நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !
இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து
11 comments:
மற்றுமொரு மழைப் பைத்தியமா?
அன்புடன் அருணா
/////முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து/////
உம்ம்ம்ம்ம்ம்ம்! (அது ஒண்ணுமில்லே சும்மா ஏக்கப்பெரு மூச்சு)
ஜன்னலுக்கு வெளியில உண்மையிலேயே மழை பெய்யுதுங்க !!!!
:))
ரொம்ப நல்லா எழுதியிருகீங்க. முற்றிலும் புதிய வார்த்தைப் பிரயோகம்.
கலக்குறீங்க...
அருணா - ஆம். உங்களைப்போல. யார்தாம் மழையை விரும்பார்?
அமுதா - என்ன மலரும் நினைவுகளா?
வாங்க ரவி - நீங்க கொஞ்சம் tongue-in-cheek party. ஜாக்கிரதையாகவே நன்றி சொல்றேன்.
சென்ஷி - மிக்க நன்றி.
//முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து//
:))) இப்படியெல்லாம் நான் யோசிச்சதே இல்லையே
ஜி, எனக்கும் எழுதியபின் பிடித்திருந்த வரிகள். நீங்கள் இதை எல்லாம் எப்போதோ தாண்டியாகிவிட்டது.
அனுஜன்யா
அனு, சிறந்த காட்சியமைப்பை கவிதையில் உண்டாக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
அன்பன்,
rvc
//முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து//
கலக்கலான கவிதை
சந்திரா,
எவ்வளவு அழகிய, நுட்பமான கவிதைகள் எழுதுபவர் நீங்கள். உங்கள் ஊக்கம் மிக்க மகிழ்வைத் தருகிறது.
அனுஜன்யா
சரா,
நன்றி. வருகிறேன் அங்கும். கொஞ்சம் காதல் தோல்வி அதிகமாய்த் தெரிகிறது. நன்றாக எழுதுகிறீர்கள்.
அனுஜன்யா
Post a Comment