த வாசகம். நன்றி பாசு.
யோவ், உமக்கே புரியலையா? இல்ல இது ஏதோ கவிதைன்னு டெம்ப்ளேட் பின்னூட்டமா?
@ முருகேசன்
நீங்க தூள் பாஸ். ஆனா, நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் :)
நன்றி
@ கும்க்கி
நன்றி பரிமேலழகர் :)
@ சங்கவி
அப்பாடா. தப்பிச்சேன். நன்றி பாஸ்.
@ புபட்டியன்
தலைல கிட்னி.... சிரிச்சுட்டேன். நன்றி பாஸ்.
@ வெளியூர்க்காரன்
என்ன வித்தியாசமான பெயர். நீங்க சொல்றதும் சரிதான். நன்றி.
@ ராமலக்ஷ்மி
நன்றி சகோ.
@ கார்க்கி
விடுறா விடுறா. ஒவ்வொருத்தருக்கு ஒரு வீக்னெஸ். உனக்கு மொக்கை. எனக்கு கவிதை.
@ நர்சிம்
அஹ்ஹான்ர ? நீ சொன்னா கரீட்டா தாம்பா இருக்கும்.
@ ராம்
அடப்பாவி. கார்க்கி நிறைய பேரு மனசக் கெடுத்திருக்கிறான் போல :)
@ கார்த்திக்
வந்துட்டாரு இன்னொரு கார்க்கி ஃப்ரென்ட். How are you man?
@ அப்துல்
நெசமாவே இந்த 'இஃகி' க்கு ரொம்ப நன்றி அப்துல். இதுக்குப் புரிதல் அவசியம்.
@ ராஜாராம்
எல்லாஞ் சரி. 'எம்பெருமான்' யாரு? நித்தி தானே?
@ நல்ல அனானி
கட்டுரை பற்றிய கருத்துக்கு நன்றி பாஸ். ஆனா, உங்களுக்கு நம்ம ராஜாராமோட என்ன வாய்க்காத் தகராறு? வேண்டாமே ப்ளீஸ்!
@ இன்னொரு அனானி
என்ன கோபம்! விடுங்க.
@ BAUVIAM
இது எல்லாம் நீங்கள் கொடுத்த, கொடுக்கும் ஊக்கம் பாசு.
@ வசந்த்
something urgent vasanth? am travelling. will send u.
அனுஜன்யா
@ தமிழிஷில் வாக்களித்த 13 பேருக்கும் நன்றி.
அனுஜன்யா
//..என்ன பாசு, பேர மாத்திட்டீங்களா? ..//
உண்மையான பேருக்கு வந்துட்டேனுங்க..
//.. அதுவும் ஸ்வாமிகள் பேரு மாதிரி இருக்கு? ..//
அப்போ ஒரு கடை தொறந்துடலாங்களா??!!
//..புரியல என்றால்...நீங்க ரொம்ப நல்லவருன்னு அர்த்தம் ..//
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...
எல்லாம் நன்றாக இருந்தது
சாய்ராம் நன்றி
-- ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுகிறவன் இருப்பான் ஜாக்கிரதை
எல்லாம் நன்றாக இருந்தது
சாய்ராம் நன்றி
-- ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுகிறவன் இருப்பான் ஜாக்கிரதை
எல்லாம் நன்றாக இருந்தது
-- ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுகிறவன் இருப்பான் ஜாக்கிரதை
Post a Comment