Wednesday, March 31, 2010
விரிசல்
ஒரு சாயங்கால வேளையில்
கண்ணாடியோ பீங்கானோ
விழுந்து நொறுங்கும் சப்தம்
பொதுச்சுவருக்கு அப்பால்
பக்கத்து வீட்டில்
மையங் கொண்டிருந்தது
கதவருகில் சென்றபோது
கசிந்து கொண்டிருந்தன
கடுமையான வார்த்தைகள்
ஒவ்வொரு துண்டும்
பொறுக்கப் படும் ஓசை
ஒன்றில் அவன் முத்தம்
ஒன்றில் அவள் வெட்கம்
சிலவற்றில் அவர்கள் சத்தியம்
ஒரு மிகப்பெரிய துண்டில்
இப்போது அழுது கொண்டிருக்கும்
குழந்தையின் சிரிப்பு
பதட்டமாக நானும் நானும்
பேசித் தீர்க்கிறோம்
மறுநாள் காலையில்
கலங்காத கண்களுடனும்
வழக்கமான புன்சிரிப்புடனும்
அவளைக் கண்ட எனக்கு
நிம்மதியுடன் கொஞ்சம் ஏமாற்றமும்
வார இறுதியில்
கைகோர்த்துச் சென்றவர்களின்
சிரிப்பின் விரிசல்
மாயப்பசையில் இணைந்திருந்தது
கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும்
எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
கொஞ்சம் புரிந்தது..புரிந்தவரையில் பிடித்திருந்தது.
விரிசல்..? ரைட்டு
//எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது//
சென்னைக்கு வரீங்களா?
போட்டு உடைங்க எல்லாம் சரியாகிடும்.... :)
கவிதை சொல்லிதரும் விஷயம் அழகு
//சென்னைக்கு வரீங்களா/
அது அப்படியில்ல சகா
என்னது?????????? சென்னைக்கு வரீங்களா????????????
கவிதை நல்லாயிருக்குங்க.
அடேடே! இப்படியா சட்டுன்னு விட்டுக் கொடுக்கிறது?? இன்னும் நாலு பீங்கான் தட்டு இருக்கு போலருக்கே அலமாரில!
யாராவது க்ரீச்சுன்னு ரோட்டில் சடன் பிரேக் போட்டு நின்றதும், எல்லோரும் கூட்டமாய் கூடி, கூட்டத்தில் "ஒண்ணும்...மில்லையாம்" என்று ஏதோ ஒரு அசுவாரசியாமான குரல் கேட்டு கொஞ்சம் திடுக்காய் இருக்கும்.
நல்லாருக்கு அனு.
"விரிசல்" அழகு.
சிதறும் சில்லுகளில் வைக்கப்பட்ட விஷயங்கள் ரசனை.
wow nice
விட்டுக்கொடுத்து போதல்?????
விருட்சத்தில் முன்னாடியே வாசித்து ரசித்தேன், ரொம்ப பிடித்திருந்தது
//நிம்மதியுடன் கொஞ்சம் ஏமாற்றமும்//
என்ன ஒரு வில்லத்தனம் :)
\\கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும் \\
ஊடலின் அளவீடுகள் இடத்திற்கு இடம் மாறுகிறது இல்லையா, அதன் புரிதலும்,,,,,,,,,
ஆனால் சில உடைந்த பிறகே தெரியவருகிறது அவை கண்ணாடியென. எந்த மாயப்பசையாலும் அவைகளை ஒட்ட இயலாமல் போவதை எப்படிச் சொல்வது,,,,,,
இவ்வளவு நுணுக்கமாக .... சுவையாக ஒரு ( இயர் எண்டு)..
தட்டை தள்ளிவைபர்களில் !!!! நானும் தான்--
படர்ந்திருக்கும் மின்னலில் கொஞ்சம் ஒட்டியிருக்கும் பூமி
சொற்பமாய் காய்ந்த பூக்களின் தசை
துளி உதிரம் ,துளி விடாய்
மேகங்கள் கடக்காதிருக்க வேண்டும் பெருமழை யாசிக்கும்
காதங்கள் கடந்து பறவை இட்டிருக்கும் எச்சத்தில் துளிர்க்கத் துவங்கியிருக்கும் விதைக்கேனும்
ரொம்ப நல்லா இருக்குங்க தலைவரே
நல்ல கவிதை. பலர் கோபம் இப்படி சீக்கிரம் சரியாகிவிடுவதே.
//விழுந்து நொறுங்கும் சப்தம்//
//பொறுக்கப் படும் ஓசை //
வாவ், கலக்கறீங்க தல
என்னமோ...எனக்கு நேசனின் பின்னூட்டம்தான் பிடிச்சிருக்கு...
@ நர்சிம்
‘சென்னைக்கு வரீங்களா?’ - என்ன ஒரு வில்லத்தனம்! ரத்த பூமியாயில்ல இருக்கு இப்ப?
நன்றி பாஸ்.
@ கார்க்கி
உனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு சகா.
@ அசோக்
நன்றி அசோக்
@ ஜ்யோவ்
நன்றி குரு.
@ விதூஷ்
//யாராவது க்ரீச்சுன்னு ரோட்டில் சடன் பிரேக் போட்டு நின்றதும், எல்லோரும் கூட்டமாய் கூடி, கூட்டத்தில் "ஒண்ணும்...மில்லையாம்" என்று ஏதோ ஒரு அசுவாரசியாமான குரல் கேட்டு கொஞ்சம் திடுக்காய் இருக்கும்//
இதிலேயே ஒரு கவிதை இருக்குல்ல வித்யா?
நன்றி
@ ராஜாராம்
நன்றி ராஜா :)
@ மாதேவி
விரிசலிலும் அழகு காணும் சகோதரிக்கு நன்றி.
@ ஆதி
நன்றி ஆதி.
@ நந்தா
நன்றி பாஸ். ரொம்ப நாளா ஆளைக் காணோமே :)
@ வசந்த்
அதே அதே. கலக்கற வசந்த்
@ யாத்ரா
விரிவான பகிர்வுக்கு நன்றி செந்தில்.
@ BAUVIAM
உங்களைப் பத்தித் தெரியாதா பாசு! :)))
@ நேசமித்ரன்
எப்படி இப்படியெல்லாம் நேசன்!
நன்றி
@ உயிரோடை
நன்றி லாவண்யா.
@ தராசு
நன்றி பாஸ்.
@ கும்க்கி
அதே அதே. நன்றி கும்க்கி.
அனுஜன்யா
@ தமிழிஷ்ஷில் வாக்களித்த பன்னிரண்டு பேருக்கும் நன்றி.
அனுஜன்யா
Post a Comment